31 July 2016

பாக்கியம் செய்த மனைவிமார்கள் :)

இன்னிக்கு செத்தா  நாளைக்கு  பால் :)             
            ''பாக்கெட் சாராயம் வேண்டாம் ,பாட்டில் சாராயம்தான்  வேணும்னு  கேட்கிறாங்களே ,ஏன் ?''
               ''பாக்கெட் பால் நினைவுக்கு வருதாமே !''

வள்ளுவருக்கும் வடிவேலுவுக்கும் உள்ள பொருத்தம் :)
            ''வள்ளுவர் குறள்லே ஒரு முறை கூட சொல்லாததும் ,வடிவேலு அடிக்கடி சொன்னதும் ஒண்ணுதானா ,என்னது :)''
            ''ஔதான் !''
இந்த வாழ்த்து பலித்தால் குரங்கைதான் வளர்க்கணும் !
          ''தம்பதிகளை வாழ்த்தும்போது  தலைவர் மப்புலே இருந்தார்னு  ஏன் சொல்றீங்க ?''
        ''சீரும் சிறப்புமா வாழ்கன்னு சொல்றதுக்குப் பதிலா ஈரும் பேணுமாய் வாழ்கன்னு சொன்னாரே !''

 பாக்கியம்  செய்த  மனைவிமார்கள் :)
தலையாட்டி பொம்மைகளைப் பார்க்கும் போது ...
கணவன்மார்களை  நினைத்துக் கொள்ளும் மனைவிமார்கள் பேறு 
பெற்றவர்கள் !

        மூன்றாண்டுக்கு முன் , என் முதல் கணினி அனுபவம் !(தொடர் பதிவு )என்ற தலைப்பில் ,பலருக்கும் பல்பு கொடுத்த பதிவுஇது >>>சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி ...
      கிளைமேக்ஸ்சை மறந்தவர்கள் மீண்டும் படிக்கலாம் :)
           இன்று தேதி 7.31.13[இங்கே அமெரிக்காவில் தேதியை நடுவில்தான் எழுதுவது வழக்கம் ]நேரம் இரவு 10.34[நல்லவேளைநிமிடத்தை முன்னாடி போடாம விட்டாங்க ! ]
        ஜன்னலுக்கு வெளியே ...சாலையில் பறந்துக் கொண்டிருக்கும் கார்களின் அணிவகுப்பைப் போன்றே கணினி கற்பதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நினைவிற்கு அணியணியாய் வருகிறது ...e மெயிலைக் கண்டுபிடித்த திரு .அய்யாதுரை அவர்களின் ஐந்து கம்பெனிகளில் ஒன்றான ...[வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை சொல்லும் ]முக்கிய நிறுவனத்தில் ,உயர்ந்த பதவியில் இருந்தாலும் ... ஆரம்பகால என்  அனுபவங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !
              சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பை முடித்த நேரம் ...வரக்கூடாத ஆசைன்னு சொல்ல முடியாது ...முன்னேறத் துடிக்கும் இளைஞனுக்கு வர வேண்டிய ஆசை எனக்கும் வந்தது ...கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டுங்கிற ஆசைதான் !
              அப்போது இருந்த அண்ணாநகரில் bsc ஷோ ரூம் அருகில் இருந்த  ...csc சென்டரின் 'இலவச கம்ப்யூட்டர் ட்ரைனிங் 'போர்டு என்னை அழைத்துக் கொண்டே இருந்ததால் ,,,உள்ளே சென்றேன் .
       எதிர் காலத்தில் பில்கேட்ஸ் அளவிற்கு வருவேங்கிற பொலிவை என் முகத்தில் பார்த்த மாதிரி வரவேற்பு பலமாக இருந்தது .
         ''ட்ரைனிங் டீடைல் வேணும் !''
          ''மூணுமாசம் ப்ரீ கோர்ஸ் .ஸ்டடி  மெட்டீரியல்ஸ் நீங்க வாங்கிக்கணும் ''
        ''ரொம்ப சந்தோசம் ,அதுக்கு எவ்வளவு செலவாகும் ?''
         ''ஆக்சுவலா அதோட விலை ஐந்தாயிரம் ரூபாய் ,ஆனா எங்களுக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்டில் இருந்து எய்ட் வர்றனாலே நீங்க 3000 ரூபாய் கொடுத்தா போதும் ''
     300 ரூபாய்க்கே எங்கள் வீட்டில் வசதி இல்லை 3000 ரூபாய்க்கு எங்கே போறது ?இருந்தாலும் கம்ப்யூட்டர் கல்விமேல் இருத்த மோகம் குறையவில்லை ...அந்த மோகம்தான் மாதமானால் 30000டாலர் சம்பாதிக்கும் சீட்டில் இன்று உட்கார வைத்திருக்கிறது !
            அடுத்து கண்ணில் பட்டது ஒரு பிட் நோட்டிஸ் ,,,அதில் 'கம்ப்யூட்டர் பேசிக் கற்க 100ரூபாய் மட்டுமே 'என்றிருந்தது ,,அட்ரசைப் பார்த்தேன் .சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காளவாசல் பகுதி..ஆர்வக் கோளாறில் சைக்கிளை மிதி மிதியென்று மிதித்து சென்று விசாரித்தேன் ...
         ''100 ரூபாய் கட்டிட்டு காலை 6 to 7 பாட்ஜில் சேர்ந்துக்குங்க ''
        ''நான் அண்ணா நகரில் இருந்து வருகிறேன் 9 to 10 பாட்ஜில் சேர்ந்துக்கிறேனே !''
         ''அது லேடீஸ் பாட்ஜ் ஆச்சே ''என்றார்களோ இல்லையோ ,எனக்கு கற்கும் ஆசையே போய்விட்டது .இத்தனை வருஷம் பசங்களோட மட்டுமே படித்து காய்ஞ்சுக் கிடக்கேன் ..இவங்க என்னடான்னா ,லேடீஸ் தனி கிளாசாமே ?அன்று ...கன்னியர்கள் இன்றி கணினி கற்க மனம் வரவில்லை .இன்று ,,,நியூ யார்க் அருகில் நோவார்க் நகரில் பல நாட்டு பெண்களுடன் பணிபுரியும் வண்ணமயமான வாய்ப்பு !
        அப்புறம் ,கீழவாசல் அருகில் 'எல்லாமே ப்ரீ 'என்று ஆசை காட்டி அழைத்ததால் சென்றேன் .
       அங்கே ,அவர்கள் கேட்ட முதல் கேள்வி ...''என்ன டைப் படிப்பு படிக்க விரும்புகிறீங்க ?''
              கனவுக் கன்னிகளுக்கு அடுத்த படியாக ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவான கவர்ச்சிக் கன்னிகள் என் மனதில் ஒத்தியோ ,வாடகையோ தராமல் குடியிருந்த நேரம் !
            ''அனிமல்நேசன் படிக்கலாம்ன்னு இருக்கேன்னு சொன்னதும் 'கொல்'லென்று சிரித்துவிட்டார்கள் ...எனக்கு அவமானமாக இருந்தது ...[அன்று பட்ட அவமானம்தான் இன்று என்னை  usa கொண்டுவந்து சேர்த்து இருப்பது தனிக் கதை ]
      ''அனிமல்நேசன் இல்லை ,அனிமேசன் ...அதை கத்துக்க வருசக் கணக்காகுமே !''
        நான் அவமானப்பட்ட இடத்தில் படிக்க மனம் வரவில்லை ...இன்றுவரை அந்த சென்டர் பக்கம் தலை வச்சும் படுக்கலே !
           அப்புறம் ...SSLC ல் நான் எடுத்த மார்க்கைப் பார்த்து KLN  ஐ டி கல்லூரியில் 'எங்க காலேஜுக்கின்னு ஒரு மரியாதை இருக்கு'என்று கைவிரித்து விட்டார்கள் .
         பிறகு ,சென்னை தாம்பாளம் அருகில் மூன்றாந்தர கல்லூரியில் Bsc CS ஒருவழியாக படித்துவிட்டு 'மதுரை பாத்திமா கல்லூரியில் MCA பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்ததும் .காம்பஸ் செலக்ட் ஆனதும் ,பெங்களூரு இன்பொடெக்கில் பணி புரிந்ததும் ,என் திறமை கண்டு திரு அய்யாத்துரை அழைத்ததும் ,திரு .நாராயண மூர்த்தி 'நீ அங்கே  இருக்க வேண்டிய ஆள் 'என்று வாழ்த்தி வழி அனுப்பியதையும் ...இப்போ நினைச்சாலும் கனவு மாதிரியே இருக்கிறது !
           கனவு மாதிரியென்னா கனவேதான் என்பதை தெரிவித்துக் கொண்டு என் புருடாவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ...
பல பதிவர்கள் கணினி அனுபவத்தை எழுதி இருப்பதை படித்து நானும் பில்ட் அப் செய்து எழுதியதுதான் இதுவரை நீங்கள் படித்தது ,அதையெல்லாம் டெலிட் செய்து விடுங்கள் ...இனிமேலே படிக்கப் போறதுதான் 'கணினி என் முதல் அனுபவம் '!
          கம்ப்யூட்டர் படிப்பு எல்லாம் நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே என் படிப்புக் காலம் முடிந்து விட்டது ...டைப்பிங்கூட கற்றதில்லை !
ஆனந்த விகடன் ,குமுதம் .தினமலர் வாரமலர் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு கதை ,ஜோக் எழுதிக் கொண்டிருந்த எனக்கு ,என் மகன் அஜய் சந்தன் வலைப்பூவை உருவாக்கிக் கொடுத்தான் ...டைப் அடிப்பதில் நானும் 'ஒருவிரல் கிருஷ்ணா ராவ் 'ஆகத்தான் இருந்தேன் ,இப்போது பிக்கப் ஆகி நாலு விரல்கள் கில்லாடிகளாக வேலை செய்கின்றன !
        தந்தைக்கு மந்திரம் சொன்னவன் கந்தன் என்று புராணக் கதை உண்டு ...எனக்கு கம்ப்யூட்டரில் பதிவெழுத  கற்றுத் தந்தவன் என்மகன் அஜய் சந்தன் !அவனுக்கு ஆங்கிலம் ,ஹிந்தியும் தான் அத்துப்படி ...அவனுடைய ப்ளாக்  http://ajeyscomputerblog.blogspot.in/  விரும்பினால் படித்துப் பாருங்கள் !என் பதிவுகளை நானேதான் டைப்படித்து ஒட்டிக் கொண்டு இருக்கிறேன் ,,,நுணுக்கமான விஷயங்களை அவன் செய்து தருவான் ,அதுக்கு மேலும் ,நண்பர்கள் திரு ,திண்டுக்கல் தனபாலன் ,தமிழ்வாசி பிரகாஷ் போன்றவர்கள்  உதவினர் !
        எல்லாம் சரி ,தலைப்புக்கு விளக்கம் சொல்லுங்க என்று கேட்பது புரிகிறது ...ஒண்ணுமில்லைங்க ,என் வீட்டில் இருப்பது ஒரேஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம்தான் !அது ,என் மனைவி ,இரண்டு பையன்கள் மற்றும் என்னிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது !
           ''வீட்டிற்கு வந்தால் என்னைக் கூட கண்டுக்க மாட்டேங்கிறீங்க ,நான் பெண்டாட்டியா ,கம்ப்யூட்டர் பெண்டாட்டியா ?''ன்னு என்னவள் கோபித்துக் கொள்கிறாள் ...
        ''உனக்கான இடம் என்னைக்கும் பறி போகாது ,வேணும்னா லேப்டாப் ஒண்ணை  வாங்கி சின்னவீடா வச்சிக்கிறேன்.பெரிய வீடா எப்பவும் நீயே இருக்கலாம்''ன்னு சொன்னதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் தந்து இருக்கிறாள் என்னவள் !
          நாட்டுலே வழங்கப் பட்டுவரும் விலையில்லா மடிக்கணணி ஒன்று ,என் மடியிலும் தவழ கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !

30 July 2016

இடுப்புக்காக குடமா ,குடத்துக்காக இடுப்பா :)

           ''பிரம்மன் கூட ஆணாதிக்கவாதின்னு  ஏன் சொல்றீங்க ?'' 
           ''குடம் வைப்பதற்கு என்றே உருவாக்கி  இருக்கானே , பெண்ணின் இடுப்பை  !''  
திருஷ்டிப் பூசணிக் காய்க்கு பதிலாய் ?
            'புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,எங்க அம்மா போட்டோவை   'ஸ்க்ரீன் போட்டோவாய் 'வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

இவர் வேகம் யாருக்கு வரும் :)        
             ''பரவாயில்லையே, ஒரு வார வேலையை  ஒரேநேரத்திலா ...அப்படியென்ன செய்வீங்க ?''
             ''  தினசரி ...காலண்டர் தாளை கிழிக்கிறதுக்கு பதில் ,வாரம் ஒரு தடவைக் கிழிப்பேன் ! ''

உபயம் எனும் பேரில் வரும் அபாயம் :)
            'கோவிலில் உள்ளஎல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
            ''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிற பயம்தான் !''

போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....:)
சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !

29 July 2016

ஊருக்கு ஒண்ணை வச்சிகிட்டிருக்கிறவர், இப்படியா பேசுவது :)

பேப்பர் பேனா பென்சிலுக்கு செலவே  செய்யாதவரோ :)          
             ''ஓய்வு வாழ்க்கை கஷ்டமா இருக்கா ,ஏன் ?''
             ''குண்டூசியைக் கூட காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கே!''

ஊருக்கு ஒண்ணை வச்சிகிட்டிருக்கிறவர் ,இப்படியா  பேசுவது :)
          '' அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் ,தலைவர் என்ன தப்பா பேசிட்டார் ,இப்படி கல்லைக் கொண்டு எறியுறாங்க ?''
           ''நான் வாழும் காலத்தில் அவரும் வாழ்ந்தார் என்பது  நமக்கெல்லாம் பெருமைதானேன்னு உளறிட்டாராம்!'' 

போலி டாக்டரா இருப்பாரோ ?
          ''மாசமா இருக்கிற எனக்கு நிறைய இரும்புச்சத்து மாத்திரைக் கொடுக்கிறீங்களே ,ஏன் டாக்டர் ?''
          ''நீங்கதானே பிறக்கிற குழந்தை 'துரு துரு'ன்னு இருக்கணும்னு சொன்னீங்க !''

 பிள்ளைங்களுக்கும் இந்த நோய் தொடராமல் இருக்கணும் !
           ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
           ''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''

டிக்கெட் எடுக்காமலும் இந்த ஊருக்கு போகலாமே !
பஸ் படிக்கட்டிலே தொங்குபவர்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் ....
ஆனால் போய் சேரும் இடம்தான்  சிலநேரம் மாறிவிடுகிறது !

28 July 2016

சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் :)

 விரலுக்கேற்ற  வீக்கம் தானே :)           
            ''ஆண்டிராய்ட்  செல் வாங்கிக் கொடுக்கன்னு கேட்டா ,சம்பளச் சிலிப்பை  ஏன் காட்டுறீங்க அப்பா ?''
               ''என் பேஸிக் சம்பளத்துக்கு ,பேஸிக் மாடல்தான்  வாங்கித் தர முடியும் !''

அர்த்தம் தெரியாட்டி சொல்லலாமா :)
             ''எல்லோரும் உன்னிடம்  துக்கம் விசாரிக்கிறாங்களா ,நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன் ?''
             ''நான்  அபார்ட்மெண்ட்டுக்கு  போனதை ,அபார்சனுக்கு போனதா சொல்லி இருக்கீங்களேப்பா !''

சீக்கிரமே இந்நிலை வந்து விடும் !
            ''உங்க காதிலே என்ன பிரச்னைன்னு கேட்டா , செல்போனில் கேளுங்கன்னு எதுக்கு ஜாடை காட்டுறீங்க ?''
            ''நேரிலே யார் பேசுறதும் காதுக்கு கேட்கலே ,செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''

சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் :)
         'யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
         ''எது ?''
          'நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு குவாட்டரை ராவா ஒரே மூச்சிலே குடிப்பான்னு  ஏன் சொல்லலே !''

கொசு இனத்தை கூண்டோடு ஒழிக்க ...!
கடிக்கிற கொசு சாகிறமாதிரி..
 நம் உடம்பிலும் கரெண்ட்டை
மிகச் சிறிதாய் சார்ஜ் பண்ணிக்க முடிந்தால் ...
 கரெண்ட்டிலேகூட சந்தோசமா கையை வைக்கலாம் !

27 July 2016

இதுவும் வெளிநாட்டு மோகம்தானே :)

                                                                                                           
                     '' உன் மக... திடீர்னு சேலைக் கட்டிக்க ஆரம்பித்து விட்டாளே,என்ன காரணம் ?''

