30 June 2015

பெண்டாட்டியை தேடிக்கலாம் ,நகையை :)

---------------------------------------------------------------------------

  புத்திசாலிப் பசங்கதான் :)            
              ''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
                  ''முட்டாளோட கேள்விக்கெல்லாம்  பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''
நல்ல பிக் அப்தான் :)
             ''கூப்பிட்ட மறு நிமிஷமே கால் டாக்ஸிக்காரன்  வாசல்லே வந்து நிற்கிறான்னா நல்ல பிக் அப் தானே ?இதுக்கு ஏன் வருத்தப் படுறீங்க ?''
         ''என் பொண்ணையும்  பிக் அப் பண்ணிக்கிட்டு ஓடிட்டானே  !''


பெண்டாட்டியை தேடிக்கலாம் ,நகையை :)

  ''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
''சரி நான் என்ன செய்யணும் ?''
          ''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சுக் கொடுங்க போதும் !''


பெண்கள் நிறைய அழுதால் தாய்ப்பால் குறையுமோ ?

பெண்களின் கண்ணீருக்கும் ,தாய்ப்பால் சுரப்புக்கும் காரணம் ...
ஒரே ஹார்மோன்தான்  என்பதை நம்ப முடியவில்லை !
கணவன் விசயத்தில் தாராளமாகவும் 
குழந்தை விசயத்தில் குறைவாகவும் உற்பத்தி ஆகிறதே !


  1. கரந்தை ஜெயக்குமார்Mon Jun 30, 06:18:00 a.m.
    ஆகா
    நகையை கண்டுபிடித்துக் கொடுத்தால் மட்டும் போதுமா




    1. ஆமாம் அவருக்கு இன்னும் பொன்னாசை விடவில்லை !
  2. பால கணேஷ்Mon Jun 30, 06:57:00 a.m.
    நல்ல கால் டாக்ஸி டிரைவர்...!




    1. மகளை கடத்திக்கிட்டு போனவனின் காலை வெட்டணும்னு இங்கே துடிச்சுகிட்டு இருக்கார் அப்பன்காரன் ,நீங்க என்னடான்னா ,நல்ல 'கால் 'டாக்ஸி டிரைவர்ன்னு சொல்றீங்க !
  3. திண்டுக்கல் தனபாலன்Mon Jun 30, 07:41:00 a.m.
    இதுவல்லவோ பிக்-அப்...!




    1. நல்ல வேளை,வயசுப் பயலா இருக்கப் போய் மகளை பிக் அப் பண்ணிக்கிட்டு போனான் ! இல்லைன்னா  அய்யா பாடு  திண்டாத்தம்தான் :)


29 June 2015

*ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரை தெரிஞ்சுக்கலாமே !

----------------------------------------------------------------------------

     இளவயதில் கழுத்து வலி  வரக் காரணம் :)                            
                 '' டாக்டர் என் கிட்டே ஏன் இந்த போட்டோவைக் கொடுக்கிறீங்க ?'

                                                                         
          ''இந்த பயபிள்ளைங்களுக்கு  கழுத்து வலிக்குமா வலிக்காதான்னு தெரிஞ்சுக்கத்தான் !''     

*ஐ ஸ் வ ர் யா வை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரை தெரிஞ்சுக்கலாமே !

வட இந்திய டூர் - பாகம் 2
    முந்தைய பதிவில் வாகா பார்டர் சென்று பார்த்தோம் ,அடுத்ததா நாம செல்ல இருப்பது அதே பஞ்சாப்பில் இருக்கும் பொற்கோவிலுக்கு ! .
சீக்கியவரின் புனித தலமான அங்கே எல்லாரையும் அனுமதிப்பார்களா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் ...சாதி மதம் ,ஏழைப் பணக்காரன் என்று எந்த  பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு என்றதால் ...இதோ இந்த முன் வாசல் வழியாக உள்ளே நுழைக்கிறோம் ...


உள்ளே நுழைந்ததும் கண்ணைப் பறிக்கும் தகதக தங்க நிறத்தில் கண்ணில் படுகிறது பொற்கோவில் ...


