31 January 2014

இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !

''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''

இசையால் இயற்கையை இசைய வைக்க முடியுமா ?

''அவர் வயலின்லே அமிர்தவர்சினி ராகத்தை வாசிச்சு ,மழைப் பெய்ய வைக்கிறேன்னு சவால் விட்டாரே ,என்னாச்சு ?''
''அவர் மேலே செருப்பு மழைதான் விழுந்தது !''

30 January 2014

தலைப்பாகையை அலசிப் போட்ட மனைவி சொல்லி இருப்பாளா ?

''காக்கா கக்கா போட்டுகூட  பழமொழி உருவாகி இருக்கா ,எப்படி ?''
''தலைக்கு வந்தது தலைப்பாகையோடப் போச்சுங்கிறது , வேற எப்படி வந்திருக்கும் ?''

நகையும் ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?

''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச் சொல்றீங்க ?''
''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''

29 January 2014

மனைவிக்கு வெங்காயம் நறுக்கித் தந்தாலும் ,இங்கே சவுண்ட் விடுறாரே !

''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா வருது ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
''கொஞ்சம் பொறுங்க சார் ,வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''

மொய் வைச்சவனுக்கு பொய்தான் போஜனமா?

''நாலு பந்தி கூட்டத்திற்கு சாப்பாடு பத்தாதுன்னு சொன்னாங்களே ...எப்படி சமாளிச்சீங்க ?''
''பந்தியிலே பாம்பு புகுந்துருச்சுன்னு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் !''

தவிக்க விட்டுட்டு போன மனைவி திரும்ப வரணும்னா ...!

''கோபித்துக் கொண்டு போன மனைவி  திரும்ப  வரணும்னு அனுமாருக்கு வடை மாலை சாற்றியும் பார்த்திட்டேன் ,ஒண்ணுமே  நடக்கலே ...என்னடா செய்யலாம் ?''
''உன் மோதிரத்தை காணிக்கையா போட்டு பாரேன் !''

28 January 2014

முதுமை கஷ்டம்தான் ,அதுக்காக இதை பயன்படுத்தலாமா ?

''டாக்டர் ,கஞ்சாவுக்கு அடிமை ஆனவங்களுக்கு முதுமை வராதுன்னு நீங்க சொல்றதை என்னாலே நம்பவே முடியலையே ?''
''கொஞ்ச வயசுலேயே போய் சேர்ந்துடுவாங்களே!''

காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ?

''தினமும் நாயைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் வர்ற பொண்ணைக்  காதலிக்க,அவளுக்குப் பிடித்த காரியம் செய்யணும்னு நீயும் ஒரு நாயோட போனியே ,காதல் வந்ததா ?''
''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !''


27 January 2014

கணவனால் இளம் மனைவிக்கு தினசரி அவஸ்தைதான் !

''ராத்திரிப்பூரா  என்னவர் தொல்லைத் தாங்க முடியலேடி !''
''இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு ...அப்படித்தான் இருக்கும் !''
'' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால் என்னாலே தூங்கவே முடியலேன்னு சொல்ல வந்தேன்!''


மயங்கிக் கிடந்தவன் முகத்தில் தண்ணீர் தெளித்தால் ....!

''மயக்கமாகி எழுந்தவனை எல்லோரும் ஏன் அடிக்கிறாங்க ?''
''ஒரு சோடா வாங்கிக் கொடுக்கக்கூட உங்கள்ளே யாருக்கும் துப்பில்லையான்னு கேட்டானாம் !''

26 January 2014

கை மாறிய காதலிக்கு கல்யாணம் !

''5 ஸ்டார் ஹோட்டல் ஏசி ஹாலில் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் ,நீ அவசியம் ரணும்டா !''
''கவலையே படாதே வந்து விடுகிறேன்  ,(மனதுக்குள் )உனக்காக இல்லைன்னாலும் என் பழைய காதலிக்காக வந்து தானே ஆகணும் !''

ஊட்டி புலி தந்த கிலி !

தமிழகத்தின் உச்சபட்ச உயரமான தொட்டபெட்டா பகுதியில் உலா வந்து ...
மக்களுக்கு அதிகபட்ச  கிலியைக்  கொடுத்துக் கொண்டிருந்த புலியை ...

