31 August 2016

தலையணை மந்திரம் எதுவரை வேலை செய்யும் :)

               '' வயது ஏற ஏற ஆண்கள்  தலையணை  இல்லாமல் படுப்பது நல்லதுன்னு   சொல்றாங்களே ,ஏன்  ?''
               '' தலையணை மந்திரம்  வேலை செய்யாத  நேரத்தில்  தலையணை  எதுக்கு ,தேவையில்லைதானே ?''
பார்வை ஒன்றே போதுமா :)   
               ''ஒரே பார்வையிலே ,அளக்காமலே சரியாக தைத்துக் கொடுத்து விடுவாராமே அந்த டெய்லர் !''
              ''நல்ல வேளை ,அவர் ஜென்ட்ஸ் டெய்லரானதால்  தப்பித்தார் !''

பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா ?
            ''பொண்ணு வாக்கப்பட்டு போற இடத்திலே கண் கலங்காம இருக்கணும்னு அவர் ரொம்ப எச்சரிக்கையா  இருக்காரா,எப்படி  ?''
            ''டிவி இல்லாத வீட்டு வரன்கள் மட்டுமே வேணும்னு  தரகர்கிட்டே சொல்லி இருக்காரே ! ''

ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய் கூடினால் ஒரு டீ ?
        ''ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா ,அநியாயமா இருக்கே ?''
       ''டீத் தூள் கிலோ ரூபாய் முன்னூறு ஆச்சே!''
       ''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''

ஸெல்ப் பேட்டரி மக்கர் பண்ணலாம்  என்பதால் கிக்கருமா ?
  கிக்கர் உள்ள ஸெல்ப் ஸ்டார்ட் டூ வீலர்களை நம்ப முடிய வில்லை ...
  அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும் 
  சேர்த்து சாப்பிடுங்கள் என சொல்லும் சித்த மருத்துவரையும் நம்ப முடியவில்லை ...
  நம்பகமான ஒரு வழி உள்ளதையே நம்பத் தோன்றுகிறது !

30 August 2016

உங்கள் கணவர் எப்படிப் பட்டவர் :)

                      ''திடீர்னு வந்து ,நீ மனுசனா ,பெரிய மனுசனா ,ஞானியா ,வாழும் கடவுளான்னு  ஏண்டா கேட்கிறே ?''
                     ''இதோ ,இதைப் படிச்சு பாரேன் !''
மேற்படி  தத்துவத்துக்கு  சொந்தக் காரரான  g + நண்பர் ராஜ் குமாருக்கு நன்றி !

கனவிலே இவர் வரணும்னு சொல்லாமல் போனாரே :)
           ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
           ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
          ''ஒன்லி ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''

மக்கள் நம்பிக்கையை  பயன்படுத்திக் கொண்டு ......... :)
        ''ஆறு கண்மாய்களில்  தண்ணியில்லேங்கிறதை  பயன்படுத்திக்கிட்டு புதுசா பார்சல் சர்வீஸ்  பிசினஸா.என்னது ?''
        ''பிள்ளையார் சிலையை கரைத்து விடணுங்கிறது ஐதீகம் ,நீங்கள் சொல்லும் கடலில் கரைக்க நாங்கள் உதவுகிறோம்னு எழுதிப் போட்டிருக்காங்களே !''

கறி  ஃசாப்டா  இருக்கும் காரணம் :)
        ''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
        ''My crow soft பிரியாணி கடைதான் !''

இப்படி கேட்பவரின்  மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் !
          அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
         அர்த்தம் இருக்கணும் ...
         'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
         'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
          எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !

29 August 2016

'இது 'க்கும் டாட் 'காமா ' வந்திருக்கு:)

பாலை கறப்பதே பாவம் தானே :)             
             ''சத்தியமா  சொல்றேன் , பாலில் தண்ணீர் கலப்பது பாவம்னு நினைக்கிறவன்  நான் ,என்னை நம்புங்க !''
              ''ஒரு நிமிஷம்  பால் குடிக்கட்டும்னு , தாய்ப் பசுகிட்டே  கன்றுக் குட்டியை  விடாத உன்னை எப்படி நம்புறது ?''

தோசை விலை நாற்பது ,வெங்காய தோசை விலை .......:)                       
             ''உங்க ஹோட்டலில் நுழைந்ததும் வயிற்றைக் கலக்குதே !''
             ''உங்களை யார் வெங்காய தோசை விலையை பார்க்கச் சொன்னது ?''

காரணம் கதையில்லே ,காசுதானே :)
              ''உங்க பட ஹீரோயின்  கதைக்கு தேவைப் பட்டதால் கவர்ச்சியா நடித்தேன் என்று சொல்லி இருக்காங்களே ...அதைப் பற்றி .....!''
              ''ரெண்டு மடங்கு  சம்பளம் வாங்கிக்காம  இப்படிச் சொல்லியிருந்தால்  நம்பலாம் !''

'இது 'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு :)
             ''என்னது பிச்சைக்காரன் டாட் காமா ?''
             ''ஆமா ...ஒரு இ மெயில் அனுப்பினாப் போதும் ,மீந்து போனதை வந்து எடுத்துட்டு போயிடுவான் !''

அதுக்குத்தானா இந்த கொண்டாட்டம் :)
               அமாவாசை வந்தாலே காக்கைகளுக்கு கொண்டாட்டமாய்  இருக்கும்  ....
               தானும் கருப்பு அமாவாசையும் கருப்பு என்பதால் அல்ல !
               எச்சில் கையால் காக்கையை விரட்டாதவன் கூட ...
               அன்று மட்டும் முன்னோர்களை நினைத்து காக்கைக்கு முதல் படையல் வைப்பதால் !

28 August 2016

மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா, இப்படித்தான் :)

ஜாக்கிரதை ,நகையைப் பார்த்து வாங்குங்க :)
            ''HALLMARK ன்னு போட்டு இருக்கு ,ஆனா  வாங்கின நகைங்க கறுத்துப் போச்சு !''
            ''கடையிலே போய் கேட்க வேண்டியது தானே ?''
           ''நல்லாப் பாருங்க ,நாங்க HALF MASS ன்னுதான்  போட்டு இருக்கோம்னு சொல்றாங்க !'


தோழியின் அருமையான யோசனை :)         
            '' ஒண்ணு ரெண்டுன்னு எண்ணினா, கோபம் போயிடும்னு நீ சொன்னது சரிதாண்டி !''
           ''பத்து வரைக்கும் எண்ணியிருப்பியா?''
           ''எட்டாவது அடிக்கே, என் வீட்டுக்காரர் மயங்கி விழுந்துட்டாரே!''
கோர்ட்டுக்கு போனாலும் அவர் வாதம் செல்லாது :)    
              '' கிழிஞ்சிருக்கிற  என் சட்டை ,பனியனைப்  பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்கணுமே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை  எப்படி  காட்ட முடியும் ?'' 
மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா, இப்படித்தான் :)             
             ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
            ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிஷனே போதுங்கிறாரே!''

திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள் !
        குளிக்க ,துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள் சொன்னால் ...
        மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
        பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !

27 August 2016

14 நொடிக் கணக்கு , சரிதானா:)

            ''பெண்ணை பதினான்கு நொடி தொடர்ந்து பார்த்தாலே தப்புன்னு தெரியுமில்லே ,ஒரு கண்ணை வேற தொடர்ந்து  அடிச்சியாமே  ,ஏன் ?''
             ''கண்ணை  மூடித் திறந்தா ஒரு நொடியாமே , கணக்கு தெரியணும்னுதான் , அப்படி செஞ்சேன் !''

இது உண்மைதானா :)              
            ''என்னங்க , நாய்கள் எல்லாம் என்னைக் கண்டவுடன்   குரைக்குதே,ஏன் ?'' 
           ''  பேய் வர்றது நாய்ங்க கண்ணுக்கு தெரியுமாமே  ,அதனால் ஆயிருக்கும் !''

பெயர் ராசியில்லாம போயிடுச்சே :)
         ''இலஞ்சம் வாங்கின அதிகாரியை CBI கைது பண்ணியிருக்கு ...இந்த செய்தியைப் படிச்சிட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''
         ''மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !''

புதிய காதலரா ,பழைய கணக்கை முடிப்பார் :)
              ''பீச்சிலே உன் காதலரோட இருக்கும்போது ,ஐஸ் விற்கிறவன் வந்து மானத்தை வாங்கிட்டானா,என்னவாம் ?''
              ''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
              ''எதுக்காம் ?''
              ' ஐஸ் வாங்கின கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் :)
 தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
 சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
 பொய் என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வழக்காடு மன்றத்தில் வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
 பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?

26 August 2016

தாலி இறங்க பூஜை ஏதாவது இருக்கா :)

              ''என் மனைவி சுமங்கலி பூஜை செய்கிறாள் ,உன் மனைவியையும் வரச் சொல்லேன் !''
               ''அவளாவது வருவதாவது ?தாலி இறங்கினாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறவளாச்சே  அவ !''


சான்ஸ்  கிடைக்கும் போது விடுவாளா மனைவி :)             
            ''அதிர்ச்சியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னுடும்னு ,என் மனைவிகிட்டே உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
            ''விக்கல் நின்றதா ?''
             ''விக்கல் நின்னுடுச்சு ,நான் சொன்னதை உண்மைன்னு நினைச்சு,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !'' 

தொந்தி உடையார் விழுவதற்கு அஞ்சார் :)
        ''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடி படலையா ?''
         ''நல்ல வேளை,தொந்தி இருந்ததால் மூக்குலே மண்ணு கூட படலே !''

 தாஜ்மகால் காதலின் சின்னமல்ல  ,எச்சரிக்கை :)
       தாஜ்மகாலை ...
      அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
      அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை           சின்னமாய்தான்  கண்ணுக்கு படுகிறது ...
      பதினான்கு  முறை பிரசவித்து 
      முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
      மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் இருக்கிறது !

25 August 2016

கனவுக் கன்னி தெரியாமல் போயிருப்பாளா :)

             ''என்னங்க , தூங்குறப்போ எதுக்கு கண்ணாடியை  போட்டுக்கிறீங்க  ?''
            ''கனவுலே எல்லாமே கலங்கலாத்  தெரியுதே !''
நல்ல வேளை,தமிழில் மொழிபெயர்க்கலே :)
         '' நம்ம சென்னை ஏர்போர்ட்டில்,மேற்கூரை ,கண்ணாடி எல்லாம் அடிக்கடி இடிந்து விழுதுன்னு சொல்றாங்க,நீங்களும் எதுக்கு இடிந்து போய் உட்கார்ந்து இருக்கீங்க ?'' 
         ''எல்லாம் இந்த போர்டைப் படித்துதான் !''
இது பாசமில்லே ,பயம் !
          ''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
          ''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்றாரே !''

ராதா எப்பவுமே ராதாதான் !
           ''ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியலே ,உங்க தெருவிலே இருக்கிற பொண்ணுங்க பேரை கேட்டா மட்டும் தலை கீழா சொல்லுவே !''
            ''அதெல்லாம் இல்லை சார் !''
            ''என்னாஅதெல்லாம் இல்லே ?''
             ''ராதாவை  ராதான்னுதான் சொல்லுவேன் ...தாரான்னு சொல்லமாட்டேன் சார் !''

சினிமா மோகம் படுத்தும் பாடு :)
       சாத்தானின் சமையல் அறையை  ...
       கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம் 
       ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
        ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே ! 
---------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின்  சமையல் அறை ,சரிதானே ?

24 August 2016

ரதியை எதிர்பார்த்து ஏமாந்த மன்மதன் :)

             ''இவ்வளவு அசிங்கமா ஒரு பொண்ணை  வச்சுகிட்டு ,எங்களை எதுக்கு பெண் பார்க்க  வரச் சொன்னீங்க ?''
             ''அழகான மணப்பெண் தேவைன்னு விளம்பரம் கொடுத்த மன்மதன் யார்னு  பார்க்கத்தான்  !'' 
இவர்  மனோதத்துவ டாக்டர்  ஆச்சே :)             
     ''நர்ஸிங் படிக்காத அழகான பெண் வேலைக்கு தேவைன்னு எதுக்கு டாக்டர் கேட்கிறீங்க ?''
     ''பீஸ் வசூலிக்கத்தான்....நான் கேட்டா , நூறு ரூபாய் தரவும்  அழுவுறாங்களே!''

டேட்டிங் காதல் எல்லாம் இப்படித்தான் புட்டுக்குமோ ?
       ''காதலனை நம்பி அவன் பெயரை பச்சைக் குத்திக்கிட்டியே ...இப்போ விட்டுட்டு போயிட்டானே ,என்னடி  செய்யப் போறே ?''
      ''அதே பெயருள்ள வரனைப் பாருங்க ,கல்யாணம் கட்டிக்கிறேன் !''

இந்த குணம் புருஷ லட்சணம் ஆகுமா ?
'        'என்  புருஷனை மாதிரி ஒரு அல்பத்தை பார்த்ததே இல்லை...செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு சொல்றார்டி !''
         ''ஒண்ணாம் தேதி வரணுமாமா ?''
        ''இல்லே ,கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,நியாயம்தானே ?
      வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
      ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
      காரணம் என்னவென்றால் ...
      தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
      மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT ! 

23 August 2016

ஷ என்றாலே ஷகிலா நினைப்புதானா :)

பஞ்ச்  டயலாக்  சொன்னாதான் பயபிள்ளே  மண்டையில் ஏறுது  :)
             ''என்னடா ,ஸ்கூலுக்கு சீக்கிரமா கிளம்பிட்டே ?''
             ''புதுசா வந்திருக்கிற  வாத்தியார் 'எனக்கு எல்லா  மதமும் பிடிக்கும்  ,தாமதம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது'ன்னு சொல்றாரே !''

