23 June 2017

தம்பதிகள் சேர்ந்து குளித்தாலுமா சண்டை வரும் :)

 இவன் திருந்தவே மாட்டானோ :)
                ''நல்ல மனுஷன் சாராயத்தைத் தொட்டதுமில்லை ,அது தொட்டவனை லேசுலேதான் விட்டதுமில்லை ....இந்த பாடல் வரிகளை கேட்டதில் இருந்து உறுத்திகிட்டே இருந்தது !''
               ''குடிக்கிறதை நிறுத்திட்டீங்களா ?''
               ''ஆமா ,சாராயத்தை மட்டும் !''
டயத்துக்கு  இவன் வர மாட்டான் போலிருக்கே :)         
              '' அதெப்படி ஒரே பொருள் ,காலையில் எரிச்சலும்  ,மாலையில் சந்தோஷமும் தர முடியும்  ?''
              ''எங்க ஸ்கூல் பெல் தருதே !''

சுவீ(ட்)கார  விழா  என்று அழைத்து இருப்பார்களோ :)              
          ''பந்தியில் சாப்பாட்டுக்கு முன்னால் சுவீட் மட்டுமே வைப்பார்கள் ,நீங்க காரமும் வைக்கிறீங்களே ,ஏன் ?''
          ''இந்த சுவீகார விழாவை நீங்க மறக்கக் கூடாதுன்னுதான் !''

தம்பதிகள் சேர்ந்து குளித்தாலுமா சண்டை வரும் :)
          ''காசிக்கு  முதல் தடவை வந்துட்டு , இந்த படித்துறையில்  ஏற்கனவே குளித்த மாதிரி இருக்குன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
           ''இந்த  'நாரதர் படித்துறை'யில் குளிக்கிற  தம்பதிகளின் வாழ்க்கை முழுவதும் சண்டையாத் தான் இருக்கும்னு  சொல்றாங்களே !''

இந்த கேள்விக்கு பதிலேது :)
          ''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
          ''காயப்போட்ட எலியைத்தான் கேட்கணும் !''

உலக அதிசயம்னா சும்மாவா :)
பெயர் என்னவோ 'பைசா 'கோபுரம்தான் ...
மேலும் சாய்வதை தடுக்கச் செலவோ ,கோடிக்கணக்கில் !

இந்த லிங்க் .....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464233செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

44 comments:

  1. ஹாய் ஜீ, ஹல்லோ ஜீ, எப்படி இருக்கீங்க..?

    ReplyDelete
    Replies
    1. ராத்திரியானா தூக்கம் தூக்கமா வருது ஜி :)

      Delete
  2. பைசா கோபுர மேட்டர் ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. சாய்ந்த கட்டிடத்தை உலக அதிசயம்னு சொல்றதை என்னால் ஜீரணிக்கவே முடியலே ஜி :)

      Delete
  3. சுவீகாரம் - சுவீட் காரம் = எப்படி ஜீ இப்படியெல்லாம் யோசிக்கிறீன்fக..? :)

    ReplyDelete
    Replies
    1. ஸ்வீட் காரம் சாப்பிடும் போது யோசித்தது ஜி . இது :)

      Delete
  4. சுவீட் காரம் மற்றும்
    பைசா கோபுரம் குறித்த வித்தியாசமான
    சிந்தனை கண்டு வியந்தேன்
    இந்தத் திறமையால்தான் நீங்கள்
    தொடர்ந்து முதலாகவே என்பதைச்
    சொல்லவும் வேண்டுமோ ?
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. இந்த 'குண்டக்க மண்டக்க' சிந்தனை முதலாவதாய் இருப்பதா என்று ஒரு குருப் ,கூடவே இருந்து கொண்டு கழுத்தறுத்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete
  5. Replies
    1. சாய்ந்த கோபுரத்தை ரசிக்க முடியுதா ஜி :)

      Delete
  6. சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்... சிங்காரி சரக்கு நல்ல சரக்கு...!

    ‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
    இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்...’

    சுவீகார இளவரசனுக்கு வயது எத்தனை...?!

    வாழ்க்கையில புதுசா ஏதும் சொல்லுவீங்கன்னு பாத்தேன்...!

    கதிர் அவனின் வெயில்தான் காரணம்...!

    முதல் கோணல் முற்றிலும் கோணலா...? பரவாயில்லை அப்படியே விட்டுவிடுங்கள்... கொத்தனாருக்கு கூலி கொடுக்க வேண்டாம்...!

    த.ம. 6



    ReplyDelete
    Replies
    1. சிங்காரியே கிக் ஏற்றும் சரக்குதானோ :)

      விடியலே காண முடியாத அளவுக்கு ஊத்திக்கிட்டு ஒரேயடியா போயிடுங்க :)

      ஏழு கழுதை வயதானவனை எடுத்தா அது சுவீகாரமாகுமா :)

      அதானே தம்பதிகள் சண்டை பழைய செய்தியாச்சே :)

      அதுக்கு தெரியுமா புழுக்கையும் புண்ணாக்கும் :)

      ஒரே கல்லில் இரட்டை மாங்காய் ,கூலியும் தரவேண்டாம் ,வேடிக்கைப் பார்க்க வருவோரிடம் நுழைவுக் கட்டணமும் வசூலிப்போம்:)

      Delete
  7. எல்லா ஜோக்ஸையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. நாரதர் படித்துறை நீங்களும் பார்த்த இடம்தானே ஜி :)

      Delete
  8. நாராதரை விடுங்கள் காசியிலும் தண்ணீர் பஞ்சமோ...????

