16 April 2016

'சர்பத் 'தால் சோம்பேறியான மனைவி :)

              ''என்னடா சொல்றே ,உன் பெண்டாட்டி படு சோம்பேறி ஆயிட்டாளா  ?''
             ''டீ காபியில் சீனிக்குப் பதிலா , சர்பத்தைக் கலக்க ஆரம்பித்து விட்டாளே!''
எப்படி வந்தது ,அவருக்கு இந்த  'துணி 'ச்சல்  :)
               ''எடைக் குறைவான சேலையைப் பார்த்து வாங்க வேண்டியதுதானே ?''
               ''நான் கட்டிக்கப் போறேன் ,மெஷின் துவைக்கப் போவுது ,உங்களுக்கென்ன ?''
              '' அதை காயப் போடுறது நான்தானே  !''
இருக்கும் போதுகூட மாமியார் மேல் இம்புட்டு பாசமில்லே :)
          ''என்னங்க ,அமாவாசை அதுவுமா ...ஜன்னல்லே காக்கா வந்து கரையுதுங்க,நெய்ச்சோறு கலந்து வைக்கட்டுமா ?!''
           ''ஏன் ?''
           ''கலரும் ,குரலும் உங்க அம்மாவை ஞாபகப்படுத்துதே ,அதான் !''
வழக்குச் செலவுக்கே ஒத்தி காசு சரியா போயிருக்குமே  :)
           ''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
           ''அதையேன் கேட்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுகிட்டே இருக்கார் !''
லஞ்சத்திற்கு தூக்குத் தண்டனை எப்போது :)
ஊரெங்கும் பணம் தரும் தானியங்கி எந்திரங்கள் ...
நம்மைச் சுற்றிலும் பணம் பிடுங்கும் மனித எந்திரங்கள் !

18 comments:

  1. 01. தெளிவான பொண்டாட்டிதான்
    02. நியாயமான கவலைதான்
    03. நல்ல மருமகள் உயிரோடு இருக்கும் பொழுது சோத்துக்கு காகான்னு பறக்க விட்ருப்பாளே... ?
    04. கமிசன் அடிச்சுருப்பானோ.. ?
    05. ஸூப்பர் உண்மை ஜி

    ReplyDelete
    Replies
    1. கட்டிக்கிட்டவர் கொடுத்து வைத்தவர் :)
      அவர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் :)
      மாமியார் கொடுத்து வைத்தவர்தான்:)
      நீதிபதியிடம் காலி செய்ய மறுக்கிறவர் கொடுத்து வைத்திருப்பாரோ :)
      நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் :)

      Delete
  2. லஞ்சத்திற்கு தூக்குத் தண்டனை எப்போது :)


    இது சிரிக்கவா சிந்திக்கவா....

    ReplyDelete
    Replies
    1. சிந்தித்து சிரித்தால் சரி :)

      Delete
  3. Replies
    1. சர்பத் கலக்கலா இருக்கா :)

      Delete
  4. வெயில் காலம்... ரொம்ப கூலா இருக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணம்தான்... நீரிழிவு வந்து இழிவாயிடக்கூடாதின்னு ... வருமுன் காப்போம் என்ற சிந்தனையில உதித்ததா இருக்கும்... தப்பா நினைக்காதிங்க...!

    சொன்னபடி கேளுங்க... இல்லாட்டி ஒங்களுக்குச் சோறு போடாம காயப் போட்டிடுவேன்...!

    அப்படியே ஒங்க அம்மாவ உருச்சு வச்சிருக்கீங்க... ஏங்க...காக்கா கரையுதுங்க...! நெய்ச்சோறு கலந்து வைக்கட்டுமா?

    ஒத்திக்கு ஒத்தி சரியாப் போச்சாம்...! கொஞ்சம் ஒத்துக்க... வீட்டுக்கு கலர் அடிக்கணும்...!

    காசேதான் கடவுளப்பா...! தந்திரமா கையூட்டு வாங்கும் மனித எந்திரங்களின் கைவிரல்களை வெட்டி விடவேண்டியதுதான்...!

    த.ம. 2


    ReplyDelete
    Replies
    1. சர்பத் என்ன பாவக்காய் ஜூஸா,அதுவும் கலர் சர்க்கரை தண்ணீதானே :)

      சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே :)

      கருவாச்சின்னு சொல்றாம சொல்றாங்களோ :)

      கலரா ,சுவரெல்லாம் பெயர்ந்து விழுந்து பலகாலம் ஆச்சே :)

      நாட்டிலே முக்கால்வாசி பேர் கையிலே கிளவுஸ் மாட்டிக்க வேண்டியிருக்குமே :)

      Delete
  5. இலஞ்சம் என்பதை உருவாக்கியது நாம், முதலில் நமக்கு தான் தூக்கு தண்டனை தர வேண்டும் ஐயா.நமது அவசரத்திற்கு பணத்தை கொடுத்தோம் அவர்கள் வாங்கினார்கள்,அதற்கு அடித்தளத்தை உருவாக்கியதே நம்மவர்களின் ஒருவர் தான் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இருக்கிறவன் கொடுக்கிறான் ,இல்லாதவன் பாவம் என்னதான் செய்வான் ?சமூகவிரோதிகள் பெருக லஞ்சமும் முக்கிய காரணம்தானே :)

      Delete
  6. சர்பத்துக்கு பதிலா.. வேறு எதையும் கலக்காம... இருந்தாங்களே!. அதுவரை யிலும் பரவாயில்லை

    ReplyDelete
    Replies
    1. ஓ .நீங்க அதை சொல்றீங்களா ?பரவாயில்லைதான் :)

      Delete
  7. ஹஹஹ பரவால்ல ஜி....போனா போகுது..கணவர் பிழைத்தார்...

    நீதிபதியும் ஒத்தி வைத்தார்..அஹஹஹ் வார்த்தை விளையாட்டு!!

    ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஒத்திக்கு பதிலா வாடகை என்றால் வாய்தா கேட்டிருப்பாரோ :)

      Delete
  8. "ஊரெங்கும் பணம் தரும்
    தானியங்கி எந்திரங்கள்...
    நம்மைச் சுற்றிலும்
    பணம் பிடுங்கும் மனித எந்திரங்கள்!" என
    அழகாய்ச் சொல்லியிருக்கிறியள்
    இதை தான்
    கலிகாலம் என்கிறார்களோ!

    ReplyDelete
    Replies
    1. இதை நான் சொல்வதால் கூட கலிகாலம் என்றார்களோ என்னவோ :)

      Delete
  9. Replies
    1. படித்தால் மட்டும் போதுமா என்பதைப் போல, ரசித்தால் மட்டும் போதுமா என்று கேட்க வைத்து விட்டீர்களே குமார் ஜி :)

      Delete