31 March 2015

சப்பாத்தி போடும் சாப்ட்வேர் :)

 ----------------------------------------------------------------

அர்த்த ராத்திரியில் இப்படியா கணவனை விரட்டுவது   :)               

            ''ராத்திரி 12 மணியாகப் போவுது ,விடிஞ்சா ஐம்பதாயிரம் வேணும்தான் ,ஆனால் ,என்  ஏடிஎம் கார்டில் ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம்  எடுக்க முடியாது ,என்னடி பண்ணச் சொல்றே ? ''  

                             ''12 மணிக்கு முன்னாலே 25ஆயிரமும்,12 மணிக்கு பின்னாலே 25 ஆயிரமும் எடுக்கலாம் ,இப்பவே ஒடுங்க !''

  இருமனம் இணைவது திருமணம் தானே ?

      ''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படிச் சொல்றே ?''
       ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''
ஆஹா அருமையான வாசகம்
மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்




  1. சில பேர் கட்டிங்கை மட்டுமே ரசிப்பார்கள் ,வெல்டிங்கையும் வெட்டிங்கையும் நீங்க ரசித்ததற்கு நன்றி
  2. இந்த கட்டிங்கை நீங்க ரசித்தமைக்கு நன்றி
  3. ‘வெட்டிங்’ ஒருவகையில் ’வெல்டிங்’தான். ரெண்டுபேரும் ‘பிரிய’ நினைச்சா, பஞ்சாயத்து, கோர்ட்டுன்னு வருசக் கணக்கில் அலையுறாங்களே!!




    1. அலையாம பிரிய இதுயென்னஅமெரிக்காவா ?
    2. கலர் பார்க்க முடியாதவர் ,மாத்திரையில் மட்டும் !

                   ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  
    3. சாப்பிடச் சொன்னா ,சைஸ் மாத்தி தரச் சொல்றீங்களே ,ஏன் ?''
    4. ''டாக்டர் ,நான் வந்திருக்கிறதே கலரே தெரியலைன்னுதான் !''

    5. சாப்ட்வேர் படித்தும் சந்தேகம் தீரலையே !



      அதெப்படி அம்மா ,டிவைடரில் வரைந்ததுபோல்
      அழகான  வட்டமாய் சப்பாத்தி போடுகிறாய் ?
      கேட்டது MCA முடித்த கல்யாணவயது அருமை மகள் ! 
    6. சப்பாத்தி போடும் சாப்ட்வேர் .




      1. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று வருத்தப் படுவதை விட ,பிச்சு திங்கிற சப்பாத்தி வட்டமாய் இருந்தால் என்ன ,சதுரமாய் இருந்தால் என்ன ?சாப்ட்வேர் போட்ட சப்பாத்தியே மேல் என்று சந்தோசமா இருக்க வேண்டியது தான் !



30 March 2015

பெண் மனது மட்டும் ஆழமில்லே :)

மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்ககதரிசி :)

                   ''கால் விரல் அணிகலனுக்கு  மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்க்கதரிசியாத்தான் இருக்கணும்னு ஏன் சொல்றீங்க ,மாமா ?''
                    ''என் மகளுக்கு  போட்ட தங்க நகைங்களில் எதுவும் மிஞ்சியிருக்கிற மாதிரி தெரியலையே ,மாப்பிள்ளை !''

மனைவியிடமா வாய்தா கேட்பது ?

        ''உன் வீட்டுக்காரர் வக்கீலாச்சே ,அவரை ஏன்  டைவர்ஸ் பண்ணிட்டே?''
  ''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''
Ramani S31 March 2014 at 05:23
வக்கீல் புருஷனா இருக்கலாம்
வாய்தா வக்கீல்னா லொள்ளுதான்..
பழக்க தோஷத்தில் வீட்டில் வாய்தா கேட்டதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ?இனிமேல் அவர் கோர்ட்டில் கூட வாய்தா கேட்க மாட்டார்னு படுது !
துரை செல்வராஜூ30 March 2014 at 09:14
வாய்தா கேட்டதால் - வக்கீல் வாழ்க்கை இழந்து போனாரே.. !?..

(இப்பத்தான்..யா நிம்மதி!)

... !?...
இனி அவருக்கு எந்த கறுப்பு கவுன் வந்து சோறு போடப் போகுதோ ?
மனைவி போட்ட ‘டைவர்ஸ்’ கேசுக்கும் ‘வாய்தா’ வாங்கிட்டே இருந்திருப்பாரே. எப்படி அந்த அம்மாவால் டைவர்ஸ் வாங்க முடிஞ்சுது?






