28 February 2017

'சின்ன வீடு ' இருப்பதும் நல்லதுதானா:)

டாக்டர்களில் மட்டும்தான் போலி உண்டா :)
         ''அந்த பெட்லே படுத்து இருக்கிறவரை போலி நோயாளின்னு ஏன்  சொல்றீங்க?''
          ''அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !''

'சின்ன வீடு ' இருப்பதும் நல்லதுதானா:)
            ''அந்த அம்மாவை  வீட்டைக் காலி பண்ண வேண்டாம்னு எல்லோரும் தடுக்கிறாங்களே ,அவங்க  என்ன பெரிய சமூக சேவகியா ?''
          ''அட நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''

இசையால் இயற்கையை இசைய வைக்க முடியுமா :)
         ''அவர் , அமிர்தவர்சினி ராகத்தை வாசிச்சு ,மழைப் பெய்ய வைக்கிறேன்னு சவால் விட்டாரே ,என்னாச்சு ?''
          ''அவர் மேல் செருப்பு மழைதான் விழுந்தது !''


இதிலே வர்ற வருமானம் I T யிலும் கிடைக்காது :)
           ''என்னடா ,பிச்சையெடுக்க வரமாட்டேங்கிறே ?''
           ''கேட்டு வாங்கி சாப்பிடுறதெல்லாம் ஒரு பிழைப்பான்னு ,கேட்காம எடுக்கிற பிக் பாக்கெட் தொழில்லே  இறங்கிட்டேன் !''

சில வருடத்துக்கு முன் ...ஊட்டி புலி தந்த கிலி !
தமிழகத்தின் உச்சபட்ச உயரமான தொட்டபெட்டா பகுதியில் உலா வந்து ...
மக்களுக்கு அதிகபட்ச  கிலியைக்  கொடுத்துக் கொண்டிருந்த புலியை ...
ஒருவழியாக சுட்டுக் கொன்று விட்டார்கள் என்பதை அறிந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் ...
3 2 ரவுண்டு சுட்டுப் பிடித்த புலியை ...
'ஆரம்பி 'வன விடுதிக்கு கொண்டு வந்தார்களாம் ...
இந்த 'ஆபரேசன் டைகர் ' புலி வேட்டையை ஆரம்பிக்க ஏன் இவ்வளவு தாமதம் செய்தார்கள் என்று தெரியவில்லை ...
இதற்குள் மூன்று உயிர்கள் பலியாகி விட்டன ...
யாரும் ஒருவாரம் வேலைக்கு செல்ல முடியவில்லை ...
பள்ளிக்கும் எந்த குழந்தையும் போகவில்லை ...
முற்றிலும் வியாபாரம் பாதிக்கப் பட்டது ...
மாமூல் வாழ்க்கை ஸ்தம்பித்தது ...
இவ்வளவு மோசமாக நிலைமை ஆகும் வரை அரசு தாமதித்த காரணம் ...
முறத்தால் புலியை எந்த வீரத்  தமிழச்சியாவது
விரட்டி விடுவாள் என்ற புராதன நம்பிக்கையாக இருக்குமோ ?

27 February 2017

'இச்' என்றால் தெரியும் ,இக்சி என்றால் :)

சொல்லாமலே தெரியும் எரிச்சல் :)           
            ''நீண்ட நாளாய்  பாத எரிச்சல் எனக்கு  இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதா ?''
             ''எதுக்கெடுத்தாலும்  வயித்தெரிச்சல்  படுவீங்க ,அது மட்டும்தான் தெரியும் !'' 

 இவர் எல்லாம் எதுக்கு ஃபிரிட்ஜ் வாங்கணும் :)                
          ''என்னங்க ,ஃபிரிட்ஜ்ஜிலே  வச்சு இருந்ததெல்லாம் கெட்டு போயிருக்கே ,என்ன செய்ஞ்சீங்க ?''
          ''உள்ளே லைட் வேஸ்ட்டா  எரியுதுன்னு   நான்தான் ஸ்விட்ச்சை ஆப் செய்தேன் !''

படித்த செய்தி .....
இக்சி முறையில் எந்த வயதினரும் செயற்கை முறையில் கருத்தரித்து, அழகான குழந்தைகளைப் பெற முடியும் என்பதை  55 வயதுப் பெண் நிரூபித்து, குழந்தைகள் இல்லாத எண்ணற்ற தம்பதியினருக்கு பெரும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் !
தோன்றிய  மொக்கை ....
               ''டாக்டர் ,உங்க மருத்துவமனையில்  தம்பதிகளுக்கு  'இக்சி 'முறையில் பிள்ளைப் பிறக்க வைக்கிறீர்களாமே ,அதெப்படி ?''
               ''உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் ? உங்களுக்கு  'இச் 'முறையிலேயே  எல்லாமே கிடைச்சுப் போவுதே !''

இப்படி இக்கு வைக்கும் காரணம் என்ன :)
               ''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
               ''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர  மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''

அரைகுறை அகராதியால் என்ன பயன் :)
                 ''என் அகராதியிலே 'மன்னிப்பு 'ங்கிற  வார்த்தையே கிடையாது !''
                  ''பிறகெதுக்கு அந்த அரைகுறை அகராதியை வச்சுக்கிட்டு இருக்கீங்க ?''

நாம் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் :)
 பாண்டுரங்க சுவாமிக்கு கோயில் கட்டும்
 பேறு பெற்றவர் நடிகை பண்டரி பாய் ...
 நாம் பெற்ற பேறு ...
 நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலத்தில் வாழ்வது !

26 February 2017

வாசலுக்கு வாசல் போராட்டம்தானா:)

          ''மறுபடியும்  இன்னொரு  வாசல்  போராட்டமா ?''
         ''வாடி'வாசல்'  திறக்கும் போராட்டம் முடிந்தது ,இப்போ நெடு 'வாசல் ' போராட்டம்  ஆரம்பித்து விட்டதே  !''

புதுசா நாய் வளர்ப்பவருக்கு வந்த ஆசை :)              
          ''குரைக்கிற நாய் கடிக்காதுன்னு சொல்றாங்களே ,உண்மையா ?''
          ''அதை தெரிஞ்சிக்கத்தான் உன்னை வீட்டுக்கு வரச் சொல்றேன் !''
நடிகைக்கு இப்படியும் ஒரு பிரச்சினையா  :)
            ''மேக்கப் இல்லாமல் வீட்டுக்குப் போவதில்  உங்களுக்கு என்ன பிரச்சினை  ?''
            ''என் பையனுக்கே என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குதே!''

வருகிறது அரசு ஊழியர்களின் புதுமைப் போராட்டம் :)
             ''அங்கே ஊழியர்கள் போராட்டம் நடக்குதே ,ஏன் ?''
              ''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு  58 வயதில்  ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''

 பெற்றோர்கள் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் :)
  பெற்றோர்கள் குழந்தைகளை 
 'கிரச் 'சில் சேர்த்தார்கள் ...
 குழந்தைகள்  பெற்றோர்களை 
 முதியோர் இல்லங்களில்  சேர்க்கிறார்கள் !

25 February 2017

தர்ம அடிதான் இவங்களைத் திருத்தும் :)

குரு  விளக்கம் சொல்வாரா :)             
               ''சீடனே, உனக்கென்ன சந்தேகம் ,கேள் !''
               ''மனிதன் உள்நோக்கித்தான் பார்க்கணும் ,மேல் நோக்கிப் பார்த்தால் கழுத்துதான் வலிக்கும்னு சொல்றீங்க ,பிறகெதுக்கு உங்க மையத்தில் இவ்வளவு உயர சிலை ?''

