25 April 2016

இவருக்கு கசக்கிற வாழ்வே இனிக்குதோ :)

நல்ல வேளை, தண்ணீர் தெளிக்கவில்லை :)       
               ''தினசரி பேப்பரை வாசிக்கிறதுக்கு முன்னாடி ,கையுறை எதுக்கு 
போட்டுக்கிறீங்க ?''
              ''சூடான செய்திகள் நிறைய வந்திருக்காமே !''
இவருக்கு கசக்கிற வாழ்வே இனிக்குதோ :)
        ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு  சாப்பிடுறதேயில்லே , ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு வருவதேயில்லையே ,எப்படி ?'' 
        ''கல்யாணம் ஆனதில் இருந்தே  நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''
எதை ஓசி கேட்பதென்று விவஸ்தை வேண்டாமா :)
       '' இன்சுலின் சிரிஞ்ச் பேனாவை  பையிலே  வச்சுருப்பீங்களே,இப்ப காணலையே ,ஏன் ?''
      ''அதையேன் கேக்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் கேட்கிறாங்களே !''

மின் வெட்டு கடுமையான நேரத்தில் எழுதியது இது :)
             ''பூனைக்கு இருட்டிலேயும் பார்வை தெரியுமாமே ?''
             ''ஒண்ணும்  கவலைப் படாதீங்க ,'கரெண்ட் கட் 'புண்ணியத்தால்  கொஞ்ச நாள்லே நமக்கும் அந்த சக்தி வந்திடும் !''
சந்தர்ப்பம் புத்தன் ஆகவா ,பித்தன் ஆகவா ?
சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும் என்பதற்காக ... 
தப்பைச் செய்தவர்களும் 
'சந்தர்ப்பச் சூழ்நிலையால்  செய்தோம் ' 
என்பதில்  என்ன நியாயம் ?

18 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. விரைந்து இயல்பு நிலைக்கு திரும்பி ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  2. அனைத்தும் அருமை. மின்வெட்டு மிகஅருமை.

    ReplyDelete
    Replies
    1. தலை விரித்து ஆட ,தேர்தல் முடியட்டும் என்று மின் வெட்டு காத்துக் கொண்டிருக்கிறது :)

      Delete

  3. கசப்பான உண்மையை சொல்லியும்
    சோறு.போடுறாளா மனைவி....

    ReplyDelete
    Replies
    1. இந்த சோறு தொண்டையில் விக்காதா :)

      Delete
  4. ‘ஜாதி மோதல்களைத் தூண்டுவதாக இருப்பதால்... இந்தப் போட்டிக்கு நான் வரவில்லை...!’ செய்தி சூடாக இருக்கிறது... உண்மையில்...?!

    பாவ(ம்)காய் நமக்கு பகை என்று சொல்ல முடியுமா...? கசந்த வசந்தம்...!

    இன்சுலின் சிரிஞ்ச் பேனா என்றாலும் வேணாம் என்று சொல்லகிறார்களா...?

    பரவாயில்லை... பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது...!

    தப்பைத் தப்பு இல்லாமல் செய்தால் தப்பில்லைதானே...! தப்புத்தாளங்கள்...!

    த.ம. 4



    ReplyDelete
    Replies
    1. வைகோ சொல்வது புது கதையாய் இருக்கே :)

      பாவைக் காய் சாப்பிடுவதே உவகை என்று னினிது விட்டாரோ :)

      தேவைப் படுவோர் ஏன் வேண்டாம்னு சொல்லப் போறாங்க :)

      மீனை சாப்பிட வெளியே வந்துதானே ஆகணும் :)

      மைனஸ் மைனஸ் பிளஸ் தத்துவமோ :)

      Delete
  5. 01. இவர் பெரிய அழிவாலிதான்
    02. சந்தர்ப்ப குத்து.
    03. இலவசம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள்
    04. நாமலும் பூனைதானோ....
    05. சமாளிப்புதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. தீக்கதிர் தினசரியை இவர் எப்படி தொடுவாரோ :)
      குத்துவதற்கு ரொம்ப நாள் காத்திருந்தாரோ :)
      பழைய ஊசி இருந்தாலும் கேட்பார்களோ :)
      ஆமாம் ,அதிலும் மதில்மேல் பூனைகள் :)
      மனசாட்சி இல்லாதவர்களின் சமாளிப்பு :)

      Delete
  6. ரசித்தேன்!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. பூனையின் சக்தி நமக்கும் கிடைக்கும்தானே :)

      Delete
  7. அவருக்கு டெங்கு வராததின் இரகசியம் இதுதானா....!‘!

    ReplyDelete
    Replies
    1. இதுதான் ஊரறிந்த ரகசியமாச்சே :)

      Delete
  8. Replies
    1. கசப்போடு வாழ்பவரைப் பார்த்துதானே சிரித்தீர்கள் :)

      Delete
  9. ரசித்தேன் ஜீ! அதுவும் டெங்கு கடி சூப்பர்)))

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் கசப்புதான் பிடித்ததா :)

      Delete