14 February 2016

டைம்பாஸ் காதலுக்கு தாலி எதுக்கு:)

 தெரிந்தே எவனும் குழியில் விழுவானா :)             

              ''அந்த பொண்ணுக்கு  லேசுலே கல்யாணம் ஆகாதா ,ஏன் ?''

               ''நான் வெஜ் நன்றாய் சமைக்கத் தெரிந்த வரன் தேவைன்னு அவங்க அப்பா விளம்பரம் கொடுத்து இருக்காரே !''

காதல்  முறிஞ்சு போச்சே :)      

          ''என்னடி சொல்றே ,உன் காதலர்  'பணப் பூர்வமாய் 'தான் உன்னை விரும்புறார்னு  தெரிஞ்சுபோச்சா ,எப்படி ?''

         '' கல்யாணத்துக்கு அப்புறமும் ,நான் கட்டாயம் வேலைக்கு  போயாகணுமாம் !''

மனைவிக்கு இப்படியா பயப்படுறது :)

                ''காணாம போன உன் பெண்டாட்டியை கண்டு பிடிக்கலையே
 ,போலீஸ்  ஸ்டேசன்லே ஏன் மொய் வச்சுட்டு வர்றே ?''
                  ''கண்டுபிடிச்சுருவோம்னு மிரட்டுறாங்களே !'' 

  1. டைம்பாஸ்  காதலுக்கு தாலி எதுக்கு:)
  2.              ''காதலர் தினம் அதுவுமா இன்னைக்கு பீச்சிலே காதலர்கள் யாரையும் காணாமே ,ஏன் ?''
  3.              ''வர்றவங்களுக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைப்போம்னு ஒரு அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கே !''
  4. காதலர்கள் ஜாக்கிரதை:)
  5. பிப்ரவரி 14...
    காதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால் 
    நவம்பர் 14...
    குழந்தைகள்  தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் !

22 comments:

  1. மாப்பிள்ளை தேடும் போது இனி இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

    கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது இன்றைய பல ஆண்களின் எதிர்பார்ப்பு என்பதால் சிரிக்க முடியவே இல்லை!
    கடற்கரையில் கல்யாணம்? ஹாஹா ரசித்தேன்!

    பெப்ரவரி14- நவம்பர் 14 சிந்திக்க வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. கேட்டரிங் படித்த மாப்பிள்ளை என்று சொன்னால் போதாதா :)

      இல்லையென்றாலும் ,வேலையை எந்த பெண்மணி விடப்போகிறார் :)

      ஆசீர்வாதம் பண்ண மணலை அள்ளாமல் போனால் சரி :)

      'பதினாலும்' பெற்று பெருவாழ்வு வாழட்டும் :)


      Delete
  2. இப்போ எப்படியோ பொண்ணு கிடைச்சாப் போதும்னு பெண் பார்க்கும் மாப்பிளைகல்லாம் புலம்பறாங்களாமே!

    ஆஹா.... அது!

    ஹா... ஹா.... ஹா.. காணாமப்போன மனைவியைக் கண்டு பிடிக்க "என்ன செய்யறதுன்னே தெரியாம சந்தோஷத்துல" இருக்கற புருஷன் ரெயில்வே ஸ்டேஷன்ல போயி புகார் கொடுத்த ஜோக் மாதிரி..

    எச்சரிக்கையான காதலர்கள்!

    அட, ஆமாம்!

    ReplyDelete
    Replies
    1. சமைக்கத் தெரியாத பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்களே :)

      அய்யாவுக்கு பணத்திலேயே கண் :)

      புகார் கொடுத்தும் மொய்யும் கொடுக்கிற காலம் ஆகிப் போச்சே :)

      இவனுங்க என்ன சொல்றது ,தாலி இல்லாமலே நாங்க சேர்ந்து வாழ்வோம் :)

      வளைக்காப்புக்கு மகால் பார்த்திட வேண்டியதுதான் :)

      Delete
  3. நான்... வெஜ் நன்றாய்ச் சமைக்கத் தெரிந்தவ(ர)ன்... மாமா உன் பொண்ணக் கொடு... அட ஆமா சொல்லிக் கொடு...!

    ஆமாம்... போயேயாகணுமாம்...அவரு சாதகத்தில உக்கார்ந்து சாப்புடுவார்ன்னு எழுதி இருக்காம்... தலையெழுத்து...!

    என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவள் போனாளே...! தன்னைக் கொடுத்து என்னை உயிரை எடுக்க மீண்டும் வந்துவிடப் போறாள்...!

    எதுக்கு இந்த வேண்டாத வேலை...!