அண்ணன் காட்டிய வழியம்மா :)           
             ''சொல்றதுக்கு சங்கடமா  இருக்கு ,உன் தங்கச்சியை நான் காதலிக்கிறேண்டா !''
             ''இதிலே வருத்தப்பட என்ன இருக்கு  ,உன்னை நண்பனாக்கிகிட்டதே  இப்படி நடக்கணும்னுதானே  !''

தர்ம அடிதான் இவங்களைத் திருத்தும் :)       
             ''என்னம்மா சொல்றே ,பஸ்ஸிலே 'கையை  உள்ளேயும் நீட்டாதீர்கள் 'என்று எழுதிப் போடணுமா ,ஏன் ?''
            ''என் பின்னாடி உட்கார்ந்து இருக்கிறவர் கை ஓவரா நீளுதே !''

கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமா  :)
             '' என் பெண்டாட்டி  ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
             ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
             ''மாஞ்சாக் கயிறு தான் !''

உப்பு தின்னா சூடு சொரணை வரணுமா :)
            ''நான் கட்சி  தாவுனதுக்காக ,நிருபர்கள் என் தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்க !''
             ''ஏன் தலைவரே ?''
            ''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலப் படுத்துறாங்க !''

ஜாதகம்  இதுக்குத்தான் உதவுது :)
  ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்களோ இல்லையோ ...
 பெண் வீட்டாரிடம் இருந்து என்ன தேறும் என்பதைப் பார்த்து 
 நாகரீகமாய் சொல்லி விடுகிறார்கள் ...
 ஜாதகம் சேரவில்லை என்று !

24 February 2017

'ரம்மி 'யில் ஜெயிக்கும் ரகசியம் :)

நகைக் கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா :)
           ''யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'டாச்சே  ?''
            '' அதான் ,சேதாரம் போக  டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''

இது நிரந்தரக் கூட்டணி போலிருக்கே :)            
        ''நாட்டிலே போலிச் சாமியார்கள் பெருக யார் காரணம் ?''
       ''போலீசும்,சாமியார்களும்தான் !''
மாமனார் தந்ததும் ,தராததும்:)
        ''புது மாப்பிள்ளை 'பைக்'கில் எழுதியிருப்பதைப் படித்தால் 'உள்குத்து 'இருக்கிற மாதிரித் தெரியுதா .எப்படி ?''
         ''என் மனைவி மட்டுமே ,மாமனார் எனக்கு தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''

தலைவர் 'ரம்மி 'யில் ஜெயிக்கும் ரகசியம் :)
            ''தலைவர் மரத்தடியில் ரம்மி விளையாடினா பணத்தை அள்ளுறார்,கிளப்பில் விளையாடவே மாட்டேங்கிறாரே ,ஏன் ?''
            ''சட்டைப்பையில் இருந்து சீட்டை எடுக்கிற வித்தை CCTV காமெரா மூலம் வெளியே தெரிஞ்சுடும்னுதான் !''

 சொல்வது எளிது ,செய்வது அரிது :)
      ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்ன்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கீயா ,ஏன் ?
       ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காட்டுன்னு சொல்லத்தான் !''

தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை :)
'டியூப் லைட் 'என்றவளின் வாயை அடைக்க 
செலவு பாராமல் 'எலெக்ரானிக்  சோக் 'வாங்கி மாட்டினான் ...
சட்டென்று எரிந்தது டியூப் லைட்..
பட்டென்று கேட்டாள் ..
வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?

23 February 2017

தந்தையும் வாலிபத்தை கடந்து வந்தவர்தானே :)

பெயர் பொருத்தம் சரியில்லையே :)
            ''இறுதி ஊர்வலத்தைப் பார்த்துகிட்டு  ,என்னடா யோசனை ?''
            ''மயானம் வரை போகிற அந்த வண்டியிலே நல்லவனும் போறான் ,கெட்டவனும் போறான் ...ஆனால் , எதுக்கு 'சொர்க்க ரதம்'னுபெயர் வச்சிருக்காங்க ?''

காய்ச்சல் பலவிதம் ,அதிலே இது ஒரு விதம் :)          
             ''ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல் ...கடையிலே பாக்கெட் வாங்கவும் பயமா இருக்கு !''
              ''என்ன பாக்கெட் ?''
              ''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''

 தந்தையும் வாலிபத்தை கடந்து வந்தவர்தானே  :)
              ''என்னங்க .நம்ம பையன்  பத்மாவையே சுத்தி சுத்தி வர்றானாமே ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பும் வழியைப் பாருங்க !''
              ''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''
வெள்ளையர்[ஹேர் ]க்கும் உண்டா ஹேர் டை ?
நடுத்தர வயதைத் தாண்டியவர்களின் தலைகள் கூட...
இப்போது  'கரு கரு 'வென்று ...
நன்றாய் தெரிகிறது ...
நாட்டிலே ஒரு வியாபாரம் நன்றாய் நடக்கிறது !

22 February 2017

படுக்கையில் தேவையா பத்தடி இடைவெளி :)

            '' டிரைவர் நான் ...ரோட்டிலே  பாலோ பண்ற பத்தடி இடைவெளி  ரூல்ஸை வீட்டிலேயும் கடைப் பிடிக்கணுமா,ஏன் டாக்டர்  ?''
           ''ஐந்தாவது பிரசவத்துக்கு பெண்டாட்டியை கூட்டி வந்திருக்கீயே !''

மனைவியின் சொல்  எல்லாமே மண்டையில் ஏறுமா :)
        ''பசி மயக்கத்தில் காது கேட்காது என்பதெல்லாம் பொய்னு எப்படி சொல்றே ?''
        ''வெங்காயம் நறுக்குன்னா கேட்காத உங்க காதுக்கு  ,டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேட்குதே !''                                                            
                                                                  
 பெயர்பொருத்தம் எல்லாருக்கும் இப்படி அமையாது :)
            ''பவித்ராங்கிற  பெயர் எனக்கு ரொம்ப பொருத்தமா ,ஏன் ?''
            ''பணத்தை வித்  ரா  பண்ணி முடிய மாட்டேங்குதே !''

சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா :)
            ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
            ''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறார்,அதுக்குத்தான் வரச் சொல்றேன் !''

மணப்பெண் இவள்னா திருமணமே வேண்டாம் :)
            ''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கியா ?''
             ''நீங்கதானே உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு விளம்பரம் பண்ணியிருந்தீங்க !''

காதலுக்கு மரியாதை இதுதானா :)
பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...
திருமணத்திற்காக பியூட்டிப் பார்லரில் அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண் மீது ...
கூரியர் தபால்காரனைப் போல் உள்ளே வந்த கொடூரன் ...
ஆசிட்டை வீசியதில் ...
அந்தப் பெண்ணின் முகம் கழுத்து மார்பு வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டன ...
C C TV கேமரா பதிவைக் கொண்டு அந்த கொடூரனை கைது செய்து விசாரித்ததில் ...
அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும் ,காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் ...
ஆசிட்டை வீசியதாகவும் கூறியுள்ளான் ...
உண்மையாக அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் என்றால் இப்படி செய்ய மனம் வருமா ?
தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற பொறாமையை எப்படி காதல் என்று சொல்ல முடியும் ?

21 February 2017

மனைவி காதுக்கு மேட்சிங் தோடு அமையுமா :)

எலும்பு வாசனை மட்டுமே தெரியும் போலிருக்கு :)      
             ''உங்க நாய்க்கு மோப்ப சக்தி குறைந்து போச்சுன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?'' 
              ''என்னையே  கடிச்சிடுச்சே !''