  1. அப்படி ஆகிவிடும் என்றுதானோ என்னவோ ஒரு வருடம் பிரிந்து இருந்தாலே நீதிமன்றம் விவாக ரத்து கொடுத்து விடுகிறதோ !


தலைவலி தனக்கு வந்தா தான் தெரியும் !

         ''என் பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிட
 நீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''

        ''காலி பண்ணாமே இருந்த  பக்கத்து போர்சன்காரங்க  சொல்லாம 

கொள்ளாம ஓடிட்டாங்களே !''
        
        ''இவ்வளவு நல்லது பண்ண எங்களுக்கு நீங்க 
என்ன செய்யப் போறீங்க ?''

     ''இனிமேலும் வீணையை விடலேன்னா நீங்களும் வீட்டைக் காலி பண்ண 

வேண்டி இருக்கும் !''



பெண் மனது மட்டும் ஆழமில்லே !

கடலில் மூழ்கியவர்களைக் கூட காப்பாற்றி விடலாம் ...
டாஸ்மாக் கிளாஸில்  மூழ்கியவர்களை
ஒன்றும் செய்ய முடியாது !


29 March 2015

கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க :)

------------------------------------------------------------------

காதலனை இப்படியா நோகடிப்பது :)

                   ''இவர் காதலிச்ச பொண்ணு இதைப் படித்தால் என்ன நினைப்பா ?''
             '''நல்ல வேளை,இவன் வண்டிக்கு AK கிடைச்சமாதிரி ,இவன் கைக்கு AK47 துப்பாக்கி கிடைக்காததால் தப்பித்தேன்னுதான் !''



கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க ?

             "எதுக்கு இரண்டு தோசைக்கல் வாங்குறே ?"
           "என்ன செய்றது ?உங்களுக்கு சுடச் சுட தோசை வேணும் ,தோசை வேகிற வேகத்தைவிட, நீங்க அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே  !"
Chokkan Subramanian1 April 2014 at 15:46
உங்க வீட்டு அனுபவத்தை எல்லாம் இப்படியா ஜோக்காக போடுறது???
  1. Bagawanjee KA1 April 2014 at 23:12
சொக்கன் ஜி ,பக்கத்திலே காதைக் கொண்டாங்க (காதைக் கடிக்க மாட்டேன் ,தைரியமா வாங்க )எனக்கு தோசை என்றாலே சுத்தமாய் பிடிக்காது !







  • புரோட்டாக் கடை தோசக்கல்லு மாதிரி பெருசா வாங்கியிருக்கலாம்!






    1. அவ்வளவு பெரிய கல்லு சூடாகிற வரைக்கும் நம்மாளுக்கு பொறுமை இருக்காதே !மாவைக் குடிக்க ஆரம்பித்து விடுவாரே !


  • அம்பாளடியாள் வலைத்தளம்29 March 2014 at 02:37
    ஐடியா நல்லாத் தான் இருக்கு மூஞ்சி கறுக்காமல் இருந்தால் சரி தான் :)






    1. மூஞ்சி கறுத்தாலும் பரவாயில்லை ,இவருக்கு தோசை வார்த்து கொடுத்து  முடிப்பதற்குள் அம்மாவுக்கு முழங்கால் வலி  வந்து விடுகிறதாமே?

  • இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு !
    ''அந்த இயக்குனடரோட ஹீரோ ஹீரோயினைப் பற்றி ஒரே வரியிலே எப்படி சொல்லலாம் ?''
    ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும் ,ஹீரோயினுக்கு 'துணி 'கம்மியாவும் இருக்கும் !''








    பழி ஓரிடம் ,பாவம் ஓரிடம் !

    அடாவடியாய் பேசுவதென்னவோ நீ ...
    பாதிக்கப் படுவது மட்டும் நாங்களா ?
    முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !







    28 March 2015

    வயசுக் கோளாறுக்கு எப்படி சந்தோசப் படுறது :)

    -------------------------------------------------------------------------------

    வாஸ்து மீனாம் ,பேரு சாணக்கியாவாம் :)
                     ''தொட்டியில் நீந்துற மீன்களை எல்லாம் உற்று உற்றுப் பார்க்கிறீங்க ,கையிலே வேற ரிவால்வர் ,என்ன செய்யப் போறீங்க ?''
                     ''கிரிக்கெட் மேட்ச்சிலே இந்தியா ஜெயிக்கும்னு சொன்ன சாணக்கியா மீனைக் காட்டுங்க,சுட்டுத் தள்ளணும்!''

