22 June 2017

மனைவிக்குப் பிடிக்காததை பார்க்கவும் கூடாதோ :)

மனுஷனுக்கு நக்கல் ஜாஸ்திதான் :)
              ''சுகர் கண்ட்ரோலுக்கே வரலைன்னா டாக்டரை மாத்துங்கன்னு ... நீ உன் கணவரிடம்  சொன்னது ,தப்பாப் போச்சா ....ஏன் ?''
              ''நீயும்தான் என் கண்ட்ரோலில்  இல்லைன்னு  நக்கல்  பண்றாரே !''

நல்ல வேளை,உருப்படியா வருதே :)           
                ''ரயில் நேரத்தில் வருமா ?''
                ''வராது ,தண்டவாளத்தில் தான் வரும் !'' 

பழமொழி பொருத்தம்தானே :)
            '' யானை வாங்க காசிருக்கு ,அங்குசம் வாங்க காசில்லைங்கிற பழமொழிக்கு  உதாரணம் நான்தானா ,ஏண்டா ?''
             ''புது பைக் வாங்கிட்டு ஹெல்மெட் வாங்க காசில்லைன்னு சொல்றீயே !''

மனைவிக்குப் பிடிக்காததை பார்க்கவும் கூடாதோ :)
          ''உன் மனைவி உன் மூஞ்சியிலே குத்துவிடும் போது, டிவியிலே என்ன பார்த்துகிட்டு இருந்தே ? ''
           ''குத்துப் பாட்டுக்களைதான் !''
ருசி ....புரிந்ததும் புரியாததும் :)
வாய்க்கு ருசியா ஆயிரம் அரிசி ரகங்களை உண்டாலும் ...
வாய்க்கரிசி பாசுமதியா ,ரேசன் அரிசியா என்று  புரியப் போவதில்லை !

36 comments:

  1. ஆவ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டா லாண்டட்ட்ட்ட்ட்:) எங்கிட்டயேவா:)
    http://www.ripleys.com/wp-content/uploads/2014/08/Cat-Landing-Grass-SMALLtrim.gif

    ReplyDelete
    Replies
    1. ///''நீயும்தான் என் கண்ட்ரோலில் இல்லைன்னு நக்கல் பண்றாரே !''//
      ஹா ஹா ஹா எதையாவது சொல்லிச் சொல்லியே மாத்திடலாம் எனத்தான் எல்லோரும் ரெடியா இருக்கினம்போல:).

      //''வராது ,தண்டவாளத்தில் தான் வரும் !''//

      ஹா ஹா ஹா சூப்பர்.:).

      ///வாய்க்கரிசி பாசுமதியா ,ரேசன் அரிசியா என்று புரியப் போவதில்லை !//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) இனி சாகுமுன், உயிலோடு இதையும் எழுதி வச்சிட்டால் போச்சு... எனக்கு பொன்னி சம்பாதான் பிடிக்கும்:)

      Delete
    2. லிங்க்கில் சென்று பூஜார் லாண்ட் ஆகும் அழகை ரசித்தேன் :)

      Delete
    3. கழட்டி விட காரணமா வேணும் :)

      தண்டவாளத்தில் நேரத்துக்கு வருமான்னு இனி கேட்கணுமோ :)

      மாற்றிப் போட்டா எழுந்து கேட்கவா முடியும் :)

      Delete
  2. ஹாய் ஜீ ஹல்லோ ஜீ, ஹவ் ஆர் யூ ஜீ? :) :)

    - இன்று நாடு முழுவதும் இசைத்திருவிழா நடந்துகொண்டிருக்குது. அதில் கலந்து உருகிவிட்டு, இப்பதான் வீடு வந்தேன் பகவான் ஜீ, அதான் லேட்டு -

    ReplyDelete
    Replies
    1. நம்ம நாட்டிலே இப்படி ஒரு திருவிழாவே இல்லையே ?இனி மேலாவது நடக்குமா :)

      Delete
  3. அந்த மனுஷன் கேட்டது நியாயம் தானே ஜீ :)

    ரயில் - தண்டவாளம், ஹெல்மெட் எல்லாமே சூப்பர்.