காதலியின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் காதலன் !

''கண்ணா ,எனக்கு 28 வயசாகுது ..இந்த வயசுலே பிள்ளைப் பெத்துக்கிட்டா நல்லதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க !''
''எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லே ,முதல்லே பெத்துக்க ...தாலியைக்கூட மெதுவா கட்டிக்கலாம் !''

MDக்கு வந்த நல்ல எண்ணம் ?

''மேனேஜர் ,நம்ம தொழிலாளிங்க யாரும் 'கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே'ன்னு  பாடக்கூடாது ...!''
''சம்பளத்தை இரண்டு மடங்கு ஆக்கப் போறீங்களா ,முதலாளி ?''
''ஊஹும் ...சம்பளத்தை பாங்கிலே போட்டுருங்க !''

குடியரசு ஆனதன் பலன் அனுபவிக்கிறவங்க யார் ?

''தலைவர்  அறிக்கை விடும் போது மப்புலே இருந்த மாதிரி தெரியுதுன்னு ஏன் சொல்றே ?''
''குடிஅரசு ஆனதின் முழுபலனை  நமது மாநில மக்கள்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும்வண்ணம்,இன்று ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும்  தேசீயக் கொடி ஏற்றவிருப்பதால் 'குடி 'மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சொல்லி இருக்காரே !''

25 January 2014

இவனை வரதட்சணைக் கேஸில் தூக்கிலே போடணும் !

''என்னம்மா ,குண்டைத் தூக்கி போடுறே ... டைவர்ஸ்  நோட்டீஸ் கொடுக்கப் போறீயா ,ஏன் ?''
''உங்கப்பாதான்  பாங்கிலே பெரிய ஆபீசராச்சே ,உடனே  நம்ம வீட்டிலே ஒரு ATM மெசினைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கிறாரே !'' 

ஜாக்கெட்லே ஜன்னல் எல்லாம் தேவைதானா ?

''என் மனைவிகிட்டே ,ஜன்னல் வழியே கையை விட்டு கொள்ளை அடிக்கிறது பெருகிட்டு வருதுன்னு சொன்னது நல்லதாப் போச்சு !'' 
''ஜன்னலுக்குப் பூட்டு போட்டுட்டாங்களா?''
''இல்லே ,ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதையே விட்டுட்டா !''

24 January 2014

சாப்பாடுன்னு மனைவிகிட்டே 'சாப்டா'தான் கேக்கணுமோ ?

''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''

இப்படி எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க ?

''பெட்ரோல் போடுற இடத்திலே  டிரைவர் கூட என்ன தகராறு ?''
''நீ போட்டது பிரீமியம் பெட்ரோல்தானே ,காசையும் நான் ஆறு பிரீமியமாத்தான் தருவேன்னு வம்பு பண்றார் சார் !''

23 January 2014

இதிலே வர்ற வருமானம் I T யிலும் கிடைக்காது !

''என்னடா ,பிச்சையெடுக்க வரமாட்டேங்கிறே ?''
''காசைக் கேட்டு வாங்கி சாப்பிடுறதெல்லாம் ஒரு பிழைப்பான்னு ,கேட்காம எடுக்கிற பிக் பாக்கெட் தொழில்லே  இறங்கிட்டேன் !''

புருஷன் குணம் அறிந்த புண்ணியவதி !

''அம்மா ,அப்பாகிட்டே பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமாயிட்டார்ன்னு  சொன்னா ,அவரை  ஞாபகம் இல்லேன்னு  சொல்றார்மா !''
''அமலாவோட மாமனார்னு  சொல்லு ,கண்ணீரே வடிப்பாரு !''

22 January 2014

சேலை எடுக்க புருஷனை கூட்டிட்டுப் போகலாமா ?

''சேலை எடுக்கணும்னு கடைக்கு வந்தா ,ஒரே ரோதனையா இருக்குன்னு ஏன் சலிச்சுக்கிறே?''
''நான் டிசைனை  பார்க்கிறதுக்குள்ளே நீங்க 
விலையைப் பார்க்கிறீங்களே !''



