12 February 2016

காஜல் அகர் 'வால்' மனதில் இருக்கும் வரை :)

பையன் சொல்லியதில் தப்பிருக்கா:)

                 ''உங்க அப்பாவோட வயதைக் கேட்டால் ,உன்னோட அண்ணன் வயதுதான்னு  எப்படி சொல்றே ?''
                  ''என் அண்ணன் பிறந்த போதுதானே அவர் அப்பாவானார் !''  
  
ராஜா ரொம்பத்தான் நொந்திருக்கிறார் :)                
            ''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு நாம் ஏன் போகணும் ?''
             ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''
காஜல் அகர் 'வால்' மனதில் இருக்கும் வரை :)
             ''ஊழலுக்கு எதிரா போராட்டம் பண்ணி அரவிந்த் கேஜ்ரி 'வால்' டெல்லியில் ஆட்சியில் இருக்கார் ,தமிழ்நாட்டிலே மட்டும் ஏன் இப்படி ஒரு அதிரடி மாற்றம் வர மாட்டேங்குது ?''
           ''நம்ம இளைஞர்கள் மனதில் காஜல் அகர் 'வால் 'ஆட்சியில்லே
 நடந்துகிட்டு இருக்கு ?''

இன்றைய இளைஞர்கள் நீதிபதியின் கணிப்பு :)         
              ''இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை நான்கு பெட்டிகளில் அடங்கி விடுகிறது என்று முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லி இருக்காரா ...அதென்ன நாலு பெட்டி ?''
           ''டிவி,ரேடியோ ,கம்ப்யூட்டர், சவப்பெட்டியாம் !''
மனைவி என்றதும் ஞாபகம் வருவது:)
          
                                ''என்னங்க ,நீங்கதான் மந்திரியாச்சே ,ஏதாவது ஒரு திட்டத்திற்கு என் பேரை வைங்களேன் !''

                            ''அடுத்து புயல் வரும்போது ஞாபகப் படுத்து !'
பாடல் அருமை !படத்தின் பேர் கொடுமை :)
எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்பது 
ஆயிரத்தில் ஒரு வார்த்தை !
'ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் ' என்று தொடங்கும் இனிமையான 
பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர்  ...
கொம்பேறி மூக்கன் !

20 comments:

  1. வணக்கம்
    அனைத்தையும் இரசித்தேன். த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்து விட்டு ,மறக்காமல் த ம வாக்கிட்டமைக்கு நன்றி ரூபன் ஜி :)

      Delete
  2. பகவான்ஜி,
    :)
    அருமையான ஜோக்குகள்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாவான நேரம் தப்பா ,சரிதானே :)

      Delete
  3. 1. ஹா.... ஹா.... ஹா...

    2. பாவம், அதுக்கு அவங்க என்ன செஞ்சாங்களாம்!

    3. 'வால்' பசங்க... வயசுப்பச்சங்க!

    4. செல்லை விட்டுட்டாரே..

    5. ஹா... ஹா... ஹா...

    6. ம்ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. அம்மாவானதும் அன்றைக்குத்தான் :)

      அரசருக்கு கொலைவெறியை உண்டாக்கி விட்டார்களே :)

      வாலு பசங்க ,நல்ல வேளை..லாலு பக்கம் போகாம இருக்காங்களே :)

      கம்ப்யூட்டரில் செல்லும் அடக்கம் :)

      கடந்த புயலுக்கு லைலாங்கிற பெயர் ,அப்படித்தான் வந்திருக்குமோ :)

      கொம்பேறி மூக்கன் என்ற பெயரே அருவெறுப்பைத் தரவில்லையா :)

      Delete
  4. அப்ப... பிள்ளைக்கு அப்பன் தப்பாம பிறந்திருக்காரு...!

    சக்கரவர்த்தி... சக்காளத்தி சண்டைக்கு நீங்க பயப்படவே வேண்டாம்... பக்கத்து நட்பு நாட்டுக்குப் போட்டுல போயி கடல்கன்னி கயல்விழி மீனாவ பிடிச்சிட்டு வந்திடுவோம்... சண்டைய நிறுத்த ஒரே வழி... ஆமா...!

    யாருக்கு எதிரா வேணுமுன்னாலும் ஆட்சி செய்யலாம்... ஊழலுக்கு எதிரா மட்டும் கூடவே கூடாது...ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஓய்... நான் தாண்டா என் மனசுக்கு ராஜா...
    வாங்குங்கடா வெள்ளியில் கூஜா... நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்...! பணமாவே...!
    பணப்பெட்டி... வத்திப்பெட்டி... டாஸ்மாக்பெட்டி... இதுல பெட்டிப்பாம்பா அடங்கிட்டத சொல்லலையே...!

