30 November 2016

மீனா என்றால் பிடிக்கும்,அமீனாவைப் பிடிக்குமா :)

ஆமைப் புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாதா :)
         ''செய்ற வேலையை சொல்லிக்கக் கூட முடியலையா ,ஏன் ?''
         ''அமீனா வேலைன்னு சொன்னா , எங்க  வீட்டுப் பக்கமே வராதேன்னு எல்லோரும் சொல்றாங்களே !''
சாம்பிள் டீ கொடுத்தது ,இதற்குதானா :)
       ''வேலைக்காரி பிளாஸ்க்கில் கொண்டு வந்து கொடுத்த  டீயைக்  குடிச்சிட்டு,வேலைக்காரியை   ஏன் நிறுத்திட்டே ?''
       ''நான் எப்பவும் இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் பழக்கம்னு சொல்றாளே !''

குழியும் பறித்து தள்ளியும் விடலாமா :)
         ''உங்க மனைவி , மாவு பாக்கெட் தானே வாங்கி வரச் சொல்றாங்க ,ஏன் முடியவே முடியாதுன்னு சொல்றீங்க ?''
         ''வாங்கிட்டுப் போகலாம்  ,நீங்களா வந்து தோசை சுட்டுத் தருவீங்க ?''

இதுக்கு கொசுக்கடியே தேவலையா :)
     கடிக்கின்ற நிஜக் கொசுவை அடித்து விட முடிகிறது ...
     கடிப்பதுபோல் உணர்வு  தரும் மனக் கொசுவை எப்படி துரத்துவது ?

29 November 2016

டைவர்ஸ்,அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா :)

கணவரின் தப்பைக் கண்டுக்காம விட முடியுமா :)
          ''டாக்டர் ,என் வீட்டுக்காரர்  கடந்த ஒரு மாசமா ,அரிசியில் கிடக்கிற கல்லை மட்டும் பொறுக்கி தின்கிறார் !''
         '' முன்னாடியே  ஏன் கூட்டிட்டு  வரலே ?''
          ''ஐம்பது கிலோ மூடையாச்சே ,தின்னு முடியட்டும்னு இருந்தேன்  டாக்டர்  !''    

சுயநலமில்லா விருந்தாளிகளாய் ஆனது ,ஏன் :)
          ''சர்க்கரை நோயாளிகள்  பெருகிட்டாங்கன்னு  டாக்டர்கள் சொன்னப்போ கூட  நம்பமுடியலே ,விருந்து பரிமாறுகிறவர் சொல்லும் போது நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
           ''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லி இப்போ யாருமே சொல்றதில்லையாம் !''

டைவர்ஸ், அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா :)
         ''அதிர்சசியான  செய்தியைச் சொன்னால் விக்கல்  நின்னுடும்னு மனைவியிடம் ,உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
          ''விக்கல் நின்றதா ?''
          ''விக்கல் நின்னுடுச்சு ,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !''

                                           
தணிக்கையா ? தனியா  கையிலேயா :)
              "வர வர சினிமாவிலே ஆபாசம் அதிகம் ஆகுது ,தணிக்கை பண்றாங்களா இல்லையா ?"
              " அதுக்கு  தனியா கையை நீட்டி வாங்கிக்கிட்டு பண்றாங்களோ என்னவோ ?"
             
அதை இப்ப நினைத்தாலும் உடம்பு கூசும் :)
  மாறும் உலகில் மாறாதிருப்பது .......
  கரப்பான் பூச்சியும் ,
  அது உடலில் ஊர்ந்தால் ஏற்படும் கூச்சமும் !

28 November 2016

INBOX திறந்து பார்க்காதவன்,வேறெதைப் பார்க்கப் போறான் :)

         ''Congratulations! You've read all the important messages in your inbox..இந்த வாசகத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோணுது ?''
        ''ஜி மெயில் கணக்கு வச்சுருக்கிறவங்க பெரும்பாலோர் சோம்பேறின்னுதான் !''

இவர் வாய்ஜாலம் மனைவியிடம் பலிக்குமா :)
               ''பிரபலமான tv தொகுப்பாளருக்கு ,யாருமே பொண்ணு தர மாட்டேங்கிறார்களாமே,ஏன்  !''
                ''பெண்டாட்டியிடமும்   கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்து எடுத்து விடுவார்ங்கிற பயம்தான் !''
    (குறிப்பு...படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை )
சொல்றதுக்கு  நல்லாவா இருக்கும் :)
             ''பத்து வீடு பார்த்ததில் நடுத்  தெருவிலே இருக்கிற வீடு நல்லாயிருக்கே ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''
             ''நடுத்  தெருவிலே இருக்கேன்னு சொன்னா ,எல்லோரும்  சிரிப்பாங்களே !''

வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி :)
               ''ஆபீசுக்கு போகும்போது ,வெங்காய வெடியை ஏண்டா என் கையிலே கொடுக்கிறே ?''
               ''புதுசா வந்த மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்கதானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

இதுவும் பழிக்கு பழியா :)
     ''usa முன்னாள் அதிபர் புஷ் 'தன் நாய்க்கு இந்தியான்னு பேர் வைச்சு இருந்தாராமே?''
             ''நம்ம ஊர்லே பாதி நாய்களை ,ஜிம்மி ஜிம்மின்னு சொல்றது அவருக்கு தெரிஞ்சு இருக்கும்!ஜிம்மி கார்ட்டரும் usa 
முன்னாள் அதிபரோட பேர் ஆச்சே!'' 

திருமண அகழி !
மதில்மேல் பூனையைவிட 
அகழியில் விழுந்த பூனையே male !

அன்று ஆனுக்கு 17,ஜானுக்கு 21... இன்றுவரை ஜாலிதான் :)
 ஓடிப்  போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று நம்ம ஊர் இளசுகள் இப்போதுதான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ...
1932லேயே ஓடிப்போய் மோதிரம் மாற்றிக்   கொண்டுள்ளார்கள்  ...
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ,ஆன் தம்பதியர்  !
பாரம்பரியம் மிக்க  நம்ம பாரதத்தில் ...
கள்ளக்காதல் ,கணவன் கொலை ,மனைவி கொலை ,காதலன் கொலை ,காதலி கொலை என்று தினசரி கொலை கொலையா பார்த்துக் கொண்டிருக்கிறோம் ...
உன் குழந்தைகள் ,என் குழந்தைகள் ,நம் குழந்தைகளுடன்  விளையாடிக் கொண்டிருக்கின்றன என்று தாம்பத்திய வாழ்க்கைக்கு அற்புத விளக்கம் சொன்ன 
அமெரிக்காவில்தான் ...
ஜான் ,ஆன் தம்பதியர் தங்களின் 81வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர் ...
ஜானுக்கு வயது 102 ஆனுக்கு வயது 98...
மூத்த மகளுக்கு வயது 80...
பேரப் பிள்ளைகள் 14,கொள்ளுப் பேரப் பிள்ளைகள் 16ம் அவர்களுக்கு உள்ளதாம் ...
நல்ல வேளை ,இவர்கள் இந்தியாவில் இல்லாமல் போனார்கள் ...
இருந்திருந்தால்  தனியாக பள்ளிக்கூடம் வைக்கும் அளவிற்கு வாரிசுகள் எண்ணிக்கை கூடியிருக்கும் ...
காதலர் தினத்தன்று இவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும்இளைஞர்கள்எண்ணிக்கை 
கூடிக்கொண்டே வருகிறதாம் ...
ஆனால் ,டைவர்ஸ் செய்யாமல் வாழ்வோர் எண்ணிக்கைதான்  தெரியவில்லை !       

