31 July 2014

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி ...பலருக்கும் பல்பு கொடுத்த பதிவு!

சென்ற ஆண்டு ,பலருக்கும் பல்பு கொடுத்த பதிவு இது ...

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி !
என் முதல் கணினி அனுபவம் ![தொடர் பதிவு ]
இன்று தேதி 7.31.13[இங்கே அமெரிக்காவில் தேதியை நடுவில்தான் எழுதுவது வழக்கம் ]நேரம் இரவு 10.34[நல்லவேளைநிமிடத்தை முன்னாடி போடாம விட்டாங்க ! ]
ஜன்னலுக்கு வெளியே ...சாலையில் பறந்துக் கொண்டிருக்கும் கார்களின் அணிவகுப்பைப் போன்றே கணினி கற்பதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நினைவிற்கு அணியணியாய் வருகிறது ...e மெயிலைக் கண்டுபிடித்த திரு .அய்யாதுரை அவர்களின் ஐந்து கம்பெனிகளில் ஒன்றான ...[வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை சொல்லும் ]முக்கிய நிறுவனத்தில் ,உயர்ந்த பதவியில் இருந்தாலும் ... ஆரம்பகால என்  அனுபவங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !

30 July 2014

போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....!

------------------------------------------------------------------------------------------------------------
 இவர் வேகம் யாருக்கு வரும் ?         

                    ''பரவாயில்லையே, ஒரு வார வேலையை  ஒரேநேரத்தில் செய்வீ ங்களா ,அப்படியென்ன செய்தீங்க ?''
                      
                     ''காலண்டர் தாளை  தினசரி கிழிக்கிறதுக்கு பதில் ,வாரம் ஒரு தடவைக் கிழிப்பேன் ! ''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

உபயம் எனும் பேரில் வரும் அபாயம் !

''கோவிலில் உள்ளஎல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிற பயம்தான் !''



'சிரி'கவிதை! 

போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....!

சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !


29 July 2014

அடடா ,ஜோடிப்பொருத்தம் சூப்பர்!

-----------------------------------------------------------------------------------------------------------
போலி டாக்டரா இருப்பாரோ ?
''மாசமா இருக்கிற எனக்கு நிறைய இரும்புசத்து மாத்திரைக் கொடுக்கிறீங்களே ,ஏன் டாக்டர் ?''
''நீங்கதானே பிறக்கிற குழந்தை துரு துருன்னு இருக்கணும்னு சொன்னீங்க !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

பிள்ளைங்களுக்கும் இந்த நோய் தொடராமல் இருக்கணும் !

''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''

சிரி'கவிதை! 

டிக்கெட் எடுக்காமலும் இந்த ஊருக்கு போகலாமே !

பஸ் படிக்கட்டிலே தொங்குபவர்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் ....
ஆனால் போய் சேரும் இடம்தான்  சிலநேரம் மாறிவிடுகிறது !

28 July 2014

புதுமணத் தம்பதியர் சிறப்பாய் நடத்தும் 'குடி'த் தனம் ?

---------------------------------------------------------------------------------
சீக்கிரமே இந்த நிலை வந்து விடும் !

''உங்க காதிலே என்ன பிரச்னைன்னு கேட்டா , செல்போனில் கேளுங்கன்னு எதுக்கு ஜாடை காட்டுறீங்க ?''
''நேரிலே யார் பேசுறதும் காதுக்கு கேட்கலே ,செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !

''யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
''எது ?''
''நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு குவாட்டரை ஒரே மூச்சிலே ராவாவே குடிப்பான்னு ஒருவார்த்தைகூட ஏன் சொல்லலே !''



'சிரி'கவிதை!

 கொசு இனத்தை கூண்டோடு ஒழிக்க ...!

கடிக்கிற கொசு சாகிறமாதிரி..
 நம் உடம்பிலும் கரெண்ட்டை
மிகச் சிறிதாய் சார்ஜ் பண்ணிக்க முடிந்தால் ...
சந்தோசமா கரெண்ட்டிலே கையை வைக்கலாம் !





27 July 2014

இவரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா !

---------------------------------------------------------------------------------
பொண்ணைப் பெத்தவர் இப்படி அப்பாவியா இருக்காரே ! 