குக்கரில் சாதம் வைக்கத்தான் அவருக்கு தெரியும்  :)           
         ''என்னங்க ,காட்டன் புடவையை  வாங்க வேண்டாம்னு  ஏன் சொல்றீங்க ?''
         ''அதுக்கு போட வேண்டிய கஞ்சிக்கு ,நான்  எங்கே போறது ?''
வாலிபர்களின் 'கனவு ' வாகனம் வருவதே  தெரியலியாமே :)                                                                     ''பெரியவரே ,உங்களுக்கு வந்திருக்கிறது அல்சர் ,இது எப்படி வருதுன்னு தெரியுமா ?''
           '' எதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது 'அல்சர் 'வர்றது எப்படித் தெரியும் டாக்டர் ?''                     
               
மனைவி காதுக்கு மேட்சிங்கா , தோடு அமையுமா :)
         ''கடையிலே இருக்கிற எல்லா மாடல் தோடுகளைக் காட்டியும் ,உங்க மனைவிக்கு எதுவுமே பிடிக்கலே ...ஏதாவது  ஒரு மாடல் நல்லாயிருக்குன்னு நீங்களாவது எடுத்து சொல்லக்கூடாதா,சார் ?'' 
          ''அட நீங்க வேற ,நான் சொல்ற எதைத்தான் அவ காதுலே போட்டுக்கிட்டா ?''

ஊருக்கே தெரிந்த தலைவரின் 'இரகசியம் ':)
        ''எந்த டெஸ்ட்டும் பண்ணாமலே எனக்கு முதுகு வலி வர வாய்ப்பே இல்லைன்னு உறுதியாச் சொல்றீங்களே ,எப்படி டாக்டர் ?''
         ''ஆட்சிக்கு வர்ற எந்த கட்சிக்கும்  நீங்க தாவுறதாலே 'முதுகெலும்பு இல்லாதவர் 'ன்னு தெரிந்தது தானே ?''

அழகு முகம் அடையாளம் தெரியுமா :)
             முக நூலில் பார்த்த முகத்தைகூட 
             நேரில் பார்த்தால்  அடையாளம் தெரியவில்லை ...
             கடவுளே வந்தாலும் நம்மால் கண்டுகொள்ள முடியுமா ?

20 February 2017

கணவன் குறட்டை விடும்போது .... :)

தோசை  சுடும் போது யோச்சிச்சது:)                 
             ''கல்லுலே வேகிற தோசையும் பேசுமா ,எப்படி  ?''
             ''ஒரு ஓரமா  லேசா எந்திரிக்கும் ,அதுக்கு அர்த்தம் 'என்னை திருப்பி போடு'ங்கிறதுதான் !''

இப்படி வாழ்நாளை ஈடு கட்டலாமா :)           
          ''தம் அடித்ததும் ,ஜோக் படிச்சு சிரிக்க ஆரம்பித்து விடுறீங்களே ,ஏன் ?''  
         ''சிகரெட் குடிச்சா  ஆயுள்  குறையுமாம் ,சிரிச்சா ஆயுள் கூடுமாமே !''
கொசு ஏமாறாது ,நாமதான் ஏமாறுவோம் :)
             ''கொசு விரட்டி லிக்யூட் தீர்ந்து போச்சு  ,வார்னிங் லைட்டாவது  எரியட்டும்னு ஆன் பண்ணி வைச்சேன் !''
            ''கொசு ஏமாந்து போச்சா ?''
            ''என்னையா ஏமாத்துறேன்னு  இரண்டு மடங்கா பிடுங்கி எடுத்துருச்சி  !''

கணவன் குறட்டை விடும்போது கண்டுபிடிச்சது :)
            ''கரடியும் மனுசனை மாதிரியே குறட்டை விடும்னு இப்போதான்  கண்டுபிடிச்சு இருக்காங்க,உனக்கெப்படி முன்னாடியே தெரியும் ?''
           ''குறட்டை விடுறப்போ நீங்களும் அப்படித்தானேங்க  இருக்கீங்க  !''

'கை கழுவுறது 'நடிகைகள் மட்டும்தானா :)
            ''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான் பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
            ''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின 'அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''

படிப்பு தானாய் வந்தால்தான் உண்டு :)
               படிப்பில் கோட்டை விடும் மகனிடம் ...
              அந்தக் காலத்தில் தெருவிளக்கில் படித்தேன் ...
              எனச்  சொல்ல  வந்த  தந்தையின்  வாயை அடைத்தது  ...
              'கரெண்ட் கட் ' !

19 February 2017

நமீதா வீட்டு நாய்க்குமா டப்பிங் வாய்ஸ் :)

நல்லாவே  பேசுறார் டாக்டர் :)
               ''உங்க  பை பாஸ்  ஆபரேசன்  கட்டணம் ரொம்ப அதிகமா இருக்கே   ஏன் , டாக்டர்  ?''
                ''பைபாஸ்  ரோட்டில்  சென்றாலே  டோல் கேட் சார்ஜ்ஜும் அதிகமாதானே கட்ட வேண்டியிருக்கு !''

நமீதா வீட்டு  நாய்க்குமா  டப்பிங் வாய்ஸ் :)    
           '' அந்த நாய்,  நடிகை வீட்டு நாயா  இருக்கும்னு  ஏன் சொல்றே ?''                                 '' குரைக்குது ,ஆனால் சத்தம் வரலையே !''
எதுவுமே பிடிக்கலேன்னா என்ன பண்றது :)
                  ''முப்பத்திரண்டு வகை பவுடரை காட்டியும்   'வாசனையே இல்லை'ன்னு  இந்தம்மா சொல்றாங்க, என்ன செய்றது  முதலாளி ?''
                    '' எறும்பு பவுடரை வேணா  காட்டிப் பாரு !''

வள்ளுவரை நினைக்க வைத்த மனைவி :)
          ''உனக்கு சூடு வச்சது உன் பெண்டாட்டி ,திருவள்ளுவரை ஏண்டா திட்டிக்கிட்டிருக்கே ?''
          ''அவர் அனுபவப்பட்டிருந்தால் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 'னு எழுதி இருப்பாரா ?'' 

மழைக் குறைய காரணம் கண்டுபிடித்த மதுரை மேதை :)
கடந்த சில ஆண்டுக்கு  முன் , மதுரையில் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது ...
எதற்காக ?...
ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகவா...
கச்சத்தீவு  மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இப்படிப்பட்ட கோரிக்கைக்காக அல்லவாம் ...
பாரம்பரியமாக நரியை பரியாக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்று வருகிறதாம் ...
அதில் உண்மை நரியை பயன்படுத்த காவல்துறை தடை விதித்து விட்டதாம் ...
 பொய் நரியை பயன்படுத்தியதால் மழைப் பொய்த்துவிட்டதாம்...
(என்னே ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள் ,புவி வெப்பமயம் ஆவதால் இயற்கைச் சுழற்சி மாறிவருகிறது என்பதைச் சொல்வோரெல்லாம் தலைகுனியனும்!)
ஆகவே உண்மை நரியை பயன்படுத்த அனுமதி தரணும்னு தான்  கையெழுத்து இயக்கமாம் ...
சரி ,உண்மை நரியை உண்மை பரியாக்கி காட்ட இவர்களால் முடியுமா ?
இப்படி ஒரு மூட நம்பிக்கையை வளர்க்கும் இயக்கத்திற்கு கௌன்சிலர் ஒருவர் தலைமையாம் ...
இவர்களால் வர வேண்டிய மழையும் வராது போலிருக்கே !