27 November 2016

பேய், துணிகளை வெள்ளாவி வைச்சு துவைக்குமா :)

      ''பேயைப் பார்த்து ஒரு ரகசியத்தைத்  தெரிஞ்சிக்கணுமா,அதென்ன ரகசியம் ?''
      ''உன்  உடை எப்போதும் வெண்மையாக பளிச்சிடும் ரகசியம் என்னான்னுதான்  !''
 உயிரோடு இருக்கும் வரை செலவுதானே :)            
        ''அரிசி மூட்டை இப்போதான் வாங்கின மாதிரியிருக்கு ,அதுக்குள்ளே தீர்ந்து போயிருச்சா ?''
         ''என்னங்க செய்றது ,வாய்க்கரிசி  விழுகிற வரைக்கும் வயிற்றிலே  விழுந்து கிட்டேதானே  இருக்கே !''
                                                 
இதென்ன  36'' 24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு :)
            ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
            ''டியூப் லைட்டைக் கூட இன்ச் டேப்பிலே அளந்து வாங்குவானே!''

பாரத ரத்னா வாங்கினால் நடிகை மார்க்கெட் போயிடுமா :)
           '' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா  ?''
            ''சம்பாதிக்கவேண்டிய வயசுலே பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''

பார் இல்லா பாருலகம் உண்டா:)
    ''நீரின்றி அமையாது உலகுன்னு பாடிய வள்ளுவர் இன்னைக்கு வந்தா என்ன பாடுவார்?''
  '  'பார் 'இன்றி அமையாது  உலகுன்னுதான்  !''

கால் வைத்தாலே கலவரம் !
      நீதி கேட்டு நீண்ட பயணம் ...
      பயண  வழியில் விழுந்தது நூறு பிணம் ...
      தலைவர்  முடித்துக் கொண்டார் ...
      பயண  இலக்கை அடைந்துவிட்டோம் என்று !

26 November 2016

பேஷன்ட் ஜொள்ளு பார்ட்டி போலிருக்கு:)

 கைமாத்து கேட்கிறவன்கிட்டே இனி தப்பிக்க முடியாதோ :)
     ''கையிலே காசில்லேன்னு சொல்றேன், ஏன் நம்ப மாட்டேங்கிறே ?''
     ''வங்கி  விரல்லே இப்ப வச்ச மை ,நீ பொய்  சொல்றேன்னு சொல்லுதே !''

அந்த வேகத்தை விட இந்த வேகம் அதிகமாயிருக்கே :)
          ''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில்  வந்திருதே !''
          ''மருந்து சாப்பிட நோயைக் கொடுத்த ஃபாஸ்ட் புட் ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !
அகலக்              கால் வைக்கிறது  ஆபத்துதானே :)
           ''கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
           ''அகலக்கால் வைச்சு டிக்கெட்  கொடுத்து இருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும் வாங்கி  வாங்கிப் போட்டுகிட்டாரே ? ''

பேஷன்ட் ஜொள்ளு பார்ட்டி போலிருக்கு:)
        ''சுகரை கண்ணாலே கூட பார்க்கக்கூடாதுன்னு சொன்னா, சந்தோசமா சரின்னு சொல்றீங்களே,எப்படி?''
         ''நல்லவேளை , ஃபிகரை பார்க்கக்கூடாதுன்னு சொல்லலேயே ,டாக்டர் !''

தம்பதிகளை பணம் படுத்தும் பாடு :)
    ஜோடிப் பொருத்தப் போட்டி ...
    வென்ற பணத்தை பங்கு போடுவதில் வந்தது ...
    தம்பதிகளுக்குள் டைவர்ஸ் ! 

25 November 2016

அனுஷ்கா ,அன்று கொடுத்ததும் இன்று கெடுப்பதும் :)

டேய் டேய் இது அநியாயம்டா :)      
        ''உங்க கடையிலே தீபாவளிக்கு எடுத்த சேலை சாயம் போகுதே ,வேற கொடுங்க !'' 
       ''அரசாங்கம் போட்ட  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுலேயே சாயம் போவுதாம் ,சேலையத் தூக்கிட்டு வர்றீங்களே !''

நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் :)
         ' 'கல்யாண ஆல்பத்தில் உள்ள எல்லா போட்டோக்களிலும்   சிரிச்சுக்கிட்டு இருக்கிற புது மாப்பிள்ளை ,ஒரு போட்டோவில் மட்டும் முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''
         ''அதில் , நிற்கிறவங்க எல்லோரும் நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !'' 

மருமகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா :)
          ''சாரி  ,நான் எறிந்த ரப்பர் பால்தான்  உங்க மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய் கொடுக்கிறீங்க  !''
          ''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''

அனுஷ்கா ,அன்று  கொடுத்ததும் இன்று கெடுப்பதும் :)
          ''யோகா  செஞ்சா  நல்லா  தூக்கம்  வருமாமே  ,உண்மையா?''
          ''உண்மைதான்!  யோகா டீச்சரா  இருந்த அனுஷ்கா தூக்கத்தை  கொடுத்தாங்க ! இப்போ ,நடிகை ஆகி  தூக்கத்தைக் கெடுக்கிறாங்களே!''
ரோஜாக்கள் ஜாக்கிரதை :)
         ரோஜாவை முத்தமிடாதே ....
         உன் தாடி முள் குத்தி விடலாம் !
     
ஆக்கிரமிப்பு நடப்பதன் காரணம் இதுதானா ?
வருடத்தில் ஒருநாள் ....
 சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் அனைத்தும் ...
பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி இழுத்து மூடப் படுமாம்  ...
நீதிபதிகள் ,வக்கீல்கள் யாரும் வராததாலா ...
இல்லை, கோர்ட் புறக்கணிப்பா ...
இரண்டுமே காரணமில்லை !
அன்றைய தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்களாம் ...
கோர்ட் வளாகத்திலோ ,கட்டிடத்திலோ யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதற்குரிய பதிவேடுகளில் கையெழுத்து இடுவார்களாம் ...
எதற்காக இந்த பதிவு ?
       ஒரு சொத்துக்குச் சொந்தக் காரரின் விருப்பத்துக்கு எதிராக ,யாரேனும் ஒருவர் அச்சொத்தை 1 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்தால் ,அச்சொத்து தனக்கேஉரியதென்று நீதி மன்றத்தில் வாதாட முடியுமாம் !
நீதிமன்றத்திற்கே இந்த கதி என்றால் ...
பொதுமக்களின் சொத்துக்கு என்ன உத்தரவாதம் ?

