30 September 2016

தலைஎழுத்து உண்மையா ,யோகம் உண்மையா :)

               ''இப்போ கிடைச்ச வேலை ,முந்தியே கிடைச்சிருந்தா ..உங்களைக் கட்டிகிட்டே  இருக்க மாட்டேன்,எல்லாம் என் தலைஎழுத்து  !''
                '' உனக்கு  வேலைக்கிடைச்சதே  ,என்னைக் கட்டிகிட்ட  யோகத்தால்  தானே !''

அருகம் புல் சாறு  குடிச்சா உடம்பு மெலியுமாமே :)        
           '' தலைவர் ஊளைச் சதையைக் குறைக்கணும்னு ,தொண்டர்கள் 'சிம்பாலிக்கா'  சொல்றாங்களா ,எப்படி ?''
            ''அருகம் பூ மாலையை அவருக்கு  போட்டுத்தான் !''

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லைதானே ?                                           
             ''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா  இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?'' 
             ''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்காச்சே !''

மகளுக்கு வைத்தது பொருத்தமான  பெயர்தான்  :)
             ''அவருக்கு செய்ற தொழில் மேல் அதிக  பக்தின்னு ஏன் சொல்றே ?''
             ''மகளுக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''

ஆளைக் கொல்வது கூலிப் படைக்கு மட்டும்தான் சொந்தமா ?
வாக்குப் பதிவின் போது இறந்தவர்களும் வந்து 
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும் 
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?
எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?

26 comments:

  1. ஒருவேளை மாமனாரே வேலை வாங்கி கொடுத்தாரோ!

    தலைவர் என்ன நடிகையா என்ன, ஊளைச்சதையைக் குறைப்பதற்கு?!!

    கேட்பவரும் சைபர் மார்க் எடுப்பவராகத்தான் இருக்க வேண்டும்!

    நல்லவேளை, ரவா உப்புமான்னு பெயர் வைக்காமல் போனார்!

    ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. மருமகனுக்கு வேண்டுமானால் மாமனார் வேலை வாங்கித் தருகிறார் ,மருமகளுக்கு வாங்கித் தந்த மாமனார் உண்டா :)
      ஊளைச் சதை கேடுதானே யாருக்கு இருந்தாலும் :)
      அதான், வேலைக் கிடைக்காத பொறாமையில் பேசுகிறாரோ :)
      ரமாபிரபா என்று வைத்து இருக்கிறாரே :)
      நம்ம ஊர் வண்டவாளம் வெளியே சொல்ல வேண்டாம்,அப்படித்தானே :)

      Delete
  2. ‘தலையெழுத்து யார் மொழியில்... வா... வா... கண்ணா வா... மடிமீது தலைவைத்து விடியும் வரையும் தூங்கலாம்...!’ விடிஞ்சிடும்...!

    தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆட வேண்டாமா...?

    அவன் ‘சுழி’ யாரை விட்டது...?

    மருமகன் பேரு ‘மோஸஸ்’...!

    மந்திரி இருந்தாலும் ஆயிரம் மண்... இறந்தாலும் ஆயிரம் மண்... ஒன்றும் பிரயோஜனம் இல்லை... நீ மண்ணுக்கே போ...!

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. விடிஞ்ச பின்னாலும் தூங்கினா யார் உங்களை கேட்கப் போறா :)

      தன் பிள்ளை ,பேரன் என்றால் ஆடாமல போகும் :)

      பலரையும் என்கவுண்டரில் போட்டு தள்ளிருச்சே :)

      சமோசாவை அப்படியே கடிச்சு திங்க வந்தவர் அவர்தானா :)

      அவர் மேலே மண் விழுந்தாலும் ,அவர் சொத்தில் எல்லோரும் ஒரு கண்ணாவே இருக்காங்களே :)

      Delete
  3. Replies
    1. தலைஎழுத்து உண்மையா ,யோகம் உண்மையா என்றால், நமக்கு இரண்டுமே உண்மையில்லை தானே :)

      Delete
  4. அது சரி தலைவரும் நடிக்கராரோ..

    சமோசா...ஹஹஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. நடிக்கத் தெரியலைன்னா அரசியல்வாதியாக முடியுமா :)

      கடித்து திங்கச் சொல்லும் அழகாய் இருப்பாளோ :)

      Delete
  5. 01. இப்படியும் யோகமா....
    02. சிக்கனம் தேவைதானே...
    03. பிளான் போட்டுத்தான் எடுத்து இருக்கான்.
    04. ஹாஹாஹா
    05. நல்ல வளர்ச்சி

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொல்லித்தானே சமாளிக்க வேண்டியிருக்கு :)
      சிக்கென்ற உடம்பும் தேவை :)
      மார்க் வாங்கத்தானே பிளான் போடணும் :)
      சமந்தா மாதிரி சமோஷாவும் அழகுதானே :)
      இந்த வளர்ச்சி , எங்கே போய் நிற்க்கும்னே தெரியலே :)

      Delete
  6. சே...எனக்கு தலை எழுத்தும் இல்ல..யோகமும் இல்லன்னு இப்பத்தான் தெரிஞ்சது...

    ReplyDelete
    Replies
    1. இல்லையென்றாலும் ,உங்கள் திறமையால் தமிழ் மண கடந்த வார அதிக ஹிட் பதிவுகளில்.. முதல் பத்து இடத்துக்குள் வந்து விட்டீர்களே :)

      Delete
  7. வேலை யார் வாங்கிக் கொடுத்தது
    தலைவர் கெத்தாக இருக்க வேண்டாமா ஒல்லிப் பிச்சானா யிருந்தா மதிப்பு இல்லை
    ிளையும் பயிர் முளையில் தெரியும்
    ஏன் தேநீர் போடமாட்டாரோ
    மதுரை ஸ்பெஷலான ஊர்தான்

    ReplyDelete
    Replies
    1. யாரும் வாங்கித் தரவில்லை ,அவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி :)
      எந்தத் தலைவராவது ஓமக்குச்சி நரசிம்மன் சைஸில் இருக்கிறாரா :)
      இது விதையிலேயே தெரியுதே :)
      பெயர் போருத்தாம் வேண்டாமா :)
      இங்கே நடக்கும் அரசியல் அப்படி :)

      Delete
  8. Replies
    1. அருகம் புல் சாறு ஆரோக்கியத்துக்கு நல்லதுதானே :)

      Delete
  9. ரசித்தேன் நண்பரே!
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. படிப்புக்கும் பதவிக்கும் எதாவது தொடர்பிருக்கா :)

      Delete
  10. ரசித்து மகிழ்ந்தேன்

    ReplyDelete
    Replies
    1. ஊளைச் சதையைப் பார்த்து ஏமாந்துடாதீங்க :)

      Delete
  11. Replies
    1. உடம்பு மெலிந்தாலும் அருமைதானே :)

      Delete
    2. அதுக்காக நோய்வாய்ப் பட்டு மெலியக் கூடாது :)

      Delete
  12. Replies
    1. டெல்லியில் யாருக்காவது சமோஸா என்கிற பெயர் இருக்கணுமே,கேள்விப்பட்டதுண்டா :)

      Delete