10 September 2017

கல்யாணப் பொண்ணுக்கு இப்படியுமா சந்தேகம் வரும் :)

* ஒட்டக் கறப்பதில் இருவரில் யார் கில்லாடி :)              
          ''உன்னை விட போலீஸ்காரர் தொழில்லே கெட்டிக்காரரா இருக்காரா ,எப்படி ?''
          ''பசு மாட்டை ரோட்டிலே ஏன் அவிழ்த்து விட்டேன்னு ,என்னிடம் இருந்ததை ஒட்டக் கறந்து விட்டாரே !''

இவனெல்லாம் இங்கே இருக்க வேண்டிய ஆளில்லை :)
            ''லெக்சரருக்கும் ,புரொபசருக்கும்  என்ன வித்தியாசம் ?''
             ''பிரசங்கிக்கும் ,அதிக பிரசங்கிக்கும்  உள்ள வித்தியாசம்தான் !''

பிழைக்கத் தெரிந்த நண்பன் :)
          ''உன்னோட திருமண அழைப்பிதழில்  வங்கிக்கணக்கு எண்ணை எதுக்கு குறிப்பிட்டு இருக்கே ?''
          ''திருமணத்துக்கு வர முடியாட்டியும் பரவாயில்லை ,மொய்யை வங்கிக் கணக்கில் போடவும்னு சொல்லி இருக்கேனே !''

பையனுக்கு இப்படியும் பாரதி நினைப்பு :)        
           '' பாரதி பிறந்த நாள் வந்தாலே எனக்கு என் தமிழ் வாத்தியார் ஞாபகம்தான் வரும் !''
            ''பாரதியாரோட கவிதைகளை அவர் அவ்வளவு அழகா சொல்லி தருவாரா ?''
            ''ஊஹும் ,அவரோட பொண்ணுங்களுக்கு  மகா,கவி ,பாரதின்னு  பெயர் வச்சிருக்காரே !''

கல்யாணப் பொண்ணுக்கு வரக் கூடாத சந்தேகம்  :)
              ''தீ அணைப்புத் துறையிலே வேலைப் பார்க்கிற வரனைப் பார்த்தா நல்லாத்தானே இருக்கு ,ஏண்டி வேணாங்கிறே ?''
            ''வேகமா வந்து அணைப்பார்ங்கிற நம்பிக்கை வர மாட்டேங்குதே  !''
மனைவியால் நொந்தவரின் கேள்வி :)
          என் மாமனார் போனார் ...என் மாமியாருக்கு மகிழ்ச்சி !
          என் அம்மா போனார்  ..என் மனைவிக்கு மகிழ்ச்சி !
          எனக்கு மகிழ்ச்சி ...என் அம்மாவின் ஒரே மருமகள் போனால்தான்  வருமோ ?

டிஸ்கி :என் பதிவு புதியதும் பழையதும் கலந்த கலவைதான் ,*குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

33 comments:

  1. அனைத்தும் நன்றாக உள்ளது அதிலும் மொய் சாமார்த்தியம்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் மொய் வைக்க மறப்பவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள் :)

      Delete
  2. நல்லா இருக்கனும் போலிஸ் மகராசான்... யாரோட பசுவோ... என்ன ஓட்டிப்போகச் சொல்லிட்டாரில்ல...!

    லெக்சரர் சொல்றது கொஞ்சமும் புரியாது.... புரொபசர் புலம்புரது கொஞ்சங்கூடப் புரியாது...!

    மாப்பிள்ள பணத்தக் கையில தொடமாட்டாரு... அதான் வரதட்சனை கொடுகிறதெல்லாம் அக்கவுண்ட்ல போட்டுருங்க... வருமான வரித்துறைய ஏமாத்த மாட்டாரு... மானஸ்தரு...!

    அடுத்த பொண்ணுக்குத்தான் ‘கவிதா’ன்னு பெயர் வச்சிருக்கிறாரா...!

    தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் தரவான்னு கேக்குறாரே...!

    யாரு கொழுந்தியாவா வர்றது... வா... வா... அருகில் வா...!

    ReplyDelete
    Replies
    1. அந்த மகராஜன் திருட்டுக்கு வேறு உடந்தையா:)

      பேராசிரியர் சொல்வது புரியுமா :)

      மானஸ்தர் ,வரதட்சனை வழக்கில் கம்பி எண்ணப் போறாரோ :)

      மூன்றுக்கு ததிங்கினத்தோம் போட்டு கிட்டிருக்கார் ,நாலாவதா :)

      முதல் உதவிக்கு பக்கத்திலே தீ அணைப்பானை வச்சுக்கச் சொல்லுங்க :)

      கொழுந்தியாள் இருக்கிற கொழுப்புத்தான் இப்படி நினைக்க வைக்குதா :)

      Delete
  3. அழைப்பிதழில் அக்கவுண்ட் நம்பர் ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. அக்கவுண்ட்டில் மொய்ப்பணம் போடுவார்களா ஜி :)

      Delete
  4. தீயணைப்பு ஜோக்க மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. வேலையில் தான் அவர் அப்படி ,சொந்த வேலையில் தேனீயாய் பறக்க மாட்டாரா:)

      Delete

  5. ///எனக்கு மகிழ்ச்சி ...என் அம்மாவின் ஒரே மருமகள் போனால்தான் வருமோ ?//
    மதுரைக்காரங்க வீட்டுல எல்லாம் இப்படி ஒரே ஒரு சிந்தனைதான் போலிருக்கு


    சரி இந்த வாரம் தனியாக வெகேசன் ஏதும் போய் அங்கிருந்து கொண்டு இந்த நகைச்சுவையை எழுதி இருக்கீங்க போல இருக்கே

    ReplyDelete
    Replies
    1. மதுரைக் காரங்க நமக்குள்தான் என்ன பொருத்தம் :)

      தனியா எங்கேயும் போக முடியாததால் தான் இந்த ஞானம் வந்தது :)

      Delete
  6. கல்யாணதிற்கு வராதவரிடம் இப்படி மொய்வசூல் செய்பவர். இப்படி மொய்வத்தவருக்கு கல்யாண சாப்பாடு அவர் இருக்கும் ஊரில் உள்ள ஹோட்டலில் ஏற்பாடு செய்வாரா என்ன?