24 November 2016

மொய்க்கும் வந்தாச்சு பணம் செலுத்தும் கருவி :)

             ''மொய்யை  நோட்டுலேதானே எழுதிக்குவாங்க , புதுசா ஒரு மெசினை வைச்சிருக்கீங்களே,எதுக்கு ?''
            ''கையிலே பணம் இல்லேன்னு சொல்றவங்ககிட்டே இருந்து   'ஸ்வைப்பிங் மெசின் ' மூலமா  மொய்யை வாங்கிக்கத் தான் !''
எல்லோருக்கும் வருமா ஞானம் :)  
        ''ஐம்புலனை  அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
        ''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான்  வந்தது !''

தரகர் சொல்வதைக் கவனமா கேட்கணும் :)
         ''யோவ் தரகரே ,பொண்ணு குண்டா இருக்கும்னு முன்னாடியே ஏன் சொல்லலே ?''
         ''சேலையை  கட்டிவந்தாலே தாவணியில் வர்ற மாதிரி இருக்கும்னு  சொன்னேனே !''
        
   ஆசை ,அவதியாய் ஆனதேன் :)    
         ''வர வர உன் வீட்டுக்காரருக்கு  கிண்டல் அதிகமா போச்சா  ,ஏண்டீ?''
          ''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !''

புதிரான கவிதையா அவள்:)
    பாரசீக கவிதை போல் ...
    விழிகளில் தெரிகிறாய் நீ !
    உன் விழிகள் மொழிப் பெயர்த்தால்  அல்லவா 
    கவிதை எனக்கு  புரியும் ?

23 November 2016

காதலுக்கு ஏது இடம் பொருள் ஏவல் :)

             ''பழைய ரூபாய் நோட்டை மாற்ற வங்கி வரிசையில் நிற்கும்போதே, இருவருக்கு இடையில்  காதல்  பூத்திருச்சாமே ?''
             ''பெற்றவங்க பணத்தை மாற்றிட்டு வரச் சொன்னா,இவங்க மாலையை மாற்றிக்கிட்டு போவாங்க போலிருக்கே !''
              (இதோ, இவங்கதான் அந்த வங்கி வரிசை காதல் ஜோடி )
மகளின் வருத்தம் நியாயம்தானே :)      
        ''இங்கிலீஷ்  தெரியலைன்னா சும்மா இருங்கப்பா !''
         ''நான் என்னா தப்பா  சொல்லிட்டேன் ?''
        '' நான் அபார்ட்மெண்டுக்கு குடி போனதை ,அபார்சனுக்கு போயிட்டதா சொல்லி இருக்கீங்களே !''

உடனே பிள்ளைப் பேறு ,பாட்டிக்குக் கேடு :)
            ''எனக்கு இப்போ பிள்ளைப் பெத்துக்க இஷ்டமே இல்லைடீ ,என் மாமியாருக்காக  உடனே பெத்துக்க வேண்டி இருக்கு !''
            ''மாமியார் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ?''
            ''அட நீ வேற ,பேரப் பிள்ளையைப் பார்த்த பிறகுதான் கண்ணை மூடுவேன்னு அந்தக் கிழம் சொல்லுதே !''

மனைவியின் குரலுக்கு மரியாதை:)
             ''என்னங்க ,என் குரல்லே நடுக்கம் இருக்குன்னு  பாட்டுப் போட்டியிலே இருந்து நீக்கிட்டாங்க!''
             ''நம்பவே முடியலையே .நடுங்க  வைக்கிற உன் குரல்லேயும் நடுக்கமா ?''

தலைவருக்கு பிடித்த ராகம் :)
           ''தலைவரை பேட்டி கண்ட நிருபர்கள்  எதுக்கு சிரிக்கிறாங்க ?''
            ' 'ராகத்தில்  தனக்கு அதிகம் பிடித்தது செஞ் 'சுருட்டி'ன்னு  சொன்னாராம் !''

தொடக்கத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி:)
பிரசவம் என்றவன் தீர்க்கதரிசி...
பிரசவத்தில் வந்தோர் எல்லாம் 
பிறகு சவமாய் போவதால்!

22 November 2016

புருஷனின் தவிப்புக்கு காரணம் புரியுதா :)

             ''என்னங்க ,பக்கத்து வீட்டுக்காரன் பெண்டாட்டி கூட, அவரோட  புருஷன் வீட்டுக்கு வரலையேன்னு கவலைப் படலே ,நீங்க ஏன் கிடந்து தவிக்கிறீங்க ?''
            ''அவர் வந்தாதானே 'ஓபன் ஃவை பை ' ஆன் ஆகுது ?''

 பிடித்ததை தருவது நல்லதுதானே :)
           ''என்ன சொல்கிறீர்கள்  அமைச்சரே ,பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரியவில்லையே ?''
            ''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''

வடிவேலு ..புண்ணாக்கு ஆன புலிகேசியா :)
          ''நம்ம வடிவேலு சுயசரிதை எழுதினா ,புண்ணாக்கு ஆன புலிகேசின்னு தலைப்பு  வைக்கலாமா ,ஏன்?''
           ''சினிமாவில்  உச்சத்தில் இருக்கும்போது 'புலிகேசிஆன புண்ணாக்கு 'ன்னு  தொடர் எழுதியிருக்காரே அவர்  !''

எல்லோர் கண்ணிலும் வந்தால் அது 'மெட்ராஸ் ஐ ':)
          நான்கு விழிகள் சந்தித்த கணத்திலேயே  பற்றிக் 
         'கொல்லும் 'தொற்று நோயா ...காதல் ?

நேற்றைய ,சீரியஸ் கதையின் தொடர்ச்சி .......
படித்தால் மட்டும் போதுமா ?

21 November 2016

மனைவியிடம் பிடி கொடுக்க விரும்பாத கணவன் :)

                 ''என்னங்க ,அந்த தைலத்தை  வழுக்கைத் தலையிலே தேய்த்தால்  முடி வளருதாமே ,ஏன் வாங்க மாட்டேங்கிறீங்க ?''
                ''உன் கைக்கு பயந்துதான் !''

