31 March 2016

சப்பாத்தி போடுமா சாப்ட்வேர் :)

இப்படியும் நல்ல குணம்  வருமா :)           
                  ''  மாசம் பிறக்கிறதுக்கு முன்னாடியே ,வாடகையை நாணயமா கொடுக்கிற உங்க பையனை எப்படி பாராட்டுவது என்றே தெரியலே !''
                  ''அவன் பிறந்ததே வாடகைத் தாய் வயிற்றிலாச்சே ,இதிலே  ஆச்சரியப்பட என்னாயிருக்கு  ?'' 
இந்த மொக்கைப் போட உதவிய ,இந்த http://www.dinamalar.com/news_detail.asp?id=915165 இந்த தொடுப்புக்கு நன்றி !
அர்த்த ராத்திரியில் இப்படியா கணவனை விரட்டுவது   :)               
            ''விடிஞ்சா ஐம்பதாயிரம் வேணும்... ஏடிஎம் கார்டில் ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம்  எடுக்க முடியாது ,என்னடி பண்ணச் சொல்றே ? ''  
           ''ராத்திரி 12 மணிக்கு முன்னாலே 25ஆயிரமும்,12 மணிக்கு பின்னாலே 25 ஆயிரமும் எடுக்கலாம் ,இப்பவே ஒடுங்க !''
இருமனம் இணைவது திருமணம் தானே :)
      ''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படிச் சொல்றே ?''
       ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''
கலர் பார்க்க முடியாதவர் ,மாத்திரையில் மட்டும் :)
             ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,சைஸ் மாத்தி தரச் சொல்றீங்களே ,ஏன் ?''
           ''டாக்டர் ,நான் வந்திருக்கிறதே கலரே தெரியலைன்னுதானே ?''
சப்பாத்தி போடுமா  சாப்ட்வேர் :)
    அதெப்படி அம்மா ,டிவைடரில் வரைந்ததுபோல்
    அழகான  வட்டமாய் சப்பாத்தி போடுகிறாய் ?
    கேட்டது MCA முடித்த கல்யாண வயது அருமை மகள் ! 


30 March 2016

மனைவியிடம் வாய்தா கேட்கலாமா :)

தம்பி ஏதோ பிளான் பண்ற மாதிரி இருக்கே :)
           ''தம்பி ,நான் இராணுவத்தில் சேர்த்தே ஆகணும்னு ஏண்டா கட்டாயப் படுத்துறே ?''
           ''தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லி இருக்காங்களே ! ''
 மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்ககதரிசி :)
                   ''கால் விரல் அணிகலனுக்கு  மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்க்கதரிசியாத்தான் இருக்கணும்னு ஏன் சொல்றீங்க ,மாமா ?''
                    ''என் மகளுக்கு  போட்ட  நகைங்களில் வேற எதுவும் மிஞ்சியிருக்கிற மாதிரி தெரியலையே ,மாப்பிள்ளை !''
மனைவியிடம் வாய்தா கேட்கலாமா :)
        ''உன் வீட்டுக்காரர் வக்கீலாச்சே ,அவரை ஏன்  டைவர்ஸ் பண்ணிட்டே?''
        ''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''
தலைவலி தனக்கு வந்தா தான் தெரியும் :)
            ''என் பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிடநீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''
            ''காலி பண்ணாமே இருந்த  பக்கத்து போர்சன்காரங்க  சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !''
             ''இவ்வளவு நல்லது பண்ண எங்களுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க ?''
            ''இனிமேலும் வீணையை விடலேன்னா நீங்களும் வீட்டைக் காலி பண்ண வேண்டியிருக்கும் !''
பெண் மனது மட்டும் ஆழமில்லே :)
கடலில் மூழ்கியவர்களைக் கூட காப்பாற்றி விடலாம் ...
டாஸ்மாக் கிளாஸில்  மூழ்கியவர்களை
ஒன்றும் செய்ய முடியாது !