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகலை... 1+1=3 வாங்க பழகுவோம்... பழுகிப் பெருகுவோம்...!

    த.ம.4





    ReplyDelete
    Replies
    1. சொல்லிக் கொடுக்கிறேன் நான்வெஜ் சமைக்க ..கற்றுக்க நீங்க ரெடியா :)

      யார்தான் நின்னுகிட்டு சாப்பிட விரும்புவாங்க :)

      அதுக்குத்தான் மொய்:)

      வேண்டாத வேலை,காதலர்களுக்கா ,போராட்டக்காரங்களுக்கா :)

      இதிலுமா ஒண்ணுக்கு ஒண்ணு ஃப்ரி:)

      Delete
  4. Replies
    1. அந்த படம் ,ரசிக்கும்படி இருக்கா :)

      Delete
  5. ஓ காட்டெரிங் படித்த மாப்பிள்ளைகளில் ஸ்பெஷலிஸ்டை தேடுகிறார்களோ
    அதற்குக் கட்டாயப்படுத்ததேவை இல்லையே
    புகார் ஏன் கொடுக்க வேண்டும் பின் காவல் நிலையத்தில் மொய் வைக்க வேண்டும் ?
    கட்டாயக் கல்யாணத்துக்கு அவ்வளவு பயமா
    அந்த வாய்ப்பும் இருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. இதனால் ,பொண்ணு உண்டாகுமோ இல்லையோ ,குண்டாகும் :)
      அவங்களே வேலையை விட மாட்டாங்களோ :)
      சட்டச் சிக்கல் வரக் கூடாதுன்னு புகார் கொடுத்தார் ,இப்படி வம்பு வருதே :)
      எத்தனை பேர் காதல் ,கல்யாணத்தில் முடிகிறது :)
      அதுக்கு ,நம்ம செந்தில் குமாரே சாட்சி :)

      Delete

  6. "பிப்ரவரி 14...
    காதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால்
    நவம்பர் 14...
    குழந்தைகள் தினத்தையும் கொண்டாட வேண்டி வரும்!" என
    அருமையான கணக்கு போட்டிருக்கிறியள்...
    பதிலை
    காதலர் நாளை அளவுக்கு மீறிக் கொண்டாடியோர்
    நவம்பர் 14 இல் பதிலைத் தருவார்கள் தானே!

    ReplyDelete
    Replies
    1. நவம்பர் புரட்சி என்பது இதுதானா :)

      Delete
  7. 01. கஷ்டம்தான் ?
    02. காதலிச்ச பாவத்துக்கு கட்டி அழுவட்டும்
    03. இவனே மாட்டிக்கிட்டானா ?
    04. வாழ்க அந்த அமைப்பு
    05. நல்ல கணைச்சன். இது கணேசனுக்கும் பொருந்துமா ?

    ReplyDelete
    Replies
    1. கிடைப்பது கஷ்டமா ,சமைப்பது கஷ்டமா :)
      பணம் பாவத்தைப் போக்குமா :)
      எப்படி என்றாலும் மாமூல் :)
      ஆட்சியைப் பிடித்த பின் அந்த அமைப்பைக் காணலியே :)
      ஏன் ,கணேசனுக்கு ஆண்மை இல்லையா :)

      Delete
  8. தங்கள் அறிவுக்கு பஞ்சமே இல்லை ஜி!
    எனது திருமணம் பிப்ரவரி 14 அதாவது இன்று. எனது முதல் குழந்தை நவம்பர் 12 அதாவது நீங்கள் சொன்னதைவிட இரண்டு நாட்கள் முந்தி.
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. அடடா ,இதை ஏன் முன்னாடியே சொல்லாம போனீங்க ?இப்போதான் என் அருமை புரிந்ததா :)


      Delete
  9. ஹ்ஹ்ஹ்ஹ் அனைத்தும் ரசித்தோம் அதிலும் அந்தக் கடைசி காதலர்களுக்கு எச்சரிக்கை...

    ReplyDelete
    Replies
    1. என் எச்சரிக்கை உண்மையாகிப் போச்சே :)

      Delete
  10. பாருங்கள் பகவான் ஜி உங்கள் வார்த்தைகளுக்கு உதாரணமாய் நம் செந்தில்குமார்...ஹஹஹஹஹ்

    ReplyDelete
    Replies
    1. அவர் த ம வரிசையில் இரண்டு ,நான் ஒன்று ..பக்கத்திலேயே உதாரணபுருஷர் இருப்பது சரிதானே :)

      Delete
  11. அனைத்துமே அருமை!

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் தினம் கொண்டாடுவதில் தவறில்லைதானே :)

      Delete