16 April 2017

'சர்பத் 'தால் சோம்பேறியான மனைவி :)

படித்ததில் இடித்தது :)
         '' வந்திருக்கிறக் கூட்டத்தைப் பார்த்தால் ,இறந்தவர் பெரிய ஆளாய் இருப்பார் போலிருக்கே ?''
         ''அட நீங்க வேற ! இலவச 'ஃவை ஃபை 'க்காக மயானத்துக்கு வந்திருக்கிற கூட்டமுங்க இது !''
           இடித்த செய்தி ...சுடுகாட்டில் இலவச 'வை - பை' வசதி; முதல்முறையாக அறிமுகம் !

'சர்பத் 'தால் சோம்பேறியான மனைவி :)
              ''என்னடா சொல்றே ,உன் பெண்டாட்டி படு சோம்பேறி ஆயிட்டாளா  ?''
             ''டீ ,காபியில் சீனிக்குப் பதிலா , சர்பத்தைக் கலக்க ஆரம்பித்து விட்டாளே !''
எப்படி வந்தது ,அவருக்கு இந்த  'துணி 'ச்சல்  :)
               ''எடைக் குறைவான சேலையை வாங்க வேண்டியதுதானே ?''
               ''நான் கட்டிக்கப் போறேன் ,மெஷின் துவைக்கப் போவுது ,உங்களுக்கென்ன ?''
              '' அதை காயப் போடுறது நான்தானே  !''

இருக்கும் போதுகூட மாமியார் மேல் இம்புட்டு பாசமில்லே :)
          ''என்னங்க ,அமாவாசை அதுவுமா ...ஜன்னல்லே காக்கா வந்து கரையுதுங்க,நெய்ச்சோறு கலந்து வைக்கட்டுமா ?!''
           ''ஏன் ?''
           ''கலரும் ,குரலும் உங்க அம்மாவை ஞாபகப்படுத்துதே ,அதான் !''

வழக்குச் செலவுக்கே ஒத்தி காசு சரியா போயிருக்குமே  :)
           ''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
           ''அதையேன் கேட்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுகிட்டே இருக்கார் !''

லஞ்சத்திற்கு தூக்குத் தண்டனை எப்போது :)
ஊரெங்கும் பணம் தரும் தானியங்கி எந்திரங்கள் ...
நம்மைச் சுற்றிலும் பணம் பிடுங்கும் மனித எந்திரங்கள் !

26 comments:

  1. மயானத்தில் எதற்கு இலவச வைஃபை!

    என்ன சுவையோ!

    நியாயமான ஆதங்கம்!

    பாசமான மருமகள்!

    வழக்கின் பெயர் ராசி!

    ஆம்!

    ReplyDelete
    Replies
    1. இடித்த செய்தியை கிளிக்கிப் படிக்கலையா ஜி :)

      டேஸ்ட் பண்ணிப் பாருங்க ,நீங்களும் இதையே செய்வீங்க :)

      கேட்டுக்கணுமா இல்லையா :)

      நெய்ச் சோறு வைக்கப் போறாங்களாமே:)

      அது ஒண்ணுதான் குறைச்சல் :)

      சொந்தக்காரனும் அப்படித்தான் இருக்கான் :)

      Delete
  2. Replies
    1. கணவனின் கஷ்டம் புரிந்ததா :)

      Delete
  3. Replies
    1. பணம் பிடுங்கும் மனித எந்திரங்களின் ஃபியூசை எப்படி பிடுங்கலாம் ,சொல்லுங்க ஜி :)

      Delete
  4. மயானத்தில பையை பக்கத்தில வைத்திக்கிட்டு ‘வை ஃபை’யை பார்த்திக்கிட்டு இருந்தேன்... பையை காணோம்...ஆவி வந்து அடிச்சிட்டு போயிருக்குமோ?!

    கூல்டி... கூல்டி...ன்னு இனி சொல்லமாட்டிங்கல்ல... அதுக்குத்தான் கூல் டீ...!

    காயப் போடுறதுக்குகூட வலிக்குதா... அடிச்சு தொங்கப் போட்டிடுவேன்... என்னப் பத்தித் தெரியுமுல்ல...!

    அது அண்டங்காக்கை... ஒங்க அம்மா மாதிரி... சோறு வை... பாவம்...திண்ணு கெட்ட குடும்பமாச்சே...!

    இப்ப பொண்டாடடி ஒத்து ஒத்துன்னு ஒத்தி எடுக்கிறா...!