29 March 2016

கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க :)

பீரோ சாவியை வேண்டுமானால் வாங்கிக்குவாளோ:)
        ''உன் மனைவி ஜென்மத்துக்கும் சமையல் செய்ய மாட்டாள் போலிருக்கா ,ஏன் ?''
        ''காக்கா வலிப்பிலே துடிக்கிறப்போ கூட ,இரும்பு கரண்டியை கையிலே வாங்க மாட்டேங்கிறாளே !''
காதலனை இப்படியா நோகடிப்பது :)
                 ''இவரோட காதலி , இதைப் படித்தால் என்ன வேண்டிக்குவா  ?''
               '''நல்ல வேளை, வண்டிக்கு AK கிடைச்சமாதிரி ,இவன் கைக்கு AK47 துப்பாக்கி கிடைக்காம  இருக்கணும்னுதான் !''
கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க :)
             "எதுக்கு இரண்டு தோசைக்கல் வாங்குறே ?"
            "என்ன செய்றது ?உங்களுக்கு சுடச் சுட தோசை வேணும் ,தோசை வேகிற வேகத்தைவிட, நீங்க அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே  !"'
இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு :)
              ''அந்த இயக்குனடரோட ஹீரோ ஹீரோயினைப் பற்றி ஒரே வரியிலே எப்படி சொல்லலாம் ?''
              ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும் ,ஹீரோயினுக்கு 'துணி 'கம்மியாவும் இருக்கும் !''
பழி ஓரிடம் ,பாவம் ஓரிடம் :)
அடாவடியாய் பேசுவதென்னவோ நீ ...
பாதிக்கப் படுவது மட்டும் நாங்களா ?
முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !


28 March 2016

வயசுக் கோளாறுக்கு சந்தோசப் பட முடியுமா :)

அன்பார்ந்த வலையுலக  உறவுகளே ...
தவறான தேதியில் 'செட் அப் ' செய்ததால் இன்றைய பதிவு தாமதமாகி விட்டது !
 நாளை முதல் ஜோக்காளியின் பதிவுகள்  அதிகாலை  நாலரை (ஏழரை அல்ல :) மணிக்கு வெளியாகும் !பிரம்ம முகூர்த்த நேரத்தில்  எழுந்து ,பதிவைப் படித்து  ,தினசரி நாளை இனிதாக தொடங்குங்கள் :)
------------------------------------------------------------------
கட்சிக்கு வேற சின்னமா கிடைக்கலே :)         
            ''கட்சியால் ,கட்சியின் சின்னம் புகழ் பெறும்,ஆனால் வருகிறத் தேர்தலில்  ,விடியலைத் தேடும் இந்தியர்கள் கட்சி, சின்னத்தால்  புகழ் பெறப் போகிறதா ,அந்த சின்னம்தான் என்ன ?''
           ''செருப்புதான் !''
வாஸ்து மீன் ' சாணக்கியா 'இன்னும் உயிரோட இருக்கா :)
                 ''தொட்டியில் நீந்துற மீன்களை எல்லாம் உற்று உற்றுப் பார்க்கிறீங்க ,கையிலே வேற ரிவால்வர் ,என்ன செய்யப் போறீங்க ?''
                 ''சென்றாண்டு கிரிக்கெட் மேட்ச்சிலே இந்தியா ஜெயிக்கும்னு சொன்ன சாணக்கியா மீனைக் காட்டுங்க,சுட்டுத் தள்ளணும்!''

வயசுக் கோளாறுக்கு சந்தோசப் பட முடியுமா  :)
              ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
             ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

இது என்ன 36 ''24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு :)
                ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
                ''டியூப் லைட்டை இன்ச் டேப்பிலே அளந்துதான் வாங்குவான்னா நீங்களே பார்த்துக்குங்க !''  
 காங்கிரஸ் கட்சி நினைவுக்கு வந்தால் 'ஜோக்காளி'பொறுப்பல்ல   : )
         சொற்கள் -பெண்பால் 
         செயல்கள் -ஆண்பால் ...
        இது இன்றைய இந்திய அரசியலுக்கும் பொருத்தமே ...
         காரணம் ,இது ஒரு இத்தாலியப் பழமொழி !

27 March 2016

திருமணம் தந்த மாற்றம் :)


திருடர்களுக்கு எச்சரிக்கை :)       
               ''அந்த வீட்டு வாசல்லே ,எச்சரிக்கைப் போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
              ''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''
                                                             laugh emoticon.jpg
புருசன் மேல் இருக்கிற  நம்பிக்கை  :)
                      ''எப்போ பார்த்தாலும் உன் வீட்டுக்காரர் கத்திகிட்டே இருக்காரே ,எப்படி அவர்கூட வாழ்ந்து கிட்டிருக்கே ?''
                      ''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற   நம்பிக்கையிலேதான் !
                                                             laugh emoticon.jpg
நடிகைன்னா எந்த கூச்சமும் இருக்காதா :)
             ''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
            ''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''                                                                                        
                                                               
திருமணம் தந்த  மாற்றம் :)
               ''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''
              ''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''
                                                                 laugh emoticon.jpg

26 March 2016

கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாமல் போகுமா :)