இந்த மாதிரி சொல்லும், நாளும் வருமோ :)
            ''இந்த ரேஷன் கடையிலே உப்பு பாக்கெட் கட்டாயமா வாங்கியே ஆகணும்னு சொல்றாங்களே ,நியாயமா ?''
            ''அட நீங்க வேற ,டாஸ்மாக்  சரக்கை வாங்கியே ஆகணும்னு சொல்லாம விட்டாங்களே சந்தோசப் படுங்க !'' 
அப்பனே ,வயசுப் பொண்ணுக்கு தடை போடலாமா :)
             ''நான் ஆசை ஆசையா வாங்கிவந்த ஊதா கலர் ரிப்பனை சடையிலே போட்டுக்க தடை போடுறீங்களே ,ஏம்ப்பா ?''
              ''கண்ட கண்ட காலிப் பசங்க 'யார் உனக்கு அப்பன் 'ன்னு  மரியாதை இல்லாமே என்னை கிண்டல் பண்ணுவாங்களே !''

இரண்டு தொழிலும் இரண்டு கண்ணு மாதிரி :)
             ''கல்யாண தரகர் வெல்டிங் பட்டறையும் வைச்சுக்கிட்டு இருக்கார் போலிருக்கா ,ஏன் ?''
             ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''

பழமொழி சொன்னவன் தீர்க்கதரிசி :)
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு ...
திராவிடத் தலைவர்களுக்காவே சொல்லப் பட்டதா?
இந்த சந்தேகம் ஏனென்றால்....
மாநிலத்துக்கு நன்மையோ இல்லையோ ...
தங்களுக்கு  பொன் முட்டையிடும் இலாகாவை மட்டும் வளைத்துக் கொண்டு விடுகிறார்களே !

கடந்த மூன்று தினங்களாக 'சிரி'கதை படிச்சு ரசித்தீர்கள் (?),ஒரு  மாறுதலுக்கு ஒரு 'சீரியஸ் 'கதையையும் படிக்கலாமே :)

இதற்கு  மணி அய்யா சொன்ன பதிலை நாளைப் பார்க்கலாமா ?

20 November 2016

ஏகப் (பட்ட) பத்தினி விரதனா :)

 இவர்  ,மன்னன்  பட விஜயசாந்தியின்  நிஜ  வடிவமோ :)       
             ''அந்த  கோடீஸ்வரி பெண் தொழில் அதிபர்  பிரசவத்தை  ,ஏன் வீட்டிலேயே  செய்துக்க நினைக்கிறார்  ?''
           ''அவர் தகுதிக்கு 'லேபர் 'வார்டில்  பிள்ளை பெத்துக்க மாட்டாராம் !''
திருடர்கள் ஜாக்கிரதை  என்பதை இப்படியும் சொல்லலாமோ :)             
         ''அந்த நகைக் கடை அதிபர் நாத்திகவாதி போலிருக்கா ,ஏன் ?''
          ''கடவுள் உங்களைப்  பார்க்கிறாரோ இல்லையோ ,நாங்கள்  சி சி டி வி  மூலம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்னு எழுதிப் போட்டிருக்காரே !''

ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் :)
                ''விதவை  என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லி கேவலப்படுத்தும் ஆணாதிக்க சமூகமே ,விதவைக்கு  எதிர்ப்பதமாக  ஆண்பாற் சொல்கூட இல்லையே என்று வருத்தப் படுகிறேன் 'என்று பேசிவிட்டு  அமர்ந்திருக்கும் எதிர் அணிதலைவியைப்   பார்த்து கேட்கிறேன் ...பத்தினி என்பதற்கு எதிர்ப்பதமாக எந்த ஒற்றைச்  சொல்லும் இல்லை என்பதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோமா ?''

 தந்தைக்கு மரியாதை !
     உயிரோடு 
     இருந்தவரை 
     'ஏசி 'ய பிள்ளைகள் ...
     இறந்தவரை வைத்தார்கள் 
     AC பெட்டியில் !

நேற்றைய 'சிரி'கதையின் தொடர்ச்சி மட்டுமல்ல ,முடிவும்கூட ......
கேட்காத காதும் கேட்கும்:)

19 November 2016

உறவிலே முடித்ததால் உண்டான பிரச்சினை :)

மூணு  சக்கரத்துக்கே டிரைவர் இருக்காரே :)
               ''டிரைவர் இல்லாத பஸ் ஓட சாத்தியம் இல்லேன்னு ஏன் சொல்றே ?''
               '' ஆட்டோன்னு சொல்றாங்க ,அதுக்கே ஒரு டிரைவர் இருக்காரே !''

  உறவிலே முடித்ததால் உண்டான பிரச்சினை :)
             ''உறவிலே திருமணம்னா ,பின்னாலே பிரச்சினைன்னு  சொன்னப்ப  கேட்கலே , இப்போ ..மூக்கு  மூளியா பிள்ளைப் பிறந்து இருக்கான் !''
            ''பின்னாலே பிரச்சினைன்னா ஃபைல்ஸ் னு நினைச்சேன் , இப்படின்னு நினைக்கலே ,டாக்டர் !''

'டாஸ்மாக்'  மூடினா இவருக்கு லாபம் :)
               ''டாஸ்மாக்  கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரம் சொல்றது நியாயம் தானே ?''
              ''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு அவர் அப்படி சொல்றாரு !''

மூணு வருசத்திலே டிகிரி வாங்கியது அந்த காலம் :)
             ''உங்க பையன் மூணு வருச படிப்பை வெற்றிக்கரமா  முடிச்சிட்டான்னு சொல்றீங்க ,வேலை ஏதும் தேடுறானா ?''
              ''அட நீங்க வேற ,அவன் படிச்சு  முடிச்சது prekg ,Lkg ,Ukg தான் !''

கண்ணுக்கு குளிர்ச்சி அவள் :)
         ஊட்டியிலும்  இல்லை 
         நகரும் பூந்தோட்டம் .....
         ஸ்கூட்டியில் என் ஸ்வீட்டி !
நேற்றைய 'சிரி'கதையின் தொடர்ச்சி.......
கேட்காத காதும் கேட்கும் !


 (அப்பாவுக்கு  காது  எப்படி கேட்க ஆரம்பித்தது  என்பதை, நாளைக்கு  தெரிஞ்சுக்குங்கலாமே !)

18 November 2016

சம்சார ஆசை இன்னுமா விடலே:)

பாலே கெடுதின்னா மூத்திரம் நல்லதா :)
         ''யூ டியூப்லே என்ன பார்த்தீங்க ,இப்படி சிரிச்சுகிட்டு இருக்கீங்க ?''
         ''சர்க்கரை நோய் வரக் காரணமே நாம் குடிக்கிற பால்தான்னு ஒரு டாக்டர் சொல்றார் ,மாட்டு மூத்திரத்தைக் குடிச்சா நல்லதுன்னு சிலர் சொல்றதை நினைச்சேன் ,அதான் !''