தெப்பக் குளத்தின் நடுவே கோவிலில் ஒரு பக்கம் மட்டுமே வாசல் .இரண்டு வரிசையாக மக்கள் ...ஒரு வரிசை மட்டும் வேகமாய் உள்ளே போய்க் கொண்டு இருந்ததால் அந்த வரிசையில் நான் நுழைந்தேன் ...
அங்கிருந்த தாடி வளர்த்து இடுப்பில் குர்பான் கத்தியுடன்இருந்த சீக்கிய பக்தர் ,என்னை அடுத்த வரிசைக்கு போகச் சொன்னார் ..காரணம் ,நான் நின்றது சீக்கியர்களுக்கு மட்டுமே உண்டான வரிசையாம் ...ஜாதி மத பேதம் இல்லாத இடத்தில் இப்படியுமா என்று பட்டது ..நம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் நுழைய வேறு மதத்தவர்களுக்கு அனுமதியே இல்லையே ..அதுக்கு இது பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்...மூன்று மாடி அமைப்புடைய அந்த கோவிலில்  சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் ...ஒரு சிலர் நடக்கக்கூட விடாமல் தரையை சுத்தம் செய்வதில் குறியாய் இருந்தார்கள் ..அது அவர்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனை என்றும் சொன்னார்கள்  ,இப்படியும் நேர்ந்து கொண்டு சுத்தம் செய்வார்கள் என்றும் சொன்னார்கள் ...
உள்ளே எங்கேயும் உருவச் சிலை வழிபாடு இல்லை ,மத குருமார்கள் புனித நூலை உள்ளதை ஓதிக் கொண்டு இருந்தார்கள் ,இருவர் பாடிக்கொண்டிருந்த  பஜன் கீர்த்தனைகள் பொற்கோவில் வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது !
இதுக்கு அப்புறம்தான் நமக்கு மிகவும் பிடித்த விஷயம் வருகிறது ,வேறொன்றுமில்லை , போஜனம்தான் !அந்த போஜனத்திற்கு பெயர் லங்கர் என்றார்கள் .பொற்கோவில் பின்புறம் இருக்கும் பெரிய ஹாலில் லங்கர் நடந்து கொண்டிருந்தது .லஞ்கரில் பரிமாறப் படுவது  ரொட்டிதான் அதாவது சப்பாத்தி உடன் தாள்மக்கனி.(தாள்மக்கனி என்றதும் எனக்கு வந்த மாதிரி ஹிந்தி நடிகை  மந்தாகினி  உங்கள் நினைவுக்கு  வரமாட்டார்  என்று நம்புகிறேன் ) தினசரி லட்சம் பேருக்கு இங்கே இந்த தானம் கொடுக்கப் படுகிறதாம் லட்சத்தில் ஒருவராக நாங்களும் தின்று களித்தோம் இங்கே ஒரு கண்டிஷன்,ரொட்டியை இரு கைகளை யும் ஏந்தி நாம் வாங்கிக் கொள்ளவேண்டும் ...
           என்றும் அணையாத வள்ளலார் ஜோதியைப் போல் அங்கே பெரிய பெரிய அடுப்புகளில் சமையல் நடந்துக் கொண்டே இருந்தது ,பணியாளர்கள் சிலர்தானாம் ,எல்லா  பணிகளையும் அங்கே வரும் பக்தர்கள் தான் செய்துக் கொண்டிருந்தார்கள் .காய்கறி நறுக்குவது ,எச்சில் தட்டு கழுவுவது போன்ற பல வேலைகளை நேர்ந்து கொண்டுவந்தவர்கள்  செய்வதாக சொன்னார்கள் ..( நம் பக்தர்கள் நேர்த்திக்கடன் என்று மயிரைக் கொடுப்பார்கள் ,ஆட்டை அறுத்து  தின்று 
வயிறு புடைக்க தின்று  தீர்ப்பார்கள் .அவர்கள் செய்வது அல்லவோ உண்மையான நேர்த்திக் கடன் ?)
பயணம் தொடரும் ...

=================================================================================


மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் !

            ''அவர் வியாபாரத்திலே திவால் ஆயிட்டார்னு சொன்னாங்க ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
             ''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''

மக்களைக் காப்பதிலும் பூஜ்ஜியம்தானா ?