உண்ணக் கொடுக்கும் தாய்க்கே துரோகமா :)
பூமித் தாய் படைத்த உணவினை  உண்டபின் ...
மனிதன் வீசியெறிந்த பிளாஸ்டிக் பைகளை 
'ஜீரணிக்க 'முடியவில்லை  ...பூமித்தாயால் !

18 February 2017

கபாலின்னா உங்களுக்கு என்ன தோணுது :)

ஜெயிக்கப் போறது  எது :)
            ''நம்ம  MLA க்களுக்கு  மனசாட்சி  இருக்கா இல்லையான்னு  இன்னிக்கு  தெரிந்து விடுமா ,எப்படி ?''
             ''சட்ட மன்றத்தில்  நம்பிக்கை வாக்கெடுப்பு  நடக்குதே !''

கபாலின்னா , என்ன இமேஜ் தோணுது :)
         ''ஜோசியரே ,என் பையனுக்கு  ஜாதகப்படி வருகிற பெயரை, நீங்களே வைக்க வேண்டாம்னு ஏன் சொல்றீங்க ?''
         ''கபாலின்னு  வருதே !''
நல்ல வேளை ஜட்டி சைஸை கேட்கலே :)
           ''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்னு வந்து என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
          ''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே !''

ரிவால்விங் சேரில் இருந்தால் ரிவால்விங் சேர்மனா :)
         ''வாட்ச்மேன்...நான் சேர்மனைப் பார்க்கும் போது என் பையனைக் கூட்டிட்டு போனது , உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
          ''சேர்மன் சேர்லே இருந்தார் ,நீங்க என்ன வாட்சுமேலேயா உட்கார்ந்து இருக்கீங்கன்னு ,உங்க பையன் வந்து கேட்டானே  !''

நம்ம பணம் அவங்க பையில் என்பது உண்மை:)
           ''உங்க பணம் உங்க கையில்' திட்டம் வரப் போகுதாமே  !'''
          '' அப்படின்னா ,இப்போ நமக்கு சேர வேண்டிய  பணம் அவங்க பையில் சேர்ந்துக்கிட்டு இருந்ததை ஒத்துக்கிறாங்களா  ?''

மனோதிடம் இருக்க ஜோதிடம் எதுக்கு :)
ஒருவர் கையிலே உள்ள ரேகையைப்  பார்த்து ..
ஒரே ஒரு யானையைத் தடவிய குருடர்கள் போல் ...
 நாலு ஜோதிடர்கள் கூறுவதோ நாலு  விதம்! 
ஒரு நேரத்தில் எல்லோருக்கும்  ஒரே  நேரம் காட்டும்
கடிகாரம்  காட்டுவதே நல்ல நேரம் !

17 February 2017

இந்திய சாப்ட்வேர் மூளைக்கு நல்ல கிராக்கி :)

 எதிர்கட்சி தீவிரத் தொண்டனின் கேள்வி :)   
              '' யுவர் ஹானர் , முதல் எதிரி காலமாகி விட்டதால்  தண்டனையில் இருந்து விடுவிக்கப் படுகிறார் என்று தீர்ப்பு சொல்லியிருக்கீங்க ....
இன்னும் அவரோட ஆன்மா உயிரோட இருக்கிறதா சொல்றாங்களே ,அதுக்கு தண்டனைக் கொடுக்கலாமே !''    

கிட்னி பெயிலிராகி இருந்தால் :)               
            ''எல்லோரும் அவரோட 'ஆஸ்துமா சாந்தி அடையட்டும் 'னு இரங்கல் தெரிவிக்கிறாங்களே ,ஏன் ? ''
            ''ஆஸ்துமா நோயால் காலமான அவருக்கு 'ஆன்மா 'நம்பிக்கை இல்லையாமே !'' 

பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்:)
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை 2014/15 ஆண்டு  ரூபாய் 26 295 கோடிக்கு விற்கப் படும் என்று கூறியிருக்கிறார் ...
தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் ...
இது மிகப் பெரிய உலக சாதனை என்று தண்ணி அடிக்காமல் கொண்டாட்டம் போட நினைக்கும் நேரத்தில் ...
இன்னும் ஏன் தமிழகத்தில் ஒரு சம்பத் பால் தேவி தோன்றாமல் இருக்கிறார் என்று புரியவில்லை ...
அவருடைய 'குலாபி கேங் 'அமைப்பைப் பற்றி இங்கே விழிப்புணர்வு இல்லாதது ஏன் என்றும் புரியவில்லை ...
அந்த பெண்மணி உத்தரபிரதேச கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ...
பன்னிரண்டு வயதில் திருமணமாகி .இருபது வயதுக்குள் ஐந்து குழந்தைகளைப் பெற்றவர் ...
தினசரி குடிகார கணவனின் அடி தாங்காமல் நொந்து கிடந்தார் ...
இதைப் போன்றே பல பெண்களும் இருப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்தார் ...
பத்து பெண்களை சேர்த்துக் கொண்டு அனைவருக்கும் பிங்க் நிற சேலை அணிவித்தார்  ...
கையில் பிரம்புகளுடன் கிளம்பிய அவர்கள் ...
குடிவெறியில் ஆட்டம் போடும் கணவன்மார்களை பின்னி எடுத்து விட்டார்கள் ...
பத்து பெண்கள் இன்று பல ஆயிரம் பெண்களுடன் ...
UP மாநிலம் முழுவதிலும் இந்த அமைப்பு பரவியுள்ளது ...
லஞ்ச பேர்வழிகள் ,அநியாயம் பண்ணும் போலீஸ்காரர்கள் ,சமூக விரோதிகள் மேலும் இவர்களின் பிரம்படி விழுகிறது ...
''காப்பாற்ற கிருஷ்ணபரமாத்மா வருவார் என்றிருந்தால் கிராமத்து பெண்கள் அம்மணமாய் தான் இருக்கணும் ,காக்கவேண்டியவர்களும் ,சட்டமும் பெண்களை பாலியல் பண்டமாகத்தான் பார்க்கிறது ,எங்களை சட்டம் காப்பாறாதபோது ,நாங்கள் எதற்கு சட்டத்தை மதிக்கணும் ?''...
என்று கர்ச்சிக்கும் இவரை மையப் படுத்தி பிங் கேங் படம் தயாராகிறதாம் ...
படத்தின் நாயகி 'சோளிக்குள்ளே என்ன இருக்கு 'பாடல் புகழ் மாதுரி தீட்சீத்தாம் ...
அவராவது பிங்க் நிற சோளிக்குள் இருக்கும் பெண்ணின் வீரத்தை ...
குடிகார கணவன்களுக்கு புரிய வைத்தால் சரி !
ரொம்ப முக்கியம் நடிகையோட வயசு :)
         ''தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறா பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்றீங்களே ,ஏன் லாயர் ?''
        '' என் கனவுக் கன்னி நடிகையோட  வயசைத் தெரிஞ்சுக்க முடியுமானு ஒருத்தர் கேட்கிறாரே !''

இந்திய சாப்ட்வேர் மூளைக்கு நல்ல கிராக்கி :)
மட்டன்  ஸ்டாலில் ...
ஆட்டு மூளைக்கு கிராக்கி ,ருசியாக இருப்பதால் !
அமெரிக்காவில் ...
இந்திய 'மூளைக்கு 'நல்ல கிராக்கி ,மலிவாக கிடைப்பதால் !

16 February 2017

கடன் யாரிடம் கேட்கலாம் :)

அடை சாப்பிட்டாலும் இவன் அறிவுப் பசி அடங்காது :)
          ''அடைக்கு ஆர்டர் பண்ணிட்டு, என்னடா யோசிக்கிறே ?''
           ''அடைன்னா ஒண்ணே ஒண்ணுதானே ,தொடர்ந்து பெய்ற மழையை 'அடை'மழைன்னு ஏன் சொல்றாங்க ?''