சாம்பிள்  டீ  குடித்ததும் ரோஷம்  வந்திடுச்சோ :)        
                ''வேலைக்காரி ,தன் வீட்டில் இருந்து போட்டுக்  கொண்டு வந்த டீயை ஆசையா   குடிச்சிட்டு ,இனிமேல் வேலைக்கு வர வேண்டாம்னு  ஏன் சொன்னே ?''
              '' இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் எனக்கு பழக்கம்னு சொல்றாளே !''
இது தோஷ நிவர்த்தி மாதிரி தெரியலே :)           
          ''அந்த ஜோதிடர் குஷ்பு ரசிகர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
          ''தோஷ நிவர்த்திக்கு குஷ்பு கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யணும்னு சொல்றாரே !''
கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாமல் போகுமா :)
          ''என் கிளாஸ்  டீச்சரை  வந்து பார்த்ததில் இருந்து ,அப்பா என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார் ,ஏன்னு  கேளும்மா !''
           ''உன் கிளாஸ்  டீச்சரை நீ மிஸ் ன்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டார் போலிருக்கு  ,என்னன்னு கேட்கிறேன் !''
கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் :)
            ''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
           ''சுயமரியாதை இல்லாம நீங்க இருக்கும் நாள் வரைக்கும் !''
கற்புக் கரசிகளும் ,ஏகபத்தினி விரதன்களும் :)
ஆண்களே இல்லைஎன்றால் எல்லா பெண்களுமே 
கற்புக்கரசிகளாய் திகழ்வார்கள் ...
                           இது ஒரு  சம்ஸ்கிருதப் பழமொழி !
உலகில் ஒரே ஒரு பெண்தான் என்றால் எல்லா ஆண்களுமே 
ஏகபத்தினி விரதன்களாய் திகழ்வார்கள் ...
                        இது ஒரு 'ஜொள்ளனின் 'புதுமொழி !

25 March 2016

கைவிடக் கூடாதுன்னு சொன்னது இதைத்தானா :)

 ஆசீர்வாதத்தையுமா  தப்பாய் எடுப்பது :)         
               ''நடிகைக்கு தீட்சை அளித்த குருவுக்கு கண்டனமா ,ஏன்  ?''
              '' முற்றும் துறந்த நிலையை விரைவில் அடைவாய்னு ஆசீர்வதித்தாராமே   !''
கைவிடக் கூடாதுன்னு சொன்னது இதைத்தானா :) 
          ''என்னாலே நம்பவே முடியலே ,டாஸ்மாக் கடையிலே அவ்வையாரின் ஆத்திச் சூடி வரிகளா ?''
           ''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு எழுதி இருக்காங்களே !''
 ஓரவஞ்சனை செய்வது நியாயமா :)
          ''அனுஷ்காவும் ,ப்ரியாமணியும் தெலுங்கு படங்களில் ஆபாசமா நடிப்பதை  எதிர்த்து  வழக்கு போட்டது சரின்னு சொல்றீங்களே ,நீங்க முற்போக்குவாதியா ?''
         ''அட நீங்க வேற ,தமிழ் படங்கள்லே காட்டாத கவர்ச்சியை அங்கே மட்டும்  காட்டுவது நியாயமான்னுதான் கேட்குறேன் !'' 


தனக்கு தானே தண்டனை அளித்துக் கொள்பவர்கள் :)
கடவுளைக் கும்பிடும்போது 
கன்னத்தில் போட்டுக் கொள்வதற்கு ...
'என் தப்புக்கு நானே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன் 
நீயும் அறைந்து விடாதே ' என்பதுதான் காரணமா ? 

24 March 2016

தூக்கம் கெட்டதே அவளால்தானே :)

இது ஜோக்காளிக்கு மிகவும் பொருந்தும் :)
                  ''வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு நம்புறீங்க ,ஆனால் என் ஜோக் புத்தகத்தை ஏன் படிக்க மாட்டேங்கிறீங்க ?''
                  ''சிரிக்கிற மாதிரி எதுவுமே அதில் இருக்காதே  !''
மாத்தி யோசி  என்பது இதுதானோ :)
                   ''டி வி யில் வர்ற தொடர்களை ராத்திரி ஒருமணி வரைப்  பார்ப்பதால் ,தூக்கம் கெடுதுன்னு மனைவியை திட்டிக்கிட்டே இருந்தீங்களே ..இப்போ எப்படி ?''
                      ''நானும் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தேன் ,உடனே   தூக்கம்  அருமையா வருதே !''
இந்த தைலம் அவருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு :)
             ''அதோ ,அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா  இருக்கே ,எப்படி ஆச்சு ?''        
           ''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம்  !''
இதுவும் ஒரு நல்ல பொருத்த 'மே ':)
           ''நான்  'மே 'மாதத்தில் பிறந்தது ரொம்ப பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
          ''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன்  'ஆட்டு  மூளை 'யை வச்சுத்தான் !''
தூக்கம் கெட்டது அவளால்தானே :)
உன்னைக் கண்டதுமே 
எனக்குப் புரிந்த உண்மையை ...
ஆராய்ச்சியாளர்கள் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள் ...
சாக்லேட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் 
தூக்கத்தைக் கெடுக்குமாம் !