    ReplyDelete
    Replies
    1. நல்ல தண்ணிக்கு அங்கே பஞ்சம்தான் :)

      Delete
  9. அனைத்தையும் ரசித்தேன், சுவீகார விழாவை சற்றே அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. விழா என்றாலே சிறப்பாகத்தானே இருக்கும் :)

      Delete
  10. வணக்கம்
    ஜி

    நகைச்சுவையுடன் சுவைபட நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எப்படி சொன்னாலும் ஒரு சிலரின் மண்டையில் ஏற மாட்டேங்குதே :)

      Delete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க ,ஊரான் தளத்துலே விளம்பரம் செய்ய :)

      Delete
  12. எதை மேற்கோள் காட்டிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

    அத்தனை ஜோக்குகளும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. உங்க அறிவுப்பசிக்கு தீனி கிடைச்சதுன்னா எனக்கும் சந்தோசம்தான் :)

      Delete
  13. எலியை ரொம்பவே ரசித்தோம்...ஜி ...பைசா கோபுரத்தையும்....

    அனைத்தும் ரசித்தோம் ஜி....

    ReplyDelete
    Replies
    1. பைசா கோபுரத்தில் நுழைந்த எலி ரொம்ப சம்ர்த்துதானே ?....இதுக்கு ஏன் ஒரு பூஜார் கர்ர்ர்ருன்னுது:)

      Delete
  14. எங்கே தம பெட்டி!? எள்ளை க் காயப்போட்ட எலி பெட்டியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டதா!!!??....

    ReplyDelete
    Replies
    1. அதை அந்த எலியே வச்சுக்கட்டும் ,நீங்க லிங்கில் க்ளிக் பண்ணுங்க ஜி :)

      Delete
  15. சாராயம் தொடவா குடிக்கவா
    ஆலைச் சங்கும் அப்படித்தான்
    சுவீகாரமே ஸ்வீட்டும் காரமும் இணைந்ததோ
    காசியில் நாரதர் படித்துறையும் இருக்கிறதா எனக்குத் தெரியவில்லையே
    எலிப்புழுக்கை காயப் போட்டதா
    பைசா பெறாத சாய்வு என்று சொல்லக் கூடாது பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தொட்டுட்டு குடிக்காம இருக்க முடியுமா :)
      என்றாலும் அது கூலி கொடுக்கும் சங்காச்சே:)
      தமிழும் ஆங்கிலமும் இணைந்தது :)
      அடுத்த முறை சென்று பாருங்கள் சேர்ந்து குளிக்க வேண்டாம் :)
      ஆமாம் ,மழை வந்தால் வந்து அள்ளிக் கொண்டு போகும் :)
      இதுக்கும் பைசா வாங்கிறானே வெள்ளைக்காரன் :)

      Delete
  16. Replies
    1. ஸ்கூல் பெல் சத்தமும் அருமைதானே ஜி :)

      Delete
  17. Replies
    1. ஆல்ப்ஸ் தென்றலே சொல்லும் போது எனக்கும் குளுகுளுன்னு இருக்கே :)

      Delete
    2. இங்கே வெயில் கொழுத்தி உடலில் வியர்வை தார் போல் உருகி ஓடுகின்றது. உங்களுக்கு குளுகுளு என இருக்கின்றதோ சார்?

      நான் பகவான் ஜீ வேறு ஜோக்காளி எனும் தளம் வேறு என நினைத்திருந்தேன். இரண்டையும் பார்த்து குழம்பு குழப்பி விட்டேன்.

      Delete
    3. அங்கேயும் வெயிலா ...... ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் ரெயின் நதியின் ஓரத்தில் பாடித் திரிவோம் பறவைகள் போல் என்று பாடும் குளுகுளு சீன்தான், மனசிலே ஸ்டில் மாதிரி நிற்குதே :)

      Delete
    4. ஆமாம். இங்கே குளிர்காலம் கூட தாக்குப்பிடிக்கலாம். ஆனால் வெயில் காலம் வந்தால் கஷ்டம் தான். இந்தியாவிலிருந்து வரும் உல்லாசப்பயணிகள் கூட வெயில் ஜாஸ்தி என சொல்கின்றார்கள். நாங்கள் வசிப்பதே ஆல்ப்ஸ் அதிலும் ஐரோப்ப்யாவின் உயர்ந்த மலைச்சிகரத்தில் அடிவாரத்தில் தான். இங்கே ஓடும் நதியின் பெயர் தூனர் ஷே, பிரின்சர் ஷே.. றெயின் நதி ஓடுவது வேறு பக்கம் எனினும் உங்கே எல்லா நதிகளுக்குள்ளும் தொடர்பு உண்டு. ஆனாலும் 30 கிராட் வெயில் வந்தாலே தாங்க முடியாது.

      Delete
    5. உண்மை இதுதான் என்றாலும் ,ஆல்ப்ஸ் என்றாலே வருடம் முழுவதும் ஜில்ல்தான் ஒரு பிம்பம் மனதில் இருக்கிறது :)

      Delete
  18. உலக அதிசயம் என்றாலே செலவுதானே ஜீ))) நலமா ஜீ?

    ReplyDelete
    Replies
    1. அதிசயமே அசந்து போகும் நீயெந்தன் அதிசயம் என்றாலும் செலவுதான் ஜி :)

      உங்க 'தம'ன்னா டானிக் கிடைத்தால் இன்னும் நலமடைவேன் ஜி :)

      Delete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  20. Replies
    1. மூன்று முகம் காட்டி முதல் வருகை தந்திருக்கும் உங்களுக்கு என் நன்றி :)

      Delete