26 March 2016

கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாமல் போகுமா :)

சாம்பிள்  டீ  குடித்ததும் ரோஷம்  வந்திடுச்சோ :)        
                ''வேலைக்காரி ,தன் வீட்டில் இருந்து போட்டுக்  கொண்டு வந்த டீயை ஆசையா   குடிச்சிட்டு ,இனிமேல் வேலைக்கு வர வேண்டாம்னு  ஏன் சொன்னே ?''
              '' இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் எனக்கு பழக்கம்னு சொல்றாளே !''
இது தோஷ நிவர்த்தி மாதிரி தெரியலே :)           
          ''அந்த ஜோதிடர் குஷ்பு ரசிகர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
          ''தோஷ நிவர்த்திக்கு குஷ்பு கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யணும்னு சொல்றாரே !''
கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாமல் போகுமா :)
          ''என் கிளாஸ்  டீச்சரை  வந்து பார்த்ததில் இருந்து ,அப்பா என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார் ,ஏன்னு  கேளும்மா !''
           ''உன் கிளாஸ்  டீச்சரை நீ மிஸ் ன்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டார் போலிருக்கு  ,என்னன்னு கேட்கிறேன் !''
கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் :)
            ''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
           ''சுயமரியாதை இல்லாம நீங்க இருக்கும் நாள் வரைக்கும் !''
கற்புக் கரசிகளும் ,ஏகபத்தினி விரதன்களும் :)
ஆண்களே இல்லைஎன்றால் எல்லா பெண்களுமே 
கற்புக்கரசிகளாய் திகழ்வார்கள் ...
                           இது ஒரு  சம்ஸ்கிருதப் பழமொழி !
உலகில் ஒரே ஒரு பெண்தான் என்றால் எல்லா ஆண்களுமே 
ஏகபத்தினி விரதன்களாய் திகழ்வார்கள் ...
                        இது ஒரு 'ஜொள்ளனின் 'புதுமொழி !

13 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஒனக்கு காது கேக்காதுன்னு... இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான்டி... எனக்கு பழக்கம்னு சொன்னாளோ என்னமோ...?!

    கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சுன்னு சொல்லனுமுல்ல...!

    உன் கிளாஸ் டீச்சரை உங்க அம்மானால நான் மிஸ் பண்ணிட்டேன்னு அடிக்கிறாரும்மா...!


    ‘மான மரியாதை மட்டும் இல்லாக்கழகம்’ பெயர் வைத்து முன்னேற வழிய பாக்க வேண்டியதுதானே...!

    ஏகபத்தினியா... ஏ(க்)கத்தும் பத்தினியா...?! தர்மபத்தினி எங்கிருந்தாலும் வாழ்க...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. வேலைதான் போனது ,காது கேட்காதுன்னு சொல்லியிருந்தால் உயிரே போயிருக்கும் :)

      சொன்னா போதாது ,அபிநயம் பிடிச்சுக் காட்டணும்:)

      வரட்டும் அந்த ஆள் ,அடி பின்னிடுறேன் :)

      எப்படியோ முன்னேறினால் சரி :)

      ஏகப் பட்ட பேருக்கு ஒரே பத்தினி என்றால் ,புருசன்காரங்க பட்டினிதான் :)

      Delete
  3. பழமொழி ஒன்று
    புதுமொழி ஒன்று
    சொல்லும் மொழி சரி
    நம்மாளுங்க
    எந்த மொழியில படிப்பாங்க...
    அதைத் தான் அண்ணே
    கொஞ்சம் எண்ணிப் பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஜொள் மொழியில்தான் :)

      Delete
  4. 01. இது முதலுக்கு மோசமாச்சே..
    02. அந்தக்கோயிலை இன்னும் இடிக்கலையா ?
    03. இவளுக்கு புரிஞ்சுடுச்சு
    04. அப்படின்னா... சாகும்வரை....
    05. அந்த ஒருத்தி உயிரோட இருந்தால்தானே... ?

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் ஆகி போச்சு :)
      கட்டவே இல்லையே ,எப்படி இடிக்கிறது :)
      புரியாட்டி மனைவியா :)
      உண்ணாவிரதம் இல்லை ,முட்டாள் விரதம் :)
      ஏன், இருக்க விட மாட்டார்களா :)

      Delete
  5. Replies
    1. LAUGH மழையில் நனைத்து COUGH பிடிக்காமல் போனால் சரிதான் :)

      Delete
  6. Replies
    1. கொ மு க வைத்தானே :)

      Delete
  7. எனக்குப் பிடித்த டீயிலே வில்லங்கமா>?

    ReplyDelete
    Replies
    1. நீங்க தாராளமா குடிங்க ,வில்லங்கம் எல்லாம் வேலைக்காரிக்கு அந்த அம்மா தரும் டீயில்தான் :)

      Delete