இருந்தால் தானே சலவை செய்ய :)                  
         ''என்னங்க ,நம்ம பையன் சரியா படிக்க மாட்டேங்கிறான் ,தீவிரவாதி ஆயிடுவான் போலிருக்குங்க !''
          'ஒண்ணும்  கவலைப் படாதே ,யாரும் அவனை 'மூளைச் சலவை 'செய்ய முடியாது !''
                                                                                                
 ஷ என்றாலே ஷகிலா நினைப்புதானா ?                    
              ''தமிழ் வாத்தியார்  எதுக்கு உன்னை வகுப்பை விட்டு வெளியே போகச் சொன்னார் ?''       
             ''ஷ என்பது வடஎழுத்து நாம பயன்படுத்தக் கூடாதுன்னு அவர் சொன்னப்போ...ஷகிலாவுக்கு வர்ற ஷ தானேன்னு கேட்டேன்  !''
என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் !           
        ''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
        ''அய்யய்யோ என்னாச்சு ?''
        ''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''

மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் !
        மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
        சில வீடுகளில், கணவன்மார்களுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடும்...
        சில வீடுகளில் ,கணவன்மார்கள் வலி தாங்க முடியாமல் போடும்     கூப்பாடும் ...
        எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் !

22 August 2016

மாமியார் மேல் இம்புட்டு பாசமா:)

பதவிக்கு தகுந்த மரியாதை வேண்டாமா :)
            ''பத்தாயிரம் ரூபாய் லஞ்சம்  வாங்கி பிடிபட்ட நீதிபதியை ,அவரோட மனைவியே டைவர்ஸ் பண்ணிட்டாங்களாமே!''
         ''கேவலம் ஒரு பத்தாயிரம் ரூபாய் வாங்கியா மாட்டிக்கிறது என்று அவருக்கு வருத்தமாம் !''
   
 ஆஹா ,என்ன பொருத்தம் :)
         ''இத்தனை வருடமா  டார்வின் தியரி தப்புன்னு இருந்த ,உங்களை ஒரு படம் மாத்திடுச்சா ,அப்படியென்ன  படம் ?''
        ''இதோ ,இந்த படம்தான் !''
மாமியார் மேல் இம்புட்டு பாசமா :)
         ''கல்யாணம் ஆனதும் பிள்ளையைப் பெத்துக்கணும்னுஅவசரப் படுறீயே,ஏண்டி ?''
         ''பேரப்பிள்ளையே கண்ணாறப் பார்த்த பிறகுதான் ,நிம்மதியா கண்ணை மூடுவேன்னு என் மாமியார் சொல்றாங்களே !''

 மனுஷன் ,மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருப்பாரோ :)
          ''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த  நான்  ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லை.... அதை நீங்க ஏன்  ஏத்துக்க  மறுக்கிறீங்க ? '' 
         ''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''

தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் :)
   கையைக் காட்டினால் நிற்கும்  மினி பஸ் மாதிரி 
  நூறு  கிமீ வேகத்தில் செல்கின்ற  ரயிலும் நிற்கும் என 
  நினைக்கும் பாமர ஜனங்கள் ...
  ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து 
 நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !

21 August 2016

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா :)

நாக்கு மூக்க நாக்கு மூக்க தத்துவம் :)             
           ''அவருக்கு ஜலதோஷம்  வந்தாலும் வந்தது  தத்துவமா சொல்ல ஆரம்பித்து விட்டாரா ,எப்படி ?'' 
             ''ஜல தோஷம் கூட மூணு நாள் இருக்கும் ,சந்தோஷம்  வர்றதும் போறதும் தெரியாதுன்னு சொல்றாரே !''

கணவன் கையாலே பாஸ்ட் புட் சாப்பிட ஆசை :)
          ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,இப்ப எதுக்கு வரச் சொல்றே ?''
         ''சமையல் கலை நிபுணர் வந்து பாஸ்ட் புட் ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறார்,நீங்க தெரிஞ்சுக்க வேணாமா ?''

இவருக்கு திட்டு வாங்கிறதே பொழப்பாப் போச்சு:)
         ''ஏண்டா ,கிடைச்ச கண்டக்டர் வேலையே ராஜினாமா பண்ணிட்டே ?''
         ''பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தாம போனா வெளியே நிற்கிறவங்க திட்டுறாங்க ,எல்லா ஸ்டாப்பிலும்  நிறுத்தினா உள்ளே இருக்கிறவங்க திட்டுறாங்களே !"

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா :)
          ''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி  இருக்கீங்க  ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
           ''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !
நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் :)
         கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும் 
        மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
        அது அடைய வேண்டிய உயரத்தை 
        வெங்காயம்  அடிக்கடி தொடுவதாலா ?

20 August 2016

புருஷன் பிரௌசிங் செய்தால் பெண்டாட்டி ஏன் பத்ரகாளி ஆகணும் :)

இவனுக்கு எதுக்கு செல்போன் ?
              ''செல்போன் காணவில்லை ,கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுன்னு  தினசரியில் விளம்பரம் பண்ணியுமா கிடைக்கலே ?''
             ''தகவல் தர வேண்டிய எண் என்று அந்த நம்பரையே கொடுத்து தொலைச்சிட்டேனே! ''


புருஷன் பிரௌசிங் செய்தால் பெண்டாட்டி ஏன் பத்ரகாளி ஆகணும் :)
           ''நான் 'நெட்'டைப் பார்க்கிறப்போ 'போர்ன்விட்டா '  தர  வேண்டியதுதானே  ?''
           ''பார்க்கிறது போர்ன்சைட் ,போர்ன்விட்டா  கேட்குதா உங்களுக்கு ?''
ஜூஸிலும் ரெண்டு வகையா ?
        ''சாத்துக் குடி ஜூஸ் கேட்டா ,தண்ணிச்சாற்றை கொண்டுவர்றீயே,நியாயமா ?''
        ' 'தனிச் சாறு  வேணும்னா நூறு ரூபாயாகும் ,கொண்டுவரவா ?''

ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் !
             ''முழு உடல் பரிசோதனை செய்துக்கிட்டு ஒரு மாசமாச்சே ,இன்னுமா உங்க உடம்பிலே என்ன நோய் இருக்குன்னு கண்டுபிடிக்க  முடியலே ?''
             ''என்ன நோய் இல்லைன்னு கண்டுபிடிக்கத்தான் முடியலையாம் !''

டாட்டா .பிர்லா பொறந்ததும் 'லேபர் 'ரூமில்தான் !
       லேபர் ரூமிலே பிறந்தாலும் கூட ...
       சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும் 
       அவரவர் கையிலேதான் இருக்கிறது !

19 August 2016

ஒருதலைக் காதல் என்பது இதுதானோ :)

                ''நேற்று உனக்கு துக்க நாளா  போச்சா ,ஏண்டா  ?''
               ''நான் யார் கழுத்தில்  தாலிக் கயிறு  கட்டணும்னு  நினைத்திருந்தேனோ ,அந்த  பொண்ணே வந்து என் கையில்  ரக்ஷா பந்தன் கயிறைக் கட்டிட்டுப் போயிட்டாளே !''
'மார்க் 'கண்டேயன்  என்றும்  பதினாறுதானே :)
            ''பையனுக்கு மார்க்கண்டேயன்னு பெயர் வச்சது தப்பா போச்சா ,ஏன் ?''
            ''எந்த பாடத்திலும் பதினாறு  மார்க்  மேலே எடுக்க மாட்டேங்கிறானே!''
                                 
ஜென்டில்மேன் இராவணன் ?:)     
           ''இராவணன்  சீதையை சரியாக 'பத்து மாதம்' சிறை வைத்து இருந்தாராம் ,இதில் இருந்து என்ன தெரியுது ?''
            ''இராவணன் சீதையிடம் சேஷ்டை எதுவும் செய்யலேன்னு தெரியுது !''

