28 February 2014

இப்படி இக்கு வைக்கும் காரணம் என்ன ?

''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேக்கிறே ?''
''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர  மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''

27 February 2014

வருகிறது ஊழியர்களின் புதுமைப் போராட்டம் !

''அங்கே ஊழியர்கள் போராட்டம் நடக்குதே , ஓய்வு பெறும் வயதை 62 ஆக்க வேண்டாம்னு  கோஷம் போடுறாங்களா ?''
''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு 62 வயதில்  ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''



26 February 2014

கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமல்ல ,மாஞ்சாக் கயிறும்தான் !

''தாலி கட்டிகிட்டு என் பெண்டாட்டி இப்படி ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
''மாஞ்சாக் கயிறு தான் !''


25 February 2014

தலைவர் 'ரம்மி'யில் ஜெயிக்கும் ரகசியம் !

''தலைவர் மரத்தடியில் ரம்மி விளையாடினா பணத்தை அள்ளுறார்,கிளப்பில் விளையாடவே மாட்டேங்கிறாரே ,ஏன் ?''
''சட்டைப்பையில் இருந்து சீட்டை எடுக்கிற வித்தை CCTV காமெரா மூலம் வெளியே தெரிஞ்சுடும்னுதான் !''

24 February 2014

வாழும்போதே கணவனை சாகடித்த சாந்தி !

''தூக்கு மாட்டிக்கிட்ட சாந்தியோட புருஷன் 
...சாகிறதுக்கு முன்னாடி லெட்டர்லே என்ன எழுதி இருக்காராம் ?''
'' என் ஆன்மாக்கூட'சாந்தி'அடையணும்னு  யாரும் வேண்டிக்காதீங்கன்னுதான் !''



23 February 2014

'சின்ன வீட்டோட ' அவர் இங்கே இருப்பதும் நல்லதுதானா ?

''அந்த அம்மாவை  வீட்டைக் காலி பண்ண வேண்டாம்னு எல்லோரும் தடுக்கிறாங்களே ,அவங்க  என்ன பெரிய சமூக சேவகியா ?''
''நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''


22 February 2014

சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?

''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவியே ,இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறாருங்க!''

21 February 2014

மனைவி காதுக்கு மேட்சிங்கா வைரத் தோடு அமையுமா ?

''கடையிலே இருக்கிற எல்லா மாடல் தோடுகளைக் காட்டியும் உங்க மனைவிக்கு எதுவுமே பிடிக்கலே ...ஏதாவது  ஒரு மாடல் நல்லாயிருக்குன்னு நீங்களாவது எடுத்து சொல்லக்கூடாதா ?'' 
''அட நீங்க வேற ,நான் சொல்ற எதைத்தான் அவ காதுலே போட்டுக்கிட்டா ?''



20 February 2014

கணவன் குறட்டை விடும்போது கண்டுபிடிச்சது ?

''கரடி தூங்குறப்போ குறட்டை விடும்னு இப்போதான்  கண்டுபிடிச்சு இருக்காங்க,உனக்கு எப்படி முன்னாடியே தெரியும் ?''
''குறட்டை விடுறப்போ உங்களைப் பார்த்தா அப்படித்தானேங்க  இருக்கு !''


19 February 2014

மழைக் குறைய காரணம் கண்டுபிடித்த மதுரை மேதை !

கடந்த ஞாயிறு அன்று மதுரையில் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது ...
எதற்காக ?...
ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகவா...
கச்சத்தீவு  மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இப்படிப்பட்ட கோரிக்கைக்காக அல்லவாம் ...
பாரம்பரியமாக நரியை பரியாக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்று வருகிறதாம் ...
அதில் உண்மை நரியை பயன்படுத்த காவல்துறை தடை விதித்து விட்டதாம் ...
 பொய் நரியை பயன்படுத்தியதால் மழைப் பொய்த்துவிட்டதாம்...
(என்னே ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள் ,புவி வெப்பமயம் ஆவதால் இயற்கைச் சுழற்சி மாறிவருகிறது என்பதைச் சொல்வோரெல்லாம் தலைகுனியனும்!)
ஆகவே உண்மை நரியை பயன்படுத்த அனுமதி தரணும்னு தான்  கையெழுத்து இயக்கமாம் ...
சரி ,உண்மை நரியை உண்மை பரியாக்கி காட்ட இவர்களால் முடியுமா ?
இப்படி ஒரு மூட நம்பிக்கையை வளர்க்கும் இயக்கத்திற்கு கௌன்சிலர் ஒருவர் தலைமையாம் ...
இவர்களால் வர வேண்டிய மழையும் வராது போலிருக்கே !