                           ''அதுக்கு  இந்த படம்தான் காரணம் !''

பிறந்ததும் பள்ளியில் சேர்க்கும் காலம் வருமோ :) 
     ''பையன் மூணு வருஷ படிப்பை முடிச்சிட்டான்னு சொல்றீங்க ,வேலைத் தேடுறானா ?''
     ''அட நீங்க ஒண்ணு,ஃபிரி கே ஜி ,எல் கே ஜி ,யு  கே ஜி யை இப்போதானே முடிச்சிருக்கான்  !''

பொண்ணைப் பெத்தவர் இப்படி அப்பாவியா இருக்காரே :)
        ''நல்ல மாப்பிள்ளையா  அப்பா தேடித் தரமாட்டார் போலிருக்கா ,ஏம்மா?''
       ''நீங்க போடுற ஒண்ணரைப் பவுன் நகைக்கு , 'சின்ன வீடாய் ' வச்சிக்கிற வரன்தான் அமையும்னு  தரகர் சொல்றார் ,அதுக்கும் சரின்னு சொல்றாரே !''

இவரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா :)
        ' 'என்னங்க ,நீங்கதான் டாக்டராச்சே ,மரணத்தை உணர முடியுமா ?''
          ''முடியும்னு என்னிடம் ஆபரேசன் செய்துகிட்டவங்க யாரும் இதுவரை சொல்லலே !''

24 X 7 புரோட்டா மணக்கும் மதுரை :)
  கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீயோ...
  இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
  புரோட்டா வேகும் கல்லின் கீழே !

26 July 2016

தேவதை மனைவி ,'தேவைதானா ' மனைவி ஆனதேன் :)

 அவரவர் நியாயம் :)   
           ''கஷ்டப் பட்டு சம்பாதிக்கிற பணம்தான் நிலைக்கும்னு உனக்குத் தெரியாதா ?''
             ''அதனால்தானே பூட்டியிருக்கிற வீட்டையும் ,பீரோவையும் கஷ்டப் பட்டு உடைச்சு சம்பாதிக்கிறேன் ?''

வட போச்சேன்னு வருந்தும் டாக்டர் :)
         ''டாக்டர் ,உங்களுக்கு ஏன் வயிறு எரியுது ,பேஷண்ட் எவனும் பீஸ் கொடுக்காம ஓடிப் போயிட்டானா ?''
          ''சும்மா போயிருந்தாலும்  பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போய் விட்டானே !''

' தேவதை ' மனைவி 'தேவைதானா ' மனைவி ஆனதேன் :)
          ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டாலே குரைக்குது,ஏன்னு தெரியலே !''
          ''நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு :)
சாமி பூதம் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் 
கல்யாணமான பின் ...
பட்டினத்தார் பாட்டிலும் உண்மை இருப்பதை 
உணர்வுபூர்வமாக உணரத் தொடங்குகிறார்கள் !


அதே வார்த்தை ,பெண்மணி சொன்னால் மட்டும் தப்பாகி விடுமா ?

         என் கமெண்ட்டுக்கு உங்க கமெண்ட்  ...இது ,நம் வலைப் பதிவர்களில் மூத்தவரான சென்னைப் பித்தன் அவர்களின் G+ல் வெளியானது ...அவருக்கும் ,அசோக் குமார் ஜி அவர்களுக்கும் நன்றி !




chandrasekaran narayanaswami

Shared publicly  -  Yesterday 8:34 PM
உடல் கோணல் இறைவன் தவறு
உள்ளம் கோணல் நம் தவறன்றோ?
உடல் கோணலை மறைக்க முடிவதில்லை
உள்ளக் கோணலோ ஒளிந்து செயல் படும்
Ashok Kumar
 Yesterday 9:55 PM
கோணலாயிருந்தாலும் என்னுடையதாக்கும்:-)
Bagawanjee KA
 Yesterday 11:14 PM
அசோக் குமார் ஜி ,இதை நீங்கள் சொல்வதால் ரசிக்கத் தோன்றுகிறது ,விளம்பரத்தில் வரும்பெண் சொல்கையில் அசிங்கமாய் படுகிறது !
Ashok Kumar
 Yesterday 11:23 PM
ஓ...அப்படியா...ஹா..ஹா...:-)))










25 July 2016

மரணமில்லா கனவுக்கன்னிகள் :)

உயிருக்கு உயிரான நண்பர்கள் :)

      ''ஹலோ ,யாரு தினேஷா ?''

      ''இல்லேப்பா , தினேஷ் அம்மா நான்,அவன் படிச்சுக்கிட்டிருக்கான் !'' 

       ''சாரி ,ராங் நம்பர் !''


ஹீரோ முத்தக் காட்சியில் நிறைய 'டேக் 'வாங்குவாரோ ?
           ''சூட்டிங்கில் கலந்துக்க மாட்டேன்னு ஹீரோ  கோவிச்சுக்கிட்டு போறாரே ,ஏன் ?''
           ''நேற்று அவரோட டூப்பை போட்டு ,முத்தக்காட்சி எடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுப் போச்சாம் !''
பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனைப்பு !
                 ''ஏன்யா ,பிளேடு பக்கிரி ,உன் பையனுக்கு போலீஸ் வேலைக் கிடைத்தும் ஏன் அனுப்பலே ?''
                 ''கொடுக்கிற இடத்திலே இருக்கிற நாம ...வாங்கிற இடத்துக்கு எப்படி போறது , நம்ம பரம்பரைக்கே அவமானமாச்சே அது !''

மரணமில்லா  கனவுக்கன்னிகள் :)
இருந்தாலும் மறைந்தாலும் கனவுக் கன்னிகள்
நினைவிலும் கனவிலும் வாழ்ந்துக் கொண்டுதான்  இருக்கிறார்கள் !

24 July 2016

காதலிக்கு இது பொருந்தாது :)

 இதுக்குமா ஆப்பரேசன் :)         
           ''உங்க மாமியாருக்கு கண் ஆப்பரேசன் பண்ணனுமா ,ஏன் ?''
          ''நான் பட்டுச் சேலைக் கட்டிகிட்டா அவங்களுக்கு கண் உறுத்துதே !''
இதுக்கு அப்புறமும் சாப்பிட மனசு வருமா :)
          ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
          ''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு  நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''

இதுக்கு போய்  பெண்டாட்டிய உதைக்கலாமா  ?
             ''மாப்பிள்ளே ,என் பொண்ணை தினசரி  உதைக்கிறீங்களாமே...உங்களுக்கு என்னதான் வேணும் ?''
             ''ஸெல்ப் ஸ்டார்ட் பைக் வாங்கி கொடுங்க ,உதைக்கிறதை விட்டுர்றேன் !''

காதலிக்கு இது பொருந்தாது :)
CALLசெய்துவிட்டு CUTசெய்பவர்கள் ...
பொருளாதாரப் புலிகளாய் இருப்பார்கள் !

23 July 2016

உங்க கனவு ,ஓடிப் போய் கல்யாணமா :)

தலைப்பிலுமா உல்டா :)         
             ''கபாலி ஜூரம் விடாது போலிருக்கா ,ஏன் ?''
            ''டபாலின்னு அடுத்து ஒரு படம் வரப் போவுதாமே !''
காரணம், பொது நலம் அல்ல :)       
          ''பரவாயில்லையே ,டாஸ்மாக் மதுக் கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரமும் சொல்றாரே  ?'',
          ''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு  அப்படி சொல்றாரு !''

T V  தொடர்களில் இப்படியும் கார்டு போடலாமே !
      '' டி வி தொடர் டைட்டில் கார்டில் ,ஒரு எழுத்தைத் தப்பா எழுதியதால் ,வேலையில் இருந்து உன்னை தூக்கிட்டாங்களா ,என்ன எழுதினே ?''
       ''இந்த தொடர் யாரையும் 'பண் 'படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டதல்லன்னுதான் !''

உங்க  கனவு ,ஓடிப் போய் கல்யாணமா  :)
         ''ஓடிப் போய்  கல்யாணம் கட்டிக்கிறவங்க ரெஜிஸ்டர் ஆபீசுக்குத்தான் போவாங்க ,நீங்க  வங்கிக்கு  ஏன்  வந்தீங்க ?''
          ''உங்கள் கனவை  நனவாக்க நாங்கள் தயார்னு   விளம்பரம் போட்டு இருந்தீங்களே  !''

