22 March 2016

துணை (எழுத்து ) ரொம்ப முக்கியம்தான் :)

நன்றி மறவாத  டாக்டர் :)

         ''அந்த டாக்டர் ,அறையிலே  நிறைய பேர் போட்டோவை மாட்டி வச்சிருக்காரே ,யார் அவங்க  ?''

          ''டாக்டரிடம் காசும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவங்கதான் ! ''

                   
மின்சார மந்திரிக்கு பிடிச்ச பூச்சி :)
          ''நம்ம மின்சார மந்திரி அடிக்கடி தன்னோட பேச்சிலே மின்மினிப் பூச்சியை உதாரணம் காட்டுகிறாரே ,ஏன் ?''
           ''ஒரு பூச்சிக் கூட தன் தேவைக்கு வெளிச்சத்தை தானே உண்டாக்கிக் கொள்ளும்போது  ,மனுஷனாலே ஏன் முடியாதுன்னு மறைமுகமா கேட்கிறாரோ!''
துணை (எழுத்து )  ரொம்ப முக்கியம்தான்  :)
        ''பஸ்ஸை எடுக்க வர்ற என்கிட்டே  வேப்பிலைக் கொத்தை ஏன் கொடுக்கிறீங்க,மெக்கானிக்  ?''
         ''பிரேக் பிடித்தால் வண்டி முன்னால் 'பேய் 'நிற்கிறது என்று புகார் நோட்டிலே நீங்கதானே எழுதி இருந்தீங்க ,அதான் !''
டாஸ்மாக் 'தண்ணி'யை மறந்த கவிஞர் !
               ''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ,தண்ணீர் கரையில் முடிக்கிறோம்ன்னு எழுதின கவிஞர் ,நடுவிலே ஒரு வரியை விட்டுட்டார் !''
               ''எந்த வரியை ?'''
               ''தண்ணியில் தினமும் மிதக்கிறோங்கிறதை !''
இவனன்றோ பாரதியின் பேரன் :)
மரணபயம் வென்றவன் ...
எருமைக்குப் பதிலாய் 'YAMAHA 'வை 
எமனுக்கு பரிசளிப்பான் !

18 comments:

  1. வாழவைத்த தெய்வங்கள் இன்று வானம் சென்றதது ஏனோ...? டாக்டரை வாழ வைத்து உயிரைத் தியாகம் செய்தவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க...!

    ‘மின் மினிப் பூச்சிகள் தங்களது துணையை தேடிக்கொள்ள இரவுகளில் சில குறிப்பான இடங்களில் கூடி வித்தியாசமான மின்னல்களுடன் தங்களின் விருப்பத்தையும் இருப்பிடத்தையும் தெரிவித்து தங்களுக்குரிய துணையை தேடிக் கொள்கின்றனவாம்...இதற்காக மின்சார மந்திரி அடிக்கடி தன்னோட பேச்சிலே மின்மினிப் பூச்சியைக் குறிப்பிடுகிறாரோ...?

    பேய்க்கு ஒரு(க்)கால் இல்லைங்கிறத கண்டுபிடித்துச் சரிசெய்ய வேப்பிலை மரத்திடம் போய் வேப்பிலைக் கொத்தைக் கட்டிவந்த இந்த மெக்கானிக் வாழ்க வளமுடன்...!

    தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்... தண்ணியில் தினமும் மிதக்க எவ்வளவு நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது... சிந்தித்து தெளிவடைவோம்... ! இன்றுதான் உலகத் தண்ணீர் நாள்...!

    எமதர்மன் உயிரை எடுக்க.... எமனுக்குத் தர்மமாகக் கொடுத்ததுதான் எமகாவா...?!

    த.ம. 2











    ReplyDelete
    Replies
    1. செத்துப் போனவர்கள் எப்படி எங்கிருந்தாலும் வாழ்வார்கள் :)

      ஜோடியைத் தேடுவதுக்குதான் வெளிச்சமா ,அப்புறம் லைட் ஆப் எப்போது :)

      மெக்கானிக் இருப்பார் ,பிரேக் இல்லாத வண்டியைக் கொண்டு செல்லும் டிரைவர் இருப்பாரா :)

      ஆஹா ,என்ன பொருத்தம் ,இன்று உலக தண்ணீர் தினமா :)

      எருமை வாகனத்தில் அமர்ந்து வந்து உயிர் எடுக்க தாமதாகிறதே :)

      Delete
  2. இனி புகார் புத்தகத்தில் எழுதுவதைப்பற்றி யோசிப்பார்....

    ReplyDelete
    Replies
    1. எழுதாமல் ,எலுமிச்சம் பழம் வாங்கி வாகனத்தில் தொங்க விடுவாரா :)

      Delete
  3. காசும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவங்கதான் ! ''
    மின்மினிப் பூச்சி....
    ''தண்ணியில் தினமும் மிதக்கிறோங்கிறதை !''
    Yamaha..
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. மின்மினி வெளிச்சம் உங்களைக் கவர்ந்ததா :)

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. டெலிட் செய்து உங்கள் விருப்பத்தை நிறைவேறி விட்டேன் :)

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. ஆஹா சூப்பர் ஜி சூப்பர்.இரசித்தேன் ஐயா..மின்மினிப் பூச்சி உதாரணம் அருமை ஐயா.முடியாது என்பது முயலாதது மட்டுமே ஐயா.அருமை..

    ReplyDelete
    Replies
    1. நம் உடலைச் சுற்றி ஆரா என்று கண்ணுக்குப் புலப்படாத ஒரு கவச உடல் இருப்பதாக ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள் ,அது ஒளிர்வதாகவும் இருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும் :)

      Delete
  7. 01. நன்றி மறப்பது நன்றன்று
    02. இவரை கால்நடைத்துறைக்கு மாற்றலாம்
    03. துணையெழுத்து தலையெழுத்தை மாற்றிடுமோ...
    04. அவருக்கு தண்ணியடிக்கிற பழக்கம் இல்லையோ...
    05. இது எந்த வருட மோடல் ?

    ReplyDelete
    Replies
    1. அதுவும் டாக்டர் மறக்கவே கூடாது :)
      ஆளுக்கொரு விலையில்லா நடை வண்டியைக் கொடுப்பாரா :)
      பல பேரின் தலையெழுத்தை மாற்றும் :)
      இல்லாவிட்டால் சந்தோஷம்தான் :)
      வாங்கி கிப்ட் கொடுக்கப் போறீங்களா :)

      Delete
  8. வணக்கம்
    ஜி

    இரசித்தேன் மின்மினி பூச்சி எடுத்துக்காட்டு சிறப்பு...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அதிசயப் பூச்சிதானே இந்த மின்மினி :)

      Delete
  9. Replies
    1. பாரதியின் பேரன் யாரென்று உங்களுக்குத் தெரிந்து விட்டதா :)

      Delete