 ஒவ்வொரு இயற்கை கோரத்தாண்டவமும் சொல்கிறது ...

முன் எச்சரிக்கை நடவடிக்கையில்... 

இன்னும் இந்தியா 'பூஜ்ஜியம் 'கண்டுபிடித்த 

மிதப்பிலேயே உள்ளது என்பதை !

  1. பொற்கோவில் பற்றிய தகவல்கள் அருமை.

    இங்கு சிட்னியில் குருத்வாரா கோவில் இருக்கிறது. இங்கும் அன்னதானம் என்றால் அப்படி ஒரு அன்னதானம் நடைபெறுகிறது. கோவிலும் ரொம்ப சுத்தமாக இருக்கும். கோவிலுக்குள் நுழையும்போது நாமும் தலையில் அந்த டர்பன் கட்டிக்கொண்டு தான் உள்ளே செல்ல வேண்டும். பெண்கள் துப்பட்டாவை தலையில் போர்த்திக்கொண்டு தான் உள்ளே செல்ல வேண்டும். அந்த துணிகளை எல்லாம் அங்கேயே கொடுப்பார்கள்.




    1. ஆனால் இங்கே மஞ்சள் டர்பன் துணியை பத்து ரூபாய்க்கு வெளியில் விற்பதை வாங்கி அணிந்து சென்றோம் .பெண்களும் அதை அணிய வேண்டுமென்று கூறினார்களே ?
    2. இங்கு பெண்கள் அந்த துப்பட்டாவை தலையில் சுற்றிக்கொண்டால் போதும். இங்கு அந்த துணிகளுக்கு காசு எல்லாம் கிடையாது.
    3. அடடா ,இந்த விஷயம் முன்பே தெரியாமல் பத்து ரூபாயை தண்டச் செலவு செய்து விட்டேனே சொக்கன் ஜி !

  2. பொற்கோவில் பொன்னான விமர்சனம்!

    ஜி ...அந்த மஞ்சத்தாள விட...கல்யாண மஞ்சத் தாள் ஒரு அப்பனை போண்டியாக்கிடும்!!!!!!

     கவிதை சிந்தனை சிரிகவி!




    1. கல்யாண மஞ்சத்தாள்அடித்துவிட்டு அடுத்தகட்ட செலவை செய்ய முடியாமல்தான் ஆண்டியாகி விடுகிறார்களோ ?

28 June 2015

பொண்ணோட முடி முழங்கால் வரை ,வாய் ?

                     ''நீதானே முடி நீளமா இருக்கிற பொண்ணு வேணும்னு கட்டிகிட்டே ,இப்போ ஏன் வருத்தப் படுறே ?''

                       ''வாயும் நீளம்னு இப்போதானே தெரியுது ?''
மனைவியிடம்  'கடி 'வாங்கியதால் வந்த மறதியோ ?
         '' ஆயிரம் கொசு கடித்தாலும் கடிக்கிற உணர்வே தெரியமாட்டேங்குதா..எப்போ இருந்து இப்படி ?'' 
         ''ஒருநாள் தெரியாத்தனமா டூத் பேஸ்ட்டிற்கு பதிலா ,கொசு விரட்டி கிரீமினால் பல் தேய்ச்சதில் இருந்துதான் டாக்டர் !''


ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !

          '' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
          ''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  போகாதுங்கிறாரே !''


இது ஒரு தந்தையின் சுயநலம் மட்டுமில்லை !

என் ஆதர்ச குருவும் பிடிக்காமல் போனார் ...
நானும் விவேகாநந்தராய் ஆகப் போகிறேன் என்று 
என் ஆசைமகன்  சந்நியாசம் வாங்கியதால் !
Chokkan SubramanianSat Jun 28, 06:51:00 p.m.
        அந்த மூன்றாவது பஞ்ச் வசனத்தை யாராவது சினிமாக்காரங்க சுட்டுடப்போறாங்க!!!!!
            Bagawanjee KASat Jun 28, 08:44:00 p.m.
       சுட்டு பார்க்கட்டும் ,உங்களையே சாட்சியா வைத்து வழக்கு போட்டு விடுகிறேன் !