சூடு வைத்து வள்ளுவரை நினைக்க வைத்த மனைவி !

''உனக்கு சூடு வச்சது உன் பெண்டாட்டி ,திருவள்ளுவரை ஏண்டா திட்டிக்கிட்டிருக்கே ?''
''அவர் அனுபவப்பட்டிருந்தால் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 'னு எழுதி இருப்பாரா ?'' 




18 February 2014

ரிவால்விங் சேரில் இருந்தால் ரிவால்விங் சேர்மனா ?

''வாட்ச்மேன்...நான் சேர்மனைப் பார்க்கும் போது என் பையனைக் கூட்டிட்டு போனது , உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''சேர்மன் சேர்லே உட்கார்ந்து இருந்தார் ,நீங்க என்ன வாட்சுமேலேயா உட்கார்ந்து இருக்கீங்கன்னு ,உங்க பையன் வந்து கேட்டானே  !''

17 February 2014

பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்!

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை 2014/15 ஆண்டு  ரூபாய் 26 295 கோடிக்கு விற்கப் படும் என்று கூறியிருக்கிறார் ...
தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் ...
இது மிகப் பெரிய உலக சாதனை என்று தண்ணி அடிக்காமல் கொண்டாட்டம் போட நினைக்கும் நேரத்தில் ...
இன்னும் ஏன் தமிழகத்தில் ஒரு சம்பத் பால் தேவி தோன்றாமல் இருக்கிறார் என்று புரியவில்லை ...
அவருடைய 'குலாபி கேங் 'அமைப்பைப் பற்றி இங்கே விழிப்புணர்வு இல்லாதது ஏன் என்றும் புரியவில்லை ...
அந்த பெண்மணி உத்தரபிரதேச கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ...
பன்னிரண்டு வயதில் திருமணமாகி .இருபது வயதுக்குள் ஐந்து குழந்தைகளைப் பெற்றவர் ...
தினசரி குடிகார கணவனின் அடி தாங்காமல் நொந்து கிடந்தார் ...
இதைப் போன்றே பல பெண்களும் இருப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்தார் ...
பத்து பெண்களை சேர்த்துக் கொண்டு அனைவருக்கும் பிங்க் நிற சேலை அணிவித்தார்  ...
கையில் பிரம்புகளுடன் கிளம்பிய அவர்கள் ...
குடிவெறியில் ஆட்டம் போடும் கணவன்மார்களை பின்னி எடுத்து விட்டார்கள் ...
பத்து பெண்கள் இன்று பல ஆயிரம் பெண்களுடன் ...
UP மாநிலம் முழுவதிலும் இந்த அமைப்பு பரவியுள்ளது ...
லஞ்ச பேர்வழிகள் ,அநியாயம் பண்ணும் போலீஸ்காரர்கள் ,சமூக விரோதிகள் மேலும் இவர்களின் பிரம்படி விழுகிறது ...
''காப்பாற்ற கிருஷ்ணபரமாத்மா வருவார் என்றிருந்தால் கிராமத்து பெண்கள் அம்மணமாய் தான் இருக்கணும் ,காக்கவேண்டியவர்களும் ,சட்டமும் பெண் களை பாலியல் பண்டமாகத்தான் பார்க்கிறது ,எங்களை சட்டம் காப்பாறாதபோது ,நாங்கள் எதற்கு சட்டத்தை மதிக்கணும் ?''...
என்று கர்சிக்கும் இவரை மையப் படுத்தி பிங் கேங் படம் தயாராகிறதாம் ...
படத்தின் நாயகி 'சோளிக்குள்ளே என்ன இருக்கு 'பாடல் புகழ் மாதுரி தீட்சீத்தாம் ...
அவராவது பிங்க் நிற சோளிக்குள் இருக்கும் பெண்ணின் வீரத்தை ...
குடிகார கணவன்களுக்கு புரிய வைத்தால் சரி !

மேலும் விபரம் அறிய ...http://www.gulabigang.org/?page_id=196

அன்று நடந்ததற்கு இன்று பாராட்ட வா ?

ஒரு முன் குறிப்பு ..
ஜோக்காளிப் 'பய 'டேட்டாவைப் படிக்க முடியவில்லை என்று நாட்டாமையிடம் தொடர்ந்து புகார் வந்த படியால் ...
தற்போது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வலையுலக உறவுகளின் பார்வைக்கு இதோ ...
ஜோக்காளியின் லட்சியம் நிறைவேறி உள்ளதா என்பதை அறிய ஆவலோடு இருக்கிறேன் ...


  

16 February 2014

சர்க்கரைநோயால் நவீன நாரதர் ஆக முடியுமா ?