 அப்பன் புத்தி அறிந்த பையன் :)             
         ''எனக்கு குழந்தைகள் அதிகம் என்று, எப்படி கண்டுபிடிச்சீங்க ?''  
         ''ஜனவரி ,பிப்ரவரின்னு ஆரம்பித்து  ,பத்தாவது மாதத்தை  டெலிவரின்னு  உங்க பையன் சொல்றானே ! 

இரண்டுமே பரம்பரையாய் தொடருதே :)          
         ''என்ன சொல்றே ,உங்க தாத்தா பணமும் கொடுத்து ,செலவும் கொடுத்துட்டு போயிருக்காரா ?''
         ''ஆமா ,சொத்தும் கொடுத்து ,சர்க்கரை நோயையும் கொடுத்துட்டு போயிருக்காரே !''

சம்சார ஆசை இன்னுமா விடலே :)
        ''என் வீட்டுக்காரர் மாலை போட்டுகிட்டார்,உன் வீட்டுக்காரர் போட்டுக்கலையாடீ ?''
         ''ஹும்...அவராவது போட்டுக்கிறதாவது ,இன்னொருத்தி கழுத்துலே வேணுமானா மாலை போட நினைப்பார் !''
ரஜினி மட்டுமா கோச்சடையான் :)
            ''மதுரைக்காரங்க எல்லாரும்   கோச்சடையான்தான்னு  சொல்றீங்களே ,எப்படி?'' 
            ''பல வருசமா கோச்சடையில்  இருந்து வர்ற தண்ணீரை குடிச்சிட்டுத்தானே  அவங்க வாழ்ந்துகிட்டு இருக்காங்க !''

நேற்றைய 'சிரி ' கதையை  பலரும் (?) ரசித்ததால் ...இதோ ,மீண்டும் ஒரு மீள் பதிவு ......



-------------------------------------------------------------------------------------------------
அடுத்து நடந்தது என்ன ? தெரிஞ்சுக்க நாளைக்கு இதே இடத்திற்கு  வாங்க !

17 November 2016

முதல் இரவிலும் தூக்கமாஆஆ:)

சாயம் போற கள்ள நோட்டை தயாரிப்பதா கஷ்டம் :)            
              ''நம்ம அரசாங்க அதிகாரிகளும் மாத்தி யோசிக்க ஆரம்பித்து விட்டாங்களா ,எப்படி ?''
             ''புதிய ரூபாய் நோட்டுலே  சாயம் போனால்தான் நல்ல  நோட்டாம் ,இல்லேன்னா கள்ள நோட்டாமே?''
மனு கொடுக்கும் போதே இதையும் சொல்லணுமோ :)                 
              ''உங்க ஊருக்கு பஸ் இல்லேன்னீங்க ,பஸ் விட்டாச்சே ,மறுபடியும் என்ன மனு ?''
              ''மழை பெய்தால் ஒழுகாத பஸ் வேணும்னுதான் !''
மின் மயான வெட்டியானின் அபூர்வ ஞானம் :)
              ''செத்துப் போன உங்க நண்பர் ,ஆப்பாயில்னா விரும்பிச்  சாப்பி  டுவாரா ?'' 
              ''ஆமா, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
              ''அவரோட பாடி அரைகுறையா  எரியும்போதே  கரெண்ட் போயிடுச்சே !''

ஜாக்கெட்டுக்கு லேடிஸ் டைய்லர்தான் OK :)
           ''என்னங்க ,உங்க சட்டையை சரியா தைக்கிற டைய்லர்கிட்டே ... என் ஜாக்கெட்டையும் கொடுக்கிறேன்னு சொன்னா ,ஏன் எரிஞ்சு விழுறீங்க ?'' 
          '' எழவிலே போற அந்த டைய்லர் ,பார்வையிலேயே அளவை எடுப்பானே !''

வீடு பிடிக்கலைன்னா இப்படியா சொல்றது:)
             ''குறைந்த  வாடகையிலே  இந்த  வீடுதான்  இருக்கு ,உங்களுக்கு  பிடிக்குதா?''
               ''வீடா இது? பேசாம to let க்கு   பதிலா  toilet ன்னு  போர்டுலே எழுதுங்க!''

இனி ,நீங்க படிக்கப் போறது முன்பு நான் எழுதிய 'சிரி'கதை ...எழுத்துரு சிறியதாக இருப்பதால் ஜூம் செய்துக் கொண்டு படிக்கவும் ,சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !



16 November 2016

கண்ணுக்கு மை அழகு ,விரலுக்கு :)

நோட்டுக்கு வலது,ஓட்டுக்கு இடது கை விரலிலும் அடையாள மை :)
          '' உங்க இரண்டு ஆட்காட்டி விரலிலும் மை அடையாளம் இருக்கே ,ஏன் ?''
           '' ஒண்ணு ,என் பணத்தை நான் எடுத்துக்க வங்கி வச்ச மை  ,இன்னொன்னு என் பணத்தை MLA சுரண்டி  எடுத்துக்க தேர்தல் வச்ச மை !''

நாசூக்கா சொன்ன இவர், நல்ல நண்பர்தானா :)
            ''என் வீட்டிலே வெற்றிலைக் கொடி செழிப்பா படர்ந்து இருப்பதைப் பார்த்தால் அதிசயமா இருக்கா ,ஏண்டா ?''
            ''நல்லெண்ணம் உள்ளவர்கள் வீட்டில் மட்டும்தான் வெற்றிலைக் கொடி படரும்னு சொல்வாங்க ,அதான் !''

கிளினிக் வாசல்லே ஆட்டோ இதுக்குத்தானா :)
           ''இப்படியே உட்கார்ந்துகிட்டு இருந்தா சுகப் பிரசவம் ஆகாது!''
            ''நடந்துகிட்டே இருக்கவா டாக்டர் ?''
            ''ஊஹும் ..வாசல்லே நிற்கிற ஆட்டோவிலே ஒரு மணி நேரம் சுத்திட்டு வாங்க !''

தங்க நகை HALL MARK தானா நல்லாப் பாருங்க :)
         ''HALLMARK ன்னு நம்பி வாங்கின நகைங்க கறுத்துப் போச்சு !''
          ''கடையிலே போய் கேட்க வேண்டியது தானே ?''
          ''நல்லாப் பாருங்க ,நாங்க HALF MASS ன்னுதான்  போட்டு இருக்கோம்னு சொல்றாங்க !''

