29 February 2016

படுக்கையிலுமா பத்தடி இடைவெளி :)

 பெயர் பொருத்தம் சரியில்லையே :)

                  ''இறுதி ஊர்வலம் போய்கிட்டு இருக்கு ,உனக்கென்னடா யோசனை ?''
                 ''மயானம் வரைக்கும் போற  இந்த வண்டியிலே நல்லவனும் போறான் ,கெட்டவனும் போறான் ...ஆனால் ,இந்த வண்டிக்கு எதுக்கு சொர்க்க ரதம்னுபெயர் வச்சிருக்காங்க ?''
படுக்கையிலுமா பத்தடி இடைவெளி :)

          '' டாக்டர் ,டிரைவர் நான் ...ரோட்டிலே  பாலோ பண்ற பத்தடி இடைவெளி  ரூல்ஸை வீட்டிலேயும் கடைப் பிடிக்கணுமா,ஏன் ?''

           ''ஐந்தாவது பிரசவத்துக்கு பெண்டாட்டியை கூட்டி வந்திருக்கீயே !''

நகைக் கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா :)

           ''நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் ,யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'ன்னு உங்களுக்கு தெரியாதா ?''

             ''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''
டாக்டர்களில் மட்டும்தான் போலி உண்டா :)

         ''என்ன சொல்றீங்க ,அந்த பெட்லே படுத்து இருக்கிறவர் போலி நோயாளியா ?''

          ''ஆமா ,அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !'

காதலுக்கு மரியாதை இதுதானா ?

பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...
திருமணத்திற்காக பியூட்டிப் பார்லரில் அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண் மீது ...
கூரியர் தபால்காரனைப் போல் உள்ளே வந்த கொடூரன் ...
ஆசிட்டை வீசியதில் ...
அந்தப் பெண்ணின் முகம் கழுத்து மார்பு வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டன ...
C C TV கேமரா பதிவைக் கொண்டு அந்த கொடூரனை கைது செய்து விசாரித்ததில் ...
அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும் ,காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் ...
ஆசிட்டை வீசியதாகவும் கூறியுள்ளான் ...
உண்மையாக அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் என்றால் இப்படி செய்ய மனம் வருமா ?
தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற பொறாமையை எப்படி காதல் என்று சொல்ல முடியும் ?

28 February 2016

'சின்ன வீடு' இங்கே இருப்பதும் நல்லதுதான்:)

கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமா :)

          ''டாக்டர் ,என் வீட்டுக்காரர்  கடந்த ஒரு மாசமா ,அரிசியில் கிடக்கிற கல்லை மட்டும் பொறுக்கி தின்கிறார் !''
                '' முன்னாடியே  ஏன் கூட்டிட்டு  வரலே ?''
                 ''ஐம்பது கிலோ மூடையாச்சே ,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர்  !''      

'சின்ன வீடு' இங்கே இருப்பதும் நல்லதுதான்:)

            ''அந்த அம்மாவை  வீட்டைக் காலி பண்ண வேண்டாம்னு எல்லோரும் தடுக்கிறாங்களே ,அவங்க  என்ன பெரிய சமூக சேவகியா ?''

          ''அட நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''

இசையால் இயற்கையை இசைய வைக்க முடியுமா :)

         ''அவர் , அமிர்தவர்சினி ராகத்தை வாசிச்சு ,மழைப் பெய்ய வைக்கிறேன்னு சவால் விட்டாரே ,என்னாச்சு ?''

          ''அவர் மேலே செருப்பு மழைதான் விழுந்தது !''

இதிலே வர்ற வருமானம் I T யிலும் கிடைக்காது :)

           ''என்னடா ,பிச்சையெடுக்க வரமாட்டேங்கிறே ?''

           ''கேட்டு வாங்கி சாப்பிடுறதெல்லாம் ஒரு பிழைப்பான்னு ,கேட்காம எடுக்கிற பிக் பாக்கெட் தொழில்லே  இறங்கிட்டேன் !''

சில வருடத்துக்கு முன் ...ஊட்டி புலி தந்த கிலி !

தமிழகத்தின் உச்சபட்ச உயரமான தொட்டபெட்டா பகுதியில் உலா வந்து ...

மக்களுக்கு அதிகபட்ச  கிலியைக்  கொடுத்துக் கொண்டிருந்த புலியை ...

ஒருவழியாக சுட்டுக் கொன்று விட்டார்கள் என்பதை அறிந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் ...

3 2 ரவுண்டு சுட்டுப் பிடித்த புலியை ...

