18 February 2016

நல்ல வேளை ஜட்டி சைஸை கேட்கலே :)

பேரை இப்படி 'ரிப்பேர் 'ஆக்கி வச்சிருக்காங்க :)

                ''ஜோசியரே ,என் பையனுக்கு  ஜாதகப்படி வருகிற பெயரை, நீங்களே வைக்க வேண்டாம்னு ஏன் சொல்றீங்க ?''
                ''கபாலின்னு  வருதே !''

நல்ல வேளை ஜட்டி சைஸை கேட்கலே :)

           ''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்னு வந்து என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''

          ''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே !''

ரிவால்விங் சேரில் இருந்தால் ரிவால்விங் சேர்மனா :)

         ''வாட்ச்மேன்...நான் சேர்மனைப் பார்க்கும் போது என் பையனைக் கூட்டிட்டு போனது , உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''

           ''சேர்மன் சேர்லே இருந்தார் ,நீங்க என்ன வாட்சுமேலேயா உட்கார்ந்து இருக்கீங்கன்னு ,உங்க பையன் வந்து கேட்டானே  !''

நம்ம பணம் அவங்க பையில் என்பது உண்மை:)

              ''உங்க பணம் உங்க கையில்' திட்டம் வரப் போகுதாம் ,அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?'''

             '' அப்படின்னா ,இப்போ நமக்கு சேர வேண்டிய  பணம் அவங்க பையில் சேர்ந்துக்கிட்டு இருந்ததை ஒத்துக்கிறாங்களா  ?''

மனோதிடம் இருக்க ஜோதிடம் எதுக்கு :)

ஒருவர் கையிலே உள்ள ரேகையைப்  பார்த்து ..

ஒரே ஒரு யானையைத் தடவிய குருடர்கள் போல் ...

 நாலு ஜோதிடர்கள் கூறுவதோ நாலு  விதம்! 

ஒரு நேரத்தில் எல்லோருக்கும்  ஒரே  நேரம் காட்டும்

கடிகாரம்  காட்டுவதே நல்ல நேரம் !


18 comments:

  1. கபாலி அவ்வளவு கெட்ட பெயரா ஆயிடுசுன்களாய்யா...!

    ஹா.... ஹா.... ஹா....

    ஹா... ஹா... பையன் முன்னுக்கு வந்துடுவான் போலேருக்கே...

    இது போட்டதை வச்சு வாங்கறதா பாஸ்?!!

    ஒவ்வொருவர் சொல்வதிலும் ஒவ்வொரு விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. கேடின்னு சொல்றதுக்கு, அந்த பெயர் சிம்பாளிக்கா ஆகிப் போச்சே :)

      வேலையில் இருந்து இவனை தூக்கி விடலாமா :)

      இவன் வராட்டி வேற எவன் வருவான் :)

      போட்டு வாங்கிறதா கூடச் சொல்லலாம் :)

      எத்தனைப் பேருக்குத்தான் தட்சணை வைப்பது :)

      Delete
  2. ‘கபாலி’ன்னு வைக்காதிங்கன்னு சொன்னதுக்காக... இந்தக் கபளிகரம் செய்றீங்களே...! மீறி வச்சீங்கனா...ஒங்க பையனோட கபாலம்தான் மிஞ்சும்... நான் சொல்லல... ஒன்னோட மகன் ஜாதகம் பேசுது... ஒனக்கு இது சாதகமாக இல்ல...!

    பத்து வருஷமா உன் உப்பச் சாப்பிட்டதால பிரஷர் எகிறிப்போச்சு...! இனி நான் உள்ளவும் ஒன்னய எப்படி நினைக்காம ’ஆனந்த்’ -தமா இருக்க முடியும்...!

    வாட்சுதான் என் மேல உக்காந்து இருக்குங்கிறத ஒங்க பையன் வாட்ச் பண்ணத்தவறிட்டான்...!

    ஒரு வார்த்தை மிஸ் ஆயிட்டுச்சு... ’உங்க பணம் உங்க கையில் இருந்தாத்தானே...’ திட்டம் வரப் போகுதாம்...!

