21 March 2016

இந்த கருவைக் கலைக்க பெண்களே அஞ்சுவதில்லை :)

அதிசயப் பிரசவம் :)
          ''என்னடி சொல்றே ?உனக்கு அதிசய இரட்டைக் குழந்தை பிறந்ததா  ?''
           ''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து அடுத்த குழந்தைப் பிறந்தானே !''

இந்த கருவைக் கலைக்க பெண்களே அஞ்சுவதில்லை :)            
            ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா ,என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
           ''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

பருப்பு வேகுறதுக்கே ஒரு சிலிண்டர் வேணும் :)
       ''ரேசன்லே கிடைக்கிற  துவரம் பருப்பை ,துயரம் பருப்புன்னுசொல்றீங்களே ,ஏன் ?''
        ''லேசுலே வேக மாட்டேங்குதே !''

கவலை மறக்க கோவிலுக்குப் போனா ....:)
கோவிலில் உள்ளே  நுழையும்வரை 
ஆயிரம் ஆயிரம் கவலை ...
நுழைந்தபின் ஒரே ஒரு கவலை ..
வெளியே விட்ட செருப்பு இருக்குமா ?'

17 comments:

  1. 01. இது என்ன கணக்கு ?
    02. நல்ல குடும்பம்
    03. இது புருசன் சொல்றாரு.....
    04. நடைமுறை உண்மை இதுக்கு வீட்டுக்குள்ளேயே வேண்டலாமே....

    ReplyDelete
    Replies
    1. புரியாமல்தான் மகப்பேறு மருத்துவர் 'மெடிக்கல் மிராக்கில்'என்று சொன்னாரே :)
      முட்டைப் பொரியல் சாப்பிட்டால் நல்ல குடும்பமா :)
      சொல்ற துணிச்சல் இருக்கா :)
      கோவிலுக்கு போக முடியலேங்கிற கவலையும் சேர்ந்திடுமே :)

      Delete
  2. ‘Too late...’-ங்கிறது இது தானோ...?

    பையன உன்னை மாதிரியே கூமுட்டையா வளர்த்திடாத... சொல்லிட்டேன்...!

    அப்படி இல்லேன்ன... நீ என்ன பருப்பான்னு கேப்பீங்களா...?

    கடவுளே...! உன்னோட நகைய காப்பத்த முடியலனாலும் பரவாயில்லை... என்னோட செருப்ப மட்டுமாவது காணம போகமா காப்பாத்த முடியுமா...?

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ஊரையே வியக்க வைத்த டூ லேட் :)

      அப்பன் ஜீனிலும் உள்ளதுதானே :)

      அந்த காரணப் பெயருக்கு இதான் அடிப்படையா :)

      மனிதனே ! என்னையே கடத்திகிட்டு போய் மானத்தை வாங்காதே :)

      Delete
  3. ரசித்தேன் நண்பரே
    தம ’+1

    ReplyDelete
    Replies
    1. நமக்குள் உள்ள ஒற்றுமை ...உங்களுக்கும் எனக்கும் , இந்த செருப்புப் பிரச்னை இல்லை :)

      Delete
  4. ரசித்தேன் நண்பரே!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. முட்டைப் பொரியல் அருமைதானே :)

      Delete
  5. துயரம் பருப்பை ரசிக்க முடியுதா :)

    ReplyDelete
  6. வணக்கம்
    ஜி

    முட்டை நகைச்சுவை மிக அருமை பல தடவை இரசித்து இரசித்து படித்தேன் வாழ்த்துக்கள் ஜி.. வேலையின் காரணமாக வரமுடியாமல் போயிட்டு வலைப்பக்கம் இனி தொடரலாம்.ஜி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என்ன இருந்தாலும் முட்டை சுவையே தனிதானே :)
      உங்களை வரவேற்க ஜோக்காளி தயாராய் இருக்கிறான் :)

      Delete
  7. ரசித்தோம் ஜி...முதல் புரியவில்லை ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. போக போக புரியும் :)

      Delete
  8. துவரம் பருப்பு விலையை நினைத்தாலே துயரம் பருப்பாய்த்தான் மாறும்

    ReplyDelete
    Replies
    1. தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்கிற பட்டுக்கோட்டையார் பாடல் நினைவுக்கு வருகிறது :)

      Delete
  9. ஆமா...எப்படி நம்புவான்....?????

    ReplyDelete
    Replies
    1. 'அவனை' நம்பினால் ,செருப்பு கூட திரும்பக் கிடைக்காதா :)

      Delete