'ஆரம்பி 'வன விடுதிக்கு கொண்டு வந்தார்களாம் ...

இந்த 'ஆபரேசன் டைகர் ' புலி வேட்டையை ஆரம்பிக்க ஏன் இவ்வளவு தாமதம் செய்தார்கள் என்று தெரியவில்லை ...

இதற்குள் மூன்று உயிர்கள் பலியாகி விட்டன ...

யாரும் ஒருவாரம் வேலைக்கு செல்ல முடியவில்லை ...

பள்ளிக்கும் எந்த குழந்தையும் போகவில்லை ...

முற்றிலும் வியாபாரம் பாதிக்கப் பட்டது ...

மாமூல் வாழ்க்கை ஸ்தம்பித்தது ...

இவ்வளவு மோசமாக நிலைமை ஆகும் வரை அரசு தாமதித்த காரணம் ...

முறத்தால் புலியை எந்த வீரத்  தமிழச்சியாவது

விரட்டி விடுவாள் என்ற புராதன நம்பிக்கையாக இருக்குமோ ?

27 February 2016

'இச் ' சினால் பலன் இல்லாமல் போகுமா ...)

 இவர் எல்லாம் எதுக்கு ஃ பிரிட்ஜ் வாங்கணும் :)                
                   ''என்னங்க ,ஃபிரிட்ஜ்ஜிலே  வச்சு இருந்ததெல்லாம் கெட்டு போயிருக்கே ,என்ன செய்ஞ்சீங்க ?''
                  ''நேற்று ராத்திரி ஃபிரிட்ஜ்சை  திறந்தப்போ,உள்ளே லைட் வேஸ்ட்டா  எரிந்து கொண்டே இருந்தது ... நான்தான்  ஸ்விட்ச்சை ஆப் செய்தேன் !''

படித்த செய்தி .....
இக்சி முறையில் எந்த வயதினரும் செயற்கை முறையில் கருத்தரித்து, அழகான குழந்தைகளைப் பெற முடியும் என்பதை  55 வயதுப் பெண் நிரூபித்து, குழந்தைகள் இல்லாத எண்ணற்ற தம்பதியினருக்கு பெரும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் !
தோன்றிய  மொக்கை ....
               ''டாக்டர் ,உங்க மருத்துவமனையில்  தம்பதிகளுக்கு  'இக்சி 'முறையில் பிள்ளைப் பிறக்க வைக்கிறீர்களாமே ,அதெப்படி ?''
               ''உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் ? உங்களுக்கு  'இச் 'முறையிலேயே  எல்லாமே கிடைச்சுப் போவுதே !''
இப்படி இக்கு வைக்கும் காரணம் என்ன :)
                    ''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை 
பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
               ''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர  மாறுதலுக்கு 
உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''
அரைகுறை அகராதியால் என்ன பயன் :)
            ''என் அகராதியிலே 'மன்னிப்பு 'ங்கிற  வார்த்தையே கிடையாது !''
            ''பிறகெதுக்கு அந்த அரைகுறை அகராதியை வச்சுக்கிட்டு இருக்கீங்க ?''

நாம் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் :)
 பாண்டுரங்க சுவாமிக்கு கோயில் கட்டும்
 பேறு பெற்றவர் நடிகை பண்டரி பாய் ...
 நாம் பெற்ற பேறு ...
 நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலத்தில் வாழ்வது !

26 February 2016

நடிகைக்கு இப்படியும் ஒரு பிரச்சினையா :)

புதுசா நாய் வளர்ப்பவருக்கு  வந்த ஆசை :)              
                ''குரைக்கிற நாய் கடிக்காதுன்னு சொல்றாங்களே ,உண்மையா ?''
                ''அதை நானும் தெரிஞ்சிக்கத்தான் உன்னை வீட்டுக்கு வரச் சொல்றேன் !''
நடிகைக்கு இப்படியும் ஒரு பிரச்சினையா  :)
            ''மேக்கப் உடன்  நீங்க வீட்டுக்குப் போவதில் என்ன பிரச்சினை  ?''
             ''என் பையனுக்கே என்னை அடையாளம் தெரியாம போயிடுதே !''
வருகிறது ஊழியர்களின் புதுமைப் போராட்டம் :)
               ''அங்கே ஊழியர்கள் போராட்டம் நடக்குதே , ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டாம்னு  கோஷம் போடுறாங்களா ?''
                 ''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு  58 வயதில்  ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''
 பெற்றோர்கள் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் :)
  பெற்றோர்கள் குழந்தைகளை 
 'கிரச் 'சில் சேர்த்தார்கள் ...
 குழந்தைகள்  பெற்றோர்களை 
 முதியோர் இல்லங்களில்  சேர்க்கிறார்கள் !