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு ?
          ''நீ கேட்ட நெக்லசை உன் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா ?''
         ''உனக்குத்தான் கழுத்தே இல்லையே ,நெக்லஸ் எதுக்குன்னு கிண்டல்தான் பண்றார் !''

தன் குணத்தை  மறக்கும் மனிதன் !
  பால் குடிப்பது பூனையின் இயல்பு ...
  சந்தேகப் படுவது மனிதனின் இயல்பு ... 
  'இந்த பூனையும் பால் குடிக்குமா 'என்று கேட்பது
  எந்த வகையில் நியாயம் ?

18 August 2016

மலேசியாவில் மட்டும் கபாலி ஏன் கெட்டவரானார் :)

               ''மலேசியா சினிமா சென்சார்  போர்டிலே இருக்கிறவங்க ,ரொம்ப ரோசக்காரங்களா, ஏன்  ?''
              ''கபாலி  போலீசில் சரண் அடைந்தார்னு, கிளைமாக்சில்  போட்டால்தான் இங்கே ரிலீஸ்  பண்ண முடியும்னு சொல்லிட்டாங்களாமே !''

அப்பனுக்கு  எதிரி வேறெங்கும் இல்லே :)           
               ''மாப்பிள்ளை ,வரதட்சணையா  கார் கேட்குறீங்களே ,என்ன தைரியம் உங்களுக்கு ?''
               ''எல்லாம் உங்க பொண்ணு கொடுக்கிற தைரியம் தான் .கேட்கச் சொன்னதே அவங்கதானே !''

காதலியின் அந்த காலணிக்கு,இந்த காலணி சரிதானே :)
          ''காதலிக்கு  கொலுசு வாங்கித் தரப்போறீயா ,ஏன் ?''
           ''தயங்கித் தயங்கி நான் காதலை அவளிடம் சொன்னப்போ ,காலணியைக் கழட்டாம இருந்தாளே,அந்த நன்றிக்காகத்தான் !''
குடிகாரனின் சப்பைக்கட்டுக்கும் ஒரு அளவில்லை!                
             ''நீங்க மொடாக்குடியன் ஆவதற்கு  காரணம்   லேண்ட் லைன் போன்னு எப்படி சொல்றீங்க ?''
              ''அது ,டிரிங்க் ,டிரிங்க்ன்னு மணி அடிச்சுக்கிட்டே இருந்ததே !''

காசு பணம் துட்டு மணி இருந்தாதான் மதிப்பு !
  சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
  தரித்திர நாராயணன்களும் உண்டு !

17 August 2016

வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு :)

கூமுட்டைக்குத்  தெரியுமா கவிஞனோட வலி:)   
      ''ஜன்னல் வழியா விடிஞ்சிருச்சான்னு ஏன் அடிக்கடி  பார்க்கிறீங்க ?''
      ''இரவிலே வாங்கினோம் சுதந்திரம் விடியவே இல்லைன்னு நேற்று டி வி யில் ஒருத்தர் சொன்னாரே !''

ஸ்ரீ தேவியை தெரியும் ,லேவா தேவி ?             
             ''பெண் சகவாசமே வேண்டாம்னு சொல்ற உங்க பையன் ,பரம்பரைத் தொழிலும்  வேண்டாம்னு சொல்றானா ,என்ன தொழில் ?''
             ''லேவா'தேவி ' தொழில்தான் !''

 நியூஸ் ரீடர்னா அழகாய் இருக்கணுமா  :)
           ''நம்ம டிவி நேயர் ஒருவர் ,நியூஸ் ரீடரை உடனே  மாற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறாரா ,ஏன் ?''
          '' விஷுவல் எதுவும் இல்லைன்னாலும் நியூஸ் ரீடராவது பார்க்கிற மாதிரி இருக்க வேண்டாமான்னு கேட்டு இருக்கார் !''
வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு :)
            ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
            ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

'குடி'மகன்களுக்குப் பிடித்த ஆத்திச்சூடி !
  அரசுப் பேருந்துகளில் திருக்குறளை 
  எழுதியிருப்பதைப் போல ...
  டாஸ்மாக் கடைகளில் ....
  ஊக்க'மது 'கைவிடேல் என 
  எழுதப்பட்டாலும் வியப்பதற்கில்லை !

16 August 2016

நடிகைக்கு கோவில் என்றால் ,உடை ? :)

ஆபீஸுக்கு சைக்கிளில் செல்வதே நல்லதோ :)         
             ''என்ன சொல்றே ,கார் வாங்கினாலும்  மறுபடியும் சைக்கிள்தான் ஓட்ட வேண்டியிருக்குமா ?''
             ''கொஞ்ச நாள்லே தொப்பை வந்துடும் ,அதைக் கரைக்க ஜிம்மிலே சைக்கிளிங் பண்ணவேண்டி வரும்னு சொன்னேன் !''

இவன் காதுலே தீயை வைக்க :)                        
                 ''தீக்குச்சி கேட்டீங்க ,லைட்டரே தந்தாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
                 ''காது குடைய லைட்டர் எதுக்கு ?''
                                     
 அப்பன்காரன் இப்படியா பேர் எடுக்கிறது ?
            ''நிலாச் சோறுன்னா அம்மா ஞாபகம் வருது சரி ,அப்பா ஞாபகம் எப்போ வரும் ?''
            ''தண்டச் சோறுன்னா !''

நடிகைக்கு கோவில் என்றால் ,உடை  டூ பீஸ் தானே :)
            ''அடபரவாயில்லையே,அந்த நடிகை தனக்கு கோவில் கட்ட வேண்டாம்னு   ரசிகர்களை தடுத்து விட்டாராமே !''
            ''அடநீங்கவேற !நீச்சல்உடையிலே இருக்கிறமாதிரி சிலைன்னு சொன்னது, அவங்களுக்கு பிடிக்கலையாம் !''
பல கணவர்கள் அடுத்த பிறவியில் ஆக நினைப்பது :)
      பல கோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது                  என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் கணவன்மார்களுக்கு  பொறாமை இல்லை ...
         அது மனைவிமார்களை  பயமுறுத்தும் வித்தையை  கற்று வைத்திருக்கிறதே ,என்பதால்தான் !

15 August 2016

வீட்டிலாவது சுதந்திரம் உள்ளதா:)


இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !
 ---------------------------------------------------------
மரம் சும்மா இருந்தாலும் காற்று  சும்மா இருக்க விடாது :)
              ''கொசுக்கடி வாங்கியே அவர் கவிஞர் ஆகிவிட்டாரா ,எப்படி ?''
              ''நான் சும்மா இருந்தாலும் கொசு சும்மா இருக்க விட மாட்டேங்குதே ன்னு சொல்றாரே !''