    வயசுக் கோளாறுக்கு எப்படி சந்தோசப் படுறது ?

                  ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
                 ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''
     நம்பள்கி28 March 2014 at 21:40
    டிபிஆர்.ஜோசப்28 March 2014 10:59
    அந்தம்மா எவ்வளவு டென்ஷனோட வந்துருப்பாங்க. இப்படியா டாக்டர் ஜோக் அடிப்பாரு? பாவம் அந்த பொண்ணு!

    Bagawanjee KA28 March 2014 16:29
    எல்லா டாக்டர்களும் வருபவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார்களா ?பிரசவ வலியால் துடிப்பவரிடம் கூட 'இப்ப மட்டும் வலிக்குதா 'ன்னு கேட்ட டாக்டர்களைப்பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ?

    பாவம் அந்த பொண்ணா ?கேவலமான காரியத்தை செய்ததற்கு அவமானம்தானே வந்து சேரும் ?
    நன்றி
    _______________________________
    [[இப்ப மட்டும் வலிக்குதா 'ன்னு கேட்ட டாக்டர்களைப்பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ]]

    It is true---In all deliveries..!
    But, only nurses and female doctors ask this question. This is very very common!
    NONE of the male doctors insult females, rather mothers, like this. Only females insult other females.
    I have fought with my many nurses and female doctors for insulting like this.
    Iet me write a post.
    Jeevalingam Kasirajalingam1 April 2014 at 21:48
    வயசுக் கோளாறு வந்திச்சா
    வயிற்றுப் பையோ நிரம்பிச்சா
    பருவக் கோளாறு பத்திச்சா
    அறிவுப் பையோ வத்திச்சா
    "மணமுடிக்க முன் கருவுற...''






    1. Bagawanjee KA1 April 2014 at 22:56
      வந்திச்சா, நிரம்பிச்சா, பத்திச்சா, வத்திச்சான்னு நீங்க கேட்கிறதைப் பார்த்தால் மானமிழந்த அந்த பொண்ணு சாவுறதைத்தவிர வேறு வழியில்லைப் போலிருக்கே !
    2. இது என்ன 36 ''24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு ?

      ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
      ''இன்ச் டேப்பிலே அளந்துதான் வாங்குவான்னா நீங்களேப் பார்த்துக்குங்க !''
    3.  Bala subramanian28 March 2013 at 20:25
      குரு ; சிஷ்யா எங்க அப்பப்ப உங்கள காண முடியலே எங்க போறிங்க
      சிஷ்யா ; பிராணயாமம் பண்ண போயிருந்தேன் குருவே
      குரு ; அப்படியா பேஷ் பேஷ் நல்லா வருவே இந்த பிள்ளையாண்டானைப் பாருங்கோ எவ்வளவு புத்தி சாலியா இருக்கான்
      சிஷ்யா 2 ; குருவே இவன் பாத்ரூம்ல சிகரெட் புடிச்சிட்டு வரான் அதுக்கு பொய் பாராட்டுரீலே
      குரு ; எண்டா அம்பி அப்படியா
      சிஷ்யா; குருவே முழுசா உள்ள இழுக்கணும் அப்படியே பிடிக்கணும் அப்பறம் முழுசா வெளிய உடனும்னு நீங்கதான குருவே சொல்லிக்குடுத்தீங்க

      கோயால யார்கிட்ட என்ககிட்டேயவா ..ஹா.. ஹா... ஹா.. ஹா... ஹா.. ஹா..
    4. ஜோக்காளி என்றாலே சிரிப்புதான் என்று 'நல்ல 'முடிவு எடுத்து உங்கள் ஜோக்கை போட்டதுக்கு நன்றி !
      இதைப் படிக்கும் போது இன்னொரு ஜோக் எனக்கு நினைவிற்கு வருகிறது ...
      குருவிடம் சிஷ்யன் கேட்டானாம் ''தியானம் செய்யும் போது தம் அடிக்கலாமா ?''
      ''கூடாது ''
    5. ''தம் அடிக்கும் போது தியானம் செய்யலாமா ?''
      ''தாராளமா செய்யலாம் !'''
    6.    
    7. உங்களின் ஊகம் சரிதான் !

