1 July 2017

இப்படி 'இக்கு 'வைக்கும் காரணம் என்ன :)

 முதலில் ஆதார் கார்டு கட்டாயமில்லை என்றார்கள் :)                           
               ''நாய் கழுத்துலே எதுக்கு ஆதார் கார்டை மாட்டி வச்சிருக்கீங்க ?''
               ''ஆதார் எண்  இணைக்கப்பட இது மட்டும் பாக்கி இருந்தது ,அதான் !''

தலைவர் confuse ஆயிட்டாரே :)            
            ''சீன ஞானி கம்ப்பூசியஸ்  என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா .....!''
          ''அவர் சொன்னது இருக்கட்டும் தலைவரே ,அவர்   கம்ப்பூசியஸ்  இல்லே ...கன்பூஷியஸ் !''

இப்படி 'இக்கு 'வைக்கும் காரணம் என்ன :)
        ''தலைவர் , முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
        ''வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ,இதில் உள்ளவர்கள்  கடைசி நேர  மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''

இந்தியா ...மூணு பக்கம் கடல் ,நாலு பக்கம் கடன் :)
           ''இந்திரன்கிற பேரைவிட இந்தியன்கிற பெயர்தான் எனக்கு பொருத்தமா , ஏன்  ?''
            ''எல்லாப் பக்கமும் கடனை வாங்கி இருக்கீயே !''
இந்த லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465037செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

28 comments:

  1. இந்தியன் கடன் வாங்க பொருத்தமானவனோ....

    ReplyDelete
    Replies
    1. இந்திய அரசு வாங்கிய கடன், ஒவ்வொரு இந்தியன் தலைமேலும் உள்ளதே ஜி :)

      Delete
  2. ஆதார் ஜோக் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஆதார் என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்றல்ல என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்லிவிட்டு ,அது இல்லாமல் எதுவுமே இல்லை என்பது எந்த வகையில் நியாயமோ தெரியவில்லை :)

      Delete
  3. // ''ஆதார் எண் இணைக்கப்பட இது மட்டும் பாக்கி இருந்தது ,அதான் !''//

    ஜம்மட்டி அடி!!

    ReplyDelete
    Replies
    1. மக்களைக் கண்காணிக்கத்தான் இந்த ஆதாரா :)

      Delete
  4. எல்லா நாய்களுக்கும் ஆதா(ர்)ரம் தேவைப்படுகிறது... எந்த நாயும் குரைப்பது இல்லை...!

    ஒரே கன்பூஷிசா இருக்கு...!

    ‘ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து உயிரையும் துரும்பாய் தான் மதித்து...’ தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவராக்கும்...!

    கடன் அன்பை முறிக்குமுன்னு சும்மா சொல்றாங்களோ...!

    த.ம. 5





    ReplyDelete
    Replies
    1. ஆதார் விஷயத்தில் பெப்பே காட்டுகிறது மத்திய அரசு ,உச்சநீதிமன்றமும் அதற்கு உடன்படுகிறதே :)

      வெயில் குறைந்தால் எல்லாம் சரியாய் போகும் :)

      அது ரயில் ஓடாத டிராக்குன்னு சொன்னாங்களே :)

      கடனை திருப்பிக் கட்டலைன்னா வம்பை வளர்க்கும் :)

      Delete
  5. ஹாய் ஜீ, வணக்கம்,

    வழக்கபோல பின்னீட்டீங்க..தலைவர் ரயில்வே அதிகாரியா ஜோக்... குபீர் சிரிப்பு

    ReplyDelete
    Replies
    1. ரெடி ஒன் டூ திரி வேகமா வர்றவங்களுக்கு மட்டும்தான் , தொகுதி 234ல் இடம் கிடைக்கும் :)

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. இந்தியன்... செம

    ReplyDelete
    Replies
    1. கடன் , நாம் வாங்கவில்லை என்றாலும் அரசு வாங்கிவிடும் :)

      Delete
  8. இப்போதைய நிலையில் இதில் ஆச்சரியம் இல்லைஜி
    ஒரே கன்ஃப்யூஷன்
    இப்படி நடக்கிறதுதானே
    அரசே கடனில் மூழ்கி இருக்கிறதே அது இந்திரனா இந்தியனா

    ReplyDelete
    Replies
    1. ஆடு கோழி மட்டும் தான் விதிவிலக்கா :)
      பெயரே குழப்பம் ,அவரின் தத்துவத்தை மட்டும் சரியாக சொல்வாரா :)
      இதயத்தில் இடம் கொடுத்தால் போச்சு :)
      அரசு கடனில் ,பணம் எல்லாம் ஒரு சில தலைவர்களிடம் :)

      Delete
  9. அனைத்தும் அருமை. கன்பியூஸ் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. பெயரிலுமா கன்பியூஸ் ஆவது :)

      Delete
  10. மூன்று பக்க கடலையும்தானே ஜி :)

    ReplyDelete
  11. இக்கு வைக்கும் காரணம் தெரிந்து கொண்டேன்....

    ReplyDelete
    Replies
    1. அதிக நிதி கொடுப்போருக்கு அதிக மரியாதைக் கிடைக்குமோ :)

      Delete
  12. அனைத்தும் நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. இக்கு வைக்காமல் உங்கள் கருத்தைச் சொன்னதுக்கு நன்றி மேடம் :)

      Delete
  13. ஆதார் அட்டை விவகாரம் பல நகைச்சுவை துணுக்குகளுக்கு ஆதாரமாகிவிட்டதே!
    நகைச்சுவை துணுக்குகள் அனைத்தையும் இரசித்தேன்.பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கைக்கே இதுவே ஆதாரம் என்றாக்கி விட்டார்களே :)

      Delete
  14. ஆதார் அட்டையால் படும்பாடு நிறையவே உள்ளதே

    ReplyDelete
    Replies
    1. பயன்பாடு இருக்கோ இல்லையோ ,படும்பாடு அதிகம்தான் ஜி :)

      Delete
  15. நாய்க்கும் ஆதார் ஹஹஹஹஹஹ்ஹ் சூப்பர்...

    இந்தியக்கடன் உட்பட அனைத்தையும் ரசித்தோம் ஜி!!

    ReplyDelete
    Replies
    1. பசுவுக்கு மட்டும் கொடுக்கலாமா :)

      நாலுபக்கம் கடன்தானே :)

      Delete