6 September 2017

தம்பதிக்குள் 'குளுர்' விட்டுப் போகலாம் ,ஆனால் ...?

*இதுவும் டூ இன் ஒன்தானோ:)
               ''தெப்பக் குளத்தில் ஏன் சிமெண்ட் தளம் போடுகிறார்கள் ?''
               ''நீர் நிறைந்தால் தெப்பத் திருவிழா ,இல்லைன்னா தேரோட்டத் திருவிழா நடத்தத் திட்டமாம் !''

முட்டைத்  தோசை போடவாவது தெரியுமா :)          
        ''உன் புதுபெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே ?''

       ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே    !''

காது செவிடானாலும் பரவாயில்லை :)  
         ''ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலே இருக்கிற அந்த வீட்டுக்கு  யாருமே வரமாட்டாங்க ,நீங்க ஏன் அங்கே குடி போகணும்னு நினைக்கிறீங்க ?''
         ''அந்த ஸ்டேஷன்லே இருந்து  இலவச வை ஃபை  கிடைக்குதாமே !''

BJPயினால்  வந்த மொக்கை :)                             
        ''அந்த கஞ்சப் பிசினாரி ,அந்த கட்சியில்தான் சேருவார்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
       ''மிஸ்டு கால் கொடுத்தா சேர்த்துக்கிற கட்சி அதுதானே !''

இப்படியும் சின்னதா கடிக்கலாம் !
     ''தலைவரே ,அதுதாங்க பள்ளிவாசல் !''
     ''அப்படியா ,எந்த பள்ளிக்கு வாசல் ?''

சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலமாமே  :)
சமந்தா ரெட்டி தான் உடுத்திய உடைகளை 
ஏலம் போட்டு வருகிற பணத்தில் 
ஏழைக் குழந்தைகளுக்கு உதவப் போகிறாராம் !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
உங்கள் உதவியை உங்கள் மாநிலக் குழந்தைகளுக்குக் கூட செய்துக் கொள்ளுங்கள் ... 
ஆனால் ...ஏலம் சென்னையில்தான் நடக்கணும் !
சிலுக்கு ஸ்மிதா கடித்த கொய்யாப்பழ எச் 'சிலுக்கு ' கொட்டிக் கொடுத்தவர்கள் இங்கேதான் ஏராளமாய் இருக்கிறார்கள் !
 உங்க பல் பதிந்த ரொட்டிக்கு கூட 
கோடிகளை கொட்ட ஜொள்ளர்கள் இங்கே 
காத்துக் கிடக்கிறார்கள் !

நாட்டிலே சோம்பேறிகள் பெருகிவிட்டார்களோ :)
               '' புது வருசத்துக்கு வரப்போற புதுமைக் காலண்டர்  செம சேல்ஸ் ஆகப் போவுதா ,ஏன் ?''
               '' எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் ,வாரம் ஒரு முறை கிழிக்கிற வீக்லி காலண்டர் வரப் போவுதே !''

ஒரு குடிகாரனின் தத்துவம் !
       ''மச்சி ,நமக்கு பிராந்தி ,பீர் ,ரம் பிடிக்குது ,ஒயின் பிடிக்க மாட்டேங்குதே,ஏன்  ?''
     ''ஓயின்னு  சொல்லிப் பாரு ,உதடுகள் கூட ஒட்டாதே !''

நடிகையோட கணவனுக்கு இது தெரிஞ்சா ...?
           '' உன்னை கதாநாயகியா நான்தான் அறிமுகப் படுத்தினேன் ...ஆனா, உன் கல்யாணத்திற்கு வர முடியலேன்னு வருத்தமா இருக்கு !''
           ''டோன்ட் ஒர்ரி ,அடுத்த தடவை கட்டாயம் வந்துடுங்க சார் !''

143 ன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு !
       143ன்னு  சொன்னா ...
      வாலிப அகராதியில் வேண்டுமானால் 
   i love you என்றிருக்கலாம் !
      ஆன்மீக அகராதியில்,
      அது நேபாளில் உள்ள சிவன் சிலை 
       உயரத்தைக் குறிக்கும் !

