31 August 2014

பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா ?

            ''பொண்ணு வாக்கப்பட்டு போற இடத்திலே கண் கலங்காம இருக்கணும்னு ரொம்ப எச்சரிக்கையா அவர் இருக்காரா ?''
            ''ஆமா ,டிவி இல்லாத வீட்டு வரன்களை மட்டுமே கொடுங்கன்னு தரகர்கிட்டே சொல்லி இருக்காரே ''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய் கூடினால் ஒரு டீ ?

''ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா ,அநியாயமா இருக்கே ?''
''டீத் தூள் கிலோ ரூபாய் முன்னூறு ஆச்சே!''
''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''

ஸெல்ப் ஸ்டார்ட்டர் பேட்டரி மக்கர் பண்ணலாம்  என்பதால் கிக்கருமா?

கிக்கர் உள்ள ஸெல்ப் ஸ்டார்ட் டூ வீலர்களை நம்ப முடிய வில்லை ...
அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும் 
சேர்த்து சாப்பிடுங்கள் என சொல்லும் சித்தமருத்துவரையும் நம்ப முடியவில்லை ...
நம்பகமான ஒரு வழி உள்ளதையே நம்பத் தோன்றுகிறது!

30 August 2014

இவர் மனைவி வணங்கப்பட வேண்டியவர் !

------------------------------------------------------------------------------------------------------------
 மக்கள் நம்பிக்கையை  பயன்படுத்திக் கொண்டு ......... 

''எங்கேயும் தண்ணியில்லேங்கிறதை  பயன்படுத்திக்கிட்டு புதுசா பார்சல் சர்வீஸ்  பிசினஸா.என்னது ?''
''பிள்ளையார் சிலையை கரைத்து விடணுங்கிறது ஐதீகம் ,நீங்கள் சொல்லும் கடலில் கரைக்க நாங்கள் உதவுகிறோம்னு எழுதிப் போட்டிருக்காங்களே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
------------------------------------------------------------------------------------------------------------
சாப்டா  இருக்கிற பிரியாணியை சாப்பிட்டா  இப்படியும் ஆகுமா ?

''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
''My crow soft பிரியாணி கடைதான் !''





இப்படி கேட்பவரின்  மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் !

அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
அர்த்தம் இருக்கணும் ...
'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !

29 August 2014

சதையைக் காட்ட காரணம் கதையில்லே ,காசுதானே ?

               ''உங்க பட ஹீரோயின்  கதைக்கு தேவைப் பட்டதால் கவர்ச்சியா நடித்தேன் என்று சொல்லி இருக்காங்களே ...அதைப் பற்றி .....!''
              ''அப்படின்னா ரெண்டு மடங்கு  சம்பளம் எதுக்கு வாங்கி கிட்டாங்களாம் ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


'இது'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு ?
''என்னது பிச்சைக்காரன் டாட் காமா ?''
''ஆமா ...ஒரு E மெயில் அனுப்பினாப் போதும் ,மீந்து போனதை வந்து எடுத்துட்டு போயிடுவான் !''

அதுக்குத்தானா இந்த கொண்டாட்டம் ?

அமாவாசை வந்தாலே காக்கைகளுக்கு கொண்டாட்டமாய்  இருக்கும் ...
தானும் கருப்பு அமாவாசையும் கருப்பு என்பதால் அல்ல !
எச்சில் கையால் காக்கையை விரட்டாதவன் கூட ...
அன்று மட்டும் முன்னோர்களை நினைத்து காக்கைக்கு முதல் படையல் வைப்பதால் !

28 August 2014

சைட் அடிக்கவா மனைவி அழைப்பாள்?

              ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லிட்டு ,இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
           ''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறாரே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா இப்படித்தான் !              ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
   ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  ஒருநாள் லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிசன் போதுமேங்கிறாரு!''

திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள் !

துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள்சொன்னால் ...
மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !

27 August 2014

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் ?

------------------------------------------------------------------------------------------------------------
பெயர் ராசி சரியில்லாமப் போயிடுச்சே !