இதுக்குப் பெயரும் காதல் கடிதமா :)          
          ''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே  உயிரே போயிடுச்சா ,ஏண்டா ?''
          ''அது ,அவ புருஷன் கையிலே போனா  வம்பாயிடுமே !''
சர்க்கரைநோயால் நவீன நாரதர் ஆக முடியுமா :)
         ''அவர்  ....சர்க்கரை  நோயால் கடுமையா பாதிக்கப் பட்டு ' நவீன நாரதர் 'ஆயிட்டாரா ,எப்படி ?''
         ''நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு அடிக்கடி சொல்றாரே !''

கடன் யாரிடம் கேட்கலாம் :)
         ''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?'' 
        ''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேன் என்கிறார்களே !''

அழகைப் பார்த்தால் நிறைய 'அழணும் '  :)
5ஸ்டார்  ஹோட்டல் போல்  அழகாய்  உயர்ந்து நிற்கும் 
தனியார் மருத்துவமனைகளைப்  பார்க்கையில் ...
அட்மிட் ஆகி செத்தால்கூட பரவாயில்லை போலிருக்கிறது !
பில்லை நினைத்தால் ...
படுத்த படுக்கையாய் போய் சேர்ந்துவிடுவதே 'நலமாய் 'படுகிறது !

15 February 2017

உள்ளே இருந்தவர் வெளியே ,வெளியே இருந்தது உள்ளே :)

               ''அந்த காலத்திலே  மாமியார்  மருமகள்  ஒரே வீட்டிலே ரொம்ப 'அட்டாஷ்மெண்ட்'டோட  இருந்தாங்க !''
                ''இப்போ ?''
                 ''அபார்ட்மெண்ட்  வீட்டிலே  அட்டாச்ட்டு பாத்ரூம்  லெட்ரின்தான்  இருக்கு !''    

இப்படியா கேலி செய்வது :)                
                ''நடிகர் நாடாளத் துடிக்கிறார் ,ஆட்சிப் பொறுப்பு என்பது  அவர் தலையில் வைத்துக் கொள்ளும் விக் அல்ல ,அது ஒரு முள் மகுடம் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் !''
சாலை விபத்தா ,இல்லற விபத்தா :)        
          ''அந்த கல்யாண மகால் பொருத்தமான இடத்திலே அமைந்துருக்கா ,எப்படி ?''
         ''அடிக்கடி விபத்து நடக்கும் இடம் ஜாக்கிரதைன்னு ,அந்த இடத்திலே போர்டு இருக்கே !''

தலை எழுத்து என்று தப்பிக்கமுடியுமா  ,கணவனால் :)
                ''குடியை விடலேன்னா டைவர்ஸ்தான்னு  உன் மனைவி  சொல்றாளா ,என்னடா செய்யப் போறே ?''
            ''அது சரி ,என் தலையிலே எனக்கு ரெண்டு பெண்டாட்டின்னு எழுதி இருந்தா யாராலே மாற்ற முடியும் ?''

மனைவியின் சமையலை மட்டம் தட்டலாமா :)
            '' TV ல்   'செய்து பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டின மாதிரி 'இந்த 'கேப்பை பாத் 'தை செஞ்சுருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
           ''இனிமேலே 'செய்து சாப்பிடுவோம் 'ன்னு நிகழ்ச்சி வந்தா  பார்த்துட்டு செய் !''

பேசத் தெரிந்த  அரசியல்வாதி :)
நியாயவிலைக் கடைகளை மூட வேண்டும்   என்றதும் ...
ஏழைகளின் வில்லனென செருப்பை வீசிய கூட்டம் ..
நியாய 'எடைக்' கடைகளை திறக்க வேண்டும் என்றதும் 
ஏழைகளின் தெய்வமென பூமாலைகளை சாற்றியது !

14 February 2017

மனைவிக்கு இப்படியா பயப்படுறது :)

நியாயம் தெரிந்த தாத்தா :)         
              '' சாக்லேட்டை கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுற பேரனைக்   கண்டியுங்கன்னு  சொன்னது தப்பா போச்சா ,ஏன்  ?''
              ''சர்க்கரை  நோய்  இருக்கிற எனக்கே, இனிப்பு தின்கிற ஆசை விடலே ,போயிட்டு போறான் விடும்மான்னு  சொல்றாரே  !'' 

தெரிந்தே எவனும் குழியில் விழுவானா :)             
          ''அந்த பொண்ணுக்கு  லேசுலே கல்யாணம் ஆகாதா ,ஏன் ?''
         '' நன்றாய் சமைக்கத் தெரிந்த வரன் தேவைன்னு அவங்க அப்பா விளம்பரம் கொடுத்து இருக்காரே !''

காதல்  முறிஞ்சு போச்சே :)      
          ''என்னடி சொல்றே ,உன் காதலர்  'பணப் பூர்வமாய் 'தான் உன்னை விரும்புறார்னு  தெரிஞ்சுபோச்சா ,எப்படி ?''
         '' கல்யாணத்துக்கு அப்புறமும் ,நான் கட்டாயம் வேலைக்கு  போயாகணுமாம் !''

மனைவிக்கு இப்படியா பயப்படுறது :)
             ''காணாம போன உன் பெண்டாட்டியை கண்டு பிடிக்கலையே ,போலீஸ்  ஸ்டேசன்லே ஏன் மொய் வச்சுட்டு வர்றே ?''
              ''கண்டுபிடிச்சுருவோம்னு மிரட்டுறாங்களே !'' 

டைம்பாஸ் காதலுக்கு தாலி எதுக்கு:)
             ''காதலர் தினம் அதுவுமா இன்னைக்கு பீச்சிலே காதலர்கள் யாரையும் காணாமே ,ஏன் ?''
             ''வர்றவங்களுக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைப்போம்னு ஒரு அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கே !''
காதலர்கள் ஜாக்கிரதை:)
பிப்ரவரி 14...
காதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால்... 
நவம்பர் 14...
குழந்தைகள்  தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் !

13 February 2017

இப்படியும் ஒரு பேரழகா :)

பொய்யிலே  மிகப் பெரிய பொய்  இதுவாச்சே :)             
             ''ஆயிரம் பொய் சொல்லியாவது  கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்வாங்க ,நான்  சொன்ன ஒரே ஒரு பொய்யைக்  கண்டுபிடித்து என்னை டைவர்ஸ்  பண்ணிட்டா  என் மனைவி !''
                '' அப்படியென்ன சொன்னீங்க ?''
                 '' ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆகலைன்னுதான் !''

 நிரந்தர வேலைன்னு சொல்லலாமா :)
              ''காலாகாலத்தில் ஒரு 'நிரந்தர' வேலையைத் தேடிக்கோன்னு சொன்னால், ஏண்டா எரிஞ்சு விழுறே ?''
              ''இந்த உலகமே நிரந்தரமில்லைன்னு  அடிக்கடி நீங்க தானேப்பா  சொல்றீங்க?''

நாணயம் வேணும்தான் ,அதுக்காக  இப்படியா :)
            ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
             ''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்து கதவை தட்டுகிறாரே !''

பெண்டாட்டிக்கு வந்த ' 2 இன் 1 'ஐடியா :)
            ''இரும்புச் சத்தைக் கூட்டிக்கணும்னு டாக்டர் சொன்னதுக்கு நீ என்ன செய்யப் போறே ?''
          ''உங்க ஸ்கூட்டரை தள்ளுவண்டிக்காரன்கிட்டே   தள்ளிட்டு பேரீச்சம்பழம்  வாங்கிச் சாப்பிடலாம்னு  இருக்கேங்க !''