பதினாறு வயசுக்குள்ளே தேவையா இது ?

''அவரோட பொண்ணுக்கு பதினாறு வயசுலேயே கல்யாணத்தை வைச்சுட்டாரே ,இதுவே லேட்னு ஏன் சொல்றீங்க ?''
''இன்னும் மூணு மாசத்திலே அது தாயாகப்போவுதே !''

21 January 2014

'உண்டானதால் ' புருஷன் மேல் உண்டான பிரியம் அல்ல இது !

''எலியும் பூனையுமா இருந்தே ,இப்போ உண்டானபிறகு உன் போலீஸ் புருஷனை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிறீயே,ஏண்டி ?''
'' இவ்வளவு  வெயிட்டை வயித்திலே சுமக்கிறது ,எவ்வளவு கஷ்டம்னு இப்போதானே எனக்கு தெரியுது !''

படுக்கையிலுமா பத்தடி இடைவெளி ?

'' டாக்டர் ,ரோட்டிலே நான் பாலோ பண்ற பத்தடி இடைவெளி  ரூல்ஸை வீட்டிலேயும் கடைப் பிடிக்கணுமா,ஏன் ?''
''ஐந்தாவது பிரசவத்துக்கு பெண்டாட்டியை கூட்டி வந்திருக்கியே !''

20 January 2014

நன்றி சொல்லும் நேரமிது !

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ...
இன்று காலையில் ஜோக்காளியின் முகத்தில் இன்ப அதிர்ச்சி ...
தமிழ்மண ரேங்க் வரிசையில் Top 1௦ல்  படியேறி விட்டான் ...
பார்வைகளின் எண்ணிக்கையிலும் ஒண்ணரைலட்சத்தை தாண்டியிருந்தான்...

காதல் என்பது இரு கை ஓசை ?

''நீதான் அவளைக் காதலிக்கிறே ,அவ விருப்பத்தை தெரிஞ்சுக்க ...ஒரு கையிலே ஓசை வராதுன்னு  சொல்லிப்பாரேன் !''
''சொன்னேன்டா ,ஏன் வராதுன்னு செருப்பைக் கழட்டி 'பளார் 'ன்னு  அறைஞ்சிட்டாளே !''

19 January 2014

மகளுக்கு கருச்சிதைவுன்னு அப்பன் சந்தோசமா சொல்ல முடியுமா ?

''அர்த்தம் தெரிஞ்சா மட்டும் ஆங்கில வார்த்தையைச் சொல்லுங்கப்பா !''
''இப்ப என்ன சொல்லிட்டேன் ?''
''நான் அபார்ட்மென்ட்டுக்கு போனதை 'அபார்சனுக்கு 'போயிட்டாள்னு சொல்லி இருக்கீங்களே !''

18 January 2014

IPL கிரிக்கெட்டில் மட்டுமா சூதாட்டம் ?

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த ...
தடை செய்யப்பட்ட சேவல் பந்தயத்தில் ...

பிணவறை என்ன மணவறையா சந்தோசப்பட ?

''டாக்டர் ,ஆஸ்பத்திரி காம்பௌண்ட் உள்ளேயே வாக்கிங் போகச் சொன்னீங்க சரி ,பின் பக்கம் மார்ச்சுவரி  இருக்குன்னு சொல்ல வேண்டாமா ...பயந்தே போனேன் !''
''பயப்படாதீங்க ,உங்களுக்கு ஆப்பரேசன் முடிஞ்சதும் சரியாப் போகும் !''

நடிகைன்னாலே டைவர்ஸ்தான்னு ஏன் நினைக்கிறாங்க ?

''உங்க பொண்ணுக்குத்தான் சினிமா சான்ஸ் இல்லாமே போச்சே ,கல்யாணமும் ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு ?''
''வர்ற வரன் எல்லாமே ஆறு மாசமாவது கியாரண்டி தர முடியுமான்னு கேக்கிறாங்களே !''

17 January 2014

இதுவெல்லாம் பெரியார் பிறந்த மண்ணில்தான் !