நேர்மையை படங்களில் வலியுறுத்தியவரா இப்படி ?
            ''சிலைக் கடத்தல் வழக்கில் அந்த இயக்குனர் மாட்டிக்கிட்டார் என்பதை உங்களால் நம்ப முடியலையா ,ஏன் ?''
            ''அவர் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது 'விரலுக்கேற்ற வீக்கம் 'ஆச்சே !''
 இப்படித்தான் சிலர் தேசபக்தியை காசாக்குகிறார்கள்:)
      ''கொடியை ஏற்றிவிட்டு அந்த கஞ்சப் பிசினாறி கடைக்காரர் , புத்தியைக் காண்பிச்சிட்டாரா, எப்படி ?''
      ''மிட்டாயும் ,கொடியும் வேணுங்கிறவங்க ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிக்கணுமாம் !''

தலை கீழாய் நின்று கொடி வணக்கம் செய்ய முடியாதே !
           ''தலைநிமிர்ந்து கொடிவணக்கம் செய்யவேண்டியவங்க ஏன் தலைக் குனிஞ்சு நிற்கிறாங்க ?''
          ''தலைவர் ஏற்றின கொடி தலைக்கீழா பறக்குதே !

 வீட்டிலாவது சுதந்திரம் உள்ளதா :)
        எறும்புகளே ...
        எந்தக் கோட்டையில் கொடியேற்ற 
        நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?
        பாதுகாப்பாய் எப்படி வாழ்வதென்று 
        உங்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொள்ள நினைக்கிறோம் ...
        பிரதமரே பாதுகாப்பாய் குண்டு துளைக்காத கண்ணாடி பின்னால் இருந்து எங்களை வாழ்த்துவதால் !

14 August 2016

மனைவியின் முன் எச்சரிக்கை சரிதானா :)

கண் அளக்காததா கை அளக்கப் போவுது :)
        ''என்னங்க ,என் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட்டில் , கொழுப்பு அதிகம்னு காட்டுதுங்க !'
        '' என்னைக் கேட்டாலே  இதைச் சொல்லியிருப்பேனே ,இதுக்கு ஐந்நூறு ரூபாய் செலவு வேறயா  ?''
உங்களுக்கும் மண்டையைப் பிய்ச்சிக்கத் தோணுதா :)          
               ''என் பையனையா  அரைக் கிறுக்கன்னு  சொல்றே ,நீ  நாசமா போயிடுவே !''
               ''ஹிஹி ''
               ''சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கு ?''
               ''முழுக் கிறுக்கன் யாரென்று சொன்னால் ,உங்களுக்கு இன்னும்  எப்படி கோபம் வரும்னு நினைச்சேன் !''

ஊரு விட்டு ஊரு போனா பேரும் மாறுமா?
          ''கர்நாடகாவிலே  எல்லா ஊர் பெயரும்  'ஹள்ளி'ன்னுதான்  முடியுமோ ?''
          ''ஊரை மட்டுமல்ல ,நம்ம ஊரு அல்லி ராணியைக் கூட   , அவங்க ஹள்ளி ராணின்னு தான் சொல்வாங்க!''

மனைவியின் முன் எச்சரிக்கை  சரிதானா  :)
           ''வேலைக்காரி ,என் ஜீன்ஸ் பேன்ட் ,சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
           ''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தவளை..நான்னு நினைச்சு   நீங்க  கட்டிப் பிடிச்சதை  மறந்துட்டீங்களா ?''

முரண்பாடுகள் நிறைந்தது சினிமா உலகம் :)
   எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாட்டியவர்கள் 
   சிலநாள் அழகு ஹீரோயின்களாக   ...
   இயற்கையாகவே அழகாய் இருப்பவர்கள் 
   காலமெல்லாம் எக்ஸ்ட்ரா நடிகைகளாக ...

13 August 2016

ஆணைவிட பெண்ணுக்கு 'அது 'எட்டு மடங்காமே :)

நடுவர் இப்படியா கோபப்  படுவது  :) 
              ''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர்  போலிருக்கா ,ஏன்?''
             ''மணி  அடிச்ச பிறகும்  பேசிக்கிட்டு இருந்தவர் மேலே மணியை தூக்கி எறிஞ்சுட்டாரே !''

எப்படி நம்ம வில்லேஜ் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு  :)
        ''சூப்பர் ஐடியாவா இருக்கே ,ஓட்டுறவர் பெயர் என்னவாம் ?''
        ''மயில் வாகனன் !''

ஆணைவிட பெண்ணுக்கு 'அது 'எட்டு மடங்காமே  :)
       ''என்னங்க ,சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை ஆர்வமா படிக்க ஆரம்பித்து ,முதல் அத்தியாயத்தோட மூடிட்டீங்களே,ஏன் ?''
      ''ஆணைவிட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு ,அறிவு நான்கு மடங்கு ,தைரியம் நான்கு மடங்கு ,காமம் எட்டு மடங்குங்கிறதைப் படித்ததும் போதும்னு ஆயிடுச்சே !''

அஞ்சு .பத்மாவுக்குப் பின்னாலே பையன் அலைஞ்சா ...
        ''அப்பனுக்குப் பையன் தப்பாமப் பொறந்து இருக்கானா ,எப்படி ?''
        ''பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க அஞ்சு ,பத்துக்குப் பின்னாடி பையன் அலையிறான் ,அப்பன்காரன் கையிலே காசில்லாமே அஞ்சு பத்துக்கு அலையிறாரே !''

I LOVE YOU...சுருக்கமாய் சொல்லலாமா ?
   பல பேரின் காதல் ...கல்யாணத்தில் முடியாமல் இழு இழு என்று 
   இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...
   முதலில் காதலை I L U [இழு ]என்று SMSசெய்ததாலா ?

12 August 2016

கணவனின் சந்தோசம் ,இதற்குத் தானா :)

 திறமைசாலிகளான  கொள்ளையர்கள் :)            
             ''நீதிபதி வீட்டிலேயே இருநூறு பவுன் கொள்ளையாமே ?''
            ''ஓடுற ரயிலிலேயே  கொள்ளை அடிக்கிறாங்க ,இது  என்ன அதிசயம் ?''

இந்த பயபிள்ள, பாஸாவானா :)            
          ''பரீச்சைத் தாளை லவ் லெட்டர் மாதிரி நினைச்சு எழுதணும்னு  ஏன் சார் சொல்றீங்க ?''
          ''மனசுக்குள்ள  ஒண்ணுமே இல்லைன்னாலும் பக்கம் பக்கமா எழுத வருமே !''

கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் !                  
      ''பொன் விழா கண்ட நம்ம பள்ளி இதுவரை மாநில அளவில் முதல் இடம் வராததற்க்கு காரணம் ,பள்ளியோட இலச்சினை தானா?''
     ''ஆமா 'பிறர்க்கு வாழ் 'என்பதை  மாணவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறார்களே!''
கணவனின் சந்தோசம் ,இதற்குத் தானா ?
         ''என்னங்க , அரசாங்க வேலை  கிடைச்சாச்சு ... நான் சனி ...ஞாயிறு வீட்டுலேத்தான் இருப்பேன் !
         ''ரொம்ப சந்தோசம் ..... நீ  'சனி''ங்கிறதை இப்பவாவது ஒத்துக்கிட்டியே !''

இந்த இசையை ரசிக்க முடியலே !
   விடாமல் அடிக்கும் 'டய்ங் டய்ங்' மணி சத்தமும் ...
   இடை இடையே சங்கொலி சத்தமும் ...
  'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !

11 August 2016

ராணியின் மோகம் யார் மீதோ :)

பெயர் பொருத்தம் சரியில்லையே :)
                  ''இறுதி ஊர்வலம் போய்கிட்டு இருக்கு ,உனக்கென்னடா யோசனை ?''
                 ''மயானம் வரைக்கும் போற  இந்த வண்டியிலே நல்லவனும் போறான் ,கெட்டவனும் போறான் ...ஆனால் ,இந்த வண்டிக்கு எதுக்கு சொர்க்க ரதம்னுபெயர் வச்சிருக்காங்க ?''

மாமல்லனைத்  தெரியும் :)
                   ''என் பையன் பிறந்த நேரம் ,மாமூல் வந்து கொட்டிகிட்டே  இருக்கு  !''                                                 
                  ''அதுக்காக பையனுக்கு மாமூலன்னு என்றா பெயர் வைப்பது ?''

உண்மையில் அந்தக் காலம் தேவலையே !
           ''என்னப்பா சொல்றீங்க ,உங்க காலத்தில் இந்த அநியாயம் இல்லையா ?''
            ''ஆமா ,அன்னைக்கு நடந்தது குழந்தைத் திருமணம்தான் ...இன்னைக்கு  திருமணம் ஆகாத குழந்தைக்கே குழந்தைப் பிறக்குதே !''
ராணியின் மோகம் யார் மீதோ ?
            ''ராஜாவின் பார்வை ராணியின் மீதே இருக்கிறதே ,ஏன் ?''
            ''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன அறையில் ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''

வசதிகள் போக்குமா உடலின் அசதியை ?
  மாவு ஆட்ட  சோம்பல் ...கிரைண்டர் வந்தது 
  கல்லைக்  கழுவ சோம்பல் ...டில்டிங் வந்தது 
  வழித்தெடுக்க சோம்பல் ...பாக்கெட் மாவு வந்தது 
  தோசை வார்க்க சோம்பல் ...பிரிட்ஜிலேயே  மாவு...   
  டாக்டரிடம் போக சோம்பல் ...எழுந்து  நிற்க முடியாமல் !

10 August 2016

நடிகைகளின் பிறப்புரிமையாச்சே அது :)

ரயிலில் இருந்த பல கோடி கொள்ளையாமே :)              
              ''கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கொண்டு கொடுக்கும் என்பதை  ரயில் கொள்ளைக் காரங்க  நம்பவில்லை போலிருக்கா  ,ஏன் ?''
             ''அவர்களே , ரயிலின் மேற்கூரையைப் பிரித்துக் கொள்ளை அடித்திருக்கிறார்களே !''
குடிகாரன் பேச்சு காலில் விழுந்தாலே போச்சு :)                     
               ''இனிமேல் குடிக்க மாட்டேன்னு உன் கால்லே விழுந்து சொன்ன , புருஷனை மன்னிக்க முடியாதுன்னு ஏன் சொல்றே ?''
               ''என் கொலுசைக் காணாமே!''
இலவச சினிமா இந்த தியேட்டரில் ?
          '' அடப் பாவி ,உனக்கு  மயக்க மருந்து கொடுத்து  ஒரு மணி நேரமாச்சே,  மயக்கம் வரலையா ?''
            ''நர்ஸோட நீங்க இப்படி சில்மிஷம் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி வரும் ,டாக்டர் ?''

நடிகைகளின்  பிறப்புரிமையாச்சே அது :)
          ''அட பரவாயில்லையே,புருஷன் டைவர்ஸ் கேட்டாலும் அந்த நடிகை கொடுக்க முடியாது  சொல்றாங்களாமே ?''
           ''டைவர்ஸ் நீங்க என்ன கேட்கிறது ,நான்தான் பண்ணுவேன்னு சொல்றாங்களாம் !''

கரெண்ட் பில் எப்படி குறையும் !
  உடனே குப்பையில் எறியவேண்டியதை
  நான்கு நாட்கள் கழித்து  தூக்கி  எறியவும் 
  நமக்குத் தேவையாய் இருக்கிறது 'பிரிட்ஜ் '!  

9 August 2016

சொல்லி(ல்) தெரியுமோ மன்மதக் கலை :)

 ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடந்தால் :)         
          ''ஒலிம்பிக்  போட்டியை அக்ஷய திருதியை  அன்று  நடத்தணும்னு ஏன் சொல்றீங்க ?''
           ''அன்னைக்கு  தங்கம் வாங்கத்தானே  நாம  போட்டி போடுவோம் ? ''

சொல்லி(ல்) தெரியுமோ மன்மதக் கலை :)    
        ''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தினது  ,எப்படி ?''
        ''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத் தரப்படும்னு  சொல்லித்தான் !'' 

பார்க்கவும் ,கேட்கவும் அழகா எல்லோருக்கும் அமையுமா ?
                   ''என்னங்க ,புளியந்தோப்பில்  நடந்து வரும் போது,என்னை ஏன் பாடச் சொல்றீங்க ?''
                   ''காத்து கருப்பு எதுவும் இருந்தா பயந்து ஓடட்டும்னுதான் !''

உப்பு  போடத் துப்பில்லே,ஆனா வாய் ?
           " சாப்பிட்டவங்க 'உப்பில்லை ,நமக் நஹி ,நோ சால்ட்,உப்பு லேதுன்னு சொல்றாங்க,சமையலிலே கவனம் வேணாமா,மாஸ்டர் ? " 
            "நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க முதலாளி ! "

கும்கி யானையின் கேள்வி !
      ஏ மானிடனே ...
      வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்பதை
      உன்னுடனே வைத்துக் கொள்ளக் கூடாதா ?
     வெந்ததை உண்டக்  கட்டியாய்  உண்ணக் கொடுத்து ..என்னையும் 
     எம்மினத்தை துரத்தும் இனத்துரோகியாக்குவது நியாயமா ? 
இது பரவாயில்லை ,அடுத்ததைப் பார்க்கும் போது >>>

8 August 2016

சர்க்கரை நோய் கெடுதல் ,அதிலும் ஒரு நல்லதா :)

சர்க்கரை நோய் கெடுதல் ,அதிலும் ஒரு நல்லதா  :)              
            ''நெஞ்சு வலியால் யாராவது துடிப்பதைப் பார்த்தால்  கஷ்டமாயிருக்கு ...நல்ல வேளை,எனக்கு நெஞ்சு வலி தெரிய வாய்ப்பே இல்லை ''
              ''ஏன் ?''
              ''நாட்பட்ட சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நெஞ்சு வலியே தெரியாதாமே !''

போதையில் கூட நல்ல காரியம் :)
               ''மதுவுக்கு எதிரான போராட்டம் செய்ய ,அனுமதி தரணும்னு .டாஸ்மாக் மேனேஜர் நீங்களே ஏன் சொல்றீங்க ?''
               ''கூட்டம் சேர்ந்தாலே  சரக்கு ரெண்டு மடங்கு விற்குதே  !''

பூஜை நேரத்தில் நடிகை பெயர் சொல்லலாமா :)
           '' புதுமுக கவர்ச்சி நடிகை தன்னோடபேரை மாற்றிக்கணும்னு அர்ச்சகர்கள் போராட்டம் பண்றாங்களே ,ஏன் ?''
            ''சமர்ப்பியாமி ..ங்கிறது அவங்களோட பெயராச்சே !''

