17 September 2016

அமலா பாலும் ,ஆவின் பாலும் ஒன்றுபோலத் தானா :)

            ''நடிகை அமலா பால் ,இயக்குனர் விஜய்  விவாக ரத்துன்னு  சொன்னா ,உன்னாலே ஏன் நம்ப முடியலே ?''
            ''பழகப் பழக  பாலும் புளிக்குங்கிறது  சரி ,அமலா பாலுமா !''
உப்பு போட்டு சாப்பிட்டால் ரோசம் வருமா :)                       
              ''நான் சமையலில் உப்பே போடுறதில்லைங்கிற  விஷயம்  என் வீட்டுக்காரருக்கு  தெரிஞ்சு போச்சுடி !''
             ''ரோசம் வந்து அடி பின்னிட்டாரா ?''
             ''ஊஹும் ,அவரே சமைக்க ஆரம்பித்து விட்டார் !''

மனைவி சேலை  பார்க்கும் நேரத்தில் .....:)
              ''இரண்டு சினிமா தியேட்டர் உள்ள மாலில்தான் எனக்கு  சேலை எடுக்கப் போகணும்னு பிடிவாதமா சொல்றீங்களே ,ஏன் ?''
              ''போன தடவை நான்  படம் பார்த்துட்டு வந்த பிறகும் கூட ,நீ ஒரு  சேலைக்கூட  செலக்ட் பண்ணலையே !''

USல் வேலை செய்தால் லீவு உடனே கிடைக்குமா :)
             ''கொள்ளி வைக்க வேண்டிய ஒரே பையன் ,லீவு கிடைச்சு வர 'மார்ச் 'மாதம் ஆகும்ன்னா ...அதுவரைக்கும் அப்பன் பாடியை எங்கே வைக்கிறது ?''
              ''மார்ச் 'சுவரியிலேதான் !''

டொனேசன் கொடுத்துப் படிப்பதும் மூலதனம்தான் :)
பல் சொத்தையை சிமெண்ட் பூசி அடைக்கலாமென
நமக்கு புரியும்படி சொல்லி ...
அதற்கு ஐநூறு ரூபாய் செலவாகும் 
எனக் கூறும் மருத்துவரிடம் ...
இதுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சிமெண்ட் கூட தேவைப் படாதேயென சொல்லமுடியாது ...
ஐநூறை அவர் கேட்கவில்லை ,அவர்மூலமாய் 
நன்கொடை வசூல் பண்ணும் 
மருத்துவக் கல்லூரி நிறுவனர் கேட்கிறார் !

32 comments:

  1. அமலாபால் அன்பால் பருகப் பருக பாலும் புளித்துவிட்டதோ இந்த ஆண்பாலுக்கு...?!

    என்னடி சொல்றாய்... நீ சமைச்சியா...? உண்மையச் சொல்லு... சமஞ்சதுக்கு முன்னாடியும் பின்னாடியும் நீ அதச் செஞ்சு பாத்ததே இல்லையே...!

    அவசரமா ஒங்கள செலக்ட் பண்ணிட்டு... இப்ப கஷ்டப் படுறது எனக்கில்ல தெரியும்...! அதனாலதான் எதிலும் பொறுமை தேவை...!

    கொள்ளி வச்சாத்தான் அவரு உடம்பு வேகுமா என்ன...? கொள்ளி வைக்க வேண்டியதில்ல... மின் மயானத்தில உள்ள விட்டு உடனே சாம்பலாக்கிடலாம்... பதறாம மார்ச்பாஸ்ட் போட்டு வரச் சொல்லுங்க...! பணம்தான் முக்கியம்... அடுத்த வருடம் லீவுக்கு வரும்போது சாம்பல பாத்திக்கிட்டாப் போச்சு...! நீ சம்பாதி மகனே...!

    நிலா அது வானத்து மேலே... ‘பல்’லானது ஓடத்து மேலே... வந்தாடுது...!

    த.ம. 1




    ReplyDelete
    Replies
    1. இந்த பால் இருக்கே ,கிடைக்கும் வரை ஏக்கத்தைக் கொடுக்கும் ,கிடைத்தால் தூக்கத்தைக் கெடுக்கும் :)

      எப்படி எப்படி சமைச்சது எப்படின்னு கேட்டுச் சொல்றேன் :)

      சரி இன்னொன்னை செலக்ட் பண்ணிக்கோ ,நானும் அப்படியே .....:)

      என்னத்துக்கு அடுத்த வருசம் வரணும் ?பார்சலில் சாம்பலை அனுப்பிட்டா ஹட்சன் அல்லது தேம்ஸ் நதியில் தூவிட்டா போச்சு :)

      பல்லேலக்கா பல்லேலக்கான்னு பல் டான்ஸ் ஆடுதோ :)

      Delete
  2. Replies
    1. உப்புக்கும் ரோஷத்துக்கும் உண்மையில் தொடர்பு உண்டா :)

      Delete
  3. சமயோசிதமான பால் ஜோக். உங்களுக்கு எப்படி பாஸ் இப்படி எல்லாம் தோணுது?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்களின் 'ஒண்ணுமில்ல ' பதிவைப் படித்ததால் வந்த ஞானோதயம்தான் :)

      Delete
  4. ஜோக்காளியின் ஜோக்குகள் எத்தனை முறை படித்தாலும் புளிப்பதில்லை!