வத்தலக்குண்டு  அருகில் உள்ள இரண்டு கோவில்களில் நடைபெற்று இருக்கும் வினோத நேர்த்திக்கடன் விழாவைப் பற்றி அறியும்போது ...
சிரிக்கத்தான் தோன்றுகிறது ...

சாதனையும் ,வேதனையும் அவரவர் கையில் !

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிவந்த 1 3 காளைகளை அடக்கிய காவலர் வினோத் ராஜ் மோட்டார் சைக்கிள் பரிசை வென்றார் ...

வடிவேலுவின் 'அவனா நீ ' இவருக்கும் பொருந்தும் !

''இப்போதெல்லாம் தலைவர் 'நீயும் நானும் ஓரினம் 'னு  சொல்றதே இல்லையே ,ஏன் ?''
''ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்னு  தீர்ப்பு வந்திருச்சே  !''

இப்படி ,கணவன் மனைவியிடம் சொன்னால் என்னாகும் ?

''ஏங்க முதலாளி ,உங்களுக்கே இது நியாயமா ?மாட்டுப் பொங்கல் அன்னைக்கி போய் புது டிரஸ் கொடுக்கிறீங்களே ?''
''நீதானே மாடா  உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''


16 January 2014

காக்க காக்க நா காக்க !

''யாதவராயினும் நாகாக்க ........''
''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே  வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''


குறள் 127: 

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

வடு மாங்காய் ஊறுதுங்கோ !

''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
''வடுமாங்காய் சுவையை  நா மறக்காது என்பதுதான் அய்யா !''

திருக்குறள்

தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.








எப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?

''திருக்குறள் படிச்சுகிட்டு இருந்தே ,தீடீர்ன்னு மூடிட்டியே ,ஏன் ?''
''நயன்சாரான்னு  ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும்  மூட் அவுட் ஆயிடுச்சு !''
திருக்குறள்:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.


சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

இன்சுலின் ஏதடா வள்ளுவர் காலத்தில் ?

''நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !''

திருக்குறள்:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.


சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

இப்படி 'போட்டு வாங்கிறவன் 'கிட்டே ஜாக்கிரதையா இருங்க !

''பெயர்தான் இருபது ரூபாய் ,மதிப்பே இல்லாமே போச்சு !''
''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன் இல்லேங்கீறீங்க?''

15 January 2014

மாட்டை அடக்கியவன் ,மனைவியை ?

''ஓடிப் போனது என் பெண்டாட்டி ,நீங்க ஏண்டா ஓவராப் பீல் பண்றீங்க ?''
''ஒருகாலத்தில் நீ மாடுகளை அடக்குவதில் சாம்பியன்,அதை நினைச்சுதான் !''

நல்ல வேளை ,புருஷன் பெயரை மாத்திக்கணும்னு சொல்லலே !

''என் பெயர் ராஜசேகர் ... உன் பெயர் 'ரா .சசிபிரியா 'ங்கிறது சரிதானே ,அதை ஏன் 'R.சசிபிரியா'ன்னு போட்டுக்கணும் ?''
''எல்லாரும் ராட்சசி பிரியான்னு கிண்டல் பண்றாங்களே !''
''அய்யய்யோ ,எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா ?''

14 January 2014

பொங்கல்னா இதுதான் பொங்'கல் ' ?

''இதுவரைக்கும் நீ  இப்படி பொங்கல் வச்சு நான் சாப்பிட்டதே இல்லே !''
''அவ்வளவு டேஸ்ட்டா?''
''அட நீ வேற ...பொங்கல்லே  அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்லவந்தேன் !''

வீட்டுக்குப் போனதும் இவருக்கு இருக்கு 'பொங்கல் '!

'' கண் ஆபரேசன்  செய்த நீங்களே என் கணவரோட கண்கட்டை ஏன் பிரிக்க மாட்டேன்னு சொல்றீங்க ?''
''கண்கட்டைப் பிரிச்சதும் ...முதல்லே யாரை  பார்க்க விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு 'நர்ஸ் நளினாவை 'ன்னு சொல்றாரே !''

ரொம்ப ரிஸ்க் எடுத்து வாங்கித் தந்த பொங்கல் புடவையோ ?