27 June 2015

குத்தாட்டம் பார்க்க வாறீங்களா :)

------------------------------------------------------------

மந்திரியை தாரிலே முக்கி எடுத்தாலும்  தவறே இல்லை !

       ''  மந்திரி என்ன சொன்னார் ... அவர் மேலே செருப்பை எறியுறாங்களே ?''
        ''இப்போது வாழைத் 'தார் 'விடும் சீசன் ஆரம்பித்து விட்டதால் விரைவில் ரோடுகள் போடப்படும்னு சொன்னாராம் !''
பதிவர் என்றானபின் சுற்றுலாப் பயண  அனுபவங்களை எழுதவில்லை என்றால், தலை இஞ்சி நூறாய்  (சுக்கு நூறாய்  என்று இன்னும்  எத்தனை நாள்தான் சொல்லிக் கொண்டிருப்பது ? )  உடைந்து விடும் என்பதால், சென்ற ஆண்டு இதே நாளில் போட்ட பதிவு இதோ .....

தினசரி இங்கே குத்தாட்டம்தானா ?

                             வட இந்திய டூர் - பாகம் 1
 அண்மையில் வட இந்தியச் சுற்றுலா  சென்றபோது,   நம் நாட்டையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோடுஅமைந்து இருக்கும் ஊரான வாகா பார்டர் போய் பார்க்கலாமே என்று டெல்லியில் இருந்து கிளம்பினோம் .அங்கே என்ன விசேசம் என்றால்...எல்லைப் பாதுகாப்பு படையினர் தினசரி நடத்தும்  கொடியிறக்க நிகழ்ச்சிதான் !
       எங்கள் வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள  ஒரு டோல் கேட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது,பின்னால் அவசர கால சைரன் ஒலியுடன் வேகமாக வந்தது ஒரு கார் ..அது கடந்து செல்ல அங்கிருந்த காவல் துறையினர் டோல் கேட்டில் ஒரு வழியை ஏற்படுத்தினார்கள் .யாரோ ஒரு VIP செல்கிறார் போலிருக்கிறது நினைத்து பார்த்தால் .அந்த எஸ்கார்ட் வண்டிக்கு பின் ஒரு வால்வோ பஸ்,அதற்கு பின்னாலும் ஒரு எஸ்கார்ட் கார் .இவ்வளவு பாதுகாப்பும் அந்த பஸ்சிற்கு! ஏனென்றால் ,அது டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு செல்லும் பஸ்!இடையில் அந்த பஸ் எங்கேயும் நிற்காதாம்!வாகா கேட்டில் இறக்கி விடப்படும் பயணிகள் ,அங்கு தயாராக இருக்கும் பாகிஸ்தான் பஸ்ஸில் லாகூர் செல்வார்களாம்!
         நாங்கள் கொடிஇறக்க நிகழ்ச்சி நடைபெறும் வாகா பார்டர் சென்று சேர்ந்தோம்.அங்கே பார்த்தால் ஒரு ஊரே திரண்டது போல் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது .நாலரை மணி வாக்கில் கேட்டை திறந்தார்கள் .ஒரு ஒழுங்கு இல்லாமல் மக்கள் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் .மெடல் டிடெக்டர் செக் அப் முடிந்த பின் ,பார்வையாளர் மாடத்தில் போய் அமரலாம் என்று பார்த்தால் முடிய வில்லை .சுமார் இருபதாயிரம் பேரை கொள்ளக்கூடிய இடத்தில் முப்பதாயிரம் பேருக்கு மேற்பட்டோர் கூடி  இருந்தனர் !
     எல்லைப் பாதுகாப்பு படையினர் அங்கே வரும்  மக்களை ஆரம்பத்தில் இருந்தே வரிசையாக ஒழுங்குபடுத்தி அமரவைத்தால் நல்லது .இல்லையென்றால் எதிர்காலத்தில்  விரும்பத்தகாத விளைவுகள்  ஏற்படலாம் ,இந்த விசயத்தில் BSFஅதிக கவனம் செலுத்தினால் நல்லது !
