23 March 2016

பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்:)

இப்படியா பயந்து சாவது :)

             ''பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரிய வில்லையே ?''

              ''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''


குடும்ப 'குத்து விளக்கு 'இப்படி படுத்தலாமா :)
            '' உன் பெண்டாட்டியை , குடும்ப பாங்கான குத்து விளக்கு மாதிரி நினைச்சது தப்பா போச்சா .ஏண்டா ?''
                     ''அலாவுதீனின்  அற்புத விளக்கு கிடைச்சாலும் அவளை திருப்தி படுத்த முடியாது போலிருக்கே !''

தலை நகரிலும் தொடரும் தலைவரின் அந்தரங்க லீலைகள் :)
          ''நம்ம தலைவர் டெல்லிக்குப் போனாலும் அவர் லீலைகளை விடமாட்டாரா ,ஏன் ?''
           ''டெல்லி  VIA ஆக்ரா டிரெயின்லே போறோம் சரி ,டெல்லியில் வயாக்கிரா எங்கே கிடைக்கும்னு கேட்கிறாரே !''

ஆபீஸில் 'நீளும் 'கை ,வீட்டில் ...:)
          ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
           ''கை நீட்டுற வேலை எல்லாம்  ஆபீஸோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''

பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்:)
வர வேண்டிய பருவத்தில் 
வரவில்லை என்றால் ...கஷ்டம் !
வருவதும் மணநேரம் வரும் முன்பே 
வராவிட்டாலும் ...கஷ்டம் !
வந்துக் கொண்டே இருந்தாலும் 
தாய்மை அடைவதில் ...கஷ்டம் !
வருவது நிற்கவில்லையே என்று 
பிள்ளைப் பேறு முடிந்தும்...கஷ்டம் !
இஷ்டப் பட்டு கஷ்டப் படுவது ...
பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம் அல்லவா அது  ! 


6 comments:

  1. இது வேற சேனை! :)

    நீங்க கை நீட்டினா நானும் நீட்ட வேண்டியிருக்கும்னு சொல்லிட்டாங்களே! :)

    ReplyDelete
    Replies
    1. இந்த சேனை அரசருக்கு மட்டுமா பிடிக்கும் :)

      சொல்லாம செய்றவங்க பெரியவங்களாச்சே:)

      Delete
  2. என்ன நட்புறாவைத் நாடியா...? இதுக்குத்தான் புறாவெல்லாம் நிறைய வளர்க்க வேண்டாமென்று...! நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை...!

    அப்படின்னா... குத்து விளக்க நன்றாக குத்து...! அந்த விளக்கமாற எடு...! என்ன சத்தம் கேட்டாலும் யாரும் கதவத் திறக்கக்கூடாது...!

    நயகரா நீர்வீழ்ச்சியில நாசகாரத் தலைவரை தள்ளிவிட வேண்டியதுதானே...! இவருக்காக அந்த மும்தாஜ் ஒரு தாஜ்மகால் கட்ட வேண்டியதுதான்...!

    கை நீட்டுற வேலை எல்லாம் ஆபீஸோட வச்சுக்கங்கன்னு... என் கிட்டே வேணான்னு... படார்னு கை நீட்டிட்டா...! இருந்தாலும் அவளுக்கு இவ்வளவு கை நீளமா இருக்கக்கூடாது...!

    ஆளானாலும் ஆளு... இவ அழுத்தமான ஆளு... மிச்ச வெவரம் வேனும்மின்னா... மச்சானப்போயிக் கேளு...!

    த.ம. 3














    ReplyDelete
    Replies
    1. புறா ரோஸ்ட் என்வி ,அரசருக்கு பிடித்ததெல்லாம் சேனை ரோஸ்ட்தான் :)

      அப்படியே ஆகட்டும் :)

      வயாகிராவும் நயாகரா உள்ள நாட்டில் இருந்து வந்ததுதானே :)

      நீங்கதான் வீட்டிலே நீட்டக்கூடாது :)

      நமீதா மச்சான்ஸ் எல்லோரும் வந்து விவரத்தை சொல்லுங்கப்பா :)

      Delete
  3. 01. நல்லவேளை செணையோடு வருகிறார்னு சொல்லவில்லை.
    02. டாக்டர் மாத்ருபூதமும் போயிட்டாரே...
    03. போற வழியில் மெடிக்கல் ஷாப்பில் இறங்க வேண்டியதுதான்
    04. அதானே எல்லா இடத்திலும் எல்லாம் செல்லாது
    05. உண்மை ஜி

    ReplyDelete
    Replies
    1. தெரிந்து இருந்தால் வளைக்காப்பு நடத்தி இருப்பாரோ :)
      மாற்று மாத்ருபூதம் நாட்டிலே இல்லையா :)
      டெல்லிக்கு போக வேண்டாமா :)
      ஆபீசில் நீளும் வீட்டிலே தாழும் கையா :)
      அதுதான் பெண்மை ஜி :)

      Delete