 மேயர் பெண் என்றால் நகரத் தாய் எனலாமோ  ?         
             ''துணை மேயர்  கோரிக்கை வைக்கிறாரே ,என்னது ?''
             ''மேயரை நகரத் தந்தைன்னு சொல்ற மாதிரி ,துணை மேயரை ஏன் நகர மகன்னு சொல்லக்கூடாதுன்னு  கேட்கிறாரே  !''

காதலி மூணாறு தேவதைதான் !
            ''கவிஞரே ,மூணாறு டூர் போயிருந்தப்போ உங்க காதலியைப் பார்த்தீங்க,சரி ...அப்போ அவங்களுக்கு என்ன வயசு ?''
            ''மூணாறுதான்!''

பேய் எந்த மொழியில் பேசும் :)
            ''நான் புளியமரத்துப் பேய் ,நீ  மட்டும்  எப்படி ஆங்கிலம்  பேசுறே   ?''
            ''நான் 'பட்ட 'மரத்துப் பேய் ஆச்சே !''

என்று தீருமோ  இந்த செல்பி மோகம் :)
        ''என்னங்க சொல்றீங்க ,என்னை மாதிரியே என் பொண்ணுமா?''
        ''ஆமா ,கண்ணாடியில்  நீ அடிக்கடி பார்த்துக்கிற மாதிரி ,உன் பொண்ணு செல்பியில் பார்த்துக்கிறாளே !''
தூங்கு மூஞ்சி மரம்னா  தப்பாவே ஏன் நினைக்கணும் ?  
              ''தூங்கு மூஞ்சி மரத்தை, உதாரணமாய்  எடுத்துகிட்டு வேலை செய்யணும்னு  வங்கி மேலாளர் சொல்றாரே ,ஏன் ?''
              ''அந்த மரத்தின் இலைகள் பகல்லே தூங்காதாமே ?''

வலைப்பூ நட்பு காதலாகி ,கல்யாணமானால் ...?
            ''அவங்களை ,ஏன் மனமொத்த  தம்பதி 'வர் 'கள்னு சொல்றீங்க ?''
            ''பதிவர்கள் அவங்க ரெண்டு பேரும் ,காதலிச்சு கல்யாணம்   பண்ணிகிட்ட   பதிவர்வர்களாச்சே  !'' 

தம்பதிக்குள் 'குளுர் 'விட்டுப் போகலாம் ,ஆனால் ...?
           ''இன்ஸ்பெக்டர் நான் , டிரஸ் மேலே ஜெர்கின் கோட் வேற போட்டிருக்கேன் , குளிர்ற மாதிரி தோணுது ,உனக்கும் குளுருதா கபாலி ?''
          ''எனக்கு எப்பவோ குளிர் விட்டுப் போச்சு சார் !''

டிஸ்கி :என் பதிவு புதியதும் பழையதும் கலந்த கலவைதான் ,*குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

38 comments:

  1. ரசித்தேன், அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி ஜி :)

      Delete
  2. முட்டை ஆம்லெட் நன்று த.ம. ஏன் வரவில்லை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் த ம முட்டை ஆகாமல் விழுந்து விட்டதே :)

      Delete
  3. //பேய் எந்த மொழியில் பேசும் :)//

    எங்க ஊர்ப் பேய் தமிழில்தான் பேசும்.

    ReplyDelete
    Replies
    1. 'பட்ட 'மரத்து பேயுமா :)

      Delete
  4. Replies
    1. ஒரே பாணி போரடிக்குதே ஜி :)

      Delete
  5. ''கவிஞரே ,மூணாறு டூர் போயிருந்தப்போ உங்க காதலியைப் பார்த்தீங்க,சரி ...அப்போ அவங்களுக்கு என்ன வயசு ?''
    ''மூணாறுதான்!''
    பல்லவ நாட்டு ராஜ குமரிக்கு பருவம் பதினெட்டு பாடல் நியாபகம் வந்தது

    ReplyDelete
    Replies
    1. அந்த ராஜகுமாரியை பார்க்கணும் போல இருக்குதே ஜி :)

      Delete
  6. செல்பி மோகம் ரசித்தேன் ஜீ!நலமா ஜீ?

    ReplyDelete
    Replies
    1. உயிரைப் பறிக்கும் செல்பி தேவையா ஜி :)

      Delete
  7. அடடா நியூ போஸ்ட்... முன்பு எனில் நேரம் தெரியும்.. இப்போ எப்போ வருகிறது நியூபோஸ்ட் எனத் தெரிவதில்லை.. அதனால மீ த 1ஸ்ட்டாகவும் ஓடி வர முடியுதில்ல:)..

    // ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே !''//
    கேள்வி கரெக்ட்டுத்தானே?:)

    ReplyDelete
    Replies
    1. எப்போ வந்தாலும் சரிதான் ,மைனஸ் வோட்டுற இரண்டு லூசுங்க புதுசா வந்திருக்காங்க ,கவனீச்சீங்களா :)

      Delete
    2. அதுதானே பகவான் ஜீ.. எதுக்கு இப்படி நடக்கிறது?.. முன்பு ஒரு தடவை மைனஸ் வோட் போட்டதைப் பார்த்து யாரோ கைமாறித்தட்டியிருக்கலாம் என ஜோக்காக எடுத்திட்டுப் போனேன்.. ஆனா இன்று அப்படி இல்லையே... புளொக்குகள் எல்லாம் நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கு ஒற்றுமையாக.. இப்படி இடையில் நடக்கும்போது கவலையாக இருக்கு... அன்று நான் சொன்னதைப்போல, தமிழ்மணம் என்ற ஒன்று இருப்பதால் தானே இவ்வளவு பிரச்சனை:(.

      Delete
    3. இப்போதே தமிழ் மணம் வேலை செய்ய வில்லையே :)

      Delete
  8. வணக்கம் ஜி !

    ரசிக்கும்படியாய் எல்லாம் இருக்கிறது கடியும் உண்டு பொடியும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. இந்த கடியினால் ரத்தமும் வராது ,பொடியினால் தும்மலும் வராது :)

      Delete
  9. நீர்... வந்தாலும் வரவில்லை என்றாலும் தெப்பத் திருவிழா நடந்தே தீரும்...! ஆமா... சொல்லிட்டேன்... வா... வா... அருகில் வா...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. தெப்பக்குளத்தில் தேரோட்டம் புதுமை தானே :)

      Delete
  10. Replies
    1. மூணாறு அருமைதானே :)

      Delete
  11. அனைத்தையும் இரசித்தேன்! அந்த கஞ்சன் பற்றிய நகைச்சுவை துணுக்கை மிகவும் இரசித்தேன்! பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. ஓசின்னா எனக்கு ஒண்ணு ,என் பெண்டாட்டிக்கு ஒண்ணு என்பாரோ :)

      Delete
  12. 143 விளக்கம் ரசித்தேன் டிஸ்கியில் உங்கள் டிஃபென்ஸ் தெரிகிறது பின்னே தினம் ஜோக்குகள் எழுதுவது என்ன எளிதா வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தினசரி ஒரு ஜோக் இப்போது எழுத நேரம் கிடைக்க மாட்டேங்குதே :)

      Delete
  13. சுவைத்தேன் த ம 13

    ReplyDelete
    Replies
    1. ஆம்லெட் சுவைதானே அய்யா ::)

      Delete
  14. தெப்பக்குளத்தில் தேரோட்டமா ?

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர் இல்லையென்றால் வேற வழி :)

      Delete
  15. அனைத்தும் ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இந்த 143 யை நீங்க பார்த்ததுண்டா ஜி :-

      Delete
  16. மற்றொரு மூ இன் ஒன் சேர்த்துக்கொள்ளுங்கள். காவிரி புஷ்கரத்திற்காக காவிரியாற்றில் குளம் போன்ற அமைப்பினைக் கட்டுகின்றார்கள் (நீர்த்தேக்கம் என்ற நிலையில், விழா கொண்டாடுவதற்காக)என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே மதுரையில் கூட ,அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் இப்படித்தான் :)

      Delete
  17. ரசித்தோம் அனைத்தும்...முதல் ஜோக் ஹாஹாஹா..

    ReplyDelete
    Replies
    1. இதை தெப்பத் தேரோட்ட விழான்னு சொல்லலாமா :)

      Delete
  18. ஆமா, தெப்பக்குளத்தில சிமெண்ட் பூசுறது தப்புதானே?!

    ReplyDelete
    Replies
    1. மழையை பொழியாமல் செய்தது ,எல்லாம் வல்லவனின் தப்புதானே :)

      Delete