''நீ கட்டிக்கிட்டு இருக்கிற புதுப் புடவை சூப்பரா இருக்கே ,எங்கேடி  எடுத்தே ?''
''என் வீட்டுக்காரர் கிட்டேதான் கேட்கணும் ,ஜெயிலில் இருந்து வரட்டும் !''

பொங்க'low' பொங்கல்ன்னு சொல்லாத காரணம் !

''என் பேரன் இங்கிலிஷ் மீடியத்தில் படிக்கிறான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
''பொங்கல் பொங்கி மேலே வரப்போ 'பொங்கல்high பொங்கல்னு சொல்றானே !''

தலைவர் பொண்னோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே !

''வாடிவாசல் வழியா வந்த மாடுகளை ஆர்வமா அடக்கினவங்க,தலைவரோட மாட்டை மட்டும் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களே...ஏன் ?''
''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தாரே !''

13 January 2014

இவன் கிரிமினல் லாயரானால் காதலி மனைவி ஆகமாட்டாள் !

''என் பையன் எதிர்காலத்தில் கிரிமினல் லாயரா வருவான்னு எப்படி சொல்றீங்க ?''
''1 9 3 2 ல் பிறந்தவருக்கு இப்போ என்ன வயசு இருக்கும்னு கேட்டா ...அவர் உயிரோட இருக்காரா ,இல்லையான்னு கேக்கிறானே !''  


12 January 2014

ஜில்லா ,வீரம் உடனே பார்க்க விரும்பாத காதலன் !

''டார்லிங் ,ரசிகர்கள் சேஷ்டை அதிகமா இருக்கும்னுதான் ஜில்லா ,வீரம் படத்திற்கு போகவேண்டாம்னு சொல்றேன் ,நீ எதுக்கு போய்த்தான் ஆகணும்னு சொல்றே ?''
''தியேட்டர் புல்லானா உங்க சேஷ்டை இருக்காதுன்னுதான் !''


ரொம்ப வெவரமான பயபுள்ளே !

''என்ன தம்பி ,என் தலைக்கு மேலே  எரியுற டியூப் லைட்டைக் கழட்டிக் கொடுக்கச் சொல்றே ?''
''நல்லா  எரியுற லைட்டைப்  பார்த்து  வாங்கி வரச் சொல்லியிருக்கார் எங்க அப்பா !''




11 January 2014

ஆத்தீ...ஆத்திச் சூடியை இப்படியா புரிஞ்சுக்கிறது ?

''என்னடா சொல்றே .ஔவையார்  ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா அட்வைஸ்  சொல்லி இருக்காங்களா ?''
''ஏற்பது இகழ்ச்சின்னு பிச்சைக்காரனுக்கும் ,ஐயமிட்டு உண்ன்னு  பணக்காரனுக்கும் சொல்லி இருக்காங்களே !''

வீட்டுக்கொரு 'ஆமாம் சாமி 'இருக்கிற மாதிரி ,நாட்டுக்கொரு ?

''ஆம் ஆத்மின்னா  அர்விந்த் கேஜ்ரிவால் ஞாபகம் வர்றார் ,ஆமாம் ஆத்மின்னா ?''
''நம்ம பிரதமர்தான் !''

10 January 2014

யார் புருஷன் தேவலே சாப்பாட்டுராமனா ,ஜொள்ளனா ?

''என்னடி ,பிரியாணி படம் பார்க்க உன் புருசனைக் கூட்டி வரலையா ?''
''பிரியாணி சாப்பிடத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லிட்டார்டி ,அதுசரி உன் புருஷன் எதுக்கு வரலே ?''
''பிரியாமணியைப் பார்க்கப் போறேன்னு சொல்லு ,வர்றேன்னு சொல்றார்டி ! ''

எவன்யா இவனுக்கு பொண்ணு தருவான் ?

''பிரைவேட் எம்ப்ளாய்மென்ட் சென்டர் நடத்தி லட்ச லட்சமா சம்பாதிக்கிற வரனைப் பார்த்து பேசிட்டு ,ஏன் வேண்டவே வேண்டாம்னு சொல்றீங்க ?''
''பொண்ணுக்கு எல்லா  தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''