               ''இலஞ்சம் வாங்கின அதிகாரியை CBI கைது பண்ணியிருக்கு ...இந்த செய்தியைப் படிச்சிட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''
               ''மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

புதிய காதலரா பழைய கணக்கை முடிப்பாரு ?

              ''பீச்சிலே உன் காதலரோட இருக்கும்போது ,ஐஸ் விற்கிறவன் வந்து மானத்தை வாங்கிட்டானா,என்னவாம் ?''
              ''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
              ''எதுக்காம் ?''
              ''எனக்கு ஐஸ் வாங்கித் தந்த கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''
தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
பொய் என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வழக்காடு மன்றத்தில் வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?

26 August 2014

தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா ?

    ---------------------------------------------------------------------------------------------------------

தொந்தி உடையார் விழுவதற்கு அஞ்சார் ?
     
         ''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடி படலையா ?''
        
         ''நல்ல வேளை.தொந்தி இருந்ததால் மூக்குக்கு ஒண்ணும் ஆகலே !''
   
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

சேரனின் அடுத்த காதல் படத் தலைப்பு ....?

''சேரன் இயக்கத்திலே ஒரு காதல் படம் எடுக்கலாம்னு இருக்கேன் ,பொருத்தமா என்ன டைட்டில் வைக்கலாம் ?''
''தாமினி ,இனி என் பக்கம்னு வைங்க !''

தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா ?

தாஜ்மகாலை ...
அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை சின்னமாய்தான்  கண்ணுக்கு படுகிறது ...
பதினான்கு  முறை பிரசவித்து 
முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் இருக்கிறது !

25 August 2014

சினிமா மோகம்தான் இந்த பாடு படுத்துது !

-----------------------------------------------------------------------------------------------------------------------
  இது பாசமில்லே ,பயம் !

                ''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
             ''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்லி விட்டாரே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


ராதா எப்பவுமே ராதாதான் !

பழைய நினைப்புடா பேராண்டி !

''ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியலே ,உங்க தெருவிலே இருக்கிற பொண்ணுங்க பேரை கேட்டா மட்டும் தலை கீழா சொல்லுவே !''
''அதெல்லாம் இல்லை சார் !''
''என்னாஅதெல்லாம் இல்லே ?''
''ராதாவை  ராதான்னுதான் சொல்லுவேன் ...தாரான்னு தலைகீழா சொல்லமாட்டேன் சார் !''

சினிமா மோகம்தான் இந்த பாடு படுத்துது !

சாத்தானின் சமையல் அறையை  ...
கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம் 
ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே ! 
---------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின்  சமையல் அறை ,சரிதானே ?

24 August 2014

சாப்ட்வேர் டேட்டிங் காதல் எல்லாம் இப்படித்தான் புட்டுக்குமோ ?

      ''உனக்கு அறிவு இருக்கா?காதலனை நம்பி அவன் பெயரை பச்சைக் குத்திகிட்டியே ...இப்போ விட்டுட்டுப் போயிட்டானே ,என்னடி  செய்யப் போறே ?''
    ''அதே பெயருள்ள வரனைப் பாருங்க ,கல்யாணம் கட்டிக்கிறேன் !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

''என்  புருஷனை மாதிரி ஒரு அல்பத்தை பார்த்ததே இல்லை...செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு சொல்றார்டி !''
''ஏனாம் ,ஒண்ணாம் தேதி வரணுமாமா ?''
''இல்லே ,கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,இதனால் தானே?

வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
காரணம் என்னவென்றால் ...
தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT !  

23 August 2014

ஷ என்றாலே ஷகிலா நினைப்புதான் வருமா ?

               
''தமிழ் வாத்தியார்  பலான   படங்களைத்தான் செல்லிலே அடிக்கடி பார்த்துக்கிட்டு இருக்கார்னு எப்படி சொல்றே ?''
        
             ''ஷ என்பது வடஎழுத்து நாம பயன்படுத்தக் கூடாதுன்னு அவர் சொன்னப்போ...ஷகிலாவுக்கு வர்ற ஷ தானேன்னு கேட்டேன்  ..வகுப்பை விட்டு வெளியே போடான்னு விரட்டி விட்டாரே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் !
''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
''அய்யய்யோ என்னாச்சு ?''
''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''


மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் !