இப்படியும்  ஒரு  பேரழகா :)
பல்லாயிரம் முகங்களைப் பார்த்த 
புராதனக் கண்ணாடி ...
என் இனியவளின்  முகம் பார்த்ததும் 
சுக்கு நூறாய்  சிதறியது ...
பிறவிப் ப(ய)லன்  கிடைத்ததென்று !

12 February 2017

மனைவி என்றதும் இதுவா ஞாபகம் வரும் :)

க்ளு  கொடுத்த 'அன்பே சிவம் ' சிவசக்திக்கு  நன்றி :)          
                ''என்ன சொல்றீங்க ,தலையிலே முடி இல்லாததும்  ஒரு வகையிலே வசதியா இருக்கா ?''
              ''எந்தப் பிரச்சினை என்றாலும்,நான் மண்டையைப் பிச்சுக்க  வேண்டியது இல்லையே ''

பையன் சொல்லியதில் தப்பிருக்கா:)
        ''உங்க அப்பாவோட வயதைக் கேட்டால் ,உன்னோட அண்ணன் வயதுதான்னு  எப்படி சொல்றே ?''
         ''என் அண்ணன் பிறந்த போதுதானே அவர் அப்பாவானார் !''  

ராஜா ரொம்பத்தான் நொந்திருக்கிறார் :)                
         ''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு நாம் ஏன் போகணும் ?''
          ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''

காஜல் அகர் 'வால்' மனதில் இருக்கும் வரை :)
            ''ஊழலுக்கு எதிரா போராட்டம் பண்ணி அரவிந்த் கேஜ்ரி 'வால்' டெல்லியில் ஆட்சியில் இருக்கார் ,தமிழ்நாட்டிலே மட்டும் ஏன் இப்படி ஒரு அதிரடி மாற்றம் வர மாட்டேங்குது ?''
           ''நம்ம இளைஞர்கள் மனதில் காஜல் அகர் 'வால் 'ஆட்சியில்லே  நடந்துகிட்டு இருக்கு ?''
இன்றைய இளைஞர்கள் நீதிபதியின் கணிப்பு :)         
            ''இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை நான்கு பெட்டிகளில் அடங்கி விடுகிறது என்று முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லி இருக்காரா ...அதென்ன நாலு பெட்டி ?''
           ''டிவி,ரேடியோ ,கம்ப்யூட்டர், சவப்பெட்டியாம் !''

மனைவி என்றதும் இதுவா ஞாபகம் வரும் :)
           ''என்னங்க ,நீங்கதான் மந்திரியாச்சே ,ஏதாவது ஒரு திட்டத்திற்கு என் பேரை வைங்களேன் !''
            ''அடுத்து புயல் வரும்போது ஞாபகப் படுத்து !'

பாடல் அருமை !படத்தின் பெயர்தான் கொடுமை :)
எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்பது 
ஆயிரத்தில் ஒரு வார்த்தை !
'ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் ' என்று தொடங்கும் இனிமையான 
பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர்  ...
கொம்பேறி மூக்கன் !

11 February 2017

இரு மானிட்டர் அடிமைகள் உள்ள வீடு உருப்படுமா :)

 இப்படியும் புலம்ப வைக்கிறதே அரசியல் :)          '
             ' 'இதென்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனைன்னு புலம்புறீங்களே ,ஏன்  ?''
            ''தொகுதிக்கு  வருகை தராத  MLA யைக் 'காணலை'ன்னு மக்கள்தான் புலம்புவார்கள் ,இப்போ கட்டின பெண்டாட்டியே  புலம்புதே !''

நல்ல வேளை,மச்சம் இங்கிருந்தது :)          
           ''பல் வலின்னு வந்துட்டு,முதுகுலே இருக்கிற மச்சத்தை எதுக்கு காட்டுறீங்க ?''
           ''டாக்டர் கிட்டே எதையும் மறைக்ககூடாதுன்னு  சொன்னாங்களே !''
இரு மானிட்டர் அடிமைகள் உள்ள வீடு உருப்படுமா :)
             ''என்னடி சொல்றே ,உன் வீட்டுக்காரரும் ,பையனும் 'மானிட்டர் '  அடிமைங்களா  ?''
             '' மானிட்டர்  பாட்டிலைக்  குடிச்சுக்கிட்டு அவரும்   ,லேப்டாப் மானிட்டரை பார்த்துகிட்டு பையனும்  இருந்தா ,அதுதானே அர்த்தம் ?''

மனைவிக்கு புரியும்படி சொல்ல வேண்டாமா :)
          ''வாசல்லே எலக்ரீசியன்  வந்து 'எந்திரம் சிங்கிள் பேஸா ,திரீ பேஸான்னு 'கேட்கிறான் ...ஒண்ணுமே புரியலே ,நீ வரச் சொன்னீயா ?''
           ''ஆர்டர் செய்த குபேர 'எந்திரம்' இன்னைக்கு வந்தவுடனே மாட்டணும்னு நீங்கதானே சொன்னீங்க !''

புலவர் பைத்தியமானது உண்மையா  :) 
            ''உன் தாத்தாவுக்கு மாத்திரையால் 'சைடு எப்பெக்ட்'ஆயிடுச்சா ,என்ன  செய்றார் ?''
           ''மாத்திரையைப் பார்த்து 'மாத்திரே ,நீயுமா என்னை ஏமாத்திறே 'ன்னு பைத்தியமா புலம்புறார் !''

ஸ்டெதஸ்கோப்புடன் இன்றும் சில 'DOG'டர்கள் :)
பெண் நோயாளிகளை 'தொடக் ''கூச்சப்பட்டு ஸ்டெதஸ்கோப்பை கண்டு பிடித்தாரே ...
அந்த  டாக்டரை  'தொட்டுக் 'கும்பிடத் தோன்றுகிறது ...
இன்று ,வரம்பு மீறும் சில டாக்டர்களைப்  பார்க்கையில் !

10 February 2017

சேஷ்டைக்கார நடிகர்கள் ஜாக்கிரதை :)

மனைவி கையால் சாப்பிட்டு இப்படி சொல்லலாமா :)
       ''உங்க மனைவி இன்னும் அரை மணி நேரம் உயிரோட இருந்தாலே அதிகம் !''
    ''பரவாயில்லை ,ஆக்கப் பொறுத்தேன் ஆறப் பொறுக்கிறேன் டாக்டர் !''

சேஷ்டைக்கார நடிகர்கள்  ஜாக்கிரதை :)
                 ''அந்த நடிகையோட நெருங்கி நடிக்க திடீர்னு பயப்படுறாங்களே ,ஏன் ?''
                 ''நூறு கிலோ எடையை அவர் தூக்கின வீடியோ,வைரலா  பரவிட்டு வருதே !''
பணம் தேவைன்னு இப்படியுமா நடந்துக்கிறது :)
         ''அடகு கடையிலே வந்து ஒரு முழத்துக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறீங்களே ,ஏன் ?''
        ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் வைக்கலாம்னு சொன்னாங்களே !''

இன்னும் சில மாதங்களில் இது நடக்கும் :)              
             ''ATM கார்டை காட்டிட்டு  உள்ளே போங்கன்னு  ஏன் சொல்றீங்க ,வாட்ச்மேன் ?''
           ''வெயிலுக்கு  AC  சுகமா இருக்குன்னு  சும்மாவாச்சும்  சில பேர் உள்ளே   நுழைய  ஆரம்பிச்சிட்டாங்களே !''