    ReplyDelete
    Replies
    1. பால் போல கள்ளும் உண்டு ,நிறத்தாலே ஒன்று என்றாலும் புளிப்பு வித்தியாசம் காட்டி விடுமே :)

      Delete
  5. நகைச்சுவையினை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் மொக்கையாய் யோசிக்க உங்களுக்கு நேரமே இருக்காது தானே :)

      Delete
  6. அமலா பாலையும் பல் மருத்துவத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. இணைக்கு பல்லும் பாலும் ஜோடி சேர்ந்திடுச்சோ:)

      Delete
  7. மார்ச்சுவரி - :( வேதனை.

    மற்றவை ரசித்தேன்.

    த.ம. 7-ஆம் வாக்கு....

    ReplyDelete
    Replies
    1. இது நான் நேரில் பார்த்ததால் எழுதத் தோன்றியது :(

      Delete
  8. மார்ச் மாதம் - மார்ச் சுவரி... செம ஜி.
    அமலா பால் சூப்பர்... (நான் ஜோக்கைச் சொன்னேன்)
    ரசித்தேன் ஜி... (நகைச்சுவைகளை)

    ReplyDelete
    Replies
    1. சூப்பரை நானும் ரசிப்பதால் தானே புளிக்குமா என்று கேட்டேன் :)

      Delete
  9. பழகப் பழக ஆவின் புளிக்கும் அமலா பால் விதிவிலக்கா
    உப்பே தின்னாத அவருக்கு ரோசம் எப்படி வரும்
    படம் பார்க்கும் செலவில் இன்னொரு புடவை எடுத்துக் கொள்ளலாம் என்று மனைவி சொன்னாரா
    அப்பன் பாடியை ஏன் வைக்க வேண்டும் மகன் US சிலேயே காரியம் செய்யலாமே
    கொடுத்த டொனேசனை ஈடு கட்டத்தானே ஃபீஸ்

    ReplyDelete
    Replies
    1. பெண் பால் புளிக்கக் கூடாது ஈன்ற நப்பாசைதான் :)
      வந்திருச்சே ,என்ன செய்ய முடியும் :)
      உண்மைதான் மாலில் டிக்கெட் விலை அப்படித்தான் இருக்கிறது :)
      அங்கேயும் ஹட்சன் நதி ஒடுவதாலா :)
      வாழ்க்கை வட்டம்னு இதிலேர்ந்து தெரியுதே :)

      Delete
  10. 'பழகப் பழக பாலும் புளிக்குங்கிறது சரி ,அமலா பாலுமா !'----பளிச்ச பாலை தயிரா மாத்தத் தெரியவில்லையே அவருக்கு......

    ReplyDelete
    Replies
    1. பால் பிடிக்கும் அளவுக்கு பலருக்கும் தயிர் பிடிப்பதில்லையே :)

      Delete
  11. 1) பால் - பாலாக இருக்கும் வரையில் இனிப்பு தான்.. தயிரானதும்.. புளித்தது!?..
    2) உப்புக்கும் ரோஷத்துக்கும் என்ன சம்பந்தம்?..
    3) நல்ல புடவையா வெச்சிருக்காதது கடைக்காரன் தப்பு!..
    4) கூரியர்..ல அனுப்ப சொல்லலாம்.. இல்லேன்னா.. மண்வெட்டியத் தூக்கிக்கிட்டு கிளம்பவேண்டியது தான்!..
    5) ஐநூறு ..ங்கிறது சிமெண்ட்டுக்கா.. கொத்தனாருக்கா?..

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக என்றும் பாலாகவே இருக்குமா ,பால் :)
      அதானே ஏன் சொல்றாங்க :)
      பூட்டிட்டுப் போகச் சொல்லிடலாமா ,காசு மிச்சம் :)
      பிளைட்டில் மண் வெட்டியை அனுமதிப்பார்களா :)
      கொத்தனாரே ஐநூறு வாங்கும் போது,டாக்டர் அதிகமாய் வாங்குவார் :)

      Delete
  12. அமலா பால் ரசனை...பல்லும் அழகு!!! மார்ச் மார்ச்சுவரி வார்த்தையாடல் ரசிக்கும் படியாக இருந்தாலும் வேதனையும் கூடவே வந்தது ஜி!! மற்றவற்றை ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. வாழும் போதே, பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் பெற்றோர்களைப் பார்க்கையில் வேதனையாய் இருக்கிறது ,கேட்டால் ,பிள்ளைகள் வசதிதான் முக்கியம் என்கிறார்கள் !

      Delete
  13. அனைத்தையும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. டொனேசன் கொடுமை தீர வழியே இல்லையா அய்யா :)

      Delete
  14. நகைச்சுவைகளை சுவைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. மார்ச்சுவரியில் பெற்றோர் பிணம் இருப்பது கொடுமைதானே :(

      Delete
  15. வணக்கம் ஜி !

    மார்ச் 'சுவரி நல்ல விழிப்புணர்வு
    வெளிநாட்டு மோகம் கொண்டோருக்கு
    அந்தனையும் அருமை ஜி அமலா பாலு உட்பட

    தம +1

    ReplyDelete
    Replies
    1. உள்நாட்டின் ஊழல் அவர்களை வெளிநாட்டுக்குத் துரத்தி விடுகிறதோ :)

      Delete
  16. அமலா பாலும் புளித்துவிட்டதா :)
    நல்ல ஜோக்குகள்.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிற நமக்கு புளிக்காது :)

      Delete