         பார்வையாளர் மாடம் முழுவதும் ஆர்வத்துடன் மனித தலைகள் .நிகழ்ச்சி தொடங்கியது .மாடத்தின் முன் உள்ள இடத்தில் ,பெண் குழந்தைகளை அழைத்து நமது தேசீயக் கொடியை அவர்கள் கையில்  கொடுத்து சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஓடச் சொன்னார்கள் .பெருமை பொங்க கொடியை பறக்க விட்டு கொண்டே ஓடினார்கள் ,ஓடினார்கள் ,நம் தேசத்தின் எல்லைக்கே ஓடினார்கள் !
பிறகு தேசபக்தி பாடல்கள் முழங்கியது ,விரும்பமுள்ள பெண்கள் ,குழந்தைகள்  ஆடலாம் என்று அனுமதிக்கப் பட்டார்கள் .துள்ளல் இசையுடன் வந்த பாட்டிற்கு பெண்கள் ஆடினார்கள் ,ஆடினார்கள் ,சினிமா குத்து ஆட்டம்கூட தோற்றுவிடும் அப்படி ஆட்டம் போட்டார்கள் !அதைப் பார்த்த எனக்கே இடுப்பு சுளுக்கிக் கொண்டு விடும் போலிருந்தது  !  ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் !  
         ஒலி பரப்பான தேசபக்தி பாடல்கள் எல்லாமே ஹிந்தி பாடல்கள்தான் .இந்திய நாடு என் வீடு என்று தொடங்கும் நம் பாடலைப் போட்டால் நன்றாய் இருக்குமே என்று எனக்கு பட்டது .அது இந்த 'ஹிந்தி'ய 'நாட்டில் எங்கே நிறைவேறப் போகிறது ?
        பிறகு ,BSF படை வீரர்கள் உரத்த கமென்டுடன்,கம்பீர நடை போட்டார்கள் கொடி மரத்தை நோக்கி !தலைக்கு மேலே காலை தூக்கி அவர்கள் கொடி வணக்கம் செலுத்தியது நன்றாய் இருந்தது ! பாரத் மாதாக்கி ஜெய் என்று நம் மக்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம்போட்டு தங்களின்  தேச பக்தியை நிரூபித்தார்கள் !
             இந்தியா என்று பெயர் பொறிக்கப்பட்டு  அழகாய் காட்சி தரும் கேட் திறக்கப் பட்டு ,அங்கு ஏற்றப் பட்டிருக்கும் நமது மூவர்ணக் கொடி,தேசீயக் கீதம் முழங்க இறககப் படுகிறது ,இதே போன்று பாகிஸ்தான் தரப்பிலும் நிகழ்ச்சி நடத்தப் பட்டு இருநாட்டு கொடிகளும் ஒரே நேரத்தில் கொடிஇறக்கம் நடத்தப்படுகிறது .      நம் நாட்டுதரப்பில்,  பார்வையாளர்கள் கூட்டத்தால் மாடங்கள் நிரம்பி வழிகின்றன .ஆனால் .பாகிஸ்தான் தரப்பில் பார்வையாளர்கள் நூறு பேர்கள் கூட இல்லை ,இதை பெருமை பொங்க சொல்லிக் கொண்டு நம்மவர்கள் தங்களின் தேச பக்தியை வெளிப் படுத்தினார்கள் .தீவிர தேச பக்தர்கள் வந்தே மாதரம் என்ற போது மற்றவர்களும் அதை திருப்பி சொன்னார்கள் .பாகிஸ்தான் டவுன் டவுன் என்று ஒருவர் கோஷம் போட்டபோது, யாரும் அதை திருப்பி சொல்லாதது எனக்கு மகிழ்ச்சியை தந்தது !
    அங்கே எடுக்கப் பட்ட சில புகைப் படங்கள் ,இதோ உங்கள் பார்வைக்கு ......(படத்தைக் கிளிக் செய்து பார்ப்பது கண்களுக்கு நல்லது :)



                                                                            பயணம் தொடரும் ....

நன்றி மறக்காத டாக்டர் !

            ''டாக்டர் அறையிலே நன்கொடை கொடுத்தவங்கன்னு  நிறைய போட்டோ இருக்கே ,அவங்க எல்லாம் யாரு ?''
         '' டாக்டரிடம் ஆப்ரேசன் பண்ணிக்க காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவர்கள்  !''




தொப்பைக்கு 'goodbye 'எப்போது ?