    வாய்க்கரிசி - செம செம

    எனக்குப் பிடிச்சது - சிவப்பு புழுங்கல் அரிசி :) :)

    அதில் கஞ்சி வடித்து, அதனுள் தேங்காய்ப் பால் விட்டு, கொஞ்சம் சீனி அல்லது சர்க்கரை போட்டு கலக்கிக் குடிச்சா - வாவ்வ்வ்வ்...!!

    ReplyDelete
    Replies
    1. இந்த விவரங்களை வாரிசுகளிடம் சொல்லுங்க ஜி :)

      Delete
  4. கண்ட்ரோலுக்கு வராததையெல்லாம்
    மாற்ற முடியுமா
    அனுபவித்துதான் ஆகணும்

    ReplyDelete
    Replies
    1. அது உங்களவரா இருந்தாலும் சரி ,சுகராய் இருந்தாலும் சரி :)

      Delete
  5. கடைசியில் சொல்லியிருக்கும் தத்துவம் சூப்பர்.

    அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் பிடித்த அரிசி அதான் போலிருக்கே ஜி :)

      Delete
  6. கடைசி தத்துவம் நல்ல மகத்துவமானது ஜி

    ReplyDelete
    Replies
    1. புரியுற மாதிரி தத்துவம் இல்லையா ஜி :)

      Delete
  7. Replies
    1. குத்துப் பாட்டையுமா :)

      Delete
  8. கண்ட்ரோலுக்கே வரலைன்னா மாத்த வேண்டியதுதானே...!

    வரும்... ஆனா வராது...!

    மாடு வாங்கிட்டு சாட்டை வாங்க காசில்லைன்னு சொல்றதில்லையா...!

    ‘சொப்பன சுந்தரி நான்தானே...!’ குத்து(ம்) பாட்டு(ம்)...!

    வாய்க்கரிசி உயிருள்ளவரை போட்டால் போதும்...!

    த.ம. 7




    ReplyDelete
    Replies
    1. ஒண்ணை மாற்றி விடலாம் :)

      வரும்போது வரும் :)

      மாட்டுக்கு வந்த யோகம் :)

      கேட்டாளே அங்கேன்னு ஆட்டம் போட்டால் நல்லாயிருக்கும் :)

      அது தானா போட்டுக்கிறதாச்சே :)

      Delete
  9. மனைவிக்கு முன்னால குத்து பாட்டு பாத்தா குத்து விழாம எண்ண பண்ணும்?

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,நீங்க வாங்கியதில்லை போலிருக்கே :)

      Delete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. மீறி பார்த்தால்..மூஞ்சியில குத்து விழுதே....!!!

    ReplyDelete
    Replies
    1. இதையும் நேரம் காலம் பார்த்து பார்க்கணுமா :)

      Delete
  12. துணுக்குகள் எல்லாம் ரசித்தேன் அதிலும் தத்வார்த்தமான வாய்க்கரிசி சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ நிலையாமையைப் பற்றி எழுதினால் எல்லோருக்கும் பிடிக்கிறது :)

      Delete
  13. அருமை தோழர்
    தொடர்க

    ReplyDelete
    Replies
    1. தத்துவமும் தானே :)

      Delete
  14. கடைசி ஜோக்கா அது... தத்தவமல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. ஜோக்கான தத்துவம் :)

      Delete
  15. கண்ட்ரோலுக்கு வராத இரண்டையுமா :)

    ReplyDelete
  16. முகத்தில் குத்து.....

    தனக்கே தனக்குன்னு இவன் ஒரு டி.வி.வைத்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
    Replies
    1. டிவி வைத்துக் கொண்டாலும் மனைவி சம்மதித்து இவனை வைத்துக் கொள்ளணுமே :)

      Delete
  17. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 16
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. புது பைக் வாங்கிட்டு ஹெல்மெட் வாங்க காசில்லேன்னு சொன்னா நம்ப முடியுதா ஜி :)

      Delete
  18. தத்துவம் அருமை....அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. பாசுமதி ருசியும் மறக்கும் என்றால் சோகம்தானே :)

      Delete