உப்பு விலை ஏறினால் உடம்புக்கு நல்லதா :)
மீண்டும் ஒரு உப்பு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் போலிருக்கிறது ...
மிசோரம் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் உப்பு கிலோ ரூபாய் முன்னூறாம்...
உப்பே கிடைக்காது என்று வதந்தி பரவியதால் இந்த விலையேற்றமாம்...
வதந்தியின் வேகம் மங்கள்யான் ராக்கெட்டுக்குகூட  இருக்குமா என்று தெரியவில்லை ...
ஏற்கனவே கோழிக்கறி விலையே கிலோ ரூபாய் எண்பது விற்கும் போது  வெங்காயம் விலை நூறானது ...
இப்போ உப்பு விலை முன்னூறு என்றால் ...
ஒருகாலத்தில் உப்புதான் சம்பளமாய் தரப் பட்டதாம் ,இப்போ சம்பளமே உப்பு வாங்கக்கூட காணாது  போலிருக்கே ...
உப்பு பதுக்கியவர்களைக் கண்டு பிடித்து 'உப்புக் கண்டம் 'போடுமா அரசு ?
இல்லை ,உப்புக்கு சப்பாணியாய் ...வதந்தி பரப்பியோர் என்று நாலு பேரை கைது செய்துவிட்டோம் என்று கடமையை முடித்துக் கொள்வார்களா ?
சாதா உப்பு விலையை கேட்கும் போதே அயோடெக்சை தேடவேண்டியிருக்கிறது  ...
அயோடின் உப்பு என்றால் ஐநூறு  ரூபாய் ஆக்கி விடுவார்களோ ?
உப்பின்றி சாப்பிட நேர்ந்தால் மக்கள் வரும் தேர்தலில் சொரணை உள்ளவர்கள் என்பதைக் காட்டுவார்கள் !

15 November 2016

கற்பழிப்பும் மகிழ்ச்சி தருமா :)

காலத்துக்கு ஏற்றத் தொழில் செய்தாலும் தப்பா :)

              ''அவரை,ஏன் கைது  செய்திருக்காங்க ?''

              ''இங்கே ,ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கு நாலு நூறு ரூபாய் உடனே தரப்படும்னு போர்டு வச்சிருந்தாராம் !''


சொல்வது எளிது ,செய்வது அரிது :)

          ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்னு எழுதியவனை ஏன்  தேடிக்கிட்டு  இருக்கீங்க ?''

         ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காண்பின்னு சொல்லத்தான் !''


கொள்ளையர்களுக்கு பொருத்தமானப் பட்டம்:)

             ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாமா ,ஏன் ? ''

             ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''


திருப்பதி மட்டுமா திருப்பம் தரும் :)

             ''திருப்பத்தூர்தான்  , உண்மையில் அவருக்கு திருப்பம் தந்த ஊர்ன்னு ஏன் சொல்றீங்க ?''

             ''அந்த ஊர்லேதானே லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமா மாட்டிக் கிட்டாரு !''


கற்பழிப்பும்  மகிழ்ச்சி தருமா :)

கற்பழிக்கப் படும் போது ...

அண்ணே ,என்னை விட்டுடுங்கன்னு என்று ...ஒரே  ஒரு வார்த்தை பெண் சொன்னால் கற்பழிப்பு நடக்காதுன்னு உளறிக் கொட்டிய சாமியார் இப்போது , கற்பழிப்பு புகாரில் ஜெயிலில் உள்ளார் ...

இப்போது CBIஇயக்குனர் கூறிய கருத்தும் சர்ச்சைக்குள்ளாகி  இருக்கிறது ...

'கிரிக்கெட் சூதாட்டத்திற்கு விதிக்கப் பட்ட தடையை உங்களால் அமல் படுத்த முடியாது என்றால் ,அது கற்பழிப்புகளை தடுக்க முடியா விட்டால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்பது போல உள்ளதாக ' என்று  அவர் சொன்னதால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி யுள்ளார் ...

உதாரணம் சொல்ல வேறு எதுவுமா தோன்றவில்லை ?

இப்போது 'யார் மனதும் புண் பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் ...

பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படிசொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று மகளிர் அமைப்புகள் கொடிப் பிடிக்கின்றன ...

பதவிவரும் போது பணிவு மட்டுமல்ல நாவடக்கமும் வர வேண்டும் போலிருக்கிறதே !

14 November 2016

புருஷன் பெண்டாட்டிக்குள் ஒத்து வரலேன்னா :)

கண்ணுக்குத் தெரியாது என்பது மட்டுமா :)
      ''எங்கும் நிறைந்திருக்கும்  வை ஃபை  மாதிரிதானா கடவுளும் ?''
      ''ஆமாம் ,துட்டுப் போட்டாதானே பலன் கிடைக்குது ?''

ஆட்டோவுக்கும்   காசிருக்காது :)             
           ''என்ன சொல்றீங்க ,சொந்த காரிலே வந்து இறங்கின அந்த நோயாளியா  ஏழை ?''
            'ஆமாம் டாக்டர் ,அட்மிட் ஆகும் போது  கோடீஸ்வரனா இருந்தாராம் !''
      
மகிழ்ச்சியும் ,வெறுப்பும் தரும் ஒரே வார்த்தை  இதுதான் :)
         ''டாக்டர் சொன்னப்ப சந்தோசமும் ,ரேசன் கடைக்காரர் சொன்னப்ப  கோபமும் வந்ததா,அதென்ன வார்த்தை ?''
         ''உங்களுக்கு சர்க்கரை இல்லை !''

ஓடிப் போக நல்ல நேரம்தான் :)
             ''ஐயையோ ,கல்யாணம் பண்ணிக்க ,நாம ஓடிப் போற நேரத்திலே உங்கப்பா எதிர்லே வர்றாரே ...?''
             ''ஒண்ணும் கவலைப் படாதீங்க ,அவர் கண்டுக்க மாட்டார்  ..அவருக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி !''

காதலில் உண்மை உண்டா:)
             ''உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்று  பாடுற பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணனும் !'' 
             ''என்னான்னு?''
              ''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும்  ஏன் காதலிக்கிறேன்னுதான் !''

