8 September 2017

சுடிதார் செல்லும் இடத்துக்கு ஒரு டிக்கெட் :)

 *படைக்கு  பிந்து ,பந்திக்கு முந்து என்பது மறந்து போச்சா :)
             ''விருந்துக்கு தாமதமாய் போனது தப்பா போச்சா ,ஏன் ?''
             ''பப்ஃபே  விருந்து ,எனக்கு பெப்பே  காட்டிருச்சே !''

கண்டக்டர்  கேட்டதும் தப்புதானே :)
      ''பஸ்  புறப்படவே இல்லே  , அந்த  ஊருக்கு எப்போ போய் சேரும்னு அபசகுனமா கேட்கிறீங்களே ,நியாயமா ?''

      ''போகும் போதே , எங்கே போறீங்கன்னு கேட்டீங்களே ,அது நியாயமா ?''

இங்கே எல்லோரும் ஓரினம்தான் :)    
              ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
               ''ரயிலைப்  பிடிக்கணும்னா வேற  வழியில்லையே !''

சுடிதார் செல்லும் இடத்துக்கு ஒரு டிக்கெட் :)
          ''கண்டக்டர் ,நான்  போற இடத்தை  சொல்லவே இல்லை, சரியா எட்டு ரூபாய் டிக்கெட் கொடுக்கிறீங்களே ,எப்படி ?''
          ''முன்னாடி நிற்கிற சுடிதார்  பெண்ணை நீ பார்க்கும் போதே  தெரிஞ்சு போச்சே !''

அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாமா :)
         ''ஏன் டாக்டர் ,ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட்ன்னு சொல்றீங்க ?''
         ''ஆபரேஷனில பொழச்சுக்கிட்டவரு.பில்லைப் பார்த்ததும் போய் சேர்ந்து விட்டாரே !''

 தோடுன்னா சரி  'தோடு 'விடத்தான் கூடாது :) 
    சிறிய வயதில் காது குத்திய போது ...
    தோடு வாங்கித் தராமல் 
   'வெளக்கமாத்து 'குச்சி குத்தி 
    ஏமாற்றிய அப்பாதான் ...
    திருமணத்தின் போது...
    மகளுக்கு தொண்ணூறு பவுன் நகையும் 
   மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் ,செயின் ,
    பிரெஸ்லெட்டும் போட்டு அழகு பார்க்கிறார் !

இதுகூட தெரியாம ஏன்  திருடணும் :)        
             ''திருட்டுப் பசங்க ,பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போச்சுன்னு வருத்தப் படுறாங்களா,ஏன் ?''
    ''ATM மெசின்னு நினைச்சு அவங்க பெயர்த்தெடுத்தது பாஸ் புக் பிரிண்ட் பண்ற மெசினாம்!''

இதைக் கேட்ட மனைவிக்கு எப்படியிருக்கும் :)               
           ''என்னங்க ,இந்த லேகியத்தை எப்படி சாப்பிடுறீங்க ,பயங்கரமா கசக்குதே  !''
           ''கல்யாணம் ஆனதில் இருந்து ,கசப்பும் எனக்கு பழகிப் போச்சே !''

பாரி முனையும் ,பாரிஸும் ஒன்றா ?            
               ''ஹலோ ,நான் இப்போ விமானத்திலே இருக்கேன் ,அதனாலே  நீ பேசுறது சரியா எனக்கு கேட்க மாட்டேங்குது !''
             ''அட  நாதாரிப் பயலே ,எதிர்த்த  பிளாட்பாரத்தை  பார்த்து பேசுடா   ,சிக்னலும் கிடைக்கும் ,நான் நிற்கிறதும் தெரியும் !''

பொண்ணு பார்க்கையில் முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது !
           ''புது பெண்டாட்டிகிட்டே , டெய்லி டைரி எழுதுவேன்னு சொன்னது தப்பா போச்சா , ஏண்டா ?''
           ''நான் கராத்தேயில்  ப்ளாக் பெல்ட் வாங்கினவ ...என்னை  அடிச்சா.. இன்று 'திருப்பு முனை ஆன நாள் 'ன்னு எழுத வேண்டியிருக்கும்னு  சொல்றாளே !''

லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ ?
        ஒரு சில கோவில்களில் ...
       'பிற மதத்தினர் உள்ளே செல்ல அனுமதிஇல்லை 'என எழுதப்பட்டுள்ள வாசகங்களைப் படிக்கையில் மனதில் வலிக்கின்றது !
        இதற்குப் பதிலாக ...
        வழிபாடு ஸ்தலங்களில் எல்லாம் ...
       'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் 'என்று
        எழுதி வைத்தால் நன்றாயிருக்குமே !

டிஸ்கி :என் பதிவு புதியதும் பழையதும் கலந்த கலவைதான் ,*குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

33 comments:

  1. எங்கே போறே என்று கேட்கும் பஸ் ஜோக் எனக்கு உண்மையிலேயே நடந்தது - வேறு விதமாக. எங்கள் பிளாக்கில் கூட எழுதி இருந்தேன். மனைவி, குழந்தைகளை ஏற்றிவிட்டு விட்டு ஓட்டுநரிடம் "காலை எப்போ சென்று சேரும்?" (ஊரில் அழைத்துச் செல்ல வருபவர்களுக்கு சொல்ல வேண்டுமே..) என்று கேட்டு வாங்கி கட்டிக் கொண்டேன்!

    தம பட்டையைக் காணோமே?

    ReplyDelete
    Replies
    1. எந்த ஓட்டுநருக்கும் இந்த கேள்வி பிடிக்காது :)

      நல்ல மனசோட த ம வாக்கு விழுந்து கொண்டு இருந்தது இரண்டு லூசுங்க வந்து நேற்று எனக்கு மைனஸ் வோட்டு போட்டாங்க ,தமிழ்மணமே காணாமல் போய் விட்டது ஜி :)

      Delete
    2. தம முதலாம் வாக்கை அளித்து விட்டேன்.

      Delete
  2. ரசித்தேன்
    தமிழ்மணத்தைக் காணவில்லையே நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணம் எப்போ போகும் எப்போ வரும்னு சொல்ல முடியவில்லையே :)

      Delete
  3. எல்லோரும் பிளாட்பார்முக்கு வந்தாகவேண்டுமென்ற துணுக்கை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. மாடி வீட்டு ஏழைகளோ :)

      Delete
  4. அனைத்தும் ரசித்தேன் நண்பரே.

    த.ம. பிறகு!

    ReplyDelete
    Replies
    1. உங்க பப்பே அனுபவம் எப்படி ஜி :)

      Delete
  5. ரசித்தேன் ஜி
    த.ம.காணவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மர்மம் திரட்டி ஆகிப் போச்சே ஜி :)

      Delete
  6. கருட புராணத்தை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் வயிற்றை எப்படி (!) நிரப்புவது!?..

    ReplyDelete
    Replies
    1. வயிற்றை நிரப்ப சம்பளமே போதும் ,ஆனால் பணத்தாசை விட வில்லையே :)

      Delete
  7. ஆ.....ஓட்டுப் பெட்டியைஎதிர் கட்சிக்காரர்கள் களவாடிக்கிட்டதால் ஓட்டு போட முடியவில்லை யுவர் ஆனர்....

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மைனஸ் வோட்டு போட்ட எதிர்க்கட்சிக் காரங்க இப்போ என்ன செய்வாங்க:)

      Delete
  8. வாக்கு பெட்டியை யாரோ கடத்தி விட்டார்கள் போலிருக்கிறது. எல்லோரும் பிளாட்பாரத்திற்கு வந்தாகணும் வாழ்க்கைத் தத்துவம் கூட

    ReplyDelete
    Replies
    1. பிளாட்பாரம் வர அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் ஆகாய மார்க்கமாக பறக்கக் கூடும் :)

      Delete
  9. //படைக்கு பிந்து /// ஹா ஹா ஹா அவசரப்பட்டு பிந்து மாதவியை நினைச்சிட்டேன்:)

    // ''போகும் போதே , எங்கே போறீங்கன்னு கேட்டீங்களே ,அது நியாயமா ?''//
    ஹா ஹா ஹா போகும்போதுதானே “எங்கே போறீங்க” எனக் கேட்க முடியும்?:).. திரும்பி வரும்போது அப்படிக் கேய்க்க முடியாதே.. எப்பூடி என் கிட்னியா?:).

    ஏ ரி எம் மெஷின்.. ஹா ஹா ஹா..