''எனக்கு நல்ல மாப்பிள்ளையா  அப்பா தேடித் 

தரமாட்டார் போலிருக்கா ,ஏம்மா?''

''நீங்க போடப் போற பத்து பவுன் நகைக்கு 

'சின்ன வீடு' வச்சிகிட்டு இருக்கிற வரன் இருக்கு 

இருக்கு... பரவாயில்லையான்னு தரகர் 

கேட்டா ,வாடகை வருதா ,ஒத்திக்கு 

விட்டிருக்காரான்னு கேட்கிறாரே !''




சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

இவரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா !

''என்னங்க ,நீங்கதான் டாக்டராச்சே ,மரணத்தை உணர முடியுமா ?''
''முடியும்னு என்னிடம் ஆபரேசன் செய்துகிட்டவங்க யாரும் இதுவரை சொல்லலே !''


'சிரி'கவிதை! 

24 X 7 புரோட்டா மணக்கும் மதுரை !

கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீயோ...
இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
புரோட்டா வேகும் கல்லின் கீழே !


26 July 2014

அதே வார்த்தை ,பெண்மணி சொன்னால் மட்டும் தப்பாகி விடுமா ?

என் கமெண்ட்டுக்கு உங்க கமெண்ட் என்ன ?என்ற தலைப்பில் பதிவு போட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது...

இதற்கு மேலும் தாமதிப்பது , வலை உலக உறவுகளுக்கு வருத்தத்தை தரக்கூடும் என்பதால் ...அல்ல ,அல்ல ...என் தலை வெடித்துவிடும் என்பதால் ,இதோ ...

இது ,நம் வலைப் பதிவர்களில் மூத்தவரான சென்னைப் பித்தன் அவர்களின் G+ல் வெளியானது ...அவருக்கும் ,அசோக் குமார் ஜி அவர்களுக்கும் நன்றி !
உடல் கோணல் இறைவன் தவறு
உள்ளம் கோணல் நம் தவறன்றோ?
உடல் கோணலை மறைக்க முடிவதில்லை
உள்ளக் கோணலோ ஒளிந்து செயல் படும்
பார்த்தால் சிலர் வெறுப்பர் உடல் கோணலை
பழகினால் அனைவர் வெறுப்பர் உள்ளக் கோணலை
நல்லவனாய் இருப்பின்
கோணல் உடலோனும் கொண்டாடப்படுவான்
அல்லவனாயின்
அழகுடலோனும் தூற்றப்படுவான்
உடல் மட்டும் கோணலெனில்
சொல்வதில் தவறில்லை........
“கோணலாயினும் இது என்னுடையது” என்று!
உள்ளம் கோணலாயின்
உரைக்க முடியுமா அது போல்?!
வெட்கப்பட வேண்டாம் உடல் கோணலுக்கு
கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும்
உள்ளக் கோணலுக்கு!

(குட்டன் அவர்களின் கவிதை)
Read more (17 lines)
2
Ashok Kumar's profile photoBagawanjee KA's profile photo
Hide comments

Ashok Kumar
Yesterday 9:55 PM
 
Reply
கோணலாயிருந்தாலும் என்னுடையதாக்கும்:-)

Bagawanjee KA
Yesterday 11:14 PM
அசோக் குமார் ஜி ,இதை நீங்கள் சொல்வதால் ரசிக்கத் தோன்றுகிறது ,விளம்பரத்தில் பெண் சொல்கையில் அசிங்கமாய் படுகிறது !

Ashok Kumar
Yesterday 11:23 PM
+Bagawanjee KA. :-) ஓ...அப்படியா...ஹா..ஹா...:-)))

'தேவதை 'மனைவி அன்று , 'தேவைதானா ' இன்று ?

--------------------------------------------------------------------------------

வட போச்சேன்னு வருந்தும் டாக்டர் !

''டாக்டர் ,உங்களுக்கு ஏன் வயிறு எரியுது ,பேஷண்ட் எவனும் பீஸ் கொடுக்காம ஓடிப் போயிட்டானா ?''
''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போய்ட்டானே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

'தேவதை 'மனைவி அன்று , 'தேவைதானா ' இன்று ?

''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டாலே குரைக்குது,ஏன்னு தெரியலே !''
''நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''





'சிரி'கவிதை!