    கொடுத்து வாங்குவதுதானே முறை...! எதுவும் முறை தவறக் கூடாதில்ல...!

    த.ம. 5


    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,ஸ்மார்ட் போனைப் பிடுங்கிக்காம போச்சே :)

      கூல் டீ கூலா இருக்க விடுமா ,டாய்லெட்டுக்கு ஓட விடுமா :)

      ஆளை விடு தாயி ...ஜீன்ஸ் பேண்ட்கூட வாங்கிக்கோ :)

      பிரியாணி வச்சிடாதே ,அது எனக்கே பிடிக்கலே :)

      ஒத்தி எடுத்தாலும் போற வலியா இது :)

      கொடுக்க முடியுது,வாங்க முடியலியே :)

      Delete
  5. மயானத்தில் wifi! இது எங்கே....

    ரசித்தேன்.

    த.ம. - ஆறாம் வாக்கிற்கு முயற்சி! சுற்றிக் கொண்டே இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நம்ம சிங்காரச் சென்னையில்தான் :)

      உங்கள் வாக்கு பலித்துவிட்டது ஜி :)

      Delete
  6. வழக்கில் இருக்கிறதா
    குடிக்கும் பானம்பெயர் என்ன
    காயப்போடும்போது கிழிந்து விட்டால்
    எனக்கு உங்க அம்மாவோ என்று தோன்றுகிறது , இவ்வளவு கரிசனம்பார்க்கும் போது
    ஒத்தி என்றால் அக்ரிமெண்டா
    எல்லோரையும் தூக்கில் போட முடியுமா

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு என்ன வழக்கு ?யார் போட்டது :)
      நன்னாரி சர்பத்தா இல்லையான்னு அந்த நாதாரி சொல்லாம போயிட்டானே :)
      ஒண்ணுக்கு ரெண்டா வாங்கித் தர வேண்டியிருக்குமே :)
      நிச்சயமா ,நெய்ச் சோறுன்னு சொல்லும்போதே நானும் சந்தேகப் பட்டேன் :)
      வாடகைக்குப் பதிலா மொத்தமா கொடுத்து போட்டுக்கும் அக்ரிமென்ட்தான் :)
      அதானே ,மெஜாரிட்டி லஞ்சமாகிப் போச்சே :)

      Delete
  7. '' அதை காயப் போடுறது நான்தானே !''//

    ஆண்களின் மானத்தை வாங்குகிறாரே?!

    ReplyDelete
    Replies
    1. அந்த வேலையும் செய்யலைன்னா ,அவர் காய வேண்டியதா போகுமே :)

      Delete
  8. Replies
    1. நன்று ,சுடுகாட்டில் இலவச 'வை - பை' வசதிதானே :)

      Delete
  9. உயிரோடிருப்போர் தண்ணிக்கு கஸ்டப்படுறாங்க.. மயானத்தில் இலவச வை ஃபை ஆ? வெளிநாட்டில் உள்ள உறவுகளுக்கு ஸ்கைப்ல்ல வீட்டியோக் காட்டவோ?.. எனக்கெதுக்கு ஊர்வம்பு... பத்தவது என்னோடது சொல்லி வைக்கிறேன்:).

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன ஊர் வம்பு ?வை ஃபை இருந்தா நல்லதுதானே :)

      Delete
  10. Replies
    1. பணம் பிடுங்கும் மனித எந்திரங்கள் என்பது okதானா :)

      Delete
  11. மயானத்திலுமா?

    ReplyDelete
    Replies
    1. அங்கேதானே முக்கியமா வேணும் :)

      Delete
  12. மயானத்தில் இலவச வைfi... ஹை ஜாலி....இறந்தவரோடு ஆவியோடு பேசலாமோ......
    பாவம் கணவன்....

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஆவி ,பேசியது போதும் ,சீக்கிரம் என்னை வந்து பாருங்கன்னு சொல்லிவிட்டால் என்ன செய்வது :)

      புருஷன் கஷ்டத்தைப் புரிஞ்சிக்காதவ நல்ல மனைவியா :)

      Delete
  13. நல்ல நக்கல் நகைச்சுவையும்...
    இரசித்தேன் சகோதரா....
    தொடருங்கள்
    தமிழ் மணம் - 13
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. தாமதமாய் வந்தாலும் ரசித்தமைக்கும் ,வாக்கு அளித்தமைக்கும் நன்றி :

      Delete