13 December 2015

'தல' ரசிகர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும் :)

                   ''தெறிக்க விடலாமா பஞ்ச்  டயலாக்கை எழுதினதுக்கா ,அவரை அடி அடின்னு அடிக்கிறாங்க ?''

                           ''அவர் எழுதியது  ,டாய்லெட் சுவரில் ஆச்சே !''

 அவங்களுக்கு மட்டும் சூடு சொரணை அதிகமோ :)


                 '' தூத்துக்குடியில் அரசியல் பண்றது  கஷ்டமா இருக்குன்னு ஏன் சொல்றீங்க ,தலைவரே ?''

                 ''கட்சி மாறினா ....உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலமா பேசுறாங்களே!''



பஸ்ஸிலே ஜாலிக்கு எதுவும் இருக்குமோ :)

              ''டைம் பாஸ் ரைடர்ன்னா  என்னான்னு
தெரிஞ்சுக்காம  அந்த பஸ்லே ஏறினது தப்பாப் போச்சா ,ஏன் ?''
              ''ஒரு மணி நேரத்திலே போக வேண்டிய ஊருக்கு மூணு மணி நேரமாகுதே !''

லிரில் மாடல் லிசாரேயும்.காங்கிரசை டிரில் வாங்கிய ஹசாரேயும் .....:)   


''என் பையனுக்கு நாட்டு நடப்பையும் தெரிஞ்சுக்க சொல்றீங்களே ,ஏன்?'

  ''லிசா ரேயை தெரியும் ,ஹசாரேன்னா  யாருன்னு  கேட்கிறானே !'' 

' பேஸ்ட்டு' கூட வேஸ்ட் ஆகாது ...ஆனால் ?

வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் 
ஒரு விதத்தில்  ஒன்றுதான் ...
மறுபடியும் உள்ளே போகாது !

32 comments:

  1. வணக்கம் ஜி !

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு கடைசிதான் கொஞ்சம் தூக்கலா இருக்கு உள்ளே வெளியே !

    அருமை தொடர வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
    Replies
    1. அது தத்துவம் அய்யா ,தத்துவம் :)

      Delete
  2. Replies
    1. பேஸ்டு வேஸ்டைதானே:)

      Delete
  3. Replies
    1. ஆனால் ,அவர் தெறிக்க விட்டதை ரசிக்க முடியலே :)

      Delete
  4. தல தெறிக்க ஓடப்போறாரு...!

    உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு நாமலே உப்பு போட்டு சாப்பிட்டா... கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்டின்னு பேசமாட்டாங்களா...?

    மூக்கத் தொடுறதுக்கு... தலைய சுத்தித்தான் மூக்கத் தொடுவாரு... ஏன்னா தல ரசிகர்...பேரு மூக்கையன்...!

    நல்லா நடக்கிறத யார் பார்க்கிறா...? நளினமா நடக்கிறத்தானே பாக்கிறா... உசாரய்யா...உசாரு...ஹசாரய்யா உசாரு...!

    கறந்த பால் மடிபுகாது... கருவாடு மீன் ஆகாது...!

    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,இப்படியெல்லாம் தெறிக்க விடுவார்கள் என்று அவர் எதிர் பார்த்திருக்க மாட்டார் :)

      அப்படின்னா ,அந்த ஊர்லே பொண்ணை மட்டும் எப்படி எடுக்கிறதாம்:)

      மூக்கையன் நல்ல ரூட்டை கண்டுபிடித்து இருக்கார் :)

      நளினமா நடக்கிறதுக்கு பெயர் பூனை நடையாமே :)

      பால் மசாலாப் பால் ஆகும் ,கருவாடு நம் வயிற்றில் அடைக்கலமாகும் :)

      Delete
  5. Replies
    1. கொட்டிய அரிசியை அள்ளிடலாம்,ஆனால் ,வார்த்தையை .....:)

      Delete
  6. ஆ.....நியாமான கோபமாச்சே.........