''அவர்  சர்க்கரை  நோயால் கடுமையா பாதிக்கப் பட்டதால்  நவீன நாரதர் ஆயிட்டாரா ,எப்படி ?''
''நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு அடிக்கடி சொல்றாரே !''

யாரிடம் வாங்கலாம் கடன் ?

''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?''
''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேன் என்கிறார்களே !''

15 February 2014

தலை எழுத்து என்று தப்பிக்கும் கணவன் ?

''குடியை விடலேன்னா டைவர்ஸ்தான்னு  உன் மனைவி சொல்றாளா ,என்னடா செய்யப் போறே ?''
''என் தலையிலே எனக்கு ரெண்டு பெண்டாட்டின்னு எழுதி இருந்தா நான் என்னடா செய்ய முடியும் ?''

14 February 2014

மனைவிக்கு இப்படியா பயப்படுறது ?

''காணாம போன உன் பெண்டாட்டியை கண்டு பிடிச்சு தரலையே ,நீ ஏன் ஸ்டேசன்லே மொய் வச்சுட்டு வர்றே ?''
''கண்டுபிடிச்சுருவோம்னு மிரட்டுறாங்களே !'' 

13 February 2014

பெண்டாட்டிக்கு வந்த ' 2 இன் 1 'ஐடியா !

''இரும்புச் சத்து கூட்டிக்கணும்னு டாக்டர் சொன்னார் சரி ...அதுக்கு நீ என்ன செய்யப் போறே ?''
''உங்க ஸ்கூட்டரை தள்ளுவண்டிக்காரன்கிட்டே   தள்ளிட்டு பேரீச்சம்பழம்  வாங்கிச் சாப்பிடலாம்னு  இருக்கேங்க !''

12 February 2014

இன்றைய இளைஞர்கள் நீதிபதியின் கணிப்பு !

''இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை நான்கு பெட்டிகளில் அடங்கி விடுகிறது என்று முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லி இருக்காரா ...அதென்ன நாலு பெட்டி ?''
''டிவி,ரேடியோ ,கம்ப்யூட்டர், சவப்பெட்டியாம் !''

நடிகை காஜல் அகர்'வால்' மனதில் இருக்கும் வரை ....!

''ஊழலுக்கு எதிரா போராட்டம் பண்ணி அரவிந்த் கேஜ்ரி'வால்' டெல்லியில் ஆட்சியில் இருக்கார் ,தமிழ்நாட்டிலே ஏன் இப்படி நடக்க மாட்டேங்குது ?''
''நம்ம இளைஞர்கள் மனதில் காஜல் அகர் 'வால் 'ஆட்சியில்லே நடந்துகிட்டு இருக்கு ?''





11 February 2014

மனைவிக்கு புரியும்படி சொல்வது எப்பவும் நல்லது !

''வாசல்லே எலக்ரீசியன்  வந்து 'எந்திரம் சிங்கிள் பேஸா ,திரீ பேஸான்னு 'கேட்கிறான் ...ஒண்ணுமே புரியலே ,நீ வரச் சொன்னீயா ?''
''அட நீங்கதானேங்க,ஆர்டர் செய்த குபேர 'எந்திரம்' இன்னைக்கு வந்துடும் ,வந்தவுடனே மாட்டணும்னு சொன்னீங்க !''


10 February 2014

பணம் தேவைன்னு இப்படியுமா நடந்துக்கிறது ?

''அடகு கடையிலே வந்து ஒரு முழத்துக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறீங்களே ,ஏன் ?''
''பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் வைக்கலாம்ன்னு சொன்னாங்களே !''

9 February 2014

இவ்வளவு உரிமை கணவன் மனைவிக்குள்ளும் இருக்காது !

''உன்னோடகேஸ் முடியிறவரைக்கும் ,தினசரி காலையிலே போலீஸ்  ஸ்டேசனில்  கையெழுத்து போடணும் ,சரியா ?''
''முடியாது ...ராத்திரி என் தொழிலைப் பார்த்துட்டு  வந்து  நான் தூங்க வேண்டாமா ?சாயந்தரம்தான் வர முடியும் ,சரியா?!''

8 February 2014

மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான்!


''உன் மனைவி உன்னை சந்தேகப்படுறான்னு சொல்றியே ஏன்?''
''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு சொன்னா ,'நான் இங்கே இருக்கும் போதுஎந்த சிறுக்கி உங்களை நினைக்கிறான்'னு கேக்கிறாளே !''



ஜோதிடருக்கே நேரம் சரியில்லை என்றால் ?

