28 April 2016

ரகசிய கடிதம் பெண் டைப்பிஸ்ட் அடிக்கக் கூடாதா :)

                ''மேனேஜர் சார் ,உங்களுக்குன்னு தனியா லேடி டைப்பிஸ்ட் இருக்காங்களே .இந்த லெட்டரை  நான்தான் அடிக்கணும்னு ஏன் சொல்றீங்க ?''
               ''இது ரகசிய கடிதம் ...ரகசியம்னா பெண்கள் மனதிலே தங்காதே !''
எப்படியாவது தலைவராகணும் :)          
             ''நாலடி உயரம்  இருக்கிற நான் பஞ்சாயத்து தலைவர்கூட ஆக முடியாது ,அதனாலே ... !''
             ''என்ன செய்யலாம்னு இருக்கீங்க ?''
              'கட்டப்' பஞ்சாயத்து தலைவர் ஆகப் போறேன் !''
மனைவி சொல்வதும் சரிதானே  :)
             ''நீங்க ஆரம்பித்த டென்னிஸ் கோச்சிங் சென்டரை மூட ,உங்க மனைவிதான் காரணமா ,ஏன்  ?''
            ''கொசு பேட்டினால் ஒரு கொசுவை அடிக்கத் தெரியாத ,நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சரான்னு  கிண்டல் பண்றாளே !''
 உருட்டுக்  'கல்லை'யும் சேர்த்து ஆட்டுவாங்களோ :)
           ''பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர் திமிரா பதில் சொல்றானா ,எப்படி ?''
           ''பொங்''கல்'னா  வரத்தான் செய்யுமாம் !''
நல்லவர்கள் விரல் எண்ணிக்கையில் அடங்கி விட்டார்கள்,ஆனால்  ......?
கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான் ...
கடைந்தெடுத்த அயோக்கியர்கள் கணக்கு வழக்கு இல்லாமல் வாழ்கிறார்கள் !

23 comments:


  1. ஹா... ஹா... ஹா... பெண் பதிவர்கள் யாரும் சண்டைக்கு வருவார்களா?

    ஹா... ஹா... ஹா...

    நியாயம்தானோ மனைவியின் திட்டு?

    ஹா... ஹா... ஹா...

    நல்லவை எப்பவுமே கம்மியாத்தானே இருக்கும்ஜி?

    ReplyDelete
    Replies
    1. பெண்ணியவாதிகள் நம்ம ஜோக்காளிப் பேட்டைப் பக்கமே வர மாட்டாங்களே :)

      உண்மையான கட்ட பஞ்சாயத்து இதுதானே :)

      கொசுவை அடிக்க மாட்டேங்கிறாரே என்ற வெறுப்பில் சொல்லியிருப்பார்களோ :)

      கல் வந்தாலுமே பொங்கல் டேஸ்ட்தான்:)

      ஆனாலும் ரொம்ப கம்மி :)

      Delete
  2. இந்த ரகசியக் கடிதம்... அவுங்களுக்குத்தான் போய் சேரப் போவுது... அவுங்கள டைப் அடிக்கச் சொன்னா நல்லா இருக்காதில்ல... ரகசியம்... இது பரம ரகசியம்...!

    சொந்தக் கால்ல நிக்கிறதில்லன்னு முடிவு பண்ணிட்டீங்க...! சீக்கிரம் பெரிய மனுசனா ஆயிடுவீங்க...!

    இப்ப கொசு பேட்ட வித்திக்கிட்டு இருக்கேன்... பரவாயில்ல... இதுல வருமானம்...!

    பொங்கல்... வாராங்கல்ல வந்து சாப்புடுறீங்க...!

    ‘எட்டாவது வள்ளல்...’ ஒருவர் இருந்தாராமுல்ல... என்ன... இருந்தாரு... இப்ப இல்லையா...?