விசுவாசமுள்ள 'வீட்டோட' மாப்பிள்ளை :)
              ''ஊரே 'மாமதுரை போற்றுவோம் 'ன்னு விழா கொண்டாடிக்கிட்டு இருக்கு !நீ மட்டும் 'மாமா  துரையைப்   போற்றுவோம் 'ன்னு  தனி ஆவர்த்தனம் வாசிக்கிறியே ,ஏன் ?''
             ''பொண்ணை கொடுத்து ,வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கிகிட்ட ,என்னோட மாமா  துரையைப்  போற்ற வேண்டியது என் கடமையாச்சே !''
               (சில  வருடத்துக்கு முன் , அரசின் சார்பில்  'மாமதுரை போற்றுவோம் ' என்ற  தலைப்பில் ஒரு வார விழா கொண்டாடிய போது  உண்டான மொக்கை இது :)

மெய் போனாலும் மொய் போகாது :)
திருமண ஆல்பத்தைப் புரட்டுகையில் ...
சிரிப்புடனே காட்சி தரும் பெருசுகளைப் பார்க்கையில் ....
பாவமாய்த்தான் இருக்கிறது 'போய் விட்டார்களே 'என்று !
மொய் வைத்தவர்களை மறக்க முடியுமா ?

9 February 2017

இவ்வளவு உரிமை கணவன் மனைவிக்குள்ளும் இருக்காது :)

 அறுப்பதற்கு அஞ்சாத டாக்டர்  :)   
         ''பரவாயில்லையே ,  இது வரை அந்த டாக்டரால் ஒரு உயிரும் போனதில்லையா ?''
         ''அட நீங்க ஒண்ணு ,அவர் போஸ்ட்மார்ட்டம் மட்டும்தானே செய்றார் !''

இவரோட கையை எடுக்க வேண்டி வரலாம் :)
           ''உள்ளங்கை அரிக்குதுன்னு சொன்னா ,சிலர் வரவு வரும்னும் ,சிலர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்க !''
           ''நீங்க என்ன செய்யப் போறீங்க ?''
             'வரவு வந்த பிறகு டாக்டரைப் பார்க்கலாம்னு இருக்கேன் !''
                                                                
இவ்வளவு உரிமை கணவன் மனைவிக்குள்ளும் இருக்காது :)
           ''உன்னோடகேஸ் முடியிறவரைக்கும் ,தினசரி காலையிலே போலீஸ்  ஸ்டேசனில்  கையெழுத்து போடணும் ,சரியா ?''
          ''முடியாது ...ராத்திரி என் தொழிலைப் பார்த்துட்டு  வந்து  நான் தூங்க வேண்டாமா ?சாயந்தரம்தான் வர முடியும் ,சரியா?!''

இரண்டாவது லட்டு தின்ன யாருக்குதான் ஆசை வராது :)
           ''கண்ணா லட்டு தின்ன ஆசையா  படத்தின் பார்ட் 2வருதா , என்ன டைட்டில் ?''
           ''2வது லட்டு தின்ன ஆசையா?'' 

நோய்கள் தானாய் வருவதில்லை :)
 TV ல் ADS இடைவேளை வரட்டுமென்று 
அடக்கிக் கொண்டே இருந்தால் ...
கல்லடைப்பு  கேட்காமலே வரும் !

8 February 2017

மனைவிக்கு இப்படியுமா சந்தேகம் வரும் :)

பயபிள்ள நல்லா வருவானா :)
         ''மூக்கு கண்ணாடியை ஏண்டா ஃ பிரிஜ்ஜிலே வைக்கிறே ?''
          ''கூலிங் கிளாஸ் ஆகட்டும்னு தான் !''
கணக்கிலே புலி ,நம் கேஷியர்:)
            ''நம்ம கேஷியர் ஒரு மாச லீவாவது உறுதியா எடுப்பாரா  ,ஏன் ?''
            ''தலை வலின்னு ஒரு நாளும் ,கால் வலின்னு ரெண்டு நாளும் லீவு போட்டவர் ,இப்போ பல் வலின்னு லீவு கேட்டிருக்காரே !''

இதுக்குத்தான்  பழகவிடக் கூடாதுன்னு சொல்றது :)
               ''டாக்டர் ,உங்களுக்கும் வயிறு எரியுதா ,பேஷண்ட் எவனும் பீஸ் கட்டாம ஓடிப் போயிட்டானா ?''
          ''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போயிட்டானே !''  

மனைவிக்கு  இப்படியுமா சந்தேகம் வரும் :)         
         ''உன் மனைவி எப்பவும் உன்னை சந்தேகப்படுறாளா ,ஏன்?''
        ''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு சொன்னா 'நான் இங்கே இருக்கும் போது எந்த சிறுக்கி உங்களை நினைக்கிறா 'னு கேட்கிறாளே !''

ஜோதிடருக்கே நேரம் சரியில்லை :)
             ''சித்த மருத்துவரே ஜோதிடரும் ஆனார் சரி ,ஜெயிலுக்கு ஏன் போனார் ?''
            '' என் புதிய கண்டுபிடிப்பு 'சகல தோஷ நிவர்த்தி மாத்திரை 'ன்னு  மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டாராம்  !'

தலைவலி வரலாம் ,ஆனா வரக் கூடாது :)
தலைவலி வந்தால் நாம 'பாமை 'தடவிக்குவோம் !
'பாம் வெடிக்கும் 'ன்னா போலீசுக்கு தலைவலி ,
நம்ம எல்லாரையும் தடவ ஆரம்பிச்சுடுவாங்க ! 

7 February 2017

கருக் கலைப்பு பாவமா ,சோகமா ?

கட்டையிலே போக ஆசைப் படுறானோ :)             
               ''உனக்கென்னடா  சந்தேகம் ?''
                ''கட்டையிலே   நின்னா  கரெண்ட்  ஷாக் அடிக்க மாட்டேங்குது ,  'கட்டை' விரல்லே  தொட்டாலும்  அடிக்குதே  ஏன் ஸார் ?''
இப்போ,ஆம்பளைங்க பெரும்பாலோர் இப்படித்தான் :)
             ''கோவிலும் ,டாஸ்மாக்கும் ஒண்ணுன்னு ஏன் சொல்றீங்க ,அப்பா ?''
            ''பிரச்சினை வந்தா நாங்க கோவிலுக்குப் போனோம்  ,இப்போ ,டாஸ்மாக் கடைக்குப் போறாங்களே !''
இவர் சொந்த ஜாதியிலேயே மருமகளைத் தேடுவாரோ  :)
           ''பையனை ஏண்டா வக்கீலுக்கு படிக்க வச்சோம்னு இருக்கா ,ஏன்  ?''
            ''நான் விரும்பிற பெண்ணைக் கட்டி வைங்க ,இல்லைன்னா ,பரம்பரைச் சொத்தை உடனே பிரிச்சுக் கொடுங்கன்னு சட்டம் பேசுறானே !''

மாமியார் கையில் துப்பாக்கி  இருக்குமோ :)
            ''எனக்கொரு ஜாக்கெட்டை வாங்கித் தரக்கூட உங்க மகனுக்கு துப்பில்லைன்னு உன் பெண்டாட்டி புலம்புறாளே ,ஏண்டா ?''
           ''அய்யோ அம்மா ,அவளுக்கு புல்லெட் புரூப்  ஜாக்கெட் வேணுமாம் !''

ரஜினி பாடியதில் எது சரி?
        ''புதுப் பொண்டாட்டி பின்னாலேயே திரியாதே ,ரஜினி பாட்டைக் கேட்டு திருந்தப் பாருன்னு சொல்றீயே ,ஏன் ?''
        ''சேலையில் சிக்கிக் கொண்டா சொர்க்கத்தின் வழி ஏதும் தெரியாதுங்கிறாரே !''
         ''அப்புறமா அவரே  'சேலை சோலையே 'ன்னு பாடினது உனக்குத் தெரியாதா ?''

