Showing posts with label 'சிரி'கவிதை. Show all posts
Showing posts with label 'சிரி'கவிதை. Show all posts

2 September 2013

கொசுக்களும் செய்யுமோ இரத்த தானம் ?

கொசுக்கடியில் இருந்து மீள 
காசிருந்தால் ஆயிரம் வழிகள்..
 அடிக்க மனமுமின்றி 
ஒழிக்க பணமுமின்றி அன்புகாட்டும் ஏழை ஜனங்களுக்கு... 
விசுவாசமாய் உறிஞ்சுவதற்கு பதிலாய் இரத்ததானம் செய்யுமோ கொசு ?

1 September 2013

பறவைகள் மட்டுமல்ல நண்பர்களும் பல விதம்தான் !

நண்பர்கள் பலவிதம்...
அவசரக் குடுக்கைகளாய் சிலபேர் 
நிதானமாய் சில பேர் ...
எல்லோரையும் அமில ஆராய்ச்சி செய்ததன் முடிவு ...
வலி சுமந்தவர்கள்  நிதானத்திற்கு வந்திருக்கிறார்கள் ! 
[ஒரு சந்தேகம் ...அவசரக் குடுக்கைன்னு ஏன் சொல்றாங்க ?தெரிந்தவர்கள் சொல்லலாமே !]

30 August 2013

இப்படி கேட்கும் புருஷனின் மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் !

அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
அர்த்தம் இருக்கணும் ...
'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !

29 August 2013

அதுக்குத்தானா இந்த கொண்டாட்டம் ?

அமாவாசை வந்தாலே காக்கைகளுக்கு கொண்டாட்டமாய்  இருக்கும் ...
தானும் கருப்பு அமாவாசையும் கருப்பு என்பதால் அல்ல !
எச்சில் கையால் காக்கையை விரட்டாதவன் கூட ...
அன்று மட்டும் முன்னோர்களை நினைத்து காக்கைக்கு முதல் படையல் வைப்பதால் !

28 August 2013

திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள் !

துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள்சொன்னால் ...
மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !

27 August 2013

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் ?

தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
பொய்என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?


26 August 2013

தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா ?

தாஜ்மகாலை ...
அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை சின்னமாய்தான் என் கண்ணுக்கு படுகிறது ...
பதினான்கு  முறை பிரசவித்து 
முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் படுகிறது !

25 August 2013

சினிமா மோகம்தான் இந்த பாடு படுத்துது !

சாத்தானின் சமையல் அறையை  ...
கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம் 
ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே ! 

24 August 2013

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,இதனால் தானே?

வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
காரணம் என்னவென்றால் ...
தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT !  
                                                                                                                  

23 August 2013

மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் !

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
சில வீடுகளில் கணவன்மார்களுக்கு ருசியான சாப்பாடு ...
சில வீடுகளில் கணவன்மார்களின் கூப்பாடு ...
எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின்'கை'ங்கர்யத்தால் !

21 August 2013

நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் !

கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும் 
மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
அது அடைய வேண்டிய உயரத்தை 
வெங்காயம் தொட்டுவிட்டதாலா ?


20 August 2013

டாட்டா .பிர்லா பொறந்ததும் 'லேபர் 'ரூமில்தான் !

லேபர் ரூமிலே பிறந்தாலும் கூட ...
சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும் 
அவரவர் கையிலேதான் இருக்கிறது !

19 August 2013

தன் குறையை மறைக்கும் மனிதன் !

பால் குடிப்பது பூனையின் இயல்பு ...
சந்தேகப் படுவது மனிதனின் இயல்பு ... 
'இந்த பூனையும் பால் குடிக்குமா 'என்று கேட்பது
எந்த வகையில் நியாயம் ?

18 August 2013

காசு பணம் துட்டு மணி இருந்தாதான் மதிப்பு !

சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
தரித்திர நாராயணன்களும் உண்டு !

17 August 2013

'குடி'மகன்களுக்குப் பிடித்த ஆத்திச்சூடி !

அரசுப் பேருந்துகளில் திருக்குறளை 
எழுதியிருப்பதைப் போல ...
டாஸ்மாக் கடைகளில் ஊக்க'மது 'கைவிடேல் என எழுதப்பட்டாலும் வியப்பதற்கில்லை !

16 August 2013

கணவர்கள் அடுத்த பிறவியில் ஆக நினைப்பது !

பலகோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் எனக்குப் பொறாமை இல்லை ...
என் மனைவியை பயமுறுத்தும் வித்தையைக் கற்று வைத்திருக்கிறதே !

15 August 2013

'சிரி'கவிதை!வீட்டில் சுதந்திரம் உள்ளதா உங்களுக்கு ?

எறும்புகளே ...
எந்தக் கோட்டையில் கொடியேற்ற 
 நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?
பாதுகாப்பாய் எப்படி வாழ்வதென்று 
உங்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொள்ள நினைக்கிறோம் ...
பிரதமரே பாதுகாப்பாய் குண்டு துளைக்காத கண்ணாடி பின்னால் இருந்து எங்களை வாழ்த்துவதால் !


என் நம்பிக்கை ...
இது ஜோக்காளியின் 6௦௦வது பதிவு !இதனால் 
இன்றைய சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க மாட்டீர்கள்  என்று நம்புகிறேன் ! 


13 August 2013

'சிரி'கவிதை! I LOVE YOU...சுருக்கமாய் சொல்லலாமா ?

பல பேரின் காதல் ...கல்யாணத்தில் முடியாமல் இழு இழு என்று 
இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...
முதலில் காதலை I L U [இழு ]என்று SMSசெய்ததாலா ?

12 August 2013

'சிரி'கவிதை!இந்த இசையை ரசிக்க முடியலே !

 விடாமல் அடிக்கும் 'டய்ங் டய்ங்' மணி சத்தமும் ...
இடை இடையே சங்கொலி சத்தமும் ...
'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !

11 August 2013

'சிரி'கவிதை!வசதிகள் போக்குமா உடலின் அசதியை ?

மாவு ஆட்ட  சோம்பல் ...கிரைண்டர் வந்தது 
கல்லைக்  கழுவ சோம்பல் ...டில்டிங் வந்தது 
வழித்து எடுக்க சோம்பல் ...பாக்கெட் மாவு வந்தது 
தோசை வார்க்க சோம்பல் ...பிரிட்ஜில் மாவு 
டாக்டரிடம் போக சோம்பல் ...எழுந்து நிற்க முடியாமல் !