31 October 2017

இது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)

*படித்ததில் இடித்தது :)
               ''மாணவர்களுக்கு ஒரு நீதி ,அதிகாரிகளுக்கு ஒரு நீதியான்னு ஏண்டா கேட்கிறே ?''
                '' நீட் தேர்வு எழுதறவங்க முழுக்கைச் சட்டைப் போட்டுக்கக்கூட   அனுமதி இல்லைன்னாங்க , IAS தேர்வு எழுதப் போறவங்களை 'ப்ளுடூத் 'துடன் தேர்வு அறையில்  செல்ல எப்படி  அனுமதிச்சாங்க ?''
இடித்த செய்தியின் தொடுப்பு ....ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது

திறமைக்கேற்ற பரிசு இது :)
          ''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச கொள்ளைக்காரனை கண்டுபிடிச்சிட்டோம் ..அவனை விட்டுவிடுங்கன்னு ஏன் சொல்றே ?''

24 October 2017

தூக்கம் ,வரும் காரணமும் வரா காரணமும் :)

 *தமிழ் அர்ச்சனைக் கேட்டு கேட்டு போரடிச்சுப் போச்சே :)             
             ''அர்ச்சனையை வடமொழியில் ஏன்  பண்ணச் சொல்றீங்க ?''
             ''எனக்குத்தான் தமிழில் அர்ச்சனை தினமும் வீட்டில் நடக்குதே !''

கெட்ட கணவன் அருகில் படுத்தால் ....:)
           ''உன் அருகில் படுத்தவுடன் எனக்கு  ஒரு நொடியிலே தூக்கம் வரக் காரணம்,உன் நல்ல மனசுதான்னு தோணுது !''
           ''எனக்கு தூக்கம் வராத காரணம் இப்போ புரியுதுங்க !''

நாற்றத்தைக் கூட  நாசூக்கா  சொல்லணும் :)
              ''என்னோட டூத் பிரஷ்  எப்பவுமே புதுசா இருக்கும்னு எப்படிச் சொல்றே ?''
            ''நீ பக்கத்திலே வந்தாலே, அதை நீ பயன்படுத்துறது இல்லைன்னு தெரியுதே !''

பஸ்ஸிலே சேட்டைன்னா தர்மஅடி கிடைக்கும்தானே :)                 
       '' கை எலும்புதான் முறிவு , தலையிலே  ஏன்  ஸ்கேன் பண்றீங்க டாக்டர் ?''
      '' கை சேட்டை பண்ணும்போது , மூளை எங்கே போச்சுன்னு பார்க்க வேண்டாமா ?''

தொடுப்பு எல்லையைத் தாண்ட முடியாதுதானே :)
         ''தலைமறைவா  இருந்த தலைவரை ,அவரோட  'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!''
         ''பாவம் !அவராலே 'தொடுப்பு' எல்லைக்கு வெளியே போக முடியலே போலிருக்கு!''

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

21 October 2017

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் :)

*அற்பனுக்கு வாழ்வு வந்தா :)
             ''பரிமளா ரொம்பத்தான் பந்தா காட்டுறாளா,எப்படி ?''
             ''தலையாணி உறையைக் கூட அயர்ன் பண்ணக் கொடுக்கிறாளே !''

இரண்டு மனைவிகளுக்கும் ஒரே பெயரா :)    
             ''மனைவி ஞாபகார்த்தமா  ஷாஜஹான் ,தாஜ் மகாலைக் கட்டி இருக்கார் , நீங்க என்ன செய்வீங்க ?''

14 October 2017

*இளம்மனைவி இப்படி சந்தேகப் பட்டால் சந்தோசம் நிலைக்குமா :)

                   '' புது பெண்டாட்டிகிட்டே ,ஒரு பேச்சுக்கு புது செருப்பு கடிக்குதுன்னு சொன்னது தப்பா போச்சா ,ஏண்டா ?''
                    ''இப்படி ஜாடைமாடையா என்கிட்டே பேசினால் நடக்கிறதே வேற என்று மிரட்டுறாளே!''


இப்படியும் சில பேர் :)
         ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை, அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''

8 October 2017

*இவர் ஆபீஸ் கணக்கில் மட்டுமே வீக் :)

           '' குழந்தைகளை  மட்டும் சரியா பெத்துக்கத் தெரியுது ,ஒரு சின்னக் கூட்டல் கணக்கை சரியாய் செய்யத் தெரியாதான்னு ,மேனேஜரிடம் திட்டு வாங்கிறாரே...அந்த கேஷியருக்கு எத்தனைக் குழந்தை ?'' 
               ''ஐந்து வருசத்தில் ஆறு குழந்தைகளாம்!'' 

கடன் வெட்கமறியாது :)
        ''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?'' 

