24 June 2017

பிரசவ வைராக்கியம் என்றால் என்ன தெரியுமா :)

ஃபிரைடு ரைஸ் அப்படித்தானே இருக்கு :)        
           ''இன்னைக்கு அரிசி சரியா வேகலைன்னு ,உன்  பெண்டாட்டிகிட்டே  சொன்னது தப்பா போச்சா ,ஏண்டா ?''
             ''பாஸ்ட் புட்  கடையிலே, வேகாததை ஃபிரைடு ரைஸ்னு  கொடுத்தா மட்டும்  சாப்பிடத் தெரியுது ,இதுக்கென்ன  குறைச்சல்னு கேட்கிறாளே !''

ராசி நல்ல ராசி :)            
              ''ஜெயிலுக்கு போயிட்டு வந்ததில் இருந்து தலைவர் முற்போக்குவாதி ஆயிட்டாரா ,எப்படி ?''
              ''ராசி எண் என்று அவர் நினைத்து இருந்தது ,ஜெயில் அறை நம்பரா போச்சே !''

ஆஸ்திரேலியா ஜனத் தொகையை விட இவர்கள் அதிகம் :)                
              ''லஞ்சம் வாங்கிறவனை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் ஒரு தீவிலே விடணும்!''
              ''அவ்வளவு பெரிய தீவுக்கு எங்கே போறது ?''

குற்றவாளியின்  சிந்தனை  சரிதானா  :)
          ''நீ பண்ணின குற்றத்திற்கு நான் 'ஆணி 'அடிச்ச  மாதிரி தீர்ப்பு சொல்லப் போறேன் !''
          ''அது உங்களாலே முடியாது ,எஜமான் !''
          ''ஏன் ?''
          '' உங்க கையிலே இருக்கிற மரச் சுத்தியால் ஆணி அடிக்கமுடியாதே !''

வரதட்சணையை வசூலிக்கும் மனைவி :)
          ''ஐம்பதாயிரம் செலவுலே  வைர மோதிரம்  வாங்கிக் கொடுத்துட்டேன் ...இன்னும்நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறீயே ,ஏன் ?''
          ''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''
 பிரசவ வைராக்கியம் என்றால் என்ன தெரியுமா :)
தையல் கூலியை கொடுக்கும் போதெல்லாம் ...
மனதிலே ஒரு வைராக்கியம் ...
'இனிமேல் ரெடிமேட் மட்டுமே வாங்க வேண்டும் 'என்று !



இந்த லிங்க் .....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464333செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

35 comments:

  1. அவ்ளோ பெரிய தீவுக்கு எங்க போறது..? / ஹா ஹா அதானே?

    ReplyDelete
    Replies
    1. இந்தியா மூன்று பக்க தண்ணீரில் மிதக்கவில்லை ,லஞ்சத்தில் மிதக்கிறது :)

      Delete
  2. அவரோட மதிப்பு வெறும் 5 லட்சம் தானா? ச்சே ரொம்பக் கம்மியா இருக்கே? :) :)

    ReplyDelete
    Replies
    1. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை :)

      Delete
  3. குற்றவாளியின் சிந்தனை சரியே :)

    ReplyDelete
    Replies
    1. மரச் சுத்திலால் பிறந்த ஞானமா இது :)

      Delete
  4. ரெடிமேட் சட்டை எடுக்கும்போதெல்லாம்
    துணி எடுத்துத் தைத்து விடலாம் எனத்தான்
    எனக்குத் தோன்றுகிறது
    அதுவும் பிராண்டெட் என்றால்
    சொல்லவே வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. அதுக்கேற்ற கூலி கொடுத்து தான் ஆகணும் ,வேற வழி :)

      Delete
  5. Replies
    1. ரெடிமேட் அமைவதும் மனைவி அமைவதை போலத் தானே :)

      Delete
  6. லஞ்சம் வாங்காதவர்களை விடுவதற்கு தீவு இருக்குதே.... ஜி

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு தீவு வேணாம் ,மண் மேடே போதும் :)

      Delete
  7. Replies
    1. ராசி எண் இப்படியும் செய்யுமா :)

      Delete
  8. எங்க அம்மா காலித்திலிருந்து நானு இருந்து ரெடிமேடுதான்க.......

    ReplyDelete
    Replies
    1. தெளிவான ஆளுதான் நீங்க :)

      Delete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. Replies
    1. மௌனமான ஆதரவுக்கு நன்றி ஜி :)

      Delete
  11. இன்னிக்கே வைர மோதிரம் வாங்க மாமனை கடைக்கு கூட்டி போறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கிக்கிட்டு முணு முணு மட்டும் வேண்டாம் :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் த.ம14

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர் பிரைடு ரைஸ் எப்படி ஜி :)

      Delete
  13. பிரசவ வைராக்கியமும், டெய்லர் வைராக்கியமும் ஒன்றுதான் மிக நன்று

    ReplyDelete
    Replies
    1. கடைப்பிடிக்க நினைத்தாலும் முடியாதவை தானே :)

      Delete
  14. பிரைடு ரைஸ் அவ்வளவாய் ருசியில்லை தானே :)

    ReplyDelete
  15. // ''பாஸ்ட் புட் கடையிலே, வேகாததை ஃபிரைடு ரைஸ்னு கொடுத்தா மட்டும் சாப்பிடத் தெரியுது ,இதுக்கென்ன குறைச்சல்னு கேட்கிறாளே !''//

    அந்தம்மாவை இவர் ஏன் அங்கெல்லாம் கூட்டுட்டுப் போறார்?!

    ReplyDelete
    Replies
    1. அதோட பலனைத் தான் இப்போ அனுபவிக்கிறாரே :)

      Delete
  16. எல்லாமே அரை வேக்காடுதானா...?!

    எல்லாமே சேம் நெம்பர்தானா...?! சேம்... சேம்...!

    தீவிலே விடணுமுன்னு தவறுதாலா டைப்பாயிடுச்சு... தியிலே விடணுமுன்னு மாத்திப் படிங்க...!

    மர மண்டையில ஏறாதா...?!

    அஞ்சு லட்சத்துக்கு வாங்கின முரட்டுக்காளையாச்சே...! அஞ்சாத சிங்கம் என் காளை... இது பஞ்சா பறக்கவிடும் ஆளை...!

    தையல் தைப்பது ஒரு தையல் என்பதால் வைராக்கியமாக இருக்க முடியவில்லை...!

    த.ம. 18

    ReplyDelete
    Replies
    1. முட்டை ஆப் பாயில் என்றால் ருசிக்கும் ,அரிசி ஆப் பாயில் என்றால் வயிற்று வலிதானே வரும் :)

      சேம் ஆனதால் தான் முற்போக்குவாதி ஆகிவிட்டார் :)

      தீயிலே விடணும்னு சரியாய் படிங்க :)

      ஏறவில்லை என்பதால் தானே அது மர மண்டை :)

      முரட்டுக் காளை அஞ்சு லட்சத்துக்கு படியலாமா :)

      தையல்தான் தைக்கிறது என்று யாருக்குத் தெரியும் :)

      Delete
  17. Replies
    1. விரலும் அந்த மோதிரமும்தானே :)

      Delete
  18. ரசித்தோம் அனைத்தும் ஜி

    ReplyDelete
    Replies
    1. தையல் கூலியை கொடுக்கும்போது உங்களுக்கும் இப்படி தோன்றுமா ஜி :)

      Delete