    ReplyDelete
    Replies
    1. செய்யகூடிய வசதி ,மூன்று நட்சத்திர ஹோட்டலில்தான் இருக்கும் ,மொய்யை விட அதிக செல்வாகுமேன்னு யோசிக்கிறார் :)

      Delete
  7. ''ஊஹும் ,அவரோட பொண்ணுங்களுக்கு மகா,கவி ,பாரதின்னு பெயர் வச்சிருக்காரே !''
    விவாகராமான பையனா இருப்பான் போலிருக்கே ?

    ''வேகமா வந்து அணைப்பார்ங்கிற நம்பிக்கை வர மாட்டேங்குதே !''
    அணைக்கிற கைதான் அடிக்கும் னு தெரியாம போச்சு அந்த பெண்ணிற்கு .. சூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. வயசுலே இப்படித்தானே இருப்பான் :)

      அடிப்பவரை ஏன் விரும்பிக் கட்டிக்கணும் :)

      Delete
  8. மகா கவி பாரதி அருமை ஜி

    ReplyDelete
    Replies
    1. பாரதி இருந்திருந்தால் இந்த பட்டத்தையே துறந்து இருப்பாரோ :)

      Delete
  9. போலீஸ் எல்லாவற்றிலுமே கெட்டிக்காரர்கள்தான்!

    பிரசங்கி - அதிகப்ரசங்கி... அப்போ வழக்கறிஞருக்கும், வழக்குரைஞருக்கும் உள்ள வித்தியாசம்?

    வங்கிக்கணக்கு நல்ல ஐடியா. மொய் வாங்குவதால் அது வாங்கிக்கணக்கு!

    தமிழ்னு ஒரு பொண்ணு கூட இருக்குமே... அது மறந்துட்டீங்களே....


    தீயணைப்புத் துறைக்கு வேறு ஜோக் தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. யாரிடம் எப்படி கறக்க வேண்டுமென்பது அவர்களுக்கு அத்துப்படி :)

      அதை சொன்னால் அவமதிப்பு வழக்கு வரக்கூடும் :)

      மறுபடியும் செய்ய வேண்டியுள்ளதால் வட்டியில்லாக் கடன் கணக்கும் கூட :)

      ஐயோ அது, அவரோட வீட்டுக் காரம்மா பெயராச்சே :)

      எரிந்து முடிந்த பிறகு வரும் ஜோக்கா :)

      Delete
    2. தம முதலாம் வாக்கை அளித்து விட்டேன்.

      Delete
    3. ஆஹா வந்திருச்சு தமிழ்மணம்:)

      Delete
  10. போலீஸ்காரர்னா பின்னே இப்படித்தான்...கறவைக்காரங்க!!

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    த ம பெட்டி யார் தளத்திலும் இல்லை போல...??!!

    ReplyDelete
    Replies
    1. உண்மையான கறவைக் காரங்க அவங்கதான் :)

      தமிழ் மண நிர்வாகிகளுக்கும் மெயில் போகவில்லை ,தமிழ்மணம்,நம்ம dd சொன்ன மாதிரி அவ்வளவுதானா :)

      Delete
  11. /''உன்னை விட/ யார் இவர் இவரை முதலில் தெரிந்தால்தானே போலீஸ்காரர் கெட்டிக்காரரா என்று தெரியும்
    சத்தமாகச் சொல்லாதிர் தீயணைப்புக் காரரை எந்த பெண்ணும் மணக்க முன் வர மாட்டாள்
    நல்ல காலம் அம்மாவுக்கு ஒரே மருமகள் என்பது

    ReplyDelete
    Replies
    1. தெரிந்து கொள்ள வசதியாக தலைப்பை திருத்திவிட்டேன் ,சரிதானே :)
      தீயாய் வேலை செய்யும் குமார் அங்கே இல்லாமலா இருப்பார் :)
      அது சரி ,அந்த மருமகளைத் தானே உரிமையாய் சொல்லமுடியும் :)

      Delete
  12. ஆசிரியருக்கும் பேராசிரியருக்கும் உள்ள வேறுபாடு பற்றிய துணுக்கு சிரிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. புரொபசர் என்றால் விரியுரையாளர் என்பதுதானே சரி அய்யா :)

      Delete
  13. புதிசும் பழசும் கலந்த கலவை அருமை..

    ReplyDelete
    Replies
    1. இன்றைய உங்களின் கலவைச் சாதத்தை விடவா அருமை :)

      Delete
    2. அதிரா ,வெளியிலே வாங்கோ ....அப்படியே உங்க குரூப்பையும் கூட்டிட்டு வாங்கோ !மகுடம் சூடிய பதிவு தெரியுதா :)

      Delete
  14. வணக்கம்
    ஜி

    யாவு சிறப்பு படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் ஜி ,நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தமைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி :)

      Delete
  15. ''வேகமா வந்து அணைப்பார்ங்கிற நம்பிக்கை வர மாட்டேங்குதே !''//

    தாமதமா வந்தாலும் நிச்சயம் அணைப்பவராயிற்றே!!

    ReplyDelete
    Replies
    1. சாம்பலை அணைப்பதில் என்ன லாபம் ?சோம்பல் இல்லாமல் உடனே அல்லவா வரவேண்டும் :)

      Delete