செம்மொழி தமிழுக்கே இந்த சோதனையா ?
பசுவின் மணி ஒசைக்கும் மதிப்பளித்து தமிழன்  நீதி  சொன்னதெல்லாம் அந்தக் காலம் ...
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட நாதியற்று தவிப்பது இந்தக் காலம் !


22 July 2016

கொடாக்கண்ட மாமனாரும் , விடாக்கண்ட மாப்பிள்ளையும் :)

 காரம்  பிடிக்கும் .அதிகாரம் ?       
          ''உங்களுக்கு காரம் பிடிக்கும்னா மனைவிகிட்டே செய்யச் சொல்ல வேண்டியதுதானே ?''
          ''அவளுக்கு என்னை அதி'காரம்'  பண்ணத்தானே  பிடிக்குது ?''

ஆத்திரப் படுவதிலும் நியாயம் இருக்கே :)
           ''பரோல்லெ  வெளியே போய் ,யாரைக் கொலைப் பண்ணிட்டு  உள்ளே வந்திருக்கே ?''
            ''நல்லா வருவேன்னு எனக்கு நேமாலஜிப் படி பெயர் வைத்தவரைத்தான் போட்டு தள்ளிட்டுவந்தேன் !''

காதலியின் கெடுவுக்கு காரணம் ,எதுவா இருக்கும் ?
          ''என்னடா  சோகமா இருக்கே ,உன் காதலி  என்ன சொல்லிட்டு போறா ?''
         ''நாளைக்கே ஓடிப் போறோம் ...தாலிக் கயிறு என்  கழுத்துலே தொங்கணும்...இல்லேன்னா ..கயிறிலே என் கழுத்து  தொங்கும்னு மிரட்டிட்டு போறாடா!''

கொடாக்கண்ட மாமனாரும்   , விடாக்கண்ட மாப்பிள்ளையும்  :)
          ''மாசக்கணக்கா டேரா போட்டிருக்கிற மாப்பிள்ளைக்கு நாசூக்கா புரியவைக்க SMSஅனுப்பினது வம்பாப் போச்சா ,ஏன் ?''
        ''விருந்தும் மருந்தும் மூன்று நாள்னு SMS அனுப்பினது யார்ன்னு தெரிஞ்சுக்காமே வீட்டை விட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே !''

பேதை தந்த போதையினால் மிதப்பா ?
விமானம் தரை இறங்கிய பின்பும் மிதந்துக் கொண்டுதான் இருக்கிறேன் ...
விமானப் பணிப்பெண்ணாய் என்னவள் !


21 July 2016

'கபாலி 'பேரை ரிப்பேர் ஆக்கியிருக்கிறோம் :)

           ''கபாலி பட டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயாமே !''
           ''இதிலே ஆச்சரியப்பட என்னாயிருக்கு ?நம்ம ஊர்லே  கொள்ளையடிப்பவனை  சிம்பாலிக்கா கபாலின்னுதானே சொல்றோம் ?''

மந்திரின்னா  பொது அறிவு வேணாமா :)
        ''இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்ததுக்கா ,மந்திரி டிஸ்மிஸ் ஆனார்  ?''
        ''அதுக்காக இல்லை ...'கியூ ' பிரிவு  போலீசார் வரிசையை ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவிச்சாராம் !''

கடிபட விரும்பும் நல்ல உள்ளம் !
      ''வாங்கின புது செருப்பை எதுக்கு ரிடர்ன் பண்றீங்க ?''
     ''புது செருப்புன்னா கொஞ்சமாவது கடிக்க வேண்டாமா ?''
காதல் கடிதங்களை அக்னியிலே போட்டு எரிச்சுடணும் !
            ''நான் எழுதிய காதல்கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
           ''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''

மனைவி 'மை லார்ட் 'டிற்கும் மேல் :)
       வாய்தா ...
       கோர்ட்டில் கேட்க முடிந்த வக்கீலாலும்
       வீட்டில் மனைவியிடம் கேட்க முடிவதில்லை !


20 July 2016

'மூட் அவுட்' ஆன நடிகையின் புது கணவன்:)

இனியும் தேவையா இந்த கல்யாணம் :)          
           ''அறுபதாம் கல்யாணம் செய்துக் கொள்வதில் உங்கம்மாவுக்கு விருப்பமில்லையா ,ஏண்டா ?''
           ''பத்திரிக்கையில் , அழுவதாம்  கல்யாணம்னு தப்பா பிரிண்ட் ஆயிருக்குன்னு சொன்னேன் ,அப்படியே இருக்கட்டும்னு சொல்றாங்களே !'' 

சந்தேகம் நியாயமானதுதானே ?
        ''அசைவம் சாப்பிட்டாலும்  ,DVD பார்த்தாலும்  தப்பான்னு ஏன் கேட்கிறே ?''
      '' அதை  ரகசியமா  கருப்பு நிற கேரி பையில் மட்டுமே போட்டுத் தர்றாங்களே !''

 மூட் அவுட் ஆன நடிகையின் புது கணவன்:)
             ''கல்யாண போட்டோக்களில் , ஒரே ஒரு போட்டோவில் மட்டும் மாப்பிள்ளை முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''
            ''சுற்றி நிக்கிறவங்க, நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !''
 எங்கே வளரணுமோ அங்கே ?
வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தைலத்தை 
வாங்கித் தேய்த்ததில் நல்ல பலன் ...
உள்ளங்கை முழுவதும் முடி !

நமது சுதந்திரம் 'அப்படி 'வந்ததுதானா ?
வட இந்திய டூர் - பாகம் 6
         பள்ளிப் பாடங்களில் படித்த ,ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை....
சமீபத்தில்(சிலநாட்களுக்கு முன் &அருகிலும் )சென்று பார்த்தேன்... இது பொற்கோவில் அருகிலேயே ,நடக்கும் தூரத்திலேயே உள்ளது. தற்போது நினைவிடமாய் மாறியிருக்கும் அந்த இடம்...இதோ ...
         இந்த வாசலைத்தாண்டி  உள்ளே சென்றால் ,கண் முன்னே தெரிகிறது ..பசுமையாய் தோன்றும் தோட்டத்தின் நடுவே தியாகிகள் நினைவுத் தூண் !
             இந்த தூணுக்கு பின்னால் இருக்கும் நிஜமான சோக வரலாறு .....
1919ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய  கொடுமையான 'ரௌலட் 'சட்டத்தை  எதிர்த்து சுமார் இருபதாயிரம் மக்கள் கூடிஇருக்கிறார்கள் ...
இதைக்கூட சகித்துக் கொள்ளமுடியாத ஜெனரல் டயர் சுடும் உத்தரவை பிறப்பித்தவுடன் ....
1650 குண்டுகள் சீறிப் பாய்கின்றன ...
மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள் ...
வெளியேற இருப்பதோ ஒரே வாசல் ...
வேறு வழியின்றி உயிர் பிழைக்க (?)அங்கிருந்த ....
           இந்த கிணற்றில்தான் விழுந்து உயிர் துறந்துள்ளார்கள்...
இந்த படுகொலை சம்பவத்தில் இறந்தோர் எண்ணிக்கை 379என்றும் ,காயப்பட்டவர்கள்  1500 என்று ஆவணங்கள் சொன்னாலும் .சிகிச்சை  அளித்த ஆங்கிலேய மருத்துவரே இறந்தோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று சொல்லியுள்ளார் ...
    அந்த கொடூர சம்பவத்தின் எச்சங்களாக குண்டு பாய்ந்த இடங்கள் இன்றும் கட்டம் கட்டி சுவற்றில் ...இதோ ...

           இந்த இடத்தைப் பார்த்ததும் என் மனதில் எழுந்த கேள்வி ...கத்தியின்றி இரத்தமின்றி கிடைத்ததா நமது சுதந்திரம் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கிணற்றுப் படம் மட்டும் கூகுளில் சுட்டது !

19 July 2016

பெண்டாட்டியை விட்டுக் கொடுக்கலாமா :)

 பெண்டாட்டி மேலே அவ்வளவு நம்பிக்கை :)            
               ''தினமும்  காக்கைக்கு வைத்து விட்டு சாப்பிடுறீங்களே ,முன்னோர்கள்  மேலே அவ்வளவு பாசமா  ?''
                ''அட நீங்க ஒண்ணு,காக்காவுக்கு  எதுவும் ஆகுதான்னு  தெரிஞ்சிக்கத்தான்  வைக்கிறேன் !''