தம்பதிக்குள் சண்டைன்னா இப்படியா  பண்ணுவது :)
புருஷன் பெண்டாட்டிக்குள் ஒத்து வரலேன்னா ...
சிலர்  நாகரீகமா டைவர்ஸ் செய்துக்கிறாங்க...
சிலர் கொல்லணும்னு   விபரீத முடிவெடுக்கிறாங்க ...
கொல்லணும்னு நினைக்கிறவங்களே பலி ஆக வேண்டி இருக்கும் ...
இதை விளக்க வேடிக்கை கதை இதோ ...
எப்பவும் வாக்குவாதம் நடக்கும் தம்பதிகளுக்குள்  உச்சபட்ச சண்டை நடக்குது ...
''உன்னை ப(ழி )லி வாங்காம விட மாட்டேன்''என்கிறான்  உத்தமபுருசன் ...
''அதையும் பார்க்கிறேன் ,உன்னாலே (மரியாதை ?)என்ன செய்ய முடியும் ?''
''வீட்டுக்கு பின்னாலே இருக்கிற ஆழமான குளத்திலே ''
''என்னை தள்ளிவிட ஐடியாவா ?''சீறுகிறாள் மனைவி ...
''இல்லை ,நானே விழலாம்னு இருக்கேன் ''
''சும்மா வாயிலே சொல்லக்கூடாது ,என் முன்னாலே விழுந்து காமி''ன்னு புருஷனை குளத்துக்கு இழுத்துட்டு போகிறாள் 'தர்ம 'பத்தினி ...
''எனக்கு நீச்சல்தெரியும் ,ஒருவேளை நீந்திப் பொழச்சுக்குவேன் ,அதனாலே என் கை இரண்டையும் பின்னால் கட்டி விடு ''
கண்கொள்ளாக் காட்சியை காணும் ஆவலில் கை இரண்டை கட்டுகிறாள் மனைவி ...
''இந்த நிலையில் ஓடிவந்து என்னால் குளத்தில் குதிக்க முடியாது ,நான் குளத்தங்கரையில் நிற்கிறேன் ,நீ ஓடிவந்து தள்ளி விடு ''
போல்ட் வால்ட் போட்டியில் கலந்துக் கொண்டவளைப் போல் ஓடிவருகிறாள்  ...
கடைசி  நொடியில் ,கணவன் விலகிக் கொள்ள ...
பாலன்ஸ்  செய்து நிற்க முடியாமல் குளத்தில் விழுந்த மனைவி கதறுகிறாள் ...
''காப்பாற்றுங்க ,காப்பாற்றுங்க !''
''காப்பாற்ற எனக்கும் ஆசைதான் ,நீதான் என் கையை கட்டிப் போட்டுவிட்டாயே ! ''
       நாம் பிறக்கும்  முன்பே இந்த கதை பிறந்து விட்டது ...
பிரசவித்தவர் கவிமணி  மாயூரம் வேதநாயகம் என்றால் நம்ப முடிகிறதா ?

13 November 2016

அடி ஆத்தீ,அஞ்சு பெண்டாட்டியா :)

பிடில் போய் வயலின் வந்தது டும் டும் டும் :)
                 ''நம்ம  பிரதமர் மன்னர் நீரோவை நினைவுபடுத்துறாரா ,எப்படி ?''
              ''இதோ ,இப்படித்தான் !''

உண்மைத் தியாகிகளுக்கு சிலை இல்லாத காரணம் :)              
                   ''என் தாத்தா ,தன் சொத்தையெல்லாம்  நாட்டுக்காக தியாகம் செய்தவர் ,ஆனா ,அவர் ஞாபகமா ஒரு சிலைகூட  இல்லை !''
                  ''வாழும்போதே நடுத்தெருவுக்கு வந்துவிட்ட  அவருக்கு ,நடுத் தெருவில் எதுக்கு சிலைன்னு நினைக்கிறாங்க போலிருக்கு !''

வரவுக்கும் செலவுக்கும் சரியாகுமோ :)
              ''உள்ளங்கை அரிக்குதுன்னு காட்டினா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
              ''யார் என்ன சொல்றாங்க ?''
             ''ஜோதிடர் வரவு வரும்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்களே !.''

அழகை ரசித்தால்......:)
            ''அழகை ரசித்தால் மெய் மறந்து போகுது டாக்டர்!''
            ''எப்படி?
           ''ஊசியை  நீங்க போட்டா வலிக்குது ,உங்க நர்ஸ் போட்டா வலிக்க மாட்டேங்குதே!''

அடி ஆத்தீ ,அஞ்சு பெண்டாட்டியா :)
(இந்த கூத்து நடந்தது சில வருடங்களுக்கு முன் )
நான் அவனில்லை பட பாணியில்...
ஐந்து பெண்களைஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதாக கைதாகி யுள்ளார்...
சினிமாப் பட டைரக்டர் ரவி தம்பி என்பவர் !
அவர் பத்தாவது படிக்கும் போதே ஒன்பதாவது படிக்கிறப் பெண்ணை காதலித்தாராம் ...
அந்தப் பெண்ணை கட்டிக்கிட்டு கை விட்டாரா ,இல்லை...
சும்மாவே கை விட்டாராவென்று தெரியவில்லை ...
படித்தது பத்தாவதுதான் என்றாலும் ...அரசியல்வாதிகளுக்கு 'டபுள் MA'வேலையும் பார்த்தவராம் ...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு உள்நாட்டில் கூட வேலை வாங்கி தராமல் ஏமாற்றியும் உள்ளாராம் ...
நெய்யூர் என்ற ஊர்க்காரர் ஆகையால் பெண்களிடம் நெய்யாகப் பேசி ஏமாற்றியுள்ளார் ...
லட்சக்கணக்கில் வரதட்சணைப் பணத்தையும் ,சீர்வரிசை நகைகளையும் எடுத்துக் கொண்டு 'எஸ்கேப் 'ஆகி விடுவாராம் ...
இவர் இயக்கிய 'வாச்சாத்தி 'படத்தைப் பார்த்து சொல்லமுடிய விட்டாலும் ...
இவர் லீலைகளைப் பார்த்து சொல்ல முடிகிறது ..'அடி ஆத்தீ '...'
கடலும் கடல்சார்ந்த குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ...
ஆனால் உடலும் உடல் சார்ந்த விசயங்களை உள்ளடக்கியே படங்களை எடுத்தவர் ...
டெல்லி மாணவி பாலியல் பிரச்சினையை மையப் படுத்தி தற்போது இவர் எடுக்கும் படத்திற்க்கு பெயர் ...
தடை செய்யப்பட்ட இடமாம் ...
இப்போது இவரே தடை செய்யப்பட்ட இடத்திற்கு  சென்றுவிட்டார் ...
சினிமா மோகத்தால் இவரிடம் ஏமாந்தவர்களின் பட்டியல் இனியும் தொடரும் ...
ஏன் இப்படி செய்தீர்கள் என்று இவரிடம் கேட்டால் ...
சினிமாவில் வெற்றி பெறும் வரை எனக்கு பெண் தரத் தயங்கிய இந்த சமூகத்தை பழிவாங்கவே இத்தனை திருமணங்களை செய்துக் கொண்டேனென்று 'பூசி மொழுகுவார் '...
ஆரம்பக் காலத்தில் கொத்தனார் வேலைப் பார்த்தவர் ஆச்சே !

12 November 2016

நடிகர் சூர்யாவால் இப்படித்தான் பேச முடியும் :)

செத்த பிறகு காக்கா பிடிக்க யார் வருவா :)              
              ''தலைவர் சிலை மேலே காக்கா அசிங்கம் பண்ணியிருக்கே , சுத்தம்  செய்ய தொண்டர்கள்  யாருமே இல்லையே  ,ஏன்  ?''
               ''உயிரோட இருக்கும் போது தலைவரைச் சுற்றி இருந்தவங்க எல்லாம் காக்கா பிடிக்கிறவங்க தானே !''

