25 November 2012

'சிரி 'கவிதை!! ரோஜாக்கள் ஜாக்கிரதை !

'சிரி 'கவிதை !

ஜாக்கிரதை !

ரோஜாவை முத்தமிடாதே ....
உன் தாடி முள் குத்தி விடலாம் !

தின 'சிரி 'ஜோக்!!!அனுஷ்கா தான் கொடுப்பதும் ,கெடுப்பதும்!


                                


                                                                                         
''யோகா  செஞ்சா  நல்லா  தூக்கம்  வரும்னு  சொல்றாங்களே ,உண்மையா?''

''உண்மைதான்!  யோகா டீச்சரா  இருந்த அனுஷ்கா தூக்கத்தை  கொடுத்தாங்க !ஆனா இப்போ 
நடிகை ஆகி ரசிகர்கள்   தூக்கத்தை  கெடுக்கிறாங்களே!
                                                                                            


                                                                                
                                                                               

24 November 2012

'சிரி'கவிதை ! புதிரான கவிதையா அவள்?


பாரசீக கவிதையாய்...
 என் விழிகளில் தெரிகிறாய் நீ !
உன் விழிகள் மொழிப் பெயர்த்தால்  அல்லவா 
கவிதை எனக்கு  புரியும் ?

தின 'சிரி ' ஜோக்!!டெங்கு வரும்ன்னு டங்கு டங்குன்னு குதிக்கிற அப்பா!


''டாக்டர்  நீங்கதான் எங்க அப்பாவுக்கு  அட்வைஸ் பண்ணனும்!''

''ஏன்? ''

''நெட்டையே பார்த்துக்கிட்டு இருந்தா கம்ப்யூட்டர் வைரஸ் மூலமா  எனக்கு 

டெங்கு காய்ச்சல் வந்திடும்ன்னு பயப்படுறாரே!''




23 November 2012

'சிரி'கவிதை !நியாயமான ஆசை!


ஐம்புலனும்  அடங்கும்முன் 
ஆம்புலன்சில் ஏறும் நிலை வேண்டாம்!