4 March 2016

புருஷன் சாப்ட்வேர் என்ஜீனியரா என்ன :)

 பையன் கேட்டதில் தப்பிருக்கா :)
                ''மாடுகளுக்கு  ஆடத் தெரியுமா ,பாடத் தெரியுமான்னு ஏண்டா கேட்கிறே ?''
                ''ஆடறமாட்டை ஆடிக் கறக்கணும் ,பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்னு  சொல்றாங்களே !''

பெருமையா சொல்லிக்க புருஷன் சாப்ட்வேர் என்ஜீனியரா என்ன :) 
              ''புருஷன் பஸ்லே வேலைப் பார்க்கிறதா அவ பீற்றிக்கிறாளே ,
யூனிபார்ம் டிரஸ்ஸை அவர் போட்டுக்கிற மாதிரி தெரியலையே ?''
                    ''பிக்பாக்கெட் வேலைக்கு யூனிபார்ம் எதுக்கு ?''

மனைவியின் சமையலும் வெறுத்து போச்சா ?
           ''என்னங்க ,ஊற வச்சாலே சோறாகும் அரிசியை அசாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சு இருக்காங்களாமே ?''
          ''அப்படியே காய்கறியையும் கண்டு பிடிக்கச் சொல்லு !கண் காணாத இடத்துக்குப் போய் நானே சமைச்சு  சாப்பிட்டுக்கிறேன் !''

'டயாபெடிக் 'காரனின் மனநிலை :)
இரத்த சர்க்கரை அளவு கண்ட்ரோலில் 
இருப்பது தெரிந்ததும் ...
இனிப்பாக ஒரு கப் காபி சாப்பிடத் தோன்றும் !

16 comments:

  1. 01. கண்டிப்பாக ஓடத்தெரியும்
    02. அதானே அப்புறம் அடையாளம் கண்டு மொத்துறதுக்கா ?
    03. அவன் மனைவியின் கை லட்சணம் இப்படித்தானோ ?
    04. உண்மையான விடயம் ஜி

    ReplyDelete
    Replies
    1. இவனுக்கும் :)
      திருடனுக்கு ஏது அடையாளம்:)
      ஓங்க மட்டும்தான் அந்த கைக்கு தெரியும் போலிருக்கு :)
      இனிப்பாய் இருந்தால் விஷத்தைக் கூட குடிக்கத்தோணும்:)

      Delete
  2. தமிழ் மணம் இணைத்து விட்டாலும் தம்ஸ்-அப் வருவதில்லையே ஏன் ஜி ?

    ReplyDelete
    Replies
    1. தம வந்து, வாக்கும் போட்டு விட்டேனே.. இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு (எனக்கு) சட் சட்டென எல்லாத் தளங்களிலும் தம வாக்கு விழுகிறது!

      Delete
    2. தமிழ் மணத்தில் அப்போது சரியாக இணைந்திருக்காது,இரவு ஒரு மணிவாக்கில் சரியாக இருந்ததே :)

      ஸ்ரீராம்ஜி ,தமிழ்மணம்.. எப்போது எப்படி செயல்படும் என்று புரியவில்லை :)

      Delete
    3. பொறுமையுடன் காத்திருந்து வாக்களித்த கில்லர்ஜி அவர்களே ,நன்றி :)

      Delete
  3. பையன் கேட்ட கேள்வி... நல்ல கேள்வி... பையப்போயி... ராம(ர்)ராஜன்ட்ட கேட்டா ஒரு வேளை பதில் கிடைத்தாலும் கிடைக்கும்...!

    தொழில் நல்லா... பிக்கப்பாகட்டும்...! தேர்தல்ல நின்னா... இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டியதில்லையே...!

    ஊர வளைச்சு உழையில போடணுங்கிறத தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல இருக்கு...!

    சக்கரை இனிக்கிற சக்கரை... சக்கரை பந்தலில் தேன்மழை பொழியுது...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. அவரும் இப்போ ஆடித்தான் பார்க்கிறார் ,எதையும் கறந்த மாதிரி தெரியலையே :)

      தேர்தலில் நிற்க, இவனை விட பெரிய கொள்ளைக்காரர்களுக்கு கப்பம் வேண்டியிருக்கே :)

      அஸ்ஸாம் விஞ்ஞானிக்கு இந்த பழமொழி தெரிந்து இருக்காது :)

      சக்கரை இனிக்கிற சக்கரைதான் ,அதை தொடுமுன் வேணும் உடம்பு மேல் அக்கறை :)

      Delete
  4. இவர்கள் எல்லாம் மைசூர்ப் பாகில் மைசூரைத் தேடும் ஆள்களாக இருப்பார்கள்!

    ஹா... ஹா... ஹா.... லிமிட்டட் சர்வீஸ் போல!!

    பச்சையாகவே சாப்பிடும் காய்கறி எல்லாம் அல்ரெடி இருக்கே பாஸ்!

    கட்டுப்படுத்தப்படும் மனநிலையின் நிலை.

    ReplyDelete
    Replies
    1. டெல்லி அப்பளம்னா டெல்லியைத் தேடுவார்களோ :)

      பெரிய கொள்கைவீரன் ,பஸ்ஸிலே மட்டும்தான் கைவரிசையை காட்டுவார் :)

      இருக்கு ,எத்தனை பேர் சாப்பிடுறாங்க:)

      கட்டுப்பாட்டை மீறத்தான் செய்யுமோ:)

      Delete
  5. Replies
    1. இனிப்பாக ஒரு கப் காபி சாப்பிடத் தோன்றுவது ,உண்மைதானே :)

      Delete
  6. வெத்து பெருமைக்கு மட்டும் குறைச்சல் குறைமாட்டுதே..ஜீ

    ReplyDelete
    Replies
    1. தன் புருஷன் ஒரு பிக்பாக்கெட் என்று சொல்லிக்க மனைவி விரும்புவாளா:)

      Delete
  7. Replies
    1. கண் காணாத இடத்துக்குப் போய் நானே சமைச்சு சாப்பிட்டுக்கிறேன் என்று அவர் சொல்வதையும்தானே:)

      Delete