செவ்வாய் தோஷத்தால்  திருமணம்  தள்ளிப் போகுமா :)      
             '' என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
               ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''

பெண்டாட்டியை விட்டுக்கொடுக்கலாமா :)
            ''ரயில் கிளம்பியதில் இருந்து, உங்க மனைவி தொணதொணன்னு பேசிக்கிட்டேதான் வர்றாங்க  ,எனக்கு புரியாத மொழி வேற ... 
தலை வலிக்குதே  சார் !''
            ''வலிக்காதா பின்னே ?புரியுற எனக்கே தலைவலிக்குதே !''

சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?
          எல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க 
          எந்த சிற்பியாலும் முடியவில்லை !

18 July 2016

காட்டன் சேலைக்கு ஆசைப்பட்டால் தப்பா :)

 எடிட்டர் ,இந்நேரம் ராஜினாமா பண்ணியிருக்கணுமே :)         
             ''நம்ம வார இதழில் போடுற சிரிப்புத் துணுக்குகளை நிறுத்தி விடுவது  நல்லதா ,ஏன் ?''
             ''ஆயுள் சந்தாவைக் கூட வைத்துக் கொள்ளுங்கள் ,இனிமேல் வார இதழை அனுப்ப வேண்டாமென்று  பத்து வாசகர்கள் சொல்லி இருக்கிறார்களே !'' 
                   
எல்லாமே எக்ஸ்பிரஸ் வேகம்தான் :)        
           ''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில்  வீட்டுக்கு வருதே !''
            ''அந்த மருந்துக்கு காரணமான  ஃபாஸ்ட் புட் ,ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !''

 காட்டன் சேலைக்கு ஆசைப்பட்டால்  தப்பா  :)              
           ''கஞ்சிக்கே வழி இல்லாதவ  காஞ்சிபுரம் பட்டுசேலைக்கு ஆசைப் படக்கூடாதுன்னா காட்டன் புடவைக்குமா ?''
          ''கஞ்சி போடாத  காட்டன் புடவையை கட்டிக்கிட்டா நல்லா இருக்காதே !''
தலைக்கு வந்தது தலை சாயத்தோட போச்சு :)
          ''அவனை தலைமுடி விசயத்திலே ராசியில்லாதவன்னு ஏன் சொல்றே ?''
          ''வழுக்கை விழுந்ததுன்னு விக்கு வாங்கினான் ,இப்போ விக்கும் நரைச்சுப் போச்சாம் !''

இதுக்குத்தானா மலிவு விலை மருந்தகம்  :)
சர்க்கரை வியாதிக்காரனுக்கு எரிச்சல் தரும் விஷயம்  ...
ரேசன் கடையில் மாதம் முழுவதும்  சீனி மட்டும் ஸ்டாக் இருப்பது !

17 July 2016

லட்ச லட்சமாய் சம்பாதிக்க பெண் பதிவர் தரும் டிப்ஸ் :)

தூங்கிக் கொண்டே  காரோட்டுவாரோ :)            
         ''என் கூட கார்ல வர பயமாயிருக்கா ,ஏன் ?''
          ''தூக்கத்திலேயே உயிர் போனா  நல்ல சாவுன்னு சொல்றீங்களே !''

இதைக் கேட்ட பிறகும்  உயிரோட இருக்கலாமா ?
            ''உங்க  பையன் , அவன்  நண்பர்கள்கிட்டே உங்களைக் கேவலமா அறிமுகப்படுத்துறானா ,எப்படி ?''
            ''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''

சுயநலவாதிகளின் இன்னொரு பெயர் !
நழுவுற தண்ணியிலே நழுவுற மீனாய் நடந்துக் கொள்பவர்களை 
செல்'பிஷ் 'என்பதில் தவறே இல்லை !

 லட்ச லட்சமாய் சம்பாதிக்க பெண் பதிவர் தரும் டிப்ஸ் !
        பார்ப்பதற்கு  ஒயிலாய் காட்சி தரும் இவரை உங்களுக்கு தெரியுமா ?
        நம்மைப் போன்றே ப்ளாக் (ஆனால் ஆங்கிலத்தில் )எழுதிக் கொண்டிருந்த இவர் ,தற்போது முழுநேர எழுத்தாளர் ஆகி விட்டார் ....
  இவர் பிளாக்கில்  எழுதியதை புத்தகமாய் வெளியிட அது சூப்பர் ஹிட் ...தொடர்ந்து 'டைம்ஸ் ஆப் இந்தியா 'வில் மட்டுமல்ல 'ரீடர்ஸ் டைஜஸ்ட் 'டிலும் எழுதி புகழ்பெற்றார் ...
தற்போது பெங்களூரில் கணவர் ,இரண்டு குழந்தைகளுடன்  வசித்து வரும் ...இவர்தான் ப்ரீத்தி செனாய் !
 இவர் எழுதிய புத்தகங்கள் நம் நாட்டில் மிக அதிகம் விற்பனையாகின்றன ...'போர்ப்ஸ் 'பத்திரிக்கை கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் ...
'இந்தியாவின் செல்வாக்கான முதல் நூறு பிரபலங்கள் 'பட்டியலில் இவரும் ஒருவர்...இவர் எழுத்தைப் பற்றி இவரே கூறியது ...
'நான் தீவிர இலக்கியமெல்லாம் எழுதாததால் என் புத்தகங்கள் சாதனை புரிகின்றன '
நாமும் .இவரைப் போன்று புகழ் பெற அவரே தந்த டிப்ஸ் ... 
     ஒரு வலைப் பூ என்பது வாசகர்களை ஈர்க்க கூடியதாகவும் .அவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப் படுத்தக் கூடிய தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் .எழுத சோம்பேறித் தனம் உள்ளவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள் ,தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் .போலித் தனம் கூடாது .உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக வாசகர்கள் நேரில் பார்ப்பதைப் போன்று உணர வைக்க வேண்டும் .எனவே உங்களைப் பற்றி எழுதும் போது 'பில்டப் 'கொடுத்து எழுதவே கூடாது .பொய்யையும் உண்மையையும் பிரித்துப் பார்க்க வாசகர்களுக்கு தெரியும் ,எழுதுபவர்களை விட வாசகர்கள் புத்திசாலிகள் .
உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தவிர்த்து நிறைய பேர் உங்கள் வலைத் தளத்திற்கு வருகிறார்கள் என்றால் நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம் ,எழுத்தாளர் ஆகி விட்டீர்கள் என்று !வெற்றி பெற்றால் மட்டும் போதாது ,அதை நாளுக்கு நாள் ,வாரத்துக்கு வாரம் ,மாதத்துக்கு மாதம் ,வருடத்துக்கு வருடம் தக்க வைத்துக் கொள்ள உழைக்க வேண்டும் .மற்ற எல்லாமே உங்களை தேடி வரும் !

ப்ரீத்தி செனாய் வழங்கிய டிப்ஸ்களைப் படித்தீர்களா ? நீங்களும் கடைப் பிடிக்கலாமே !

16 July 2016

காதல் சின்னம் தந்த அவதி :)

இதை விட சிறந்த யோசனை யார் தருவார் :)
          ''  தியானத்தில் ஓம்னு  சொல்லிப் பார்த்தேன் ,நிம்மதி  கிடைக்கலே !''
          ''பெண்டாட்டிப் பேச்சுக்கெல்லாம் ஆம்னு சொல்லிப் பாறேன் !''
காதல் சின்னம்  தந்த அவதி :)
வட இந்திய டூர் - பாகம் 5