    // ''அட நாதாரிப் பயலே ,எதிர்த்த பிளாட்பாரத்தை பார்த்து பேசுடா ,சிக்னலும் கிடைக்கும் ,நான் நிற்கிறதும் தெரியும் !''//
    ஹா ஹா ஹா சூப்பர்ர்.

    ReplyDelete
    Replies
    1. நான் பின் வாங்கிய நேரமோ என்னவோ தமிழ்மணமும் பின் வாங்கியிருச்சே:)

      Delete
  10. நேக்கு கரிநாக்காக்கும்:) அதுதான் நான் சொன்னதைக் கேட்டு தமிழ்மண வோட்டை தேம்ஸ்லே எறிஞ்சிட்டாங்கோ:).. இப்போ தேடிக்கொண்டிருக்கினமாம்:) பிபிசில சொன்னாங்கோ:).. கிடைக்கும்வரை பின்னூட்டம் போட்டுக் கலக்குவோம் ஹப்பியாக:)..

    ஹையோ எதுக்கு இப்போ எல்லோரும் அடிக்க வருகீனம்.. பகவான் ஜீ பிளீஸ்ஸ்ஸ் சேவ் மீ.. அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன் நான்?:).

    ReplyDelete
    Replies
    1. பகவான் ஜீ.. வெளில வாங்கோ.. நீங்க சொன்ன வார்த்தையை மீறி விட்டீங்கள் பகவான் ஜீ.. மீறி விட்டீங்கள்:))

      Delete
    2. கருத்து இல்லையென்றாலும் த ம +1 போட்டாலே எனக்கு மகிழ்ச்சிதான் என்று நான் போட்ட நேரத்தில் இப்படியானது தற்செயலான நிகழ்வுதானா ?என் இனிய எதிரிகள் தமிழ்மணத்தையும் முடக்கி விட்டார்களா :)

      Delete
    3. தமிழ்மண வோட்டை மட்டுமா ,தமிழ் மணத் திரட்டியே முடங்கி விட்டதே ,நம்ம dd சொல்லிக் கொண்டிருந்தாரே ...தமிழ்மணம் செத்து விட்டது என்று ,அது நிஜமாகி விட்டதா :)

      Delete
  11. ‘பிந்து மாதவி’ன்னு பேரு வச்சாலே... பந்திக்குப் பிந்துவீங்களா...? பப்ஃபே சிஸ்டங்கிறதால மொதல்ல வந்தவருக்கே முன்னுரிமைன்னு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிட்டாராம்...நீங்க பின்னாடிதானே வந்தீங்க... இந்த சிஸ்டமே சரியில்ல...!

    ReplyDelete
    Replies
    1. இந்த சிஸ்டமே சரியில்ல...!இப்படி சொல்றதே இப்போ ஃபேசனா போச்சு :)

      Delete
  12. தஞ்சை திருச்சியில் அந்த மாதிரிக் கேள்வி கேட்டால் கண்டக்டர்கள் விரும்புவதில்லை
    கருட புராணம் என்ன சொல்கிறது ஒரு அயல் நாட்டு நண்பரை திருச்சி தாயுமானசுவாமி கோவிலுக்கு அழைத்துச் சென்ற போது தடுத்து நிறுத்தினார்கள் பின் அவர்களே அவர் திறு நீறு பூசிக்கொண்டால் போகலாம் என்றார்கள்
    ண்ரபோது

    ReplyDelete
    Replies
    1. அங்கே மட்டுமல்ல ,எங்கேயும் இந்த கேள்வியை விரும்ப மாட்டார்கள் :)

      எல்லாவற்றையும் மந்திரத்தால் வரவழைப்பவர்கள் ஆச்சே :)

      Delete

  13. பழசும் புதுசும் அருமை

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணம் காணாமல் போனதுதான் கொடுமை :)

      Delete
  14. அனைத்தையும் ரசித்தேன், பாரிமுனையை சற்றே அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தானே பலரும் பந்தா காட்டுகிறார்கள் :)

      Delete
  15. என்னாச்சு...தமன்னா ஓடிப் போய்விட்டதா....முந்தைய பதிவிலும் இல்லை....எங்கள் தலத்தில் பெட்டி காண்பதே இல்லை எங்கள் கண்களுக்கு.....

    அனைத்தும் ரசித்தோம்...ஜி

    ReplyDelete
    Replies
    1. எல்லார் தளமும் உங்கள் தளமாகிப் போச்சே ஜி :)

      Delete