''சித்த மருத்துவர் ஜோதிடரும் ஆனார் சரி ,ஜெயிலுக்கு ஏன் போனார் ?''
''ஜலதோஷ நிவர்த்தி மாத்திரை மாதிரியே ,என் கண்டுபிடிப்பான தோஷ நிவர்த்தி மாத்திரையும் வேலை செய்யும்னு ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டாராம்  !''

7 February 2014

மாமியார் கையில் துப்பாக்கியும் உண்டோ ?

''நான் கேட்ட ஜாக்கெட்டை வாங்கித் தரக்கூட உங்க மகனுக்கு துப்பில்லைன்னு உன் பெண்டாட்டி புலம்புறாளே ,உண்மையாடா ?''
''அய்யோ அம்மா ,அவளுக்கு புல்லெட் புரூப்  ஜாக்கெட் வேணுமாம் !''

6 February 2014

தாய்ப்பால் கொடுக்கலைன்னு இப்ப குத்தலா?

''நேற்றைக்கு உன் புருசனோட என்னடி சண்டை ?''
''போராட்டம்னு தரையிலே பாலைக் கொட்டுறது அநியாயம்னு சொன்னேன் ...அதுக்கு அவர் 'தாய்ப் பால் கொடுக்காமே நீ வேஸ்ட் செய்ஞ்சது மட்டும் நியாயமா 'ன்னு  கேக்குறார்டி!''

5 February 2014

மகன் செய்த தப்பு தாய்க்கு புரியாது !

''டாக்டருக்கு உன் பையன் பரவாயில்லையா ,ஏண்டி ?''
''பையன் எட்டணாவை விழுங்கிட்டான்னு டாக்டர் கிட்டே போனா, அவர் எட்டாயிரம் ரூபாயை விழுங்கிட்டாரே !''

4 February 2014

மாப்பிள்ளை தங்க 'கம்பி 'யாச்சே !

''மாப்பிள்ளைப் பையன் நடத்தை எப்படி ?''
''கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தாலும்  நன்னடத்தைக்காக ஒரு வருஷம் முன்னாடியே ரிலீஸ் ஆயிட்டார்ன்னா நீங்களே பார்த்துக்குங்க !''



3 February 2014

இடுப்பு அளவை பார்த்து வேலை தரணுமோ ?

''போலீஸ்காரங்க தொந்தியைக் கரைக்க ஐடியாவா ,என்னது ?''
''வேலைக்கு சேரும்போது இருந்த இடுப்பு அளவு கூடினா  இன்கிரிமென்ட்னு கிடையாதுன்னு சொல்லிட வேண்டியது தான் !''

2 February 2014

திரைப் படத்தின் கதை மொக்கையானால் ...!

''இடைவேளை  நேரத்தில்  கோன் ஐஸ் ,பாப் கார்ன் விற்க மாட்டேங்குது ,ஜிஞ்சர் ட்ரிங்க்ஸ் மட்டும் அதிகமா சேல்ஸ் ஆகுதே ,ஏன் ?''
''இந்த படத்தின் கதையை ஜீரணிக்கவே முடியலையாம் !''

'குடி'மகன்களுக்கு கருப்பு தினம்,மற்றவர்களுக்கு நல்ல நாள் !

''காந்தி ஜெயந்தி ,மகாவீரர் ஜெயந்தி ,வள்ளுவர் தினம் ,வள்ளலார் தினம் என்னைக்கு வருதுன்னு கேட்டா ,நொடியிலே சொல்றீங்களே ...அவங்க கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா ?''
''அட அது இல்லீங்க ,அன்னைக்கு டாஸ்மாக் கடை லீவு ,முதல் நாளே சரக்கு வாங்கி ஸ்டாக் வச்சுக்கிறது என் வழக்கமாச்சே !''

1 February 2014

கணவன் கண் கண்ட தெய்வமா ?

''என்னடி ,உன் கணவனை நீ தெய்வம் மாதிரி நினைக்கிறீயா ,எப்படி ?'' 
''எனக்கு பிடித்த சனீஸ்வரன் இல்லேன்னாலும் ,என்னைப் பிடித்த சனீஸ்வரனாச்சே !''




செலவு செய்யாமல் இன்று காதலிக்க முடியுமா ?

''நம்ம காதல் தெய்வீக காதல்னு சொன்னா ,மனைவி நீயே கோவிச்சுக்கிறியே ,ஏன் ?''
''காதலிக்கும் போது பீச்சுக்கு வரச் சொன்னா சுண்டலுக்கு காசு செலவாகும்னு ,கோவிலுக்கு நீங்க வரச் சொன்ன காரணம் இப்போதானே புரியுது ?''