19 December 2015

மனைவி கதவை திறப்பதற்கு கண்டக்டரின் ஐடியாவோ ?

 பயணத்தில் இப்படியுமா சோதனை வரும் :)

                          ''ஓயாம டயத்தைக்  கேட்கிறீங்களே ,கடியாரம் நின்னு பத்து நிமிஷமாச்சு,போதுமா  !''
                        ''கோவிச்சுக்காதீங்க தம்பி  ,கடியாரம் எப்ப நின்னுருக்குன்னு  பார்த்துச் சொல்லுங்க நான் கணக்கு பண்ணிக்கிறேன் !''
அன்று 'தேவதை 'மனைவி ,இன்று ? 
            ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டால் மட்டும்  குரைக்குது,ஏன் ?'' 
       
        ''நாய்ங்க கண்ணுக்கு  பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''



மனைவி கதவை திறக்கணும்னு கண்டக்டரின் ஐடியாவோ :)

          ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு ,ஏதோ எழுதிப் போட்டிருக்கீங்களே ,என்னது ?''
            ''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேன் !''

    1. லாட்டிரி யோகம் எல்லோருக்கும் உண்டா :)
    2. விட்டதை விட்ட இடத்தில் பிடிக்க வேண்டுமென 
    3. விட்டத்தை பிடித்த அப்பாவின் நிழல் ..
    4. அவர் விட்டுசென்ற பெட்டியில் 
    5. கட்டு கட்டாய் லாட்டிரி சீட்டுகளில் !

26 comments:

  1. 01. இது சிறந்த யோசனை
    02. அப்ப இவன் இன்றைக்கு பட்டினிதான்
    03. இது நல்லா இருக்கே...
    04. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. இதையும் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கேட்டால் எங்கே போய் முட்டிக் கொள்வாரோ:)
      இன்றைக்கு மட்டும்னா பரவாயில்லையே :)
      சின்னப் பசங்க விளையாட்டா ஊதிட்டு போனா என்ன பண்றது :)
      சூப்பர் ,லாட்டரி மோகம் அப்பனை விட்டத்தில் ஏற்றியது தானே :)

      Delete
  2. இல்ல... ஓடாத கடியாரம்... ஒங்களுக்கு எதுக்கு தம்பி... கொடுங்க நா ஓடவச்சுக்கிறேன்...!

    நான் பேய் இல்ல... பிசாசு... நல்லது மட்டுமே செய்யிற பிசாசு...!

    நல்ல வேளை விசிலை ஊதி அணைக்கவுமுன்னு எழுதாம விட்டீங்களே...!

    பொழப்பு இப்ப லாட்டரி அடிக்கிது...!

    த.ம.2



    ReplyDelete
    Replies
    1. இப்படியும் பிடுங்கி எடுப்பாரா ,என்ன மனுஷன்யா இவர் :)

      இப்படியும் பிசாசா ,இன்னொன்னு இருந்தாலும் பரவாயில்லை போலிருக்கே :)

      அணைக்கும் போது சத்தம் எதுக்கு :)

      மகனின் பொழப்புமா ,தரித்திரம் :)

      Delete
  3. எல்லாவற்றையும் சிரித்து ரசித்தேன். கடைசி விஷயம் வேதனையுடன் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த தலைமுறையில் குடிப் பழக்கம் என்றால் ,சென்ற தலைமுறையில் லாட்டரி ,சரிதானே :)

      Delete
  4. லாட்டரி யோகம் ரசித்தேன். சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படத்தில் லாட்டரிச்சீட்டையே நம்பி ஒரு தந்தை தன் வாழ்வையும் மகள்களின் வாழ்வையும் தொலைப்பார். அக்காட்சி இப்போது நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. பாலச்சந்தர் படங்கள் எல்லாமே உங்களின் ரசனைக்கு தீனி போட்டவை என்பது சமீபத்திய உங்கள் பத்திரிக்கை கட்டுரையிலும் அறிந்து கொண்டேன் ,வாழ்த்துக்கள் :)

      Delete
  5. விசில் சத்தம்ன்னாலே..அது கண்டக்டர் ஐடியதான் சந்தேகமே வேண்டாமே....

    ReplyDelete
    Replies
    1. மனைவிக்கு மட்டுமல்ல ,விசிலுக்கும் அவர் சொந்தக்காரர் :)

      Delete
  6. பத்து நிமிஷமாச்சுன்னு அவர் எந்த கடிகாரம் பார்த்து தெரிந்து கொண்டார்நினைத்தது நடந்து விட்டதால் தேவதையும் பேயாய்த் தெரிகிறாள்கரண்டை மிச்சப்படுத்த இதுவும் நல்ல ஐடியாதானே

    ReplyDelete
    Replies
    1. செல்லைப் பார்த்துதான் :)
      காரியம் முடிந்து விட்டதால் என்றும் சொல்லலாமே :)
      கரெண்ட் இருக்கும் நேரத்திலேயே இப்படி செய்யலாமோ :)

      Delete
  7. Replies
    1. ரைட் ரைட் கொடுத்து ஊக்கப் படுத்தியதற்கு நன்றி :)

      Delete
  8. ரசித்தேன்.
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. அந்த கணவரின் சமயோசிதமான பதிலையும்தானே :)

      Delete
  9. அண்ணி கையில கடப்பாறையும் தெரியுதே அது எதனால ?..
    (அண்ணைக்கு அடி விழப் போகுது அதனால தான் :) ) :)

    ReplyDelete
    Replies
    1. கடலைப் பருப்பை உடைக்க கடப்பாறை எதுக்கு,கையே போதாதா :)

      Delete
  10. ''கரண்ட் கட் நேரத்தில்
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. தேவையே எல்லா கண்டுபிடிப்புக்கும் தாய் என்பது சரிதானே :)

      Delete
  11. எல்லாவற்றையும் ரொம்பவெ ரதித்துச் சிரித்தோம் அதுவும் முதல்..ஹஹ

    ReplyDelete
    Replies
    1. பஸ்ஸில் சில நேரங்களில் ,இப்படித்தான் சில பெருசுங்க இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதா என்று துளைத்து எடுப்பார்கள் :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேவதையாய் தெரிந்த மனைவி ,இப்போ தேவைதானா என்றாகி விட்டதை ரசீத்தீர்களா :)

      Delete
  13. ஹாஹாஹா! ரசித்தேன்! சிரித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நேரம் சரியில்லே ,தொல்லை தொடருதே :)

      Delete