    ReplyDelete
    Replies
    1. கருமம் ,கருமம்.. அங்கேயா தெறிக்க விடுவது :)

      Delete
  7. உண்மையில் எனக்கு லிசாரே வைத் தெரியவில்லையே ஜி :(

    ReplyDelete
    Replies
    1. உங்க வாலிப வயதில் ,வெள்ளி நீர்வீழ்ச்சியில் மஞ்சள் லிரில் சோப்புடன் லா லலாலா என்று இனிமையுடன் அழகி ஒருத்தி நீராடுவதை பார்த்து இருப்பீர்களே ,அந்த விளம்பர பட ஹீரோயின் நினைவுக்கு வரலையா :)

      Delete
  8. டாய்லெட் சுவரிலா? அப்போ அடிக்க வேண்டியதுதான் பாஸ்! ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமாச்சே!!!!!!!

    உப்பால பிரச்னை!

    இப்படியும் அர்த்தமா!

    நேற்று தினமலருக்கு போபர்சுக்கும் போர்ப்சுக்கும் வித்தியாசம் தெர்ல... இது ஒண்ணும் பெரிசு இல்ல விடுங்க!


    உண்மை!

    ReplyDelete
    Replies
    1. அங்கே தெறிக்க விடக்கூடாதுன்னு தானே சொன்னார் ,அவரை ஏன் அடிக்கணும் :)

      உப்பு பெறாத பிரச்சினையும் கூட :)

      நாமதான் உஷாரா பார்த்து ஏறணும் :)

      யானைக்கும் அடி சறுக்கும்தானே :)

      வெளியே வந்த உண்மையும் உள்ளே போகாது :)

      Delete
  9. எனக்கு லிசா ரேயையும் தெரியாது தலையின் பன்ச் டயலாகும் தெரியாது.டாய்லெட் சுவரில் எழுதியது சரிதானே சரியான இடம்தானே.

    ReplyDelete
    Replies
    1. தெரிய வேண்டியது தெரியுது ,அது போதும் அய்யா :)

      Delete
  10. ரசித்தேன் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நினைத்து பார்த்துதானே :)

      Delete
  11. 01. விவஸ்தை கெட்டவன்
    02. உண்மைதானே....
    03. வேலையில்லாதவன் போகலாமோ...
    04. உண்மை நிலை இதுதான்
    05. ஸூப்பர் உண்மை

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்விதான் ,கேட்க வேற இடமா கிடைக்கலை :)
      அதிலும் அயோடைஸ் உப்பு சாப்பிட்டா ,ரோசம் அதிகமாத் தானே இருக்கும் :)
      டைம் பாஸ் ஆகணும்னு, கை காலுக்கு வேலை கொடுக்காம போனா சரிதான் :)
      விளங்கிடும் :)
      இதுக்குத்தான் அடக்கி வாசிக்கணும்னு சொல்றது :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    எது நடக்க இருக்கோ அது நடக்கட்டும் மற்றவைகளை இரசித்தேன் த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றாகவே நடக்கட்டும் :)

      Delete
  13. எனக்கு
    ஹசாரே தெரியும்;
    லிசாரே யாரு?

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே தெரியாதா ?கூகுளில் தேடுங்க ,அசந்து போவீர்கள் :)

      Delete
  14. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்றுSun Dec 13, 09:43:00 pm
    நல்ல தத்துவம்
    ReplyDelete

    ReplyDelete
    Replies
    1. கடைப்பிடிப்பதுதான் சிரமம் இல்லையா :)

      Delete
  15. Replies
    1. 'தோம்' என்பதில் கீதா மேடமும் அடக்கம் அப்படித்தானே ,நன்றி :)

      Delete
  16. அட கடவுளே, அந்த இரு நடிகர்களின் ரசிகர்கள் தான் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்றால், நீங்கள் அதில் இன்னும் எண்ணையை விடுகிறீர்களே, உங்களுக்கே இது நியாமாக இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கு ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்கள் ,நடிகர்கள் கட்டி பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார்களே :)

      Delete