10 September 2016

சுடிதார் சொல்லுதே, செல்லும் இடத்தை :)

கண்டக்டர்  கேட்டதும் தப்புதானே :)
      ''பஸ்  புறப்படவே இல்லே  , அந்த  ஊருக்கு எப்போ போய் சேரும்னு அபசகுனமா கேட்கிறீங்களே ,நியாயமா ?''
      ''போகும் போதே , எங்கே போறீங்கன்னு கேட்டீங்களே ,அது நியாயமா ?''

இங்கே எல்லோரும் ஓரினம்தான் :)    
              ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
               ''ரயிலைப்  பிடிக்கணும்னா வேற  வழியில்லையே !''

சுடிதார் சொல்லுதே, செல்லும் இடத்தை :)
          ''கண்டக்டர் ,நான்  போற இடத்தை  சொல்லவே இல்லை, சரியா எட்டு ரூபாய் டிக்கெட் கொடுக்கிறீங்களே ,எப்படி ?''
          ''முன்னாடி நிற்கிற சுடிதார்  பெண்ணை நீ பார்க்கும் போதே  தெரிஞ்சு போச்சே !''
அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாமா :)
         ''ஏன் டாக்டர் ,ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட்ன்னு சொல்றீங்க ?''
         ''ஆபரேஷனில பொழச்சுக்கிட்டவரு.பில்லைப் பார்த்ததும் போய் சேர்ந்து விட்டாரே !''

 தோடுன்னா சரி  'தோடு 'விடத்தான் கூடாது :) 
    சிறிய வயதில் காது குத்திய போது ...
    தோடு வாங்கித் தராமல் 
   'வெளக்கமாத்து 'குச்சி குத்தி 
    ஏமாற்றிய அப்பாதான் ...
    திருமணத்தின் போது...
    மகளுக்கு தொண்ணூறு பவுன் நகையும் 
   மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் ,செயின் ,
    பிரெஸ்லெட்டும் போட்டு அழகு பார்க்கிறார் !

25 comments:

  1. அட! முதல் ஜோக் நம்ம ஸ்ரீராம் முன்பு தான் கேட்டு மாட்டிக் கொண்டதைச் சொல்லியிருக்கும் அனுபவம் போல்.....ஹஹஹ்

    சுடிதார், தோடு எல்லாம் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் ஜி முதல் வரியைச் சொன்னார் ,இரண்டாவது வரியும் என்னுடையது அல்ல ..அது யார் தெரியுமா :)

      Delete
  2. ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ன்னு சொல்றீங்க... கேட்பதில் என்ன அபசகுணமுன்னு கேட்டா... ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ன்னு இந்தத் தட்டு தட்டுறீங்களே...!

    எங்க வந்தாலும் போறதுக்கு டிக்கட் எடுக்கணும்...!

    வாழ்க்கைய எட்டு எட்டா பிரிச்சுப் பார்க்கத் தெரியுமுல்ல...!

    ஒங்கள்ட்ட வந்த கேஸ் எதுவும் திரும்பிப் போனதே இல்லை... இவரு ஒருவர்தான் தப்பிப் பிழைத்தவருன்னு நினைச்சேன்... என் நினைப்புல மண்வாரிப் போட்டிட்டாரு...!

    திருமணத்தின் போது அப்பா... “பொண்ணுக்குத் தொண்ணூறு பவுன் நகையும். மாப்பிள்ளைக்கு வைர மோதிரம், செயின் , பிரெஸ்லெட்டும் போடனுமுன்னு” அடம் பிடிக்கிறார்!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. இங்கே 'காசைக் கொடுங்கள் ,பயணச் சீட்டைப் பெறுங்கள்' மட்டும்தான் :)

      நாம விரும்பாவிட்டாலும் கடைசியில் ஒரு இலவச டிக்கெட் உண்டு :)

      ஈரெட்டில் இப்படித்தான் இருப்பானோ :)