தலைவர் 'வண்டு முருகனின் 'வாரிசா ?
           ''வரலாறு தெரியாமே தலைவர் உளறிக் கொட்டி மதப் பிரச்சினையை உண்டாக்கி விடுவார் போலிருக்கா  ,எப்படி ?''
        '' பாண்டவர்களின் பாரம்பரியத்தில் வந்தவரை  போப்''பாண்டவர் ' ஆக நியமனம் செய்யணும்னு அறிக்கை வெளியிட்டு இருக்காரே !''

வேகம் விவேகமல்ல ,அதுக்காக இப்படியா ?
முயலையும்  வெல்லலாம் ஆமை ...
ஆனால் ...அரசின் கோப்பிடம் தோற்றுப் போகும் !

7 August 2016

ஜூலிபுளோரான்னா இனிமைதான் ,ஆனால் வலி :)

சிரிக்கலைன்னாலும்   குற்றம்  , சிரித்தாலுமா :)       
           ''துன்பம் வரும் வேளையில் சிரிக்கணும்னு பெண்டாட்டிகிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன்  ?''
            ''நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் சிரிக்கிறாளே !''
 குடும்ப 'மனநல 'மருத்துவர் என்று  சொல்லக்கூடாதோ :)
               ''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டு,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
              ''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க பேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து பாருங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''

ஜூலிபுளோரான்னா  இனிமைதான்  ,ஆனால்  வலி :)
              ''ஜூலிபுளோரா குத்தின இடத்தில் இருந்து ரத்தம் கொட்டுதுன்னு சொல்றீங்களே ,அது யார் உங்க மனைவியா ?''
             ''அட நீங்க வேற ,சீமைக் கருவேல மரத்தின் விஞ்ஞான பெயர்தான் அது !''

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் போராட்டம் !
          ''ரயில் போறவரைக்கும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் ,இப்போ ரயிலுங்க வரிசையா நிற்குதே ,ஏன் ?''
           ''கேட் கீப்பர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  ரயில் நிறுத்தும் போராட்டம் பண்றாங்களாம் !''

தாய் மனம் பூவினும் மெல்லியதா ?
   குரங்கு கூட ஈன்ற பின்னும்  தன் குட்டியை 
  தன்னுடனே சுமந்துக் கொண்டே திரிகிறது ...
  இதைப் பார்த்தபின்பும் பிறந்த சிசுவை குப்பையில் வீச 
  சில  'நாய் 'மார்களுக்கு எப்படி  மனசு வருகிறதோ ?

6 August 2016

கேரளக் குட்டியை மணந்ததால் வந்த குழப்பமோ :)

  துட்டை எவன் கொடுப்பான் :)           
                    ''இந்த சேலை, பார்டரில் மாங்காய் டிசைன் கொடுத்துள்ளார்கள்,சேலைக்கு மேட்சிங்கா ஜாக்கெட் பிட் கொடுத்துள்ளார்கள் ,சிகப்பு பார்டருக்கு ரோஸ் பாடி கலரை கொடுத்துள்ளார்கள் ...இப்படி வர்ற டி வி விளம்பரத்தைப் பார்த்து  ஏன் சிரிக்கிறீங்க ?''
              '' இதை வாங்க ,யாருக்கு யார்  காசைக்  கொடுத்துள்ளார்கள்  என்பதையும் சொன்னால் சரியாக இருக்குமே !''
                                                        
அகலக்கால் வைச்சா  சிக்கல்தான் :) 
            ''ஓடுற பஸ்ஸிலே ,கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
            ''அகலக்கால் வைச்சு, டிக்கெட் கிழிச்சு கொடுத்திருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும் வாங்கி போட்டுகிட்டாராமே!''

இவருக்கு பேய் பயம் இருக்கும் போலிருக்கே !
           ''என்னங்க ,இந்த லாட்ஜிலே அறைகள் சுத்தமாத் தானே இருக்கு ...ஏன் இங்கே தங்க வேண்டாம்னு சொல்றீங்க ?''
           ''எல்லா அறைகளிலும் சீலிங் ஃபேன்களைக் கழற்றிவிட்டு பெடஸ்டல் ஃபேன்களை மாட்டி இருக்கிறதைப் பார்த்தால்,விபரீதமா ஏதோ நடந்த மாதிரி தோணுதே !''

கேரளக் குட்டியை மணந்ததால் வந்த குழப்பம் !
        ''நான்  காதலிச்சு  கல்யாணம் செய்துக்கிட்டது  ,என் பையன் மூலமா  தெரிஞ்சதா, எப்படி?''
        ''அவன்  ,மலையாளம்  என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு பயோ டேட்டாவிலே எழுதி இருக்கானே !''

தனிக் குடித்தனம் போகத் தடுக்கும் தாய்ப் பாசம் !
        திருமணமானவுடன் ஆணின் வாழ்க்கை ...
         வால் கிளாக் பெண்டுலம் போல் 
        அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைகிறது ...
        இரு பெண்மணிகளின் தயவால் !

5 August 2016

ஒண்ணு கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு :)

கற்புக்கோர் கண்ணகி செய்தது சரியா :)       
             ''என்னைப் போலவே என் பையனும் அரசியல்வாதியா வருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
             ''நியாயம் தவறிய பாண்டியனின்  கொடும்பாவியை  கண்ணகி எரித்து இருக்கலாம்  ,மதுரையை  எரித்தது எப்படி நியாயமாகும்னு கேட்கிறானே !''

ஐம்புலனும்  போனால் ஆம்புலன்ஸ் :)
         ''ஐம்புலனை  அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
         ''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான்  வந்தது !''

ஒண்ணு  கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு :)
           '' தொழில்  தொடங்க ,நீங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே 
இல்லையேன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
            ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலையேன்னு கேட்கிறார் !''

பொண்ணு பிடிக்கலைன்னு இப்பவா சொல்றது ?
                ''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன் சோகமாவே இருக்கீங்க ?''
                ''பொண்ணு பிடிச்சிருக்கான்னு  இப்பக்கூட  யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''

ஒட்டாக் காதல் என்பது இதுதானா ?
        தழுவவந்த பனித்துளியை 
        நழுவவிட்டது தாமரைமுகம் 
        தாமரை இலைத் துளி !

4 August 2016

ஜொள்ளு விடவுமா ரயிலை நிறுத்துவது :)


எழுத்தாளனை  இப்படியா அவமானப் படுத்துவது :)
             ''மனைவியுடன்  பாத்திரக் கடைக்கு  ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
             ''பாத்திரத்திலே பெயரை வெட்டுகிறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், ,நீங்க பக்கம் பக்கமா எழுதி என்ன   பிரயோசனம்னு  குத்திக் காட்டுறாளே !''

நீதி தேவதை சிலை சொல்லும் நீதி :)
               ''ரெண்டு பக்க நியாயத்தையும் ஆராய்ந்து தீர்ப்பு  சொல்லணும்னு  நீதிதேவதையின் வலது கை  தராசு சொல்லுது சரி  , இடது கையிலே   இருக்கிற கூர் வாள் என்ன  சொல்லுது ?''
               ''நியாயமா தீர்ப்பு சொல்முடியலைன்னா குத்திகிட்டு செத்துப் போயிடணும்னுதான் !''

