21 April 2016

சாப்ட்வேர் டீம் லீடர் ,இப்படி வேலை வாங்கலாமா :)

  நல்லவேளை ,தாலி கட்டும் முன் தெரிந்தது :)         
             ''காதலனை  ஏன் கை விட்டுட்டே ?''
             ''ரெஜிஸ்டர் ஆபீஸ் ,அல்லது கோவில்  ..இதில்  எங்கே திருமணம் செய்துகிட்டா செலவு மிச்சமாகும்னு கேட்கிறாரே !''
                                                                      
கஸ்டமரை  கஷ்டப் படுத்தக் கூடாது தானே  :)
            ''ஹலோ ,கஸ்டமர் கால் சென்டருக்கு கால் பண்ணிட்டு ...எனக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு ஏன் கேட்குறீங்க ?''
            ''எவ்வளவு திட்டினாலும் சிரிச்சுகிட்டே பதில் சொல்றீங்களே ,உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  !''    
       
சாப்ட்வேர் டீம் லீடர் ,இப்படி வேலை வாங்கலாமா :)
           ''காலையிலே , தலைமுடி நல்லாத் தானே  இருந்தது ,சாயந்திரம் வேலை முடிந்து ,வழுக்கைத் தலையனா  வர்றீயே ,ஏன் ?''
           ''எங்க டீம் லீடர் ,நாலுநாள் வேலையை  இன்னைக்கே  'கையோட முடி'க்கணும்னு  'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாரே !''
108டிகிரி வெயில் இப்படி கேட்கவைக்குதோ :)
         ''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?''
         ''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்னு கேட்கிறாரே !''
நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது :)
ஒரே உறையில் இரண்டு கத்தி ...
என யாராவது சொன்னால் ...
மாமியார் மருமகள் உறவு
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை !

                                                                   

18 comments:

  1. நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது 
    இது ஏதோ உண்மைதான் ஜி....


    அத்தனையும் அருமை நண்பரே
    ஜோக்காளி னா பகவான்ஜி தான்....

    ReplyDelete
    Replies
    1. ஏதோ உண்மை இல்லை ,வடிகட்டிய உண்மை :)

      Delete
  2. அடப்பாவி... நல்லவனை விட்டுட்டியேம்மா...!!

    வீட்டில்போய்ப் பாருங்க.. அங்கேயும் திட்டினா சும்மா இருக்காங்களான்னு தெரியும்!

    ஹா... ஹா... ஹா...

    தொழில் சுத்தமான மாஸ்டர் போல!

    ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. ஓடிப் போய் கட்டுற கல்யாணத்துக்கு இவ்வளவு கணக்கு பார்த்தால்உருப்பட்ட மாதிரிதான் :)

      வேலை செய்யும் இடத்தில் வாங்கியதை எல்லாம் வீட்டில் கொட்டுவார்களோ:)

      கையோட முடின்னா இப்படித்தானா :)

      கையிலே தெர்மாமீட்டரும் வைத்திருக்கிறாரே :)

      இரு பக்க இடி போலத்தானா :)

      Delete
  3. திருமணம் செய்துக்கலாமுன்னே சொன்ன காதலன் மனசே பெரிசு...! ‘சிக்கனம் தேவை இக்கணம்’ நினைக்கிறது தப்பா...?

    என் பொழப்பு இப்ப சிரியா சிரிக்குது...!

    ‘ஆடிக் காத்தில அம்மியே நகரும்ன்னு சொல்லுவாங்க...’ அடிச்ச காத்தில ‘விக்’ பறந்து போயிடுச்சு...!

    காலேஜ் படிப்பு காப்பி ஆத்துனாலே இப்படித்தான் கேள்வி வரும்...!

    அட்டக் கத்திதானே... விடுங்க...!

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. காதலன் அருமை இப்போ தெரியாது இன்னொருவன் கைவிடும் போது தெரியும் :)

      போக போக பழகிப் போகும் :)

      ஏசி அறையில் ஆடிக் காத்துக்கு வேலையே இல்லையே :)

      அதுவும் நர்சிங் காலேஜா இருக்குமோ :)

      அட்டாக் கத்தியைப் போய் அட்டக்கத்தின்னு சொல்றீங்களே :)

      Delete
  4. அனைத்தையும் ரசித்தேன், நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. டீ மாஸ்டரை அடிக்கணும் போலிருக்கா :)

      Delete
  5. நன்று!சுவைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. டீ சுவை 'தேன்'தானா :)

      Delete
  6. சாப்ட்வேர் டீம் லீடர்,
    தலையைப் பிச்சுக்கிற வேலையை
    கொடுப்பாரென்பதால்...
    சாப்ட்வேர் வேலைக்கே
    நான் போகேல்லை!

    உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
    http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. என் பதிவும் ,மண்டையைப் பிய்ச்சிக்கிற மாதிரிதானே இருக்கு :)

      Delete
  7. 01. நல்லவேளை லாட்ஜ்ல வைக்கலாமான்னு கேட்காமல் விட்டான்.
    02. நேர்ல போய் சொல்லுச் சொல்லுங்களேன்...
    03. சலூன் செலவு மிச்சம்தானே...
    04. வெயில்க் காலம் இப்படித்தான்..
    05. தீர்வு தனிக்குடித்தனம்

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் முடியாம முதலிரவை எப்படி வைக்கமுடியும் :)
      கால் சென்டரிலேயே காலில் இருப்பதைக் கழட்டிவிடுவாளே:)
      சலூனில் அவர் மொட்டைப் போட்டுக்கும் வழக்கம் இல்லையாமே :)
      காப்பிக் குடிப்பதையே விட்டுட்டாராமே :)
      இல்லையென்றால் கொலையில் முடியுமோ :)

      Delete
  8. 'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டா..ரத்தமில்ல வரும்

    ReplyDelete
    Replies
    1. வரும் ஆனா ,யாரும் ஆறுதல் கூற வரமாட்டார்கள் :)

      Delete
  9. Replies
    1. நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது என்பதையும்தானே:)

      Delete