அனுப்பும்போது இருக்கிற சந்தோஷம்,வரும் போது :)                
          ''உன் வீட்டுக்காரருக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு ஏண்டி சொல்றே ?''
          ''லீவு போட்டுட்டு வந்து , ஊருக்கு போக என்னை பஸ் ஏற்றி விடுறார் ,வரும்போது ... வீட்டிலே இருந்தாலும்  அழைத்து போக வர மாட்டேங்கிறாரே !''

நிச்சயம்,இந்த புயலுக்கு பின் இல்லை அமைதி :)              
        ''என்னங்க ,போன தடவை புயல் வந்தப்போது  ,என்னோட அப்பா தீர்க்கதரிசின்னு  தெரிஞ்சுதா ,எப்படி ?''
        ''புயலுக்கு 'லைலா  'ங்கிற  உன் பெயர் பொருத்தமா இருக்கே !''
மேனேஜர் விரும்பாத CCTV கேமரா ,பிரைவசி :)
            ''ஆபீஸ் நேரத்திலே 'நெட்லே'பார்க்கக் கூடாததை எந்த தைரியத்திலே பார்த்துகிட்டு இருக்கே ?''
            ''லேடி P A ,எப்ப  மேனேஜர் ரூமுக்குப்போனாலும்   வர லேட்டாகுங்கிற  தைரியத்திலே தான் !''

சுண்டி இழுக்கும் மாளவிகா:)
  (சில வருடத்துக்கு முன் ,மெரினா பீச் அருகில் கப்பல் ஒன்று தரைத் தட்டி நின்றபோது  வந்த ,என் மொக்கை  இது :)
            ''தரை  தட்டி நிற்கிற  கப்பலை ,இழுவை கப்பல் இழுத்து விடும்னு உறுதியா சொன்னீங்களே,எப்படி?''
             ''கருப்புதான் எனக்கு  பிடிச்ச கலருன்னு பாடி ,நம்மை சுண்டி இழுத்த மாளவிகா பேரை அந்த இழுவை கப்பலுக்கு வைத்து இருக்காங்களே !''
நடிகர் சூர்யாவால் இப்படித்தான் பேச முடியும் :)
நெய்க்கு தொன்னை ஆதாரமா ,தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது ...
சினிமாவில் வன்முறைக்  காட்சிகள் ,ஆபாசக் காட்சிகள் ,சண்டைக் காட்சிகளை ஏன் வைக்கிறீர்கள் எனக் கேட்டால் ...
ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்கிறார்கள் ...
ரசிகர்களைக் கேட்டால் ...
காட்டுகிறார்கள் பார்க்கிறோம் என்கிறார்கள்  ...
'சினிமாவில் என்ன எடுக்கிறோமோ அது சமூகத்தைப் பாதிக்கிறது ,சமூகத்தில் என்ன நிகழ்கிறதோ சினிமாவிலும் தொற்றிக் கொள்கிறது 'என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா !
அப்படின்னா இந்த பூனைக்கு மணி கட்டப் போகும் எலி யார் ?

11 November 2016

தமன்னா ஞாபகம் இவருக்குமா:)

இவரோட பொய் ,அடுத்தவங்களுக்கு போஜனம் கொடுக்கும் :)                
                ''என்ன சொல்றீங்க ,இன்னும் நான் ஆயிரம் பொய்  சொல்ல வேண்டியிருக்குமா ?'
                ''இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிற யோகம் உங்களுக்கு இருக்கே !''

அரசவை நர்த்தகியின் நடனத்தைக் கூட  ரசிக்க முடியலியாம் :)
             ''அரிப்பாசனத்தை உடனே மாற்றுங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள் ,மன்னா ?''
             ''அரியாசனமா இது ?மூட்டைத் தொல்லை தாங்க முடியவில்லை !''

தற்கொலை நடிகைக்கு கவிதாஞ்சலி :)
              ''அவர் ,கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
             ''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் , தூக்கமாத்திரையை  அதிகமாய்  உண்டு ,துக்கத்தை ஏன் கொடுத்தாய்ன்னு எழுதி இருக்காரே !''

தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம் :)
               ''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா ?''
              ''டி வி மெகா சீரியலைப் பார்த்து அழுதுகிட்டு  இருக்காங்கப்பா !''

தமன்னா ஞாபகம் இவருக்குமா:)
                ''மன்னான்னு அழைக்கக் கூடாதுன்னு அரசர் கட்டளையாமே ,ஏன்?''
                ''தமன்னா ஞாபகம் வந்து வந்து விடுகிறதாம் அவருக்கு !''

பொன்மொழியைவிட பெண் உடல் மொழி பிடிக்கலாம் ?
       'தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் கடுமையாய் உழைக்கணும் ,நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் வெற்றியே நிலைக்கும் ,தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லை ,ஊட்டி விடப்படும் எந்த உணவிலும் சக்தி இல்லை ,ஒரு அரிசி என்றாலும் விதைத்து வளர்த்து ,அறுவடைசெய்து சாப்பிடு ,பிரபஞ்சத்தின் சுவையை அனுபவிப்பாய் !'
         இப்படி நெஞ்சைத் தொடும் விதத்தில் தந்தை சொல்லும் அறிவுரையை எத்தனைப் பிள்ளைகள் கேட்பார்கள் ?
ஆனால் ,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வேத வாக்காய் ஏற்று சாதித்துக் காட்டிவுள்ளார் ஒரு பிரபல நட்சத்திரம் ...
அட்வைஸ் சொன்னவர் ...
இந்தியாவின் சார்பில் உலக அளவில் பேட்மிண்டன் பந்தாடியவர் !
அட்வைஸ்  கேட்டவர் ...
வாலிப நெஞ்சங்களை பந்தாடிக் கொண்டிருப்பவர் !
தந்தையின் பெயரை சொன்னால் ...
அப்படி ஒருவரை தெரியாதே என்பீர்கள் ...
மகளின் பெயரை சொன்னால் ...
இவரை தெரியாதவர்களும் இருக்கிறார்களா என்பீர்கள் ...
தந்தை பிரகாஷ் படுகோன் ????
மகள் தீபிகா படுகோன் !!!!
தீபிகா படுகோன் தன் ரசிக கண்மணிகளுக்கு ஒரு நல்ல காரியம் செய்வதாய்  இருந்தால் ...
 தந்தையின் பொன்மொழிவுடன் கூடிய ஆட்டோகிராப் போட்டோவைக்  கொடுக்கலாம் ...
ஆனால் ஒரேஒரு கண்டிஷன்...
அந்த போட்டோவிலாவது உடம்பு  முழுவதையும் மறைத்துக் கொண்டு போஸ்  கொடுப்பது  நல்லது !