    திட்டத்துக்கு பேரு வைங்கன்னு சொன்னா... திட்டுறதுக்கு பேரு வைக்கப் பாக்குறீங்க...!

    முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன்... ரோஜா முத்தம் கேட்டால் ராஜா கொடுக்க வேண்டியதுதானே...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. [[[இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை நான்கு பெட்டிகளில் அடங்கி விடுகிறது என்று முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லி இருக்காரா ...அதென்ன நாலு பெட்டி ?''
      ----நாலு பெட்டி என்றால் எனக்கு நால்வர் அணி ஞாபகத்திற்கு வருது!

      Delete
    2. பய பிள்ள ,பழமொழியை தலைகீழா மாத்தித்தானே :)

      கயல் விழி வந்தா சண்டை நிற்குமா ,மானம் கப்பலேறி போகுமா :)

      பெட்டி நிறைய பணமிருந்தால் இப்படித்தான் பாடத் தோணும் ,பணம்னா பிணமும் .....:)

      டாஸ்மாக் பெட்டி ஒண்ணு போதுமே ,சிந்திக்க விடாம பண்றதுக்கு :)

      நான்தான் திட முடியலே ,ஜனங்களாவது திட்டட்டுமே:)

      தாடி முள் ரோஜாவைக் குத்திடும்னு யோசிக்கிறார் போலிருக்கு :)


      Delete
    3. நம்பள்கி ஜி ...
      உதிர்ந்த ரோமத்தின் தலைமையில் இருந்து உதிர்ந்து போன நால்வர் அணிதானே :)

      Delete
  5. ஹஹஹாஹ்ஹ்...

    நாலு பெட்டி ம்ம்ம்ம் வயசுப் பசங்க...

    புயல் வரும் போது...அஹஹஹ் அதுதான் நடக்குது

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. புயலுக்குப் பெயர் லைலாவாம் ,கொடுமையாயில்லே இருக்கு :)

      Delete
  6. 01. அப்பாவானால்தான் கணக்கா ?
    02. அதான் இப்படி இருக்கா ?
    03. சவப்பெட்டி எல்லோருக்கும் உண்டுதானே
    04. ரீட்டான்னு வைக்கட்டும் நீட்டா இருக்கும்
    05. நொண்டிக்கு பேரு நடராஜனாம்

    ReplyDelete
    Replies
    1. அப்பாவானது தான் கணக்கு :)
      அந்தப்புரமே அரசருக்கு நொந்தப்புரம் ஆகிவிட்டதோ :)
      சொந்த ஊரில் செத்தால் சவப்பெட்டிக்கூடத் தேவையில்லை :)
      ரீபிட்டா என்று கேட்பார்களே :)
      ஆரோக்கியம்னா ஆஸ்பத்திரி பக்கமே போக மாட்டாரா :)

      Delete
  7. அதானே பையன் கரெக்டாகத்தானே சொல்லி இருக்கான்
    சக்களத்திகளை அண்டை நாடுகளுக்குச் சண்டைக்கு அனுப்பி இருக்கவேண்டும்
    காஜல் அகர்வால் ஊழலுக்கு எதிர் இல்லையா
    அன்றைய இளைஞர்களின் வாழ்க்க ஒரே பெட்டியில் அடங்கி விட்டது என்று சொல்லாமல் சொல்கிறாரா

    ReplyDelete
    Replies
    1. பையன் நல்லா வருவான் :)
      அதுக்கா அரசரைக் கட்டிகிட்டாக :)
      ஊழல் ஒழியும் என்பது கனவு ,இவர் கனவுக் கன்னி :)
      நாலு பெட்டி பரவாயில்லையா :)

      Delete
  8. ஹா... ஹா....
    புயல் வரும் போது ஞாபகப்படுத்து... நல்லாயிருக்கே....
    கொம்பேறி மூக்கனும் பாட்டும் அதுசரி....
    அருமை ஜி...
    ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. இவர் மட்டும் புயல் வேக சுற்றுப் பயணம் போகலாமா :)
      நகைமுரண் என்றிதைச் சொல்லலாமா :)

      Delete
  9. தப்பே இல்ல,

    சூப்பர் சண்டையில்ல,,

    அனைத்தும் அருமை ஜீ,,,

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,என்னை விட ஒரு வயதுதான் அதிகம்னு சொல்லாமல் போனான் :)

      அரசருக்கு ,அந்தப்புரமே நாற ஆரம்பித்து விட்டதே :)

      Delete