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. purely confidential என்று போட்ட காரணம் ,நீங்க சொன்ன பிறகுதான் புரியுது :)

      பெரிய மனுசங்க ,நதிமூலம் ,ரிஷி மூலம் பார்க்கக்கூடாது:)

      வெயில் காலம் வியாபாரம் படுத்து இருக்கணுமே :)

      த்தூ த்தூ ன்னு மட்டும் துப்பிடாதீங்க:)

      அவர் யாருக்கும் எட்டாத வள்ளலா இருக்காரே :)

      Delete
  3. அப்படியென்றால் பெண்கள் மனதில் எதுதான் தங்கும்....??????????ஃ

    ReplyDelete
    Replies
    1. அது தெரிந்தால் பசங்க ஏன் லூஸா அலையப் போறாங்க :)

      Delete
  4. "கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான்...
    கடைந்தெடுத்த அயோக்கியர்கள்
    கணக்கு வழக்கு இல்லாமல் வாழ்கிறார்கள்!" என்பதை விட
    உலகெங்கிலும் வாழ்கிறார்கள் என்பதே மெய்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதே மெய் :)

      Delete
  5. பெண்ணின் பெருந்தக்க யாவுள? பாவம் வள்ளுவர். பகவான்ஜீயைக் கண்டால் அடிக்காமல் விடமாட்டார்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,வள்ளுவர் கோட்டம்,வள்ளுவர் சிலையை பலமுறை பார்த்தாகி விட்டது !நீங்க சொல்றதைப் பார்த்தால் இனிமேல் அங்கெல்லாம் நான் போகக் கூடாதோ :)

      Delete
  6. பெண்கள் மனதில் ரகசியம்,,, இது கொஞ்சம் ஓவரா இல்ல,,

    அனைத்தும் அருமை பகவானே,,

    ReplyDelete
    Replies
    1. அந்த பொதுவான கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது .ரகசியம் என்று வரும்போது ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல !நம்மில் எத்தனைப் பேரால் கல்யாணத்துக்கு முந்தைய காதலை புது கணவன்/மனைவியிடம் பகிர்ந்து கொள்ள முடியும் ?வாழ்நாள் முழுவதும் அந்த ரகசியம் வெளிப்படாதுதானே :)

      Delete
  7. ஹாஹாஹா! சிரித்து மகிழ்ந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. கட்டப் பஞ்சாயத்துத் தலைவர் கனவில் வந்தாரா :)

      Delete
  8. 01. அப்படியா ? இது தெரியாமல் நான் பலவற்றையும் உளறி விட்டேனே.... ஜி
    02. ஹாஹாஹா ஸூப்பர் அமிதாப்பச்சனுக்கு எதைக் கொடுக்கலாம் ?
    03. கேவலம்தான்.
    04. உண்மைதான்
    05. ஸூப்பர் தத்துவம் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணும் கவலைப் படாதீங்க .உளறல்கள் எல்லாம் ரகசியமாகாது :)
      அதான் ராஜ்ய சபா நியமன உறுப்பினர் ஆகிவிட்டாரே :)
      கொசுவை அடிக்க முடியாம ,என்னை அடிக்க வர்றியான்னு மனைவி சண்டை போடுவதாக தெரிகிறது :)
      உண்மைன்னா கல்லையும் சேர்த்து சாப்பிட முடியுமா :)
      திருந்தவும் இல்லே ,அதுக்காக வருந்தவும் இல்லே :)

      Delete
  9. பொங்கல்! அருமை

    ReplyDelete
    Replies
    1. முந்திரிப் பருப்புன்னு நினைச்சி கல்லைக் கடித்த பிறகும் .பொங்கல் அருமைன்னு சொல்ற உங்க பெருந்தன்மைக்கு நன்றி அய்யா :)

      Delete
  10. பெண் டைப்பிஸ்ட், நல்ல நகைச்சுவை

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவைக்கு சரி ,மேட்டரை சீரியஸா எடுத்துக்க முடியாது :)

      Delete
  11. கல் ,எழுதும்போது வரலாம் ,சாப்பிடும் போது வந்தால் ரசிக்க முடியுமா :)

    ReplyDelete
  12. பெண்கள் மனதில் ரகசியம் தங்காதா...!!
    ஐயோ என் காதலை அவளிடம்
    ரகசியமாதானே சொன்னேன்....

    ReplyDelete
    Replies
    1. நீங்க மட்டுமில்லை ,பலரும் 'ரகசியமா' சொல்லி இருக்காங்களாமே :)

      Delete