         டெல்லியில் இருந்து தாஜ்மகால் பார்க்க ,ஆக்ராவுக்கு ரயிலில் போகலாமா என ஆலோசனை செய்ததில் எல்லோருமே வேண்டவே வேண்டாம் என்றார்கள் .அதற்கு காரணம் ,அங்கு ஓடும் ரயிலில் எல்லாம் முன்பதிவு செய்யப் பட்ட பெட்டியில் கூட மக்கள் கணக்கு வழக்கு (?)இல்லாமல் ஏறி விடுகிறார்கள் .இரவில் பயணம் என்றால் அதை விடக் கொடுமை ...நடை பாதையில் கூட படுத்து விடுகிறார்கள் !
கொளுத்துகிற வெயில் பயமுறுத்தியதால் ,ஏசி வேன் பிடித்து பயணமானோம் ... நான்கு மணிநேர பயணத்திற்கு பின் ,ஓரிடத்தில் ஓட்டுனர் இறங்கிக் கொள்ளுங்கள் என்றார் .சுற்றி சுற்றிப் பார்த்தாலும் தாஜ் மகால் கண்ணுக்கு தென்படவில்லை .காரணம் ,நாம்
இறங்குகிற இடம் ,தாஜ் மகாலில் இருந்து  முக்கால் கிலோமீட்டர்   தூரத்தில் இருக்கிறது .அங்கேஇருந்து  தாஜ்மகால் வளாகத்தின் வாசலுக்கு செல்ல பேட்டரி கார் ,ஒட்டகம் பூட்டிய சாரட்வண்டிகள் அணிவகுத்து நின்றன .அதில் ஏறி ...இதோ நீங்கள் பார்க்கிறீர்களே ...
         இந்த கோட்டை வாசலின் முன்புறம்  இறங்கி ,தலைக்கு இருபது ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு கோட்டைவாசல் படியேறினால் ...முன்புறம் பச்சை பசேலென்று தோட்டம் விரிந்து கிடக்க ,தூரத்தில் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இதோ ,தாஜ் மகால் !
         நாம் இங்கிருந்து நடுவில் உள்ள நீருற்று ,சுற்றியுள்ள செடிகொடிகளை ரசித்துக் கொண்டே ...தாஜ் மகால் முன்னால் மேடைபோல் தெரிகிறதே ,அங்கே சென்றதும் அதிர்ச்சி !
தாஜ்மகால் அமைந்து இருக்கும் கோட்டை கொத்தளத்தின் மீது வெறும்  செருப்போ ,சூவோ அணிந்து செல்ல அனுமதி இல்லையாம் ...
செருப்பின் மேல் ஒரு பையைக் கட்டிக்கொள்ள வேண்டுமாம் ,அந்த பை எங்கே கிடைக்கும் என்று கேட்டால் ,நுழைவுச் சீட்டு வாங்கிய இடத்தில் மட்டும்தான் கிடைக்குமாம் ...முதலிலேயே இதையும் நுழைவுச் சீட்டுடன்  கொடுத்தால் என்ன ?
        எங்களைப் போன்றே பலரும் கொதிக்கின்ற வெயிலில் அவதி அவதியாய் ஐந்நூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் ,முன் வாசலுக்கு வந்து செருப்'பையை' வாங்க வேண்டியதாகி விட்டது !
           முக்கியச் செய்தி ...தாஜ்மகால் மாடிக்கோ ,மும்தாஜ் சமாதி இருக்கும் கீழ் தளத்துக்கோ செல்ல அனுமதி இல்லை !அங்கே எல்லோரும் நடுத்'தள 'வர்க்கம்தான் !
                                                            பயணம் தொடரும் ...

இளநீராய் இனித்த காதல் ,இப்போ ?
            ''நீ காதலிக்கு வாங்கிக் கொடுத்த இளநீரால் காதலே முறிஞ்சுப்போச்சா ,ஏன் ?''
        ''அவ குடிச்ச இளநீர் வழுக்கையையும்  கீறி ,நானே சாப்பிட்டது  
அவளுக்குப் பிடிக்காமப் போச்சே  !''

நல்ல சமையலை நள[ன்]பாகம் என்பதால் ...
இடதுகைப் பழக்கமோ ,வலது கைப் பழக்கமோ ...
சமையல் தெரிந்தால் போதும் என்பதே 
இன்றைய மணமகளின் எதிர்பார்ப்பு !

15 July 2016

நாத்திகம் வளர இப்படியும் ஒரு காரணமா :)

              ''என்னங்க ,கல்யாணமான ஒரே மாசத்தில் நாத்திகனா  மாறி ட்டீங்களே .ஏன் ?''
             ''அறிவான மனைவி வேணும்னு வேண்டிகிட்டிருந்தேன் ,அது பலிக்கலையே !''

புருசன் மேல் இவ்வளவு நம்பிக்கைக் கூடாது :)
             ''எப்போ பார்த்தாலும் உன் வீட்டுக்காரர்  கத்திகிட்டே இருக்காரே , அவர்கூட  எப்படி வாழ்ந்து கிட்டிருக்கே ?''
             ''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற  நம்பிக்கையிலேதான் !''
வேலைக்காரி வேணும் !
           ''உங்க வீட்டுக்காரர்  எப்போ காணாமப் போனார் ?''
            ''வேலைக்காரி  வராத நாளில்  இருந்து !''
            ''அடப்பாவமே ,இனி என்ன செய்யப்போறே ?''
            ''வேற வேலைக்காரியைத் தேட வேண்டியதுதான் !''

உன்னில் விழுந்தேன் எழத்தான் முடியவில்லை !
     இதயத்தில் CAT WALK நடந்துக் கொண்டிருந்த 
     உலக அழகிகளும்  உள்ளூர் அழகிகளும் எங்கே போனார்களோ                      தெரியவில்லை ...
     என் கண்ணில்  நீ விழுந்த பின்பு !

14 July 2016

பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?

 ஸ்பூனால் சாப்பிடுவதா  இட்லி :)      
           ''இட்லி  ஆர்டர் பண்ணாதேன்னு ஏன் சொல்றீங்க, தாத்தா ?''
           ''எங்க காலத்திலே இட்லி மேலே சாம்பாரைக் கொட்டிகிட்டு சாப்பிட்டோம் ,இப்போ என்னடான்னா  ...கப்பு சாம்பார்லே  இட்லியை மிதக்க விட்டு கொண்டு வர்றாங்களே !''

லிப் ஸ்டிக் பூசினால் வெற்றி நிச்சயம் தானா :)
          ''அழகிப் போட்டியில் ,லிப் ஸ்டிக் பூசுன அந்த பொண்ணுதான் ஜெயிக்கும்னு தீர்க்கதரிசனமா ,எப்படி தலைவரே  உங்களாலே சொல்ல முடிந்தது ?''
          ''வாய் 'மை'யே ஜெயிக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கே !''
அத்தை வீட்டு மொய்னாலும் அத்தாட்சி வேணும் !
              'அட நீங்க என்னங்க ,மொய்யை எழுதிட்டு அக்னாலேஜ்மென்ட் கேட்குறீங்க ?''
             ''நாளைக்கு  நான் மொய் வைக்கலைன்னு யாரும்  சொல்லக்கூடாதில்லே ?''

பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?
      எந்த விசேசம் என்றாலும் ...
      பியூட்டி பார்லருக்கு சென்று 
     ஆயிரம் ஆயிரமாய் செலவழித்து 
     அழகழகாய் வலம்வரும் பெண்களைப் பார்க்கையில் 
     அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு வருகிறது ...
     பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம் !

13 July 2016

இதுதான் ஜோடிப் பொருத்தமா :)

தபாலில் சாம்பல் சேவைத் தொடங்கலாமே :)         
                 ''தபால் நிலையங்களில் கங்கைத் தீர்த்தம் விற்பது புனிதமான காரியம் தானே ?''
              ''இன்னொரு புனிதமான காரியத்தையும் செய்யலாம் ...கங்கைக் கரைப் பிணங்களின் சாம்பல் , புனிதம் என்று அகோரிகள் உடம்பு முழுவதும் பூசிக் கொள்கிறார்களே,அதையும் தபாலில்  விற்கலாம்  !''
          (செய்தி ...இந்தியாவில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில், கங்கா தீர்த்த விற்பனை துவக்கப் பட்டு விட்டது !)
மணப்பெண் இவள் என்றால் மணப்பவன் எவன் :)
        ''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கீயா ?''
        '' உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு நீங்கதானே  சொல்லி இருந்தீங்க !''

 காக்கா பிடிக்கத்தெரிந்த மனிதனின் மொழி ,காக்காவுக்கு புரியுமா ? 
         ''காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு  தெரியாது போலிருக்கா  ,ஏன் ?'' 
          ''அது இதுவரை பொன் குஞ்சை அடகு வைத்ததா தெரியலையே  !''

கிட்னியை எடுத்துக்கிட்டு வேணா பணம் தருவாங்க !
       ''யாருய்யா நீ ,108க்கு போன் பண்ணி 1000 ரூபாய் கடன் கேட்கிறே ?''
       ''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''

ஜோடிப்பொருத்தம் தேவைதான் ,ஆனால் அதிலும்...
செருப்பிலேகூட வலது ,இடது வேறுபாடு இருந்தால் தான்  ஜோடிப்பொருத்தம் ..
மனிதரில் மட்டும் ஆணுடன்  ஆணும் ,பெண்ணுடன் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்ன பொருத்தம் ?