25 February 2016

ஜாதகம் இதுக்குத்தான் உதவுது :)

அண்ணன் காட்டிய வழியம்மா :)           
              ''சொல்றதுக்கு சங்கடமா  இருக்கு ,உன் தங்கச்சியை நான் காதலிக்கிறேண்டா !''
             ''இதிலே வருத்தப்பட என்ன இருக்கு  ,உன்னை நண்பனாக்கிகிட்டதே  இப்படி நடக்கணும்னுதானே  !''
தர்ம அடிதான் இவங்களைத் திருத்தும் :)       
                     ''என்னம்மா சொல்றே ,பஸ்ஸிலே 'கையை  உள்ளேயும் நீட்டாதீர்கள் 'என்று எழுதிப் போடணுமா ,ஏன் ?''
                      ''என் பின்னாடி உட்கார்ந்து இருக்கிறவர் கை ஓவரா நீளுதே !''
கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமா  :)
             '' என் பெண்டாட்டி  ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
             ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
             ''மாஞ்சாக் கயிறு தான் !''
உப்பு தின்னா சூடு சொரணை வரணுமா :)
            ''நான் கட்சி  தாவுனதுக்காக .நிருபர்கள் என் தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்க !''
             ''ஏன் தலைவரே ?''
            ''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலப் படுத்துறாங்க !''
ஜாதகம்  இதுக்குத்தான் உதவுது :)
  ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்களோ இல்லையோ ...
 பெண் வீட்டாரிடம் இருந்து என்ன தேறும் என்பதைப் பார்த்து 
 நாகரீகமாய் சொல்லி விடுகிறார்கள் ...
 ஜாதகம் சேரவில்லை என்று !



24 February 2016

தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை :)

இது நிரந்தரக் கூட்டணி போலிருக்கே :)            
                   ''நாட்டிலே போலிச் சாமியார் பெருக யார் காரணம் ?''
                    ''போலீசும்,சாமியார்களும்தான் !''

மாமனார் தந்ததும் ,தராததும்:)
        ''புது மாப்பிள்ளை 'பைக்'கில் எழுதியிருப்பதைப் படித்தால் 'உள்குத்து 'இருக்கிற மாதிரித் தெரியுதா .எப்படி ?''
      ''என் மனைவி மட்டுமே ,மாமனார் எனக்கு தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''
தலைவர் 'ரம்மி 'யில் ஜெயிக்கும் ரகசியம் :)
            ''தலைவர் மரத்தடியில் ரம்மி விளையாடினா பணத்தை அள்ளுறார்,கிளப்பில் விளையாடவே மாட்டேங்கிறாரே ,ஏன் ?''
            ''சட்டைப்பையில் இருந்து சீட்டை எடுக்கிற வித்தை CCTV காமெரா மூலம் வெளியே தெரிஞ்சுடும்னுதான் !''

 சொல்வது எளிது ,செய்வது அரிது :)
      ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்ன்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கீயா ,ஏன் ?
       ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காண்பின்னு சொல்லத்தான் !''

தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை :)
'டியூப் லைட் 'என்றவளின் வாயை அடைக்க 
செலவு பாராமல் 'எலெக்ரானிக்  சோக் 'வாங்கி மாட்டினான் ...
சட்டென்று எரிந்தது டியூப் லைட்..
பட்டென்று கேட்டாள் ..
வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?

23 February 2016

வாலிப வயதை அறிந்த தந்தை :)

காய்ச்சல் பலவிதம் ,அதிலே இது ஒரு விதம் :)          
                 ''ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல் ...கடையிலே பாக்கெட் வாங்கக் கூட பயமா இருக்கு !''
                ''என்ன பாக்கெட் ?''
                 ''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''

வாழும்போதே கணவனை சாகடித்த சாந்தி :)
                                 ''தூக்கு மாட்டிக்கிட்ட சாந்தியோட புருஷன் 
...லெட்டர்லே என்ன எழுதி இருக்காராம் ?''
                           '' என் ஆன்மாக்கூட'சாந்தி 'அடையணும்னு  யாரும் 
வேண்டிக்காதீங்கன்னுதான் !''
வாலிப வயதை அறிந்த தந்தை :)
                 ''என்னங்க .நம்ம பையன்  பத்மாவையே சுத்தி சுத்தி வர்றானாமே ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் பாருங்க !''
                 ''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''
வெள்ளையர்[ஹேர் ]க்கும் உண்டா ஹேர் டை ?
நடுத்தர வயதைத் தாண்டியவர்களின் தலைகள் கூட...
இப்போது  'கரு கரு 'வென்று ...
நன்றாய் தெரிகிறது ...
நாட்டிலே ஒரு வியாபாரம் நன்றாய் நடக்கிறது !