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
சில வீடுகளில், கணவன்மார்களுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடும்...
சில வீடுகளில் ,கணவன்மார்களின் வலி தாங்க முடியாமல்போடும்  கூப்பாடும் ...
எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் !

22 August 2014

மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருக்கார்!

--------------------------------------------------------------------------------------
மாமியார் மேல் இம்புட்டு பாசமா ?

''கல்யாணம் ஆனதும் பிள்ளையைப் பெத்துக்கணும்னுஅவசரப் படுறீயே,ஏண்டி ?''
''பேரப்பிள்ளையே கண்ணாரப் பார்த்தா போதும் ,நிம்மதியா கண்ணை மூடிடுவேன்னு என் மாமியார் சொல்றாங்களே !''



சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

பாவம் மனுஷன் ,மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருக்கார்!
''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த  நான்  ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லைன்னு சொல்றேன்  அதை நீங்க ஏன்  ஏத்துக்க  மறுக்கிறீங்க ? '' 
''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''


தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் !

கையைக் காட்டினால் நிற்கும்  மினி பஸ் மாதிரி 
1௦௦ கிமீ வேகத்தில் செல்கின்ற  ரயிலும் நிற்கும் என 
நினைக்கும் பாமர ஜனங்கள் ...
ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து 
நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !

21 August 2014

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா ?

-------------------------------------------------------------------------------

இவருக்கு திட்டு வாங்கிறதே பொழப்பாப் போச்சு!


             ''ஏண்டா ,கிடைச்ச கண்டக்டர் வேலையே ராஜினாமா பண்ணிட்டே ?''

              ''பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தாம போனா வெளியே நிற்கிறவங்க வைறாங்க ,எல்லா ஸ்டாப்பிலும்  நிறுத்தினா உள்ளே இருக்கிறவங்க வைறாங்களே !"


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா ?

''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி  இருக்கீங்க  ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்ன்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !



நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் !

கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும் 
மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
அது அடைய வேண்டிய உயரத்தை 
வெங்காயம் தொட்டுவிட்டதாலா ?

20 August 2014

ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் !

---------------------------------------------------------------------------------

ஜூஸிலும் ரெண்டு வகையா ?

''சாத்துக் குடி ஜூஸ் கேட்டா ,தண்ணிச்சாற்றை 

கொண்டுவர்றீயே,நியாயமா ?''

''தனிச் சாறு நூறு ரூபாயாகும் ,கொண்டுவரவா ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் !


''முழு உடல் பரிசோதனை செய்துக்கிட்டு ஒரு மாசமாச்சே ,இன்னுமா உங்க உடம்பிலே என்ன நோய் இருக்குன்னு ன்னு கண்டுபிடிக்க முடியலே ?''

''என்ன நோய் இல்லைன்னு கண்டுபிடிக்கத்தான் முடியலையாம் !''



டாட்டா .பிர்லா பொறந்ததும் 'லேபர் 'ரூமில்தான் !

லேபர் ரூமிலே பிறந்தாலும் கூட ...
சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும் 
அவரவர் கையிலேதான் இருக்கிறது !

19 August 2014

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு ?

  --------------------------------------------------------------------------------    ஜென்டில்மேன் இராவணன் ?      
          
        ''இராவணன்  சீதையை சரியாக பத்து மாதம் சிறை வைத்து இருந்தாராம் ,இதில் இருந்து என்ன தெரியுது ?''
            ''இராவணன் சீதையிடம் சேஷ்டை எதுவும் செய்யலேன்னு தெரியுது !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

''நீ கேட்ட நெக்லசை உன் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா ?''
''உனக்குத்தான் கழுத்தே இல்லையே ,நெக்லஸ் எதுக்குன்னு கிண்டல்தான் பண்றார் !''

தன் குறையை மறக்கும் மனிதன் !

பால் குடிப்பது பூனையின் இயல்பு ...
சந்தேகப் படுவது மனிதனின் இயல்பு ... 
'இந்த பூனையும் பால் குடிக்குமா 'என்று கேட்பது
எந்த வகையில் நியாயம் ?