7 September 2016

காதலி மூணாறு தேவதைதான் :)

          அன்பார்ந்த வலையுலக உறவுகளே ....                                          07.09.2016 
           நேற்றைய தினம் கணணி தொடர்பு அறுந்து போனதால்  பதிவைப் போட முடியவில்லை ! அது அறுந்து போனது என்பதால் ,தினசரி பதிவின் தொடர்ச்சி அறுந்து போகட்டும் என்று விட்டு விட முடியுமா ?அதான் ,இந்த மீள்பதிவு !ஏற்கனவே  படித்து நொந்து போனவர்கள் ,அடுத்த நாள் பதிவுக்கு சென்று விடலாம் !
நன்றி !

 முட்டைத்  தோசை போடவாவது தெரியுமா :)          
        ''உன் புதுபெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே ?''
       ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே    !''
மேயர் பெண் என்றால் நகரத் தாய் எனலாமோ  ?         
             ''துணை மேயர்  கோரிக்கை வைக்கிறாரே ,என்னது ?''
             ''மேயரை நகரத் தந்தைன்னு சொல்ற மாதிரி ,துணை மேயரை ஏன் நகர மகன்னு சொல்லக்கூடாதுன்னு  கேட்கிறாரே  !''

காதலி மூணாறு தேவதைதான் !
            ''கவிஞரே ,மூணாறு டூர் போயிருந்தப்போ உங்க காதலியைப் பார்த்தீங்க,சரி ...அப்போ அவங்களுக்கு என்ன வயசு ?''
            ''மூணாறுதான்!''

இவர்கள் ஓடிப் போக மாட்டாங்க ,காணாமல் போயிடுவாங்க !
     நிலக்கரி வெட்ட கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டுகோப்புக்களை காணவில்லையாம் ...
     பூமிக்கு அடியில் இருந்த  பல கோடி டன் நிலக்கரியே காணாமல் போகும் போது...
     கோப்புக்கள் காணாமல் போனது ஒன்றும் அதிசயம் இல்லையே !

10 comments:

  1. கரு கலைப்பு செய்வது பாவம்ன்னு சொல்றாள்...! மொதல்ல அதப் புரிஞ்சு நடந்துக்கங்க...!

    நல்ல வேளை... துணை மேயரை ஏன் நகராத் தந்தைன்னு சொல்லக்கூடாதான்னு கேட்காமப் போனீங்களே...!

    பதினாறும் நிறைந்த பருவ மங்கை...!

    நிலக்கரி வெட்ட பூதக் கோப்பு கிளம்பிதோ...?!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. பிராய்லர் முட்டையில் கரு ஏது என்று கேட்க வேண்டியதுதானே :)

      அதுவும் சரிதானே ?உட்கார்ந்த இடத்திலேயே அவர் சம்பாத்திக்கிறவர் தானே :)

      பதினாறுக்கு மேலே இரண்டு கூடுதே :)

      நம்ம நாட்டிலே எதில் இல்லை ஊழல் ?பிணத்தை வைக்கும் பெட்டி வாங்குவதில் கூட ஊழல் :)

      Delete
  2. Replies
    1. உங்களுக்குத்தான் சுற்றுலா பிடிக்குமே ,மூணாறு அருமைதானே :)

      Delete
  3. ஆம்லெட் போட முடியாவிட்டால் என்ன முட்டைத் தோசை போடலாமே
    பெண்மேயரை நகரத் தாய் என்கிறார்களா
    என்றும் மூணாறா

    ReplyDelete
    Replies
    1. அந்த முண்டத்துக்கு அது கூடத் தெரியலியே :)
      ஏன் சொன்னால் தப்பா :)
      மனதில் எப்பவும் மூணாறுதான் :)

      Delete
  4. எப்பவோ சுட்ட முட்டைதோசை கூட நல்லாத்தான் இருக்கிறது!!! மூணாறையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. முட்டைத் தோசையும் மூணாரும் . ..பெயர்ப் பொருத்தமா இருக்கே :)

      Delete
  5. Replies
    1. முட்டைத் தோசை ருசியாய் இருந்ததா :)

      Delete