7 October 2017

RUM என்றால் ROUTINE UTILITY MEDICINE என்பது உண்மையா :)

 *ரகசியம் அம்பலமாகி போச்சு :)
                ''வீட்டிலே என் சமையல்தான் என்று உன் ஆபீஸ் தோழிகளுக்கு  தெரிந்து போச்சா ,எப்படி ?''
                 ''கல்யாணத்துக்கு முன்னால் ,நான் கொண்டு போன குழம்பு ரசம் எல்லாம்  இவ்வளவு ருசியாய் இருந்ததில்லையாம் !''
  
கணவன் மேல் சந்தேகம்னா இப்படியா குத்திகாட்டுவது ?
             ''  வேலைக்காரி கேட்கிற  'டிடர்ஜென்ட்  கேக்' சோப்பை  ,இனிமேல் நான் வாங்கி வரக் கூடாதுன்னு சொல்லிட்டா என் மனைவி !''


              ''ஏண்டா ?''
               ''என் பையன் பத்து நாளா கேட்கிற 'பட்டர் ஜாம் கேக் 'வாங்கிட்டு வர மறந்து விட்டேனாம்!''

RUM என்றால் ROUTINE
UTILITY  MEDICINE என்பது உண்மையா :)           
              ''அவர் ஏன் 'ரம்'மட்டுமே குடிக்கிறார் ?''
               ''Rampaa,Urvasi,Menaka மூவரோட டான்சையும் பார்த்த த்ரில் அதிலேதான் அவருக்கு கிடைக்குதாம் !''

டெங்குக்கு மருந்தில்லை !கொசுவுக்கும் ஒரு முடிவில்லையா ?
கின்னஸ் சாதனை செய்ததற்காக
பாராட்ட முடியவில்லை ...
காரணம் ,இந்த சாதனையால் வருடம் தோறும்
இறப்போர் எண்ணிக்கை இருபது கோடியாம் !
உலகிலேயே மோசமான உயிரினம் என்று
சாதனைக் கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பவர் ...
திருவாளர் 'கொசு 'வார்தான் !


 டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)


16 comments:

  1. ///''என் பையன் பத்து நாளா கேட்கிற 'பட்டர் ஜாம் கேக் 'வாங்கிட்டு வர மறந்து விட்டேனாம்!''///

    ஹா ஹா ஹா..

    திருவாளர் . கொசுவாருக்கு வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
    Replies
    1. யார் சொல் காதில் உடனே ஏறுகிறது பார்த்தீங்களா :)

      வாழ்த்து சொன்னாலும் கடிக்காமல் விடாது :)

      Delete
  2. ரசித்தேன் ஜி, அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. க முன் க பின் வித்தியாசம் சரிதானே ஜி :)

      Delete
  3. Replies
    1. கொசுவின் சாதனை ,நமக்கு வேதனை தானே ஜி :)

      Delete
  4. ''Rampaa,Urvasi,Menaka மூவரோட டான்சையும் பார்த்த த்ரில் அதிலேதான் அவருக்கு கிடைக்குதாம் !//

    அந்தக் காலத்துக் கிழவிகள் அல்லவா!!

    ReplyDelete
    Replies
    1. அந்தகால கிழவிகள் அல்ல ,குமரிகள் :)

      Delete
  5. கல்யாணத்துக்குப்பின் சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்... இந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்... ஹஹஹஹஹஹஹ...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் இந்த யோகம் கிடைக்குமா ஜி :)

      Delete
  6. Replies
    1. இரண்டு கேக்கில் எது முக்கியம் நண்பரே :)

      Delete
  7. Replies
    1. ரம் விளக்கம் சரியா ஜி :)

      Delete
  8. அனைத்தும் ரசித்தேன் ஜீ

    ReplyDelete
    Replies
    1. ரம் உங்களுக்குப் பிடித்ததா ஜி :)

      Delete