12 July 2016

நடிகைக்கு எந்த கூச்சமும் இருக்காதா :)

 இப்படியும்   சந்தோஷப்படலாம்  :)     
             ''வேலைக்கே லாயக்கில்லைன்னு மேனேஜர் உன்னைச் சொன்னாரே ,வருத்தமாயில்லையா ?''
            ''இருந்தது ,உன்னையும் அப்படி சொன்னப்ப  சந்தோஷம்  ஆயிட்டேன்  !''

உண்மையான  மாமியார் வீட்டில் இருக்க நினைப்பது தவறா :)
       ''வீ ட்டோடு இருக்க விரும்பும்  வரன் தேவைன்னு சொன்னது தப்பாப் போச்சா ,ஏன்?''
       'வருசத்திலே பாதி நாள் 'மாமியார் வீட்டு'லேதான்  இருக்கேன்னு திருட்டுப் பயலுங்க  வந்து நிற்கிறாங்க !''
நடிகைக்கு  எந்த கூச்சமும் இருக்காதா :)
          ''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
           ''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''

நண்டுக்கறி ,நண்டுவருவல் ,நண்டுக் கொழம்பு பிடிக்கும் ஆனா ...
              ''முதலாளிக்கு நண்டுன்னா  பிடிக்கும் !''
              ''பிறகேன் ,தொழிலாளிங்க பெர்ம'நண்டு 'ஆக்கச்  சொன்னா மட்டும் ,பிடிக்க மாட்டேங்குது ?''

ஜாக்கெட்டா .சேப்டி மினி லாக்கரா ?
மனைவிமார்கள் கணவனை நெஞ்சிலும் ...
அவன் தந்த  பணத்தை   நெஞ்சுக்கு அருகிலும் வைத்து 
போற்றிப் பாதுகாக்கிறார்கள் !

11 July 2016

காதலுக்கும் ,கள்ளக் காதலுக்கும் ஒரே வித்தியாசம்தான் :)


இது சிரிப்பதற்கு அல்ல ,சிந்திக்க !                 
              '' ஹெல்மெட் கட்டாயமில்லைன்னு  சொல்லப் போறாங்களா ,ஏன் ?''
              ''கட்டாய ஹெல்மெட் அமுலுக்கு வந்த பின்தான் ,முன்பைவிட அதிகமாய் குடிகாரர்கள்  விபத்தில் பலியாகி இருக்கிறார்களாம் !''

காதலுக்கும் ,கள்ளக் காதலுக்கும் உள்ள வித்தியாசம் !
என் கமெண்ட்டுக்கு உங்க கமெண்ட் என்ன ?
என்னோட 'ஜோக்'கான சில கமெண்ட்களை ரசிக்க முடிகிறதா என்று சொல்லுங்களேன் !
1.நம்ம மதுரைத் தமிழன் அவர்களின் வலைப் பூவில் படித்தது....
அந்த காலத்தில் ஒரு பெண்ணை காதலிக்கிறதுக்குஅவ அப்பன் மோசமான ஆளா ? 
அண்ணன்காரங்க எத்தனை பேர் அவங்க எப்படி என்று பார்த்து 
பார்த்து காதல் பண்ணினாங்க 
ஆனால் இந்தகாலத்தில் காதலிக்கிறதுக்கு முன்னாடி  அவ புருஷன் மோசமான ஆளா ?
பிள்ளைங்க எத்தனை பேர் அவங்க எப்படி என்று பார்த்து 
என்று பார்த்து காதல் பண்ண வேண்டியிருக்கு 
ச்சே காலம் எப்படி எல்லாம் மாறுது பாருங்க ..
அன்புடன் 
மதுரைத் தமிழன் 
இதற்கு நான் போட்ட கமெண்ட்..
அப்பனையும் அண்ணனையும்பற்றி  விசாரித்து  செய்தால், அது காதல் !புருசனையும் ,பிள்ளையையும் பற்றி விசாரித்து செய்தால் ,அது  கள்ளக் காதல் !இந்த தத்துவத்தை நீங்க புரிஞ்சிக்கலே போலிருக்கே !
2.நம்ம யாழ் பாவாணன் அவர்கள் 'ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்'என்ற தலைப்பில் எழுதி இருந்தார் ,எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க வேண்டுமென ஊடகங்களுக்கு  வேண்டுகோள் விடுத்து இருந்தார் ....அதற்கு என் கமெண்ட் இதோ ....
சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றில் ...குண்டி வெடித்து பத்து பேர் 
பலி என்று போட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி போனேன் 
அய்யா !நீங்கள் சொல்வது சரிதான் ,இப்படி பலியாகும் முன்னர் 
திருத்த வேண்டாமா?
------------------------------------------------------------------------------------------------------------
3..நம்ம பதிவர் பரிதி முத்துராஜன் ஜி அருமையான தகவலை G+ ல் அனுப்பி இருந்தார்,அது .... 
இதற்கு என் கமெண்ட் இது ...
        அதைப் பிடித்து என்னதான்  செய்யப் போறீங்க ?


10 July 2016

புருஷன் டாஸ்மாக் அடிமை என்றால் ,இப்படித்தானாகும் :)

ஒரு பானைச்  சோறுக்கு ....:)      
           ''என்ன சொல்றீங்க ,நாடு உருப்படும் போலத் தெரியலையா ?''
           ''நம்மாளுங்க காணாம போனவங்களைத் தேடுற மாதிரி தெரியலே !''
               (2015ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன் – செய்தி)
 புருஷன் டாஸ்மாக் அடிமை என்றால் ,இப்படித்தானாகும் :)
        ''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''
        ''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''

மருமகளின் நல்ல 'காரியம் 'மாமியாருக்கு !
          '' குளிக்கப் போன எங்கம்மா வழுக்கி விழுந்துட்டாங்களே , டாக்டருக்கு  போன் பண்ணி  வரச்  சொல்லிட்டியா  ?''
         ''பக்கத்து ஊர் டாக்டருக்கு சொல்லி இருக்கேங்க !''

அன்னைக்கு நிகர் அன்னையே ,என்னைக்கும் !
கோழி மிதித்து குஞ்சு சாகுமானால் ...
நிச்சயமாய்  நாம் நம்பலாம் ...
மிதித்தது தாய்க் கோழியாக இருக்காது !

9 July 2016

உலகப் புகழ் அழகியை தெரியாமல் போகுமா :)

விளக்கமாறுக்கு பட்டுக் குஞ்சம் :)       
            ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  அந்த கொள்ளையனை  ஏன் சொல்றாங்க ?''
            ''சாவியே இல்லாமே எந்த வீட்டுக் கதவையும் திறந்து விடுவதில் கில்லாடியாம்  !''

சந்தேகப் பட்டது சரிதானே :)
           ''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா  இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?'' 
            ''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்தானே !''
உலகப் புகழ்  அழகியை தெரியாமல் போகுமா :) 
          ''நம்ம சச்சினை யாருன்னே தெரியாது என்கிறார் ஷரபோவா ,ஷரபோவாவா அது யாருன்னு சச்சின் ஏன் கேட்க மாட்டேங்கிறார் ?''
        ''உலகப்  புகழ்  மாடலை தெரியாதுன்னு  சொன்னா, ஆம்பளைக்கு அழகில்லையே ,அதான் !''

அழகான பெண் பெயரை சுருக்கலாமா ?
             ''கரடிக்குளம் ஜெயாபாரதிப்பிரியன் எழுதிய  ஜோக்கே வர மாட்டேங்குதே ,ஏன் ?''
            ''அவரோட ஜோக்கை எடிட் பண்ணா பரவாயில்லை ...அவர் பேரை கரடிப்பிரியன்னு எடிட் பண்ணுனதாலே கோபம் வந்து எழுதுறதை விட்டுட்டார் போலே !''

லகரம் தெரியும் ,அதென்ன லுகரம் ?
எனக்கு என்பது குற்றியலுகரம் ...
தெரியாது என்பது முற்றியலுகரம் !
கவிதை எழுதி லகரங்களைச் சேர்த்தவர்களுக்கு 
இந்த தமிழ் இலக்கணம் எல்லாம் தெரிந்து இருக்குமா ?
எனக்குத் தெரியாது !

8 July 2016

சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா :)

 பிரமோஷன் எப்படி வந்ததுன்னு  தெரியுதா :)          
           ''எனக்கு சீக்கிரமே பிரமோஷன் வந்ததை  பாராட்டி , ஊது வத்தி பாக்கெட்டை பரிசா தர்றீங்களே,ஏன் ?''
             ''நீங்கதான் வத்தி வைக்கிறதில் கெட்டிகாரராச்சே !''