ஜொள்ளு விடவுமா ரயிலை நிறுத்துவது :)
         ''இந்த ஆற்றுப் பாலம் மேல் புதுசா ரயில் விட்டாங்க சரி ,கீழே ஆத்துலே பொம்பளைங்க குளிக்கத்  தடையாமே , ஏன்?''
        ''ரயில் இங்கே வரும் போது,ஜொள்ளுப் பார்ட்டிங்க  அடிக்கடி செயினை இழுத்து நிறுத்தி விடுகிறாங்களாமே !''

படித்த டாக்டர்களே சூது செய்யலாமா :)
        பெரும்பாலான கொள்ளைக்காரர்களுக்கு 
       முன் எச்சரிக்கையோடு கொள்ளை அடிக்கத் தெரியவில்லை !
       ஒருசிலர்தான் டாக்டர்களைப்போல் 
       முகமூடி ,கையுறை அணிந்து கொள்ளை அடிக்கிறார்கள் !

3 August 2016

என்றும் 16 நடிகை :)

இதுவும் சரிதானே :)
            ''பத்து பவுனைக் கொள்ளை அடிச்சிட்டு ,வெள்ளைப் பேப்பரில்   கையெழுத்து கேட்கிறீயே ,ஏன் ?''
             ''போலீஸ் புகாரில் ,கொள்ளைப் போனது நூறு  பவுன்னு சொல்லிடக் கூடாதில்லே ,அதுக்குத்தான் !'' 

இப்படியும் சில பிரபலங்கள்  :)              
         ''உங்க அருமை பெருமைகளை , மேடையில்  அறிமுகம் செய்தவருக்கு நீங்க ஒரு நன்றி சொல்லக் கூடாதா ?''
         ''அதை எழுதிக் கொடுத்ததே நான்தான் ,தற்பெருமை எனக்கு பிடிக்காதே !''

நியாயமான போராட்டம்தானே :)               
             ' 'உத்தம வில்லன் 'பட ரிலீஸ் தேதியை மாற்றச் சொல்லி போராட்டமா ,ஏன் ?''
             '' அக்டோபர்  2ல் ரிலீஸாம்,அது உத்தமர் காந்தி பிறந்த நாளாச்சே !''

என்றும் 16  நடிகை :)
             ' 'பேரன் பேத்தியைப் பார்த்த  அந்த நடிகை ,வரப்போறது  தன்னோட  பதினாறாவது பிறந்த நாள்னு  அடிச்சுச் சொல்றாரே ,எப்படி ?''
            ''பிப்ரவரி 29ல் பிறந்ததால் நாலு வருசத்துக்கு ஒருமுறைதானே பிறந்த நாள் வருது ?''
சைட் அடிக்கும் இடம் இதுவல்ல !
     பெண் பாடகி ,சபா கச்சேரியில் ...
     உச்ச ஸ்தாயியில் பாடும்போது 
    'பார்க்கச் சகிக்கலே 'என்பவன் ...
     ரசனைக் கெட்ட ஜென்மம் !

2 August 2016

ஒருவனுக்கு ஒருத்தி ,போதும் /போதாது /அதுவும் எதுக்கு :)

வரதட்சணை  தராவிட்டால் இப்படியுமா :)            
               ''உங்க மனைவியை ஏன் உண்மையான 'தர்ம 'பத்தினின்னு சொல்றீங்க ?''
                ''அவங்கப்பா ,பொண்ணைத் தவிர வேறெதையும் தர மாட்டேன்னு கையை விரிச்சிட்டாரே !'' 

கறக்கத்  தெரிந்தவனே  கெட்டிக்காரன் :) 
              ''கடன்காரங்ககிட்டே இருந்து அசலைக் கூட 'கறந்து 'வாங்க முடியலேன்னு ,பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
              ''ஏன் இப்படி கேட்குறீங்க ?''
              ''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேட்குறீங்களே !''

நாய் ,காலைக் கடிக்காமல் விடுமா ?
          ''நான் எந்த தொழிலைச் செய்தாலும் கையைக் கடிக்கிறது,அடுத்து என்ன செய்றதுன்னு புரியலே !''
           ''நாய் வியாபாரம் பண்ணிப் பாருங்க !''

மிஸ்ஸை சரியாய் கணக்கு போட்டிருக்கானே !
          ''இந்த காசை அமிலத்தில் போட்டா ,கரைஞ்சிரும்னு எப்படி சரியா கண்டுபிடிச்சே ?''
         '' செல்லாத நாலணாவைப் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன் ,மேடம் !''

ஒருவனுக்கு ஒருத்தி ..போதும் /போதாது /அதுவும் எதுக்கு :)
           கிருஷ்ணர் பாமா ,ருக்மணியை மணந்திருந்தாலும் ...
           ஒருவனுக்கு ஒருத்தி 'நமது பண்பாடு என்பதால் 
           கிருஷ்ணாயில் ,பாமாயில் என்று மட்டுமே 
           பெயர் வைத்துப் போற்றுகிறார்கள் !

1 August 2016

பிறந்த நாளைக் கொண்டாட பணம் இருந்தால் போதுமா :)

இது உண்மையா ,இல்லையா :)           
            '' அர்ச்சகரிடம்  என்ன  கேட்கணும்னு  நினைக்கறே ?''
             ''சாமி பக்கத்திலேயே இருக்கிற நீங்க  சாமி ஆட மாட்டேங்கிறீங்க  ,ஆனா ,கோவிலுக்கு  ஒண்ணரை மைல் தூரத்தில் வரும் போதே கருப்பாயி  சாமி ஆட ஆரம்பித்து விடுகிறாரே  ,எப்படின்னுதான் !''

விட மனசில்லை என்றாலும் :)         
         ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்வாங்க ,நீங்க எதை விட்டீங்க?''
        '' என் பல் செட்டை விட்டுட்டு வந்தேன், குளிக்கும் போது அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

பெண்டாட்டின்னா இந்த பயம் இருக்கணும் !
              ''தக்காளி விக்கிற விலையிலே குப்பையிலே போடுறீங்களே ,ஏன் சார் ?''
               ''அதெல்லாம் உடைஞ்ச தக்காளி .... நல்ல தக்காளி மட்டும் பொறுக்கி எடுத்தால் கடைக்காரனுக்கு பிடிக்கலே ,உடைஞ்ச தக்காளியை கொண்டு போனா பெண்டாட்டிக்குப் பிடிக்கலே ,அதான் !''

 வயசுப் பிள்ளைங்களை பூட்டி வைக்க முடியுமா ?
               ''என்னங்க ,காணாமப் போன நம்ம பையன் போன்லே என்ன சொன்னான் ?''
              ''பிரியாவை தேட வேண்டாம்னு பக்கத்து வீட்டிலே போய் சொல்லச் சொல்றான் !'

 பிறந்த நாளைக் கொண்டாட பணம் இருந்தால்  போதுமா :) 
இறந்தபின்னும் நம் பிறந்தநாளைக் கொண்டாடவும் 
நாலு பேர்கள்  இருக்கிறார்கள் என்றால் ...
இன்று நாம் ,நம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது !
அசையும் படம் தந்த ஈகரைக்கு நன்றி !