14 October 2017

*இளம்மனைவி இப்படி சந்தேகப் பட்டால் சந்தோசம் நிலைக்குமா :)

                   '' புது பெண்டாட்டிகிட்டே ,ஒரு பேச்சுக்கு புது செருப்பு கடிக்குதுன்னு சொன்னது தப்பா போச்சா ,ஏண்டா ?''
                    ''இப்படி ஜாடைமாடையா என்கிட்டே பேசினால் நடக்கிறதே வேற என்று மிரட்டுறாளே!''


இப்படியும் சில பேர் :)
         ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை, அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''

           ''வெறும் கையோட வந்து சாப்பிட்டு ,புதுச் செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம்!''

புருஷன் நளன்னா ,மனைவிக்கு ஏன் பிடிக்காது :)
          ''ரொம்ப கொடுத்து வைத்த பெண் 'தமயந்தி 'தான்னு சொல்றீயே ,ஏன் ?''
         ''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''

காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே வேறு :)
             ''பதுங்கு குழியை பார்வையிட்ட மன்னர் ...இதென்ன ஒதுங்கு குழியான்னு  கோபமா சத்தம் போடுறாரே ,ஏன் ?''
              ''உள்ளே நாலு காண்டம் கிடக்குறதை பார்த்துட்டாரே !''

மருமகள் துடிப்பது ....நடிப்பா :)
           ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன்?''
           ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

No comments:

Post a Comment