நமக்கு வரவேண்டிய 15 லட்சம் எப்போ வரும் :)
''பார்த்தீங்களா ,எங்க ஆட்சியிலே ரோஸ் ,பச்சை ,ஆரஞ்சுன்னு கலர்கலரா புது ரூபாய் நோட்டுக்கள் வந்துகிட்டே இருக்கு !''
''அது சரி ,கொண்டு வருவோம்னு சொன்ன 'கருப்பு' பணத்தை எப்போ கொண்டு வரப் போறீங்க ?''
தலையணை மந்திரம் எதுவரை வேலை செய்யும் :)
'' வயது ஏற ஏற ஆண்கள் தலையணை இல்லாமல் படுப்பது நல்லதுன்னு சொல்றாங்களே ,ஏன் ?''
'' தலையணை மந்திரம் வேலை செய்யாத நேரத்தில் தலையணை எதுக்கு ,தேவையில்லைதானே ?''
பார்வை ஒன்றே போதுமா :)
''ஒரே பார்வையிலே ,அளக்காமலே சரியாக தைத்துக் கொடுத்து விடுவாராமே அந்த டெய்லர் !''
''நல்ல வேளை ,அவர் ஜென்ட்ஸ் டெய்லரானதால் தப்பித்தார் !''
பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா :)
''பொண்ணு வாக்கப்பட்டு போற இடத்திலே கண் கலங்காம இருக்கணும்னு அவர் ரொம்ப எச்சரிக்கையா இருக்காரா,எப்படி ?''
''டிவி இல்லாத வீட்டு வரன்கள் மட்டுமே வேணும்னு தரகர்கிட்டே சொல்லி இருக்காரே ! ''
ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய் கூடினால் ஒரு டீ :)
''ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா ,அநியாயமா இருக்கே ?''
''டீத் தூள் கிலோ ரூபாய் முன்னூறு ஆச்சே!''
''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''
ஸெல்ப் பேட்டரி மக்கர் பண்ணலாம் என்பதால் கிக்கருமா :)
கிக்கர் உள்ள ஸெல்ப் ஸ்டார்ட் டூ வீலர்களை நம்ப முடிய வில்லை ...
அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும்
சேர்த்து சாப்பிடுங்கள் என சொல்லும் சித்த மருத்துவரையும் நம்ப முடியவில்லை ...
நம்பகமான ஒரு வழி உள்ளதையே நம்பத் தோன்றுகிறது !
மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க இதோ லிங்க்....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470647