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு !

சாமி பூதம் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் 
கல்யாணமான பின் ...
பட்டினத்தார் பாட்டிலும் உண்மை இருப்பதை 
உணர்வுபூர்வமாக உணரத் தொடங்குகிறார்கள் !


25 July 2014

ஹீ><ரோ முத்தக் காட்சியில் நிறைய டேக் வாங்குவாரோ ?

           ''சூட்டிங்கில் கலந்துக்க மாட்டேன்னு ஹீரோ  கோவிச்சுக்கிட்டு போறாரே ,ஏன் ?''
           ''நேற்று அவரோட டூப்பை போட்டு முத்தக்காட்சி எடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுப் போச்சாம் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனைப்பு !

''ஏன்யா பிளேடு பக்கிரி ,உன்
பையனுக்கு போலீஸ் வேலை கிடைச்சும்
 ஏன்  அனுப்பலே ?''
''கொடுக்கிற இடத்திலே இருக்கிற நாம ...வாங்கிற இடத்துக்கு எப்படி போறது ,அது நம்ம பரம்பரைக்கே அவமானமாச்சே !''




'சிரி'கவிதை!

கனவுக்கன்னிகள் நினைவுபடுத்தும் திருக்குறள் எது ? 

இருந்தாலும் மறைந்தாலும் கனவுக் கன்னிகள்
நினைவிலும் கனவிலும் வாழ்ந்துக் கொண்டுதான்  இருக்கிறார்கள் !

24 July 2014

காதலிக்கு மட்டும் பொருந்தாத தத்துவம் !

 --------------------------------------------------------------------------------
இந்த வாதம் சரிதானா ,சொல்லுங்க !               
                ''தலைவரே ,டாக்டர் குடிக்கச் சொன்ன டானிக்கே  வேண்டாம்னு சொல்ற அளவுக்கு ...கோர்ட்டிலே  உங்க வக்கீல் செய்ஞ்ச வாதமே  போதும்னு சொல்றீங்களே ,ஏன் ?''
               ''சம்பாதிப்பதில் தவறேயில்லை,அதைப் பற்றிய கணக்கை கொடுக்காவிட்டால்தான் தவறுன்னு ஒரே போடா போட்டாரே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

 இதுக்கு போய்  பெண்டாட்டிய உதைக்கலாமா  ?

''மாப்பிள்ளே ,என் பொண்ணை தினசரி  உதைக்கிறீங்களாமே...உங்களுக்கு என்னதான் வேணும் ?''
''ஸெல்ப் ஸ்டார்ட் பைக் வாங்கி கொடுங்க ,உதைக்கிறதை விட்டுர்றேன் !''



சிரி'கவிதை!

காதலிக்கு மட்டும் பொருந்தாத தத்துவம் !

CALLசெய்துவிட்டு CUTசெய்பவர்கள் ...
பொருளாதாரப் புலிகளாய் இருப்பார்கள் !


22 July 2014

T V காமக் கதை தொடர்களில் இப்படியும் கார்டு போடலாமே !

      '' டி வி தொடர் டைட்டில் கார்டில் ,ஒரு எழுத்தைத் தப்பா எழுதியதால் ,வேலையில் இருந்து உன்னை தூக்கிட்டாங்களா ?என்ன எழுதினே ?''
       ''இந்த தொடர் யாரையும் 'பண் 'படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டதல்லன்னுதான் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

ஓடிப் போய் கல்யாணம்?நல்லா யோசிக்கணும் !

''ஓடிப் போய்  கல்யாணம் கட்டிக்கிறவங்க ரெஜிஸ்டர் ஆபீசுக்குத்தான் போவாங்க ,நீங்க எதுக்கு வங்கிக்கு ஜோடியா வந்து இருக்கீங்க ?''
''உங்கள் கனவை  நனவாக்க நாங்கள் தயார்னு நீங்கதானே விளம்பரம் போட்டு இருந்தீங்க !''





'சிரி'கவிதை?

செம்மொழி தமிழுக்கே இந்த சோதனையா ?

பசுவின் மணி ஒசைக்கும் மதிப்பளித்து நீதி சொன்னதெல்லாம் அந்தக் காலம் ...
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட நாதியற்று தவிப்பது இந்தக் காலம் !