        (இந்த பதிவு வந்த போது நாட்டை ஆண்டுகொண்டு இருந்தது காங்கிரஸ் : )


        1. சொற்கள் -பெண்பால் 
           செயல்கள் -ஆண்பால் ...
           இது இன்றைய இந்திய அரசியலுக்கும் பொருத்தமே ...
           காரணம் ,இது ஒரு இத்தாலியப் பழமொழி !








  • 27 March 2015

    போங்க பாஸ் ,பிள்ளைக் குட்டிங்களை படிக்கவைங்க :)

    ---------------------------------------------------------------


    திருடர்களுக்கு எச்சரிக்கை :)       


                      ''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
                  ''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''


    இது உண்மையா ?பெண்கள்தான் சொல்லணும் !

                ''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போயிடுதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப ஏன் அவளை வேண்டாங்கிறே ?''
               ''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''
     Mythily kasthuri rengan27 March 2014 at 10:22
    பொண்ணுங்களை குறைசொல்லலை ன ஆண்களுக்கு தூக்கம் வரதே!
    நீங்க மட்டும் டீ கடைல பிரசங்கமா கேட்குறிங்க?
    நாங்களாவது அக்கம்பக்கத்து வீடு பத்தி பேசுவோம் , நீங்க ஊர் , உலகவம்பை விவாதம் என்கிற பேர்ல பேசுவிங்க! போங்க பாஸ் போய் பிள்ளைகுட்டிகளை படிக்கவைங்க !



    1. பெண்களை குறை சொன்னாத்தான் ஆண்களுக்கு தூக்கம் வரும் ,அப்படித்தானே ?நல்ல கண்டுபிடிப்பா இருக்கே ?
      மூளின்னா மூக்கைத் தொட்டுப் பார்த்துக்குவாளாம்...மேடம் இப்படி பொரணி பேசுறதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க செய்ற வேலை ,நீங்கதான் ஜெம் ஆச்சே !
      பசங்ககிட்டே நான்தான் படிச்சு தெரிஞ்சுக்கிற காலமாகிப் போச்சு !என்ன செய்றது ?அவ்வ்வ்!
    2. Mythily kasthuri rengan27 March 2014 at 19:56
      (ஹச் ! தும்மல்) ஒகே ,ஒகே சமாதானக்கொடியை பறக்கவிட்டாச்சு. 
      நேத்து ஜோக் தொடர்ச்சி போல் ஒன்னு நடந்துச்சு சார்.
      என் ஸ்கூல் கல்வி குழு உறுப்பினர் புதுசா கல்யாணமான டீச்சர் ஒருத்தருக்கு வாழ்த்துசொல்ல வந்தார். அவங்க லஞ்ச்சுக்கு வீட்டுக்கு போய்டாங்க. அவர் என்னை பார்த்து இப்போ உங்க குடும்பம் எங்கிருக்கு மிஸ் என்றார். சக டீச்சர் டென்சன் ஆகி "சார் வனிதா லஞ்ச்க்கு வீட்டுக்கு போட்டாங்க , இந்த மிஸ் மகள் மூணாவது படிக்குது , நான் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போறேன் என கலாய்ச்சு விட்டுடாங்க ! எனக்கு உங்க ஜோக் தான் நினைவுக்கு வந்துச்சு!
    3. ஹாஸ்ய ரசம் தினம் பருகுவதால் உண்டான உங்கள் இளமையானத் தோற்றம் ,அவரை அப்படி நினைக்க வைத்து இருக்கலாம் இல்லையா ?
      நன்றி
    4. Thulasidharan V Thillaiakathu29 March 2014 at 14:00
      பாருங்க ஜி! மைதிலி டீச்சர் இதைச் சாக்கா வைச்சு, தான் இளமையாக இருப்பதை அப்படியே மெதுவா எடுத்து விடறாங்க......!!!!!!!!!!!!!!!
    5. அப்படி நினைப்பதில் தவறில்லையே ?உற்சாகமாக இருக்க உதவுமே !
    6. தமிழகம் ஜொலிக்குது [மின்னல் வெட்டினால் ]!

             ''சீக்கிரமே கரெண்ட் தண்ணி பட்டபாடு படப் போவுதுன்னு சொல்றாங்களே ,உண்மையா ?''
               ''கரெண்ட்டும் ஒருநாள் விட்டு ஒரு நாள் தான் வரும்னு  மறைமுகமா சொல்றாங்க போலிருக்கு !''