23 March 2016

பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்:)

இப்படியா பயந்து சாவது :)

             ''பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரிய வில்லையே ?''

              ''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''


குடும்ப 'குத்து விளக்கு 'இப்படி படுத்தலாமா :)
            '' உன் பெண்டாட்டியை , குடும்ப பாங்கான குத்து விளக்கு மாதிரி நினைச்சது தப்பா போச்சா .ஏண்டா ?''
                     ''அலாவுதீனின்  அற்புத விளக்கு கிடைச்சாலும் அவளை திருப்தி படுத்த முடியாது போலிருக்கே !''

தலை நகரிலும் தொடரும் தலைவரின் அந்தரங்க லீலைகள் :)
          ''நம்ம தலைவர் டெல்லிக்குப் போனாலும் அவர் லீலைகளை விடமாட்டாரா ,ஏன் ?''
           ''டெல்லி  VIA ஆக்ரா டிரெயின்லே போறோம் சரி ,டெல்லியில் வயாக்கிரா எங்கே கிடைக்கும்னு கேட்கிறாரே !''

ஆபீஸில் 'நீளும் 'கை ,வீட்டில் ...:)
          ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
           ''கை நீட்டுற வேலை எல்லாம்  ஆபீஸோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''

பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்:)
வர வேண்டிய பருவத்தில் 
வரவில்லை என்றால் ...கஷ்டம் !
வருவதும் மணநேரம் வரும் முன்பே 
வராவிட்டாலும் ...கஷ்டம் !
வந்துக் கொண்டே இருந்தாலும் 
தாய்மை அடைவதில் ...கஷ்டம் !
வருவது நிற்கவில்லையே என்று 
பிள்ளைப் பேறு முடிந்தும்...கஷ்டம் !
இஷ்டப் பட்டு கஷ்டப் படுவது ...
பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம் அல்லவா அது  ! 


22 March 2016

துணை (எழுத்து ) ரொம்ப முக்கியம்தான் :)

நன்றி மறவாத  டாக்டர் :)

         ''அந்த டாக்டர் ,அறையிலே  நிறைய பேர் போட்டோவை மாட்டி வச்சிருக்காரே ,யார் அவங்க  ?''

          ''டாக்டரிடம் காசும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவங்கதான் ! ''

                   
மின்சார மந்திரிக்கு பிடிச்ச பூச்சி :)
          ''நம்ம மின்சார மந்திரி அடிக்கடி தன்னோட பேச்சிலே மின்மினிப் பூச்சியை உதாரணம் காட்டுகிறாரே ,ஏன் ?''
           ''ஒரு பூச்சிக் கூட தன் தேவைக்கு வெளிச்சத்தை தானே உண்டாக்கிக் கொள்ளும்போது  ,மனுஷனாலே ஏன் முடியாதுன்னு மறைமுகமா கேட்கிறாரோ!''
துணை (எழுத்து )  ரொம்ப முக்கியம்தான்  :)
        ''பஸ்ஸை எடுக்க வர்ற என்கிட்டே  வேப்பிலைக் கொத்தை ஏன் கொடுக்கிறீங்க,மெக்கானிக்  ?''
         ''பிரேக் பிடித்தால் வண்டி முன்னால் 'பேய் 'நிற்கிறது என்று புகார் நோட்டிலே நீங்கதானே எழுதி இருந்தீங்க ,அதான் !''
டாஸ்மாக் 'தண்ணி'யை மறந்த கவிஞர் !
               ''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ,தண்ணீர் கரையில் முடிக்கிறோம்ன்னு எழுதின கவிஞர் ,நடுவிலே ஒரு வரியை விட்டுட்டார் !''
               ''எந்த வரியை ?'''
               ''தண்ணியில் தினமும் மிதக்கிறோங்கிறதை !''
இவனன்றோ பாரதியின் பேரன் :)
மரணபயம் வென்றவன் ...
எருமைக்குப் பதிலாய் 'YAMAHA 'வை 
எமனுக்கு பரிசளிப்பான் !