இது ஒரு குற்றமாய்யா :)         
           ''நீங்க வெள்ளையை  கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
           ''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''  

இவருக்கு தேச பக்தி  ஜாஸ்தி !
            ''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா   பிடிக்காதுன்னு  சொல்றே,பிறகேன் மேட்ச் பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''
            '' நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இருந்து விளையாடத்தான் ஆளில்லை ,வேடிக்கைப் பார்க்கவுமா   ஆளில்லேன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தான் ! ''

ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !
       ''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
       ''தண்ணியா தான் !''

கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?
'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !

7 July 2016

நிம்மதி ...இரு மனைவிகள் தந்தது :)


வெயில் ரொம்பத்தான் படுத்துது போலிருக்கு :)
                 ''என்னங்க ,நம்ம வேலைக்காரி தொடர்ந்து வேலைக்கு வர ,கண்டிஷன் போடுறா !''
                 ''என்னான்னு ?''
                 ''வீடு  முழுவதும் ஏர் கண்டிஷன்  ஆக்கணுமாம் !''

இதுக்கு பேசாமலே இருந்து தொலைக்கலாம் !
            ''ஃபிரிட்ஜ்  வாங்கப் போன இடத்திலே உன் புருஷன்  மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''
           ''ஃபிரிஜ்ஜை  எப்ப திறந்தாலும் லைட் எரிஞ்சுகிட்டே இருக்கு ,மூடினா அணையிற மாடல் இல்லையான்னு கேட்கிறாரே !''
நிம்மதி ...இரு மனைவிகள் தந்தது !
            ''என்னடா சொல்றே ,ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான்  நிம்மதியா இருக்கீயா ,எப்படி ?''
           ''அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டையிலே என்னை மறந்துட்டாங்களே !''

இரத்தம் தேவைப்படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?
இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால் 
கொசுக்கள் தானே உயிர் வாழ்கின்றன !

6 July 2016

காதலிக்கு புளிப்பா திங்கணும்னு ஆசை வந்தால் :)

இதுக்குமா கைது பண்ணுவாங்க :)            
         '' என் பையனை எதுக்கு கண் டாக்டரிடம் காட்டச் சொல்றீங்க ?''
          ''ஹெராயினுடன்  வந்த ஹீரோ கைதுங்கிறதை ,ஹீரோயினுடன் வந்த ஹீரோ கைதுன்னு வாசிக்கிறானே !''

காதலிக்கு புளிப்பா திங்கணும்னு ஆசை வந்தால்  :)
               ''சீக்கிரம் காதலி கழுத்துலே தாலியைக் கட்டினா நல்லதுன்னு ஏன் சொல்றீங்க ?''
               ''சுண்டல்லே இருக்கிற மாங்காயை மட்டும் தின்னுட்டு ,புளிப்பே இல்லைன்னு சொல்றாளே ,உன் காதலி !''

வட இந்திய டூர் - பாகம் 4
     டெல்லியில் இருந்து கிளம்பி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலஹாபாத் போகலாம் என்றார்கள் .அங்கே சென்று நாங்கள் தங்கிய இடம் இதுதான் ... 
                                                 
                சத்திரம் என்று பெயரே தவிர நவீன வசதிகளுடன் அறைகள் இருந்தன ,நம்ம ஊர் இட்லி ,வடை ,பொங்கல் ,சாப்பாட்டையும் செய்து தந்து அசத்தினார்கள் ...போர்டை உற்று பாருங்கள் ,இது ஆரம்பித்த ஆண்டு 1891,நூறாண்டைக்கடந்தும் அங்கே நல்ல சேவை செய்துவரும் நகரத்தார் வாழ்க இன்னும் பல நூறாண்டு !
            அலஹாபாத்தில் ,மூன்று நதிகள் சங்கமமாகும் திரிவேணி சங்கமம் ,அவசியம் பார்க்க வேண்டிய இடம் என்றார்கள் !புறப் பட்டோம் ...
இதோ தூரத்தில் தீவு போல் தெரிகிறதே,அதுக்கு பக்கத்தில் தான் ஆறுகள் வந்து சேர்ந்து  திரிவேணி சங்கமம்  ஆகிறது ...

படகில் ஏறித்தான் அங்கே செல்ல வேண்டியுள்ளது .அங்கே ..
இரண்டு பக்கம் இருந்து இரு நதிகள்ஓடிவந்து கலப்பது தெரிந்தது ,இன்னொரு நதியைக் காணலியே என்றேன் ...கங்கா ,யமுனா ஆகிய இரு நதிகள் கலப்பதுதான் கண்ணுக்கு தெரியும் ,அடியில் இருந்து சரஸ்வதி நதி  வந்து கலப்பதாக ஐதீகம் என்றார்கள் .இம்மூன்று நதிகள் கலக்கும் புனிதமான இடத்தில் நீராடினால் ...செய்த பாவம் எல்லாம் நதி நீரில் கலந்து ஓடிவிடும் என்றும் சொன்னார்கள் ...
நான் நீராட முடியாது என்றேன் .ஏன் என்று ஒருமித்த குரலில் கேட்டார்கள் .நான்தான் இதுவரையிலும் ஒரு பாவமும் செய்யவில்லையே என்றேன்!பரவாயில்லை ,நீராடி உடல் அழுக்கையாவது போக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள் .இது எனக்கு நியாயமாகப் பட்டது !
இந்த இடத்தில் ஒன்றை சொல்லித்தான் ஆகவேண்டும் !நாங்கள் அங்கே சென்ற நேரம் உச்சபட்ச வெயில் காலம் ,காலை எட்டு மணிக்கே ஆற்றோர மணலில் கால் வைக்க  முடிய வில்லை  ,அவ்வளவு கொதித்தது !
வைரமுத்து ஒரு பாடலில்,தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது என்று எழுதி இருப்பார்(அவர் எழுதி இருப்பது வேறொரு உணர்ச்சியை உணர்த்த )..அந்த வரிகளின் நேரடி அர்த்தத்தை அங்கேதான் உணர்ந்தேன் ...வெயில் கொடுமையை தாங்க முடியாமல் கசகசவென்று வியர்த்திருந்ததால் ஆசை தீர நீராடி ...கண்ணுக்கு தெரியாத  நதி கலக்கும் இடத்தில் ,கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் கரைத்துவிட்டு.. கரையேறி வந்திருக்கிறேன்  ..இப்போ.. நான் ஒரு பாவமும் அறியாதவன் என்பதை  நீங்க தெரிஞ்சிக்கிட்டா சரி !
      அடுத்து ,அந்த ஊரில் நாங்கள் சென்ற இடம் இதோ இதுதான் ....
         இதுதான் ஆனந்த பவன் , இது வசந்த பவன்போல் ஹோட்டல் கிடையாது  ...நமது முன்னாள் பிரதமர்கள் நேரு ,இந்திராகாந்தி பிறந்து வளர்ந்த வீடுதான் இது !தற்போது அருங்காட்சியகம் ஆக்கப் பட்டு,பச்சைப் பசேல் புல்வெளியுடன் அருமையாக பராமரிக்கப் பட்டு வருகிறது ,இந்த வளாகத்தில்ஒரு பிளானடோரியமும் உள்ளது !
அரண்மனைப் போன்ற வீட்டில் பிறந்த நம்ம நேரு மாமா ,நாட்டுச் சுதந்திரத்திற்காக  பாடுபட்டு ஒன்பதாண்டு காலம் சிறையில் இருந்தார் ,பரம்பரை சொத்தை மக்களுக்காக அர்ப்பணித்தார் ,,இன்றைய அரசியல்வாதிகளும் சிறைக்கு செல்கிறார்கள் ..வருவாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு கூறப் பட்டு !
       

யுஸ்டு சப்பல் ஷோ ரூம் வச்சிருப்பாரோ ?
        ''உள்ளூர்லே இருந்தும் என் கல்யாணத்திற்கு நீ ஏன் வரலே ?''
        ''செருப்புக்கு டோக்கன் குடுக்கிற  கல்யாண மகால்லே நுழையக்கூடாதுங்கிறதை என் பாலிசியா வச்சிருக்கேனே !''

பழைய வர்ணனைகள் இப்போது பொருந்தாது !
 ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிக்க முடியவில்லை ...
ஆப்பிள் மேலும் செயற்கையாய் மெழுகுப் பூச்சு !