22 February 2016

சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா :)

மனைவியின் சொல்  எல்லாமே மண்டையில் ஏறுமா :)

        ''பசி மயக்கத்தில் காது கேட்காது என்பதெல்லாம் பொய்னு எப்படி சொல்றே ?''
        ''வெங்காயம் நறுக்குங்கங்கிறதை கேட்காத உங்க காதுக்கு  ,டிபன் ரெடின்னா 

மட்டும் நல்லாக் கேட்குதே !''                                                            
                                                                  
 பெயர்பொருத்தம் எல்லாருக்கும் இப்படி அமையாது :)
            ''பவித்ராங்கிற  பெயர் எனக்கு ரொம்ப பொருத்தமா ,ஏன் ?''
            ''பணத்தை வித்  ரா  பண்ணி முடிய மாட்டேங்குதே !''

சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா :)

              ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
                ''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக் 
கொடுக்கிறார்,அதுக்குத்தான் வரச் சொல்றேன் !''

மணப்பெண் இவள்னா திருமணமே வேண்டாம் :)
            ''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கியா ?''
              ''நீங்கதானே உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு 
விளம்பரம் பண்ணியிருந்தீங்க !''

அழையா விருந்தாளின்னா அவமதிப்புதான் :)
        ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
       ''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''

21 February 2016

அழகு முகம் அடையாளம் தெரியுமா :)

 குக்கரில் சாதம் வைக்கத்தான் அவருக்கு தெரியும்  :)           
                ''என்னங்க ,காட்டன் புடவையை  வாங்க வேண்டாம்னு  ஏன் சொல்றீங்க ?''
               ''அதுக்கு கஞ்சி போட ,நான்  எங்கே போறது ?''
வாலிபர்களின் 'கனவு ' வாகனம் வருவதே  தெரியலியாமே :)                                 
                   ''பெரியவரே ,உங்களுக்கு வந்திருக்கிறது அல்சர் ,இது எப்படி வருதுன்னு தெரியுமா ?''
                     '' எதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது 'அல்சர் 'வர்றது எப்படித் தெரியும் டாக்டர் ?''                     
               
மனைவி காதுக்கு மேட்சிங்கா வைரத் தோடு அமையுமா :)
         ''கடையிலே இருக்கிற எல்லா மாடல் தோடுகளைக் காட்டியும் ,உங்க மனைவிக்கு எதுவுமே பிடிக்கலே ...ஏதாவது  ஒரு மாடல் நல்லாயிருக்குன்னு நீங்களாவது எடுத்து சொல்லக்கூடாதா,சார் ?'' 
       ''அட நீங்க வேற ,நான் சொல்ற எதைத்தான் அவ காதுலே போட்டுக்கிட்டா ?''
ஊருக்கே தெரிந்த தலைவரின் 'இரகசியம் ':)
        ''எந்த டெஸ்ட்டும் பண்ணாமலே எனக்கு முதுகு வலி வர வாய்ப்பே இல்லைன்னு உறுதியாச் சொல்றீங்களே ,எப்படி டாக்டர் ?''
         ''ஆட்சிக்கு வர்ற எந்த கட்சிக்கும்  நீங்க தாவுறதாலே 'முதுகெலும்பு இல்லாதவர் 'ன்னு தெரிந்தது தானே ?''
அழகு முகம் அடையாளம் தெரியுமா :)
             முக நூலில் பார்த்த முகத்தைகூட 
             நேரில் பார்த்தால்  அடையாளம் தெரியவில்லை ...
             கடவுளே வந்தாலும் நம்மால் கண்டுகொள்ள முடியுமா ?

20 February 2016

'கை கழுவுறது ' நடி'கை'கள் மட்டும்தானா ?