தொப்பை விநாயகர் சிலைகூட ...
கடலில் உடனே கரைந்து விடுகிறது !
கடற்கரை ஓரத்தில் வேர்க்க வேர்க்க ஓடுபவர்களின் 
தொப்பைதான் கரைவதாக தெரியவில்லை !

  1. KILLERGEE DevakottaiFri Jun 27, 12:41:00 a.m.
    துள்ளல் இசையுடன் வந்த பாட்டிற்கு பெண்கள் ஆடினார்கள் ,ஆடினார்கள் ,சினிமா குத்து ஆட்டம்கூட தோற்றுவிடும் அப்படி ஆட்டம் போட்டார்கள் !அதைப் பார்த்த எனக்கே இடுப்பு சுளுக்கிக் கொண்டு விடும் போலிருந்தது
    அது எப்படி ? பகவான்ஜீ ஆட்டத்தை பார்த்தாகூட இடுப்பு சுளுக்குமா ?
    விநாயகர் கவிதை அருமை.


    1. மெட்ராஸ் ஐ வந்தவங்க கண்களைப் பார்த்தால் நமக்கும் அது தொற்றிக் கொள்ளுமே ,அது மாதிரிதான் இந்த சுளுக்கும் !சுளுக்கு வர்ற அளவிற்கு  அந்த இடத்திலே ஏன் கண்ணு போச்சுன்னு எல்லாம் கேட்கக்கூடாது !

26 June 2015

மாப்பிள்ளையால் முடிந்ததும்,முடியாததும் :)

                ''நான் செய்றது எல்லாமே தலைக்கீழா இருக்கா ,என்ன மாமா சொல்றீங்க ?''
            '' என் பொண்ணு முழுகாம இருந்தா பரவாயில்லை,போட்ட நகைங்க எல்லாம் அடகு வச்சு  முழுகிப் போச்சுன்னு சொல்றீங்களே !''
 

மனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்:)

        

                  ''என்னங்க ,பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச்  சொல்றீங்க ?''

            ''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''



காலம் செய்த கோலமடி !

ஆட்டோமேடிக் வாட்ச் வந்ததால் ... 

ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !

செல் போனில் டயம் தெரிவதால் ...

வாட்ச் வாங்குவதே  நின்று போனது !


  1. காமக்கிழத்தன்Thu Jun 26, 12:41:00 p.m.
    பணத்தை எடுத்துட்டே இருந்தா, பவித்ரா ‘தரித்திரா’ ஆயிடுமே. அது தெரியாதா அவங்களுக்கு?

    1. தரித்திராக்கள் எல்லா பெயரிலுமே இருக்கிறார்களே 
    2. !Thulasidharan V ThillaiakathuSun Jun 29, 11:08:00 a.m.
    3. கவிதை அட அட அட......சூப்பர்! ஜி! உண்மைதான்!
    4. மனுஷன் இன்னும் சோம்பேறி ஆகின்றான்....அதாங்க மொபைல் சும்மா தொட்டாலே அது டைம் பாக்கக் கூட வேண்டாம்...காதுல சொல்லுமாமே!..அப்படியும் வந்து விட்டதாகக் கேள்வி!!!!
    5. தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்....லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துடுவோம்...அதாங்க லேட்டஸ்டா போடற பதிவும் பார்த்துடுவோம்! 
    6. Bagawanjee KASun Jun 29, 08:30:00 p.m.
    7. அடப் பாவமே ,நேரம் பார்க்கக் கூட முடியாத அளவிற்கா  மனிதன் பிசியாகி விட்டான் ?போற போக்கை பார்த்தால் சாப்பிட நேரமின்றி மாத்திரை தேவைப் படும் போலிருக்கே !     
    8. தாமதம் பரவாயில்லை ,ஆனால் 48மணி நேரத்திற்குள் போடப் படும் வாக்கின் அடிப்படையில் தான் தமிழ் மணத்தில், வாசகர் பரிந்துரை,மற்றும் மறுமொழிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும் 'தொழில் ரகசியத்தை' நம் பதிவர்கள் அனைவருக்கும் இதன் மூலம்  தெரிவித்துக் கொள்கிறேன் !