    ‘நல்ல நேரம் நான் பிழைத்துக் கொண்டேன்...!’ ஜோதிடரான நான் பாடிக் கொண்டு இருப்பது பிடிக்கவில்லையா... ஒருத்தனமட்டும் வாழ விடுங்க... இதுக்காக ‘ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா... எண்ணிப்பாருங்கண்ணு...’ பாட்டுப் படிக்கிறீங்களே... பணத்தைத்தான் நான் எண்ணிப்பாக்க முடியும்...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா சரிதான் ,வேணாம்னு சொன்ன காரணம் :)

      ஆனந்த் ஜட்டி பனியனைப் போட்டுகிட்டுதான் :)

      நல்ல பலசாலிதான் நீங்க :)

      திட்டம் போடாமலே அதுதானே நடந்துட்டு இருக்கு :)

      இப்போ பணம் சம்பாதிக்கலாம் ,பொய்யைச் சொன்னா தரித்திரம்தான் பிடிக்கும் :)

      Delete
  3. நல்லவேளை குண்டாசட்டி...சருவச்சட்டி சைஸ் கேட்கலை.....!!!

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் கேட்டுட்டு தனிக்குடித்தனமா போகப் போறார் :)

      Delete
  4. கபாலி என்னும் பெயருக்கு என்ன அந்த ஈசனின் பெயர்களில் ஒன்றல்லவா
    உப்பிட்டவரைத் தானே தவிர உப்பிட்டவரின் என்று சொல்ல வில்லையே
    ஜோக்காளியின் வாரிசோ என்னவோ
    உங்க பணம் என்று சொல்ல ஒன்றும் இல்லாவிட்டால்...
    கடியாரம் காட்டுவது போல் எல்லோருக்கும் ஒரே சோசியம் கூற முடியுமா

    ReplyDelete
    Replies
    1. ஈசனின் பெயரைத்தான், இப்படி ஆக்கிவைச்சுட்டாங்களே:)
      சரி ,ரின் வாங்கி ஜட்டியைத் துவைத்துப் போடச் சொல்லி விடுகிறேன் :)
      வாரிசு இல்லை ஜோக்காளியேதான்:)
      சிலிண்டர் மானியம் அப்படித்தான் ஆகப் போகிறது :)
      அதைதான் நானும் கேட்கிறேன் :)

      Delete
  5. உள் 'அளவும் 'நினை...Aaha!.........
    வாட்ச்மேன்... சேர்மன்...Atumai...
    ஒரு நேரத்தில் எல்லோருக்கும் ஒரே நேரம் காட்டும்
    கடிகாரம் காட்டுவதே நல்ல நேரம் !
    மிக மிக ரசனை ..சிந்தனை....
    ரசித்தென் நன்றி சகோதரா.
    (வேதாவின் வலை)

    ReplyDelete
    Replies
    1. சகோ .கில்லர்ஜி கண்ட ரோபோ, உங்க கண்ணுக்கும் தெரிந்ததா :)

      Delete
  6. 01. கபாலின்னா தப்பான பெயரோ ?
    02. ஓஹோ...
    03. ஹாஹாஹா ஸூப்பர்
    04. ஸூப்பர் கேள்வி
    05. அருமையான தத்துவம் ஜி

    ReplyDelete
    Replies
    1. போலீஸ் ரிக்கார்டு அப்படித்தான் சொல்லுது :)
      இப்படித்தான் நினைப்பதா :)
      'பொடி'ப் பையனா இருக்கானே :)
      பதில்தான் கிடைக்காது :)
      ஜோதிடம் உண்மையெனில் ஆரூடம் எல்லாமே ஒன்றாய்தானே இருக்கணும் :)

      Delete
  7. ஜி ரோபோட் எல்லாம் வருது புடிச்சு கட்டி வையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பெரிய மீசையா சின்ன ரோபோவுக்குப் பயப்படுவது ?அவனைக் கண்டுக்காமல் வோட்டை க்ளிக் பண்ணுங்க ஜி :)

      Delete
  8. Replies
    1. மாலை நேரம் வந்து ரசித்ததற்கும்,(த ம 7)மகிழ்ச்சி தந்தமைக்கும் நன்றி :)

      Delete
  9. அப்படின்னா ,இப்போ நமக்கு சேர வேண்டிய பணம் அவங்க பையில் சேர்ந்துக்கிட்டு இருந்ததை ஒத்துக்கிறாங்களா ?''/// இது நகைச்சுவையல்ல....நச்சென்ற அடி

    ReplyDelete
    Replies
    1. பெட்ரோல் விலை ஒன்று போதாதா ?உலக மார்க்கெட் விலையை நிர்ணயம் செய்யும் லட்சணம் இதுதானா :)

      Delete