      பிணைத்து மேலே மண் வாரிப் போடணும்னா நீங்க பில்லை செட்டில் பண்ணித்தான் ஆகணும் :)

      பிள்ளையைப் பெற்ற அப்பாதானே :)

      Delete
  3. ஹா.... ஹா... ஹா.. பழிக்குப்பழி! ஆனா பாருங்க.. முதல் ஜோக்குக்கு எனக்கு ராயல்டி தரணும் சொல்லிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. முதல் வரிக்கு நீங்க சொந்தக்காரர் ,இரண்டாவது வரிக்கு வலிப் போக்கன் சொந்தக்காரர் ...ஆளுக்கு பாதி ராயல்டி நிச்சயம் உண்டு :)

      Delete
  4. Replies
    1. பயணியும் ,நடத்துனரும் விடாக்கண்டன் ,கொடாக்கண்டனுமாய் இருக்கிறாங்களா :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன். டிக்கட் போடுவதில் இப்படியும் ஒரு உத்தி உள்ளதேர்?

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கைகள் பலவிதம் ,அதிலே இது தனி விதம் :)

      Delete
  6. கண்டக்டர் கேட்டதை ok ன்னு சொல்றீங்களா :)

    ReplyDelete
  7. பில்லைப் பார்த்ததும் போய் சேர்ந்து விட்டாரே !''//

    ரொம்பவும் பொல்லாத டாக்டர்!

    ReplyDelete
    Replies
    1. இப்படிக் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ :)

      Delete
  8. கேள்வி சரியாகக் கேட்கணும் நமக்குத்தான் நிறைய நம்பிக்கைகள் இருக்கே
    ரயிலில் போகும் போது தானே
    அந்தப் பெண் டிக்கெட் வாங்கியாயிற்றா
    டாக்டருக்கு பில் பணம் வருமா
    யாருடைய செலவில்

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவர் நம்பிக்கை மட்டும் எரிச்சலைத் தருதே :)
      போக வேண்டி வராதா :)
      காசை வாங்கிக்காம நடத்துனர் கொடுத்து விட்டாரோ :)
      அதெல்லாம் சமத்து ,எப்படியும் கறந்து விடுவார் :)
      மக சம்பாத்தியத்தில் இருக்குமோ :)

      Delete
  9. Replies
    1. அதிர்ச்சி வைத்தியம் இப்படி கொடுத்தது தவறுதானே:)

      Delete
  10. அனுபவமுள்ள ''கண்டக்டர் ,..........

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு திருட்டு முழியையும் தெரியும் ,திருட்டுப் பயலையும் தெரியும் :)

      Delete
  11. ரசித்தேன், தேனென இருந்தது நகைச்சுவை தேன்

    ReplyDelete
    Replies
    1. போதும் போதும் என்ற அளவுக்குத்தான் தித்தித்து விட்டது போலிருக்கு ,இன்று (ஞாயிறு )ஜோக்காளியின் வலையுறவுகள் பல பேரைக் காணவில்லை :)

      Delete
  12. முதல் நகைச்சுவை நம்ம ஸ்ரீராம் அண்ணாவின் அனுபவத்தை மனசுக்குள் நுழைத்துச் சிரிக்க வைத்தது....
    சுடிதார் சொல்லுதுன்னு துப்பட்டாவைக் காணோமே...:)

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சொன்னது முதல் பாதி ,வலிப்போக்கன் சொன்னது அடுத்த பாதி ,இரண்டையும் இணைத்தது என் ஜோலி :)

      சுடிதார் இருந்து இருந்தால் ஒரு வேளை,பயபிள்ளே ஒழுங்கா வீடு போய்ச் சேர்ந்து இருப்பானே :)

      Delete
  13. டாக்கடர் கடி சிரிப்புவெடி ஜீ!

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் பாடு இனி திண்டாட்டம்தான் :)

      Delete