7 October 2017

RUM என்றால் ROUTINE UTILITY MEDICINE என்பது உண்மையா :)

 *ரகசியம் அம்பலமாகி போச்சு :)
                ''வீட்டிலே என் சமையல்தான் என்று உன் ஆபீஸ் தோழிகளுக்கு  தெரிந்து போச்சா ,எப்படி ?''
                 ''கல்யாணத்துக்கு முன்னால் ,நான் கொண்டு போன குழம்பு ரசம் எல்லாம்  இவ்வளவு ருசியாய் இருந்ததில்லையாம் !''
  
கணவன் மேல் சந்தேகம்னா இப்படியா குத்திகாட்டுவது ?
             ''  வேலைக்காரி கேட்கிற  'டிடர்ஜென்ட்  கேக்' சோப்பை  ,இனிமேல் நான் வாங்கி வரக் கூடாதுன்னு சொல்லிட்டா என் மனைவி !''

6 October 2017

நாம் எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள்தான்:)

*படித்ததில் இடித்தது :)
           ''இப்போ இருக்கிற சட்டப்படி பார்த்தா ,இராமர் சீதை  கல்யாணம்  செல்லாதா .ஏன் ?''
            ''கல்யாணத்தின் போது ராமருக்கு வயது 13 ,சீதைக்கு வயது 6 தானாமே!''
இடித்த செய்தியின் தொடுப்பு ...இராமன் சீதை வயது விபரம் :)

ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் :)
      '' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''

5 October 2017

*சொப்பன சுந்தரியோட காராய் இருக்குமோ இது :)

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ,
               சரியாக ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ,இதே நாளில்தான் வலையுலகத்தை ஒரு ஏழரைச் சனி பிடித்துக் கொண்டது!அந்த ஏழரைச் சனி  தன்னை 'ஜோக்காளி'என்று அறிமுகப் படுத்திக் கொண்டதையும் மறந்து இருக்க மாட்டீர்கள்  என்று நம்புகிறேன் ! என்னவொரு பொருத்தம் பாருங்கள் ,இன்றோடு பக்கப் பார்வைகளின் எண்ணிக்கையும் 'ஏழரை 'லட்சத்தைத் தாண்டப் போகிறது !
        இன்று ஆறாவது பிறந்த நாளிலும் தொடரும் உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றி :)
            
 *சொப்பன சுந்தரியோட காராய் இருக்குமோ இது :)       
            ''நான் உயில் எழுதும்போது ,நம்ம காரை அசையும் சொத்துக் கணக்கில் காட்டகூடாதா ,ஏண்டா ?''

4 October 2017

நிர்வாணமாய் நடிப்பதும் சுதந்திரமா :)

*படித்ததில் இடித்தது :)
                ''நடிகையின் பேட்டியைப் படித்து விட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''

3 October 2017

சமந்தா ரெட்டி ஞாபகமாவே இருக்காங்க :)

*கச்சேரிக்கு போனா தப்பிக்க முடியாது :)            
               ''என்  கச்சேரியை  நேரடியா கேட்கிறதை விட ,டிவி யில் கேட்பது வசதியா இருக்கா ,ஏன்  ?''
              '' வேற  சானலுக்கு உடனே போய்விட முடியுதே !''

இப்படியும் சொல்லலாமா :)            
           ''நானே கால்நடை டாக்டர் ....நானென்ன  மேஜர் ஆப்பரேசனுக்கா   போறேன் ?உடனே  கிளம்புங்கன்னு  ஏன் பறக்கிறே ? ''

2 October 2017

இனிமேல் புருஷனுக்கு பால்கோவா கிடைக்குமா:)

இரயில்வேக்கு   ஒரு யோசனை :)         
              ''பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க  தாமதம் ஆகத்தான் செய்யும் ,என்ன செய்யலாம் ?''
             ''அதுக்கும் ரிசர்வேஷன் வசதியைக் கொண்டு வரலாமே !''  
  
மயிர் பிளக்கிற ஆராய்ச்சின்னா  இதுதானா :)                         
               ''என்னடா ,ரொம்ப நேரமா 'ஏர் பட்ஸ் 'சோட  இரண்டு முனைப் பஞ்சையும்  பார்த்துகிட்டே இருக்கே ?''

1 October 2017

*தாய்க்கு பின் தாரம்,எதில் :)

                ''தாய்க்கு பின் தாரம்னு ஏன் சொல்றங்கன்னு கேட்டா ,கல்யாணமானா புரியும்னு  ஏன் சொல்றீங்க ?''         
                ''அடி வாங்கின அனுபவத்திலே சொல்றேன் !''
பெரிய வீட்டில் 'சின்ன வீடும் ' இருக்க முடியுமா :)
          ''இரண்டு பெட் ரூம் உள்ள வீடு வாங்கலாம்னு  என் வீ ட்டுக்காரர்  சொன்னார் ,சந்தோசப் பட்டேன்..... ''