6 October 2017

நாம் எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள்தான்:)

*படித்ததில் இடித்தது :)
           ''இப்போ இருக்கிற சட்டப்படி பார்த்தா ,இராமர் சீதை  கல்யாணம்  செல்லாதா .ஏன் ?''
            ''கல்யாணத்தின் போது ராமருக்கு வயது 13 ,சீதைக்கு வயது 6 தானாமே!''
இடித்த செய்தியின் தொடுப்பு ...இராமன் சீதை வயது விபரம் :)

ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் :)
      '' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''

      ''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  போகாதுங்கிறாரே !''
ஓடிப் போய் கல்யாணம்தான்  கட்டிக்கலாமா :)
             ''நம்ம ரெண்டு பேரும்  143ன்னு சொல்லிக் கிட்டாலும்,அதுக்கு  ரெண்டு பேர் வீட்டுலேயும் 144போட்டுட்டாங்க ...அடுத்து  என்ன செய்றது ?''
             ''123 ஜூட்னு சொல்லிட்டு  ஓடிறவேண்டியது தான் ,வேற வழி  ?''
             
நாம் எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள்தான் :)
நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறை... 
புரதப் பொருட்களால் ஆனதாம் ...
அது மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளை 
கரைத்து எடுத்து தயாரிக்கப் படுகிறதாம் ...
அதன் பெயரும் 'ஜெலாட்டின் 'தானாம் !

மனைவி அமைவதெல்லாம் ..........:)
            ''எனக்கும் ,என்  மனைவிக்கும்  ஏழாம்பொருத்தம்னு   எப்படி  கண்டுப்பிடிச்சீங்க ?''
             ''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்னு பாடிக்கிட்டு இருந்தீங்களே !''


வீட்டில் எப்பவும் கொண்டாட்டம்தான் :)
நாம் ,வீட்டில் இருந்தால் 
கொசுவுக்கு  கொண்டாட்டம் !
இல்லாவிட்டால் 
கொள்ளைக்காரனுக்கு கொண்டாட்டம்!

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

25 comments:

  1. அசைவம் கண்டு பிடிப்புதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. அசைவம் சாப்பிடாதவர்கள் கேப்சூல் சாப்பிடாமல் இருக்க முடியுமா ஜி :)

      Delete
  2. நாம் பாவிக்கும் லிப்ஸ்ரிக்கிலும், பளபளப்புக்காக மீன் செதில்கள் சேர்க்கப்படுகின்றன:).

    ReplyDelete
    Replies
    1. அதான் மீன் வாய் மாதிரியே ஆகிவிடுகிறதா :)

      Delete
  3. ராமர் வழியில்தான் மகாத்மா காந்தியும் சென்றிருக்கிறார்...! காந்தி காட்டிய வழியில்... நாம் செல்லலாமா...?! ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத் தான் காந்திஜி ராம ராஜ்ய கனவு கண்டாரா :)

      Delete
  4. ''கல்யாணத்தின் போது ராமருக்கு வயது 13 ,சீதைக்கு வயது 6 தானாமே!''//

    அண்ணல் நோக்க அவளும் நோக்கியது இந்த வயதிலா?!?!

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் டூ மச் :)

      Delete
  5. அனைத்தும் அருமை, ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. இராமன் சீதை வயது விபரம் உள்ள தளத்தை நீங்கள் முன்னமே படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் :)

      Delete
  6. Replies
    1. உவமைச் சக்கரவர்த்தி சொன்னதையும்தானே :)

      Delete
  7. கொண்டாட்டம் சரிதானே :)

    ReplyDelete
  8. சீதைக்கு 6 இராமனுக்கு 13 உமக்கு 12

    ReplyDelete
    Replies
    1. ஒரு டஜன் ஆக்கியதற்கு நன்றி :)

      Delete
  9. பேஸ்ட்டும் பேச்சும் நல்லா இருக்கு த.ம. வாக்குடன்

    ReplyDelete
    Replies
    1. பேஸ்ட்டும் பேச்சும் என்பதும் கூட பொருத்தமாத் தானே இருக்கு :)

      Delete
  10. ரசித்தோம் ஜி! அனைத்தும்..

    ReplyDelete
    Replies
    1. 123 ஜூட்னு சொன்னதையுமா :)

      Delete
  11. புராண கதைலாம் ரசிக்குறதோடு நிறுத்திக்கனும். ஆராய்ஞ்சா மண்டை காயனும்

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதைகளைப் படித்தால் எரிச்சலும் வரும் :)

      Delete
  12. அசைவ தீவிரவாதிகள் இருந்தால் சைவ தீவிரவாதிகள் என்ற ஒரு குருப்பும் இருந்தாகனுமே....!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. மருந்து விசயத்தில் அப்படி யாரும் இருக்கவே முடியாது :)

      Delete
  13. Replies
    1. ஏழாம்பொருத்தம் சூப்பர்தானே :)

      Delete