6 February 2016

கவச உடையில் 'ஹனிமூனா ' :)

நல்ல வேளை,உடனே டாக்டரை பார்த்துட்டார் :)

           ''என்ன சொல்றீங்க ,நாவலின் பத்தாவது பக்கம் புரட்டியவுடன் ,உங்களுக்கு  மூச்சுத் திணறல்  ஏற்பட்டதா  ?''

           ''ஆமாம் டாக்டர் , அந்த த்ரில்லர் நாவலை 'ஒரே மூச்சில் ' வாசிக்க முயற்சித்தேன் !''

இனிமேல் ,வாங்கித் தர யோசிப்பாரோ :)
              ''ஐம்பதாயிரம் செலவு பண்ணி  உனக்கு வைர நெக்லஸ்  வாங்கிஇருக்கேனே ,அப்புறமும் என்ன நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறே  ?''
            ''உங்களை வாங்கறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே ,இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''

பிள்ளைக்கு தாய்  பால் கொடுக்கலைன்னு இப்ப குத்தலா?
                ''நேற்றைக்கு உன் புருசனோட என்னடி சண்டை ?''
            ''போராட்டம்னு தரையிலே பாலைக் கொட்டுறது அநியாயம்னு சொன்னேன் ...அதுக்கு அவர் 'தாய்ப் பாலைக்  கொடுக்காம  ,நீ வேஸ்ட் செய்ஞ்சது மட்டும் நியாயமா 'ன்னு  கேட்குறார்டி!''

  1. போலியை பேச்சிலேயே கண்டுபிடுச்சிடலாம் :)

                      ''அவரை,  போலி  டாக்டர்னு சொல்றீயே ,ஏன் ?''

                          ''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா , பிச்சிப் பூவான்னு கேட்கிறாரே !''
  2. கவச உடையில் ஹனி மூனை கொண்டாட முடியுமா  :)

    நிலவுக்கு சென்று வர  பணம்  இருந்தாலும்கூட  
    ஹனி MOONனை பூமியில்தான்  கொண்டாட முடியும் ! 

26 comments:

  1. 01. அந்த நாவல் பெயர் என்ன ஜி ?
    02. இப்படித்தான் வசூல் செய்யிறதா ?
    03. பழைய கணக்கா ?
    04. எந்த ஊருல இந்த டாக்டரு இருக்காரு ?
    05. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. மூச்சு முட்டும் வரை சாகாதிரு:)
      போட்ட காசை எப்படி எடுக்கிறதாம்:)
      நேரம் கிடைக்கும்போது தீர்த்துக்க முடியும் :)
      மல்லிகைக்கு பெயர் பெற்ற ஊரிலேதான் :)
      தத்துவம் புல்லரிக்க வைக்குதா :)

      Delete
  2. ஹா.... ஹா... ஹா...

    கணக்குப் பிள்ளை!

    சரியான கேள்விதான்!

    பூ... இவர் டாக்டரே இல்லை!

    சரிதான்!

    ReplyDelete
    Replies
    1. இவருக்கு தேவையா இந்த ஆராய்ச்சி எல்லாம் :)
      கணணி தோற்றுவிடும் :)
      கேள்விக்கு பிறகு பாலாபிஷேகம் நடந்திருக்கும் :)
      பூ வியாபாரியா:)
      செவ்வாயில் வேண்டுமானால் கொண்டாடலாமா :)

      Delete
  3. இனிமே ஓரே மூச்சில் வாசிக்க முயற்சி செஞ்சீங்க... மூச்சுப் பேச்சு இருக்காது...! விழியே எழுதின கதையைப்படி...!இல்லைன்னா விதி வலியது...!

    அஞ்சாத சிங்கம் என் காளை... அஞ்சு லட்சம் வாராக் கடன்ல... அம்பதாயிரம் கலக்சன் ஆயிடுச்சு...!

    தாய்ப் பாலை குழந்தை அவ்வளவுதானே குடிக்கிது...! நீங்க இதெல்லாம் கேட்கக்கூடாதுன்னு சொன்னா... நா கேக்காமா வேற யாரு கேக்கிறது...?!

    பூவிருந்தவல்லில்ல டாக்டர் ‘குவளை மலர்’ ஆஸ்பத்திரி திறக்கும் போதே எனக்கு அவரு மேல சந்தேகம்தான்...!

    கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்தது மாதிரி இருந்தா... என்ன பண்ணறது...?

    த.ம.3





    ReplyDelete
    Replies
    1. விழிகள், கவிதை வேண்டுமானால் எழுதும் :)

      இனி எப்படி கலெக்சன் ஆகும்னு பார்ப்போம் :)

      பெத்த அப்பன் கேட்காம வேறு யார் கேக்கிறது :)

      உங்க சந்தேகத்தைச் சொல்லியிருந்தால் ,கண் போன கவலை யாருக்கும் வந்திருக்காதே :)

      ஒண்ணும் பண்ண முடியாதுதான் :)

      Delete
  4. இனிமே ஓரே மூச்சில் வாசிக்க முயற்சி செஞ்சீங்க... மூச்சுப் பேச்சு இருக்காது...! விழியே எழுதின கதையைப்படி...!இல்லைன்னா விதி வலியது...!

    அஞ்சாத சிங்கம் என் காளை... அஞ்சு லட்சம் வாராக் கடன்ல... அம்பதாயிரம் கலக்சன் ஆயிடுச்சு...!

    தாய்ப் பாலை குழந்தை அவ்வளவுதானே குடிக்கிது...! நீங்க இதெல்லாம் கேட்கக்கூடாதுன்னு சொன்னா... நா கேக்காமா வேற யாரு கேக்கிறது...?!

    பூவிருந்தவல்லில்ல டாக்டர் ‘குவளை மலர்’ ஆஸ்பத்திரி திறக்கும் போதே எனக்கு அவரு மேல சந்தேகம்தான்...!

    கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்தது மாதிரி இருந்தா... என்ன பண்ணறது...?

    த.ம.3





    ReplyDelete
    Replies
    1. ஒன்பது நிமிடம் கழித்து அதே கமெண்ட்டா ,எப்படி ,எப்படி :)

      Delete
  5. Replies
    1. கவசக் கன்னியைப் பிடித்ததா :)

      Delete
  6. Replies
    1. என் பதிவை ஒரே மூச்சில் படித்துத்தானே :)

      Delete
  7. உண்மைதான் என்னதான் நிலவுக்கே போய்வந்தாலும் ஹனிமூனை பூமியில்தான் கொண்டாட வேண்டும்.
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ,தாய்லாந்தில் கொண்டாட வேண்டும் இல்லையா,செந்தில் ஜி :)

      Delete
  8. அதுவும் காசு துட்டு. இருந்தால்தான் அந்தஹனி MOONனை பூமியில் கொண்டாட முடியும் !

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,இல்லாதவனுக்கு ஏது ஹனியும் ,மூனும்:)

      Delete
  9. "ஹனிமூனும் கவச உடையும்" - ஹா ! ஹா ! ஹா ! நல்ல சிந்தனை !

    ReplyDelete
    Replies
    1. கற்பனையில் ,நிலாவுக்கு ஹனிமூன் ட்ரிப் அடிச்சீட்டீங்க போலிருக்கே ,பிரசாத் ஜி :)

      Delete
  10. வணக்கம்
    ஜி

    இரசித்தேன் ஜி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவச உடையில் தேனிலவு என்றால் ,அது தண்டனையாகி விடும் இல்லையா ,ரூபன் ஜி :)

      Delete
  11. அட சீதனப்பணத்தை இப்படிக்கூட வசூலிக்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. வெளியே சொல்லாம ,காதும் காதும் வைச்சமாதிரி வசூலிக்க வேண்டியதுதான் :)

      Delete
  12. ஒரே மூச்சு...ஐயோ நல்லகாலம் நிக்கலியே...

    பூ...ஹஹ்ஹஹ்

    ஹனிமூன்...ரசித்தோம்..

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பக்கம் புரட்டியிருந்தால் நின்றுருக்கும் :)

      பூ ...கண்ணில் படும் ,கண்ணிலா விழும் :)

      இங்கிருந்தேவா :)

      Delete
  13. இனித்தன அனத்தும்

    ReplyDelete
    Replies
    1. மல்லிகைப் பூவா , பிச்சிப் பூவான்னு எந்த டாக்டரும் உங்களை கேட்டிருக்க மாட்டாரே :)

      Delete