கருக் கலைப்பு பாவமா ,சோகமா ?
யான் பெற்ற இன்பம் பெறுக  இவ்வையகம் ..
என்றிருப்பது பரந்த மனப் பான்மை !
நான் பெற்ற துன்பம் நீயும் பெற வேண்டாம் ..
கருக்கலைத்தவளின் கசந்த மனப்  பெண்மை !

6 February 2017

'ஹனி மூனை ' கவச உடையில் கொண்டாட முடியுமா :)

 பேரிடர் மேலாண்மைக்  குழு செயல்படும் லட்சணம் :)         
              ''எதுக்குங்க ,நாலு வாளி வாங்கிட்டு வந்திருக்கீங்க ?''
             '' கடல்லே கொட்டி இருக்கிற எண்ணையை அள்ளுறதைப் பார்த்தா ,தமிழ்நாட்டிலே வாளி பஞ்சம் வந்திடும் போலிருக்கே !''

நல்ல வேளை,உடனே டாக்டரை பார்த்துட்டார் :)
           ''என்ன சொல்றீங்க ,நாவலின் பத்தாவது பக்கம் புரட்டியவுடன் ,உங்களுக்கு  மூச்சுத் திணறல்  ஏற்பட்டதா  ?''
           ''ஆமாம் டாக்டர் , அந்த த்ரில்லர் நாவலை 'ஒரே மூச்சில் ' வாசிக்க முயற்சித்தேன் !''

இனிமேல் ,வாங்கித் தர யோசிப்பாரோ :)
              ''ஐம்பதாயிரம் செலவு பண்ணி  உனக்கு  நெக்லஸ்  வாங்கி இருக்கேனே ,அப்புறமும் என்ன நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறே  ?''
              ''உங்களை வாங்கறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே ,இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''

பிள்ளைக்கு தாய்ப்  பால் கொடுக்கலைன்னு இப்ப குத்தலா?
             ''நேற்றைக்கு உன் புருசனோட என்னடி சண்டை ?''
            ''போராட்டம்னு தரையிலே பாலைக் கொட்டுறது அநியாயம்னு சொன்னேன் ...அதுக்கு அவர் 'தாய்ப் பாலைக்  கொடுக்காம  ,நீ வேஸ்ட் செய்ஞ்சது மட்டும் நியாயமா 'ன்னு  கேட்குறார்டி!''

போலியை பேச்சிலேயே கண்டுபிடுச்சிடலாம் :)
                ''அவரை,  போலி  டாக்டர்னு சொல்றீயே ,ஏன் ?''
               ''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா , பிச்சிப் பூவான்னு கேட்கிறாரே !''

'ஹனி மூனை ' கவச உடையில் கொண்டாட முடியுமா :)
நிலவுக்கு சென்று வர  பணம்  இருந்தாலும்கூட  
ஹனி MOONனை பூமியில்தான்  கொண்டாட முடியும் ! 

5 February 2017

மகளோட லட்சணம் ,தலைவருக்கும் புரிந்திருக்கு :)

          ' ' தலைவர் , மாட்டை அடக்கிறவருக்கு  காரைப்  பரிசு தரப் போறாராமே,ஏன்  ?''
          ''தன் பெண்ணைப் பரிசா தர்றேன்னு சொன்னா ,யாருமே மாட்டைப் பிடிக்க வர மாட்டேங்கிறாங்களாம்!''

அழுகைக்கு , உண்மையான காரணம் :)        
             '' செத்த பெண்டாட்டிக்காக அழவே மாட்டேன்னு அடக்கி கிட்டிருந்தே ,இப்போ ஏண்டா அழறே?''
              ''லேசா அசைவு தெரியுது ,பொழச்சுக்குவாளோன்னு  பயமாயிருக்கே !''

C C T V கேமராவை 'இங்கே' யா வைப்பது :)
            ''தப்பு பண்றவங்களை கடவுள்  நின்று கொல்லும் என்பதை கோவில் தர்மகர்த்தாவே நம்பலே போலிருக்கா ,ஏன் ?''
            ''கோவில்  கருவறையிலும்  CCTV  கேமராவை மாட்டி வைச்சுருக்காரே !''

மகன் செய்த தப்பு தாய்க்கு புரியாது :)
               ''டாக்டருக்கு உன் பையன் பரவாயில்லையா ,ஏண்டி ?''
               ''பையன் எட்டணாவை விழுங்கிட்டான்னு டாக்டர் கிட்டே போனா, அவர் எட்டாயிரம் ரூபாயை விழுங்கிட்டாரே !''

வாய்தா கோர்ட்டில் கேட்கலாம் ,வீட்டில் ..:)
        ''வக்கீலான உன் வீட்டுக்காரரை  டைவர்ஸ் பண்றீயே ,ஏன் ?''
        ''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''

 ரீமிக்ஸ் முதலில் செய்தது நாம்தான் :)
   பாட்டுதான் வந்தது ,இப்போ படமுமா ரீமிக்ஸ் என்று கேட்க நாதியில்லை  நமக்கு !
   தண்ணி பாலிலும்  நாம் தண்ணி சேர்ப்பதால் !

4 February 2017

நீ பாதி ,நான் பாதி கண்ணே :)

 கேப்டன் இப்படி செய்யலாமா :)              
              ''நடுக்கடலில் சரக்கு கப்பல்கள் மோதலாமே !''
              ''கேப்டனும் 'சரக்கை ' ஏற்றிக் கொண்டு வந்திருப்பாரோ ?''          
    
 நீ பாதி ,நான் பாதி கண்ணே :)               
                ''முதல் இரவிலேயே ,குடி குடியை கெடுக்கும்கிற‌து தெரிஞ்சு போச்சா ,ஏன்  ?''
                ''அருமை மனைவி ,பாலுக்குப் பதிலா பீர் பாட்டிலைக் கொடுத்து ,எனக்கும் பாதி மிச்சம் வைங்கன்னு சொன்னாளே!''
ருசியைத் தேடுதோ நாக்கு :)
             ''அந்த ஹோட்டல் சாப்பாடு 'ஹோம்லி மீல்ஸ் ' மாதிரியே இருந்ததா ,பரவாயில்லையே !''
             ''அட நீங்க ஒண்ணு,உப்புமில்லை ,உறப்புமில்லைன்னு  சொல்ல வந்தேன் !''

மாப்பிள்ளை தங்கக் 'கம்பி 'யாச்சே :)
               ''மாப்பிள்ளைப் பையன் நடத்தை எப்படி ?''
                ''கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தாலும்  நன்னடத்தைக்காக ஒரு வருஷம் முன்னாடியே ரிலீஸ் ஆயிட்டார்னா நீங்களே பார்த்துக்குங்க !''

லவ்  லெட்டரெல்லாம்  ஓல்ட் பேஷன்:)
                ''டாக்டரை ஏண்டா காதலித்தோம்னு இருக்குடி ?''
                 ''ஏண்டி ?''
                ''லவ் லெட்டர்லே என்ன எழுதி இருக்கார்னு புரிய மாட்டேங்குதே !''
..................................................................................................................................
பிரசுரித்த குமுதம் இதழுக்கு  நன்றி !

மாற்றம் மனைவியின் உருவிலா ?கணவனின் சலிப்பிலா ?
ரூபாவதியாய்  காட்சி  தந்தவள் ...
மோகம் முப்பது ,ஆசை அறுபது  நாளுக்குப் பின் ... 
ரூப அவதியாய் !