18 June 2017

இப்படி கண்டிஷன் போட்டா கல்யாணம் ஆகுமா :)

              ''டாக்டர் மாப்பிள்ளையை  ஏன் வேண்டாம்னு சொல்லிட்டீங்க ,கிளினிக் வைத்துத் தரச் சொல்கிறாரா ?''
                ''அப்படி கேட்டாலும் பரவாயில்லை ,தினசரி ஐம்பது நோயாளிகளையும் நாமதான்  ஏற்பாடு பண்ணணுமாம்!''

இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் :)
             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''

             ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நம்புகிறவன் நான்  !''

ஓசியில் கிடைக்கும் இளநீர் :)
            ''நம்ம கணேஷ் வழுக்கை தலையால் நமக்கு ஒரு வகையிலே  லாபமா ,எப்படி ?''
            ''இளநீர் குடிக்கப் போனா 'நல்ல வழுக்கையா வெட்டுங்க 'ன்னு  நம்மை  சொல்ல விடாமல் , அவனே ஆர்டர் பண்ணிடுறானே !''

சைட் அடிக்காதே  என்று எச்சரிக்க இந்த நிறமோ  :)
வேறெந்த நிறத்தைவிட ...
வெகுதூரத்திலும்  தெரியும் 'மஞ்சள் 'மகிமை யை ...
நமது முன்னோர்கள் உணர்ந்துதான் 
தாலிக் கயிறில்  மஞ்சள் பூசினார்களோ ?

32 comments:

  1. ஹல்லோ ஜீ... நான் தான் முதலாவது, முதலாவது ஓட்டும் எனதே :) :)

    பரிசு எனக்கே :)

    ReplyDelete
    Replies
    1. நானும் நேற்றிரவு கொர் ,கொர் ....நீங்கதான் 1ஸ்த் :)

      Delete
  2. ரொம்ப வில்லங்கமான மாப்பிள்ளையாக இருப்பார் போலியே :)

    ReplyDelete
    Replies
    1. வைத்தியாமாவது செய்வாரா ;)

      Delete
  3. மஞ்சள் கயிறு - நீங்க சொல்றதும் சரிதான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் நோட்டீஸ்னு ஏன் சொன்னாங்கன்னு தெரியுமா ஜி :)

      Delete
  4. டாக்டர் நகைச்சுவைத் துணுக்கு
    முதல் துணுக்கு மட்டுமல்ல
    முதன்மையானதும் கூட
    ஆம் மனச்சாட்சி உள்ளவர்களை
    இந்த மஞ்சள் கயிறு உறுத்தத்தான் செய்யும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. படிக்கும் போது செய்த செலவை இப்படி வசூல் செய்ய நினைத்து விட்டாரோ :)
      துரோகம் செய்ய நினைத்தாலும் உறுத்தும்தானே ஜி :)

      Delete
  5. பகவான் ஜீ வெளில வாங்க... உங்களுக்கு நேரமில்லை என்பதற்காக எங்களைப் படிக்க விடாமல்.. ஒரு நாள் போஸ்ட்டை ரெண்டாப் பிரிச்சுப் போடுறீங்களே!!! இப்போவெல்லாம் வர வரக் குறையுதே.. இதே றேஞ்ல போனால் வோட்டும் குறையும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:).. ஒயுங்கா நிறைய கொமெடி சொல்லுங்கோ:)..

    ReplyDelete
    Replies
    1. //நிறைய கொமெடி சொல்லுங்கோ:)//

      அதிகம் சொல்லும்போது, அறுவைக் காமெடிகளும் கலந்துடும். பரவாயில்லையா?!?!

      Delete
    2. ஹா ஹா ஹா அறிவுப்பசி ஜி நீங்க இங்கின கொமெடி பண்ணுறீங்க:)...
      பகவான் ஜீ க்கு கொமெடிகளில் கலப்படம் பண்ணத் தெரியாதூஊஊஊஊஊ:)

      Delete
    3. உங்களுக்கு மறுமொழி கூறவே நேரமில்லை எனக்கு ,நேரம் வரட்டும் ...போதுமடா சாமின்னு உங்களைப் புலம்ப வைக்கிறேன் :)

      Delete
  6. வரதட்சிணை புதுமையாக இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. காலம் மாற மாற இதுவும் மாறத் தானே செய்யும் :)

      Delete
  7. அனைத்தையும் ரசித்தேன். குறிப்பாக முதல் ஜோக்.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை இவர் போலி டாக்டரா இருப்பாரோ :)

      Delete
  8. ‘நோய்நாடி... நோய்... முதல் நாடி...’ டாக்டர் வள்ளுவர் வழி நடப்பவரோ...?!

    ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’வீர்களோ...?!

    அப்பத்தானே வழுக்கைக்கு வலு சேர்க்க முடியும்...!

    மோதிரம் போட்டால் எப்பொழுதும் மோதிக் கொள்வார்கள் என்றோ...?!

    த.ம. 6








    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ,கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னாரே :)

      அறைய விட்டால் தானே மறு கன்னம் :)

      வலு சேர்த்து பளு தூக்கப் போறாரா :)

      மோதிரக் கையால் குட்டு படக் கூடாது என்பதால் :)

      Delete
  9. நடக்காது என்பார் நடந்துவிடும்..நடக்கும் என்பார் நடந்துவிடும்....

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ முடிந்தால் சரி :)

      Delete
  10. அட நோயாளியும் அனுப்பணுமா. நல்லா இருக்கே இது.

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. முடியவில்லை என்றால் நீங்களே வந்து படுக்கணும் என்றால் அது நியாயம் :)

      Delete
  11. Replies
    1. அந்த டாக்டரும், சிறப்பு மருத்துவர் என்றே போர்டு மாட்டியுள்ளார் :)

      Delete
  12. //தினசரி ஐம்பது நோயாளிகளையும் நாமதான் ஏற்பாடு பண்ணணுமாம்!''//

    தினசரி மருத்துவமனைச் செலவையும் ஏத்துக்கச் சொல்லலையே!!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல மாப்பிள்ளை ,பொண்ணைக் கொடுத்து விடலாமா ஜி :)

      Delete
  13. மஞ்சள் மகிமை நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. கணவன் கருமியாய் இருந்தால் இந்த மஞ்சள், கருமிநாசினியாகவும் செயல் படக்கூடும் :)

      Delete
  14. நோயாளிகள் வந்தால்தானே அவர் டாக்டர் என்பது தெரியும்
    இடது கையால் வலது கையைப் பிடித்துக் கொண்டும் கொடுப்பவர்களை என்ன சொல்ல
    வழுக்கையில் தான் இளநீர் அதிகம் என்பது தெரிந்தவர்
    மணமானதே தெரியாமல் இருக்க மஞ்ச்ள் கயிறை மறைக்கிறார்களே

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா அவர் கோரிக்கை நியாயம்தானா :)
      ஒரு கையால் சுமக்க முடியாத அளவுக்கு கொடுப்பவர்களாய் இருக்கக்கூடும்:)
      அது மட்டும்தான் தெரிந்தவரா :)
      அற்ப ஆசை யாரை விட்டது :)

      Delete
  15. அனைத்தும் ரசித்தோம் ஜி...ஹஹஹ் நோயாளிகளையும் அனுப்பணும்ன்றது ஹஹஹ்...

    ReplyDelete
    Replies
    1. கற்ற கல்வி மேல் நம்பிக்கை இல்லாதவரோ :)

      Delete