 இப்படி வாழ்நாளை ஈடு கட்டலாமா :)          
                   ''தம் அடித்ததும் ,ஜோக் படிச்சு சிரிக்க ஆரம்பித்து விடுறீங்களே ,ஏன் ?''  
                 ''சிகரெட் குடிச்சா  ஆயுள்  குறையுமாம் ,சிரிச்சா ஆயுள் கூடுமாமே !''
கொசு ஏமாறாது ,நாமதான் ஏமாறுவோம் :)
             ''கொசு விரட்டி லிக்யூட் தீர்ந்து போச்சு  ,வார்னிங் லைட்டாவது  எரியட்டும்னு ஆன் பண்ணி வைச்சேன் !''
                   ''கொசு ஏமாந்து போச்சா ?''
                   ''என்னையா ஏமாத்துறேன்னு  இரண்டு மடங்கா பிடுங்கி எடுத்துருச்சி  !''
கணவன் குறட்டை விடும்போது கண்டுபிடிச்சது :)
              ''கரடி தூங்குறப்போ மனுசனை மாதிரியே குறட்டை விடும்னு இப்போதான்  கண்டுபிடிச்சு இருக்காங்க,உனக்கெப்படி முன்னாடியே தெரியும் ?''
           ''குறட்டை விடுறப்போ உங்களைப் பார்த்தா அப்படித்தானேங்க  இருக்கு !''
'கை கழுவுறது 'நடிகைகள் மட்டும்தானா :)
            ''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான் பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
            ''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின 'அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''
படிப்பு தானாய் வந்தால்தான் உண்டு :)
               படிப்பில் கோட்டை விடும் மகனிடம் ...
              அந்தக் காலத்தில் தெருவிளக்கில் படித்தேன் ...
              எனச்  சொல்ல  வந்த  தந்தையின்  வாயை அடைத்தது  ...
              'கரெண்ட் கட் ' !


19 February 2016

வள்ளுவரை நினைக்க வைத்த மனைவி :)

 இதுக்குமா டப்பிங் வாய்ஸ் :)    

              '' அந்த நாய்,  நடிகை வீட்டு நாயா  இருக்கும்னு  ஏன் சொல்றே ?''            

                '' குரைக்குது ,ஆனால் சத்தம் வரலையே !''

எதுவுமே பிடிக்கலேன்னா என்ன பண்றது :)

                  ''முப்பத்திரண்டு வகை பவுடரை காட்டியும்   'வாசனையே இல்லை'ன்னு  இந்தம்மா சொல்றாங்க, நான் என்ன செய்றது  முதலாளி ?''

                    '' எறும்பு பவுடரை வேணா  காட்டிப் பாரு !''


வள்ளுவரை நினைக்க வைத்த மனைவி :)

          ''உனக்கு சூடு வச்சது உன் பெண்டாட்டி ,திருவள்ளுவரை ஏண்டா திட்டிக்கிட்டிருக்கே ?''

          ''அவர் அனுபவப்பட்டிருந்தால் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 'னு எழுதி இருப்பாரா ?'' 

மழைக் குறைய காரணம் கண்டுபிடித்த மதுரை மேதை :)

கடந்த சில ஆண்டுக்கு  முன் , மதுரையில் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது ...

எதற்காக ?...

ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகவா...

கச்சத்தீவு  மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...

இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...

இப்படிப்பட்ட கோரிக்கைக்காக அல்லவாம் ...

பாரம்பரியமாக நரியை பரியாக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்று வருகிறதாம் ...

அதில் உண்மை நரியை பயன்படுத்த காவல்துறை தடை விதித்து விட்டதாம் ...

 பொய் நரியை பயன்படுத்தியதால் மழைப் பொய்த்துவிட்டதாம்...

(என்னே ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள் ,புவி வெப்பமயம் ஆவதால் இயற்கைச் சுழற்சி மாறிவருகிறது என்பதைச் சொல்வோரெல்லாம் தலைகுனியனும்!)

ஆகவே உண்மை நரியை பயன்படுத்த அனுமதி தரணும்னு தான்  கையெழுத்து இயக்கமாம் ...

சரி ,உண்மை நரியை உண்மை பரியாக்கி காட்ட இவர்களால் முடியுமா ?

இப்படி ஒரு மூட நம்பிக்கையை வளர்க்கும் இயக்கத்திற்கு கௌன்சிலர் ஒருவர் தலைமையாம் ...

இவர்களால் வர வேண்டிய மழையும் வராது போலிருக்கே !


உண்ணக் கொடுக்கும் தாய்க்கே துரோகமா :)

பூமித் தாய் படைத்த உணவினை  உண்டபின் ...

மனிதன் வீசியெறிந்த பிளாஸ்டிக் பைகளை 

'ஜீரணிக்க 'முடியவில்லை  ...பூமித்தாயால் !