30 April 2017

உடனே 'செட்' ஆகணும்னு நினைக்கிறது தப்பா :)

            ''உங்க கணவரோட கல்லறையை , பூசினதும் செட் ஆகிற  சிமெண்ட்டால்  கட்டணும்னு சொல்றீங்களே ,ஏன் ?''
          ''கல்லறைக் காயும் முன்னாடியே  அடுத்த கல்யாணத்தைப் பண்ணிகிட்டானு யாரும் என்னைச்  சொல்லக் கூடாதில்லே  !''

சங்கீத சாம்ராட் இப்படிப் பாடலாமா :)            
              ''பைரவி ராகப் பாடலா இது ? கிணற்றுக்குள்ளிருந்து பாடுற மாதிரி இருக்கே !''
             ''ஒரு வேளை,பாதாள பைரவி ராகமா இருக்குமோ ?''

 ஓட வைக்கும் தொப்பைக்கு ஜே :)     
           ''அதோ.. அந்த  அறுவை மன்னனைக்  கண்டாலே  எல்லோரும்  ஓடுவார்கள் ,இப்போ அவரே ஒடுறாரே ,ஏன் ?''
           ''அதுக்குக் காரணம் ,அவரது தொப்பைதான் !''

கஞ்சப்பிசினாரிக்கு  ஏற்ற மனைவி:)
        ''மேடம் ,,நீங்க பற்பசையை வாங்கினால் கூட ஏன் பழைய சரக்கை மட்டுமே கேட்கிறீங்க ?''
        ''எதையுமே அதோட காலாவதி தேதி வரைக்கும்  பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் சொல்றாரே ...அதான் ,சீக்கிரம் காலி பண்ண இந்த ஐடியா !''

மழை அளவு குறைவு தரும் பாடம் :)
ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !

பிறந்த நாள்  வாழ்த்து சொல்லும் பூஜாருக்கு ரொம்பத்தான் சேட்டை ...

50 comments:

  1. Replies
    1. இவள்தான் நல்ல மனைவி

      Delete
    2. சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே...
      சந்தோசம் மனதில் பொயிங்குதேன்னு நேற்று முதலில் வந்து , ஆட்டம் போட்ட பூஜார் இன்னைக்கு எங்கேயோ பதுங்கின மாதிரி இருக்கே ,கில்லர்ஜி :)

      Delete
    3. இல்லைன்னா இவ்வளவு நல்லெண்ணம் வருமா :)

      Delete
    4. கோயிலுக்கு பொங்கல் வைக்க போயிட்டாங்களோ...

      Delete
    5. கையிலே பொங்கக் கரண்டி இருந்தாலும் மனஸ் பூரா இங்கேதான் இருக்கும் :)

      Delete
    6. ஹா ஹா ஹா.. என்னா ஒரு நினைப்பூ/கண்டுபிடிப்பூ:) நினைப்புத்தான் புழைப்பைக் கெடுக்குமாமே?:)..

      Delete
    7. சே சே சே நடுச்சாமம்:) 12 மணிக்கே, கில்லர்ஜி ஹப்பி பேர்த்டே பாட , பகவாஞியைக் கட் பண்ண விட்டிருக்கலாம் கேக்கை, தெரியாமல் போச்சே....
      பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
      பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்
      மறந்த நாள்( இலங்கை வானொலிப் பாடல்)....
      ( பிறந்தநாள் அதுவுமாவா செட் ஆகிற மாதிரி கொமெடி போடுவீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்)..
      Many more happy returns of the day....

      https://catmacros.files.wordpress.com/2009/06/youre_adopted_cat.jpg?w=720

      Delete
    8. youre_adopted அவ்வ்வ்...பூஜார் படத்தை அனைவரும் பார்க்கட்டும்னு பதிவிலே போட்டேன் !
      வித்தியாசமான வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
    9. ஹா ஹா ஹா எனக்கு எப்பவும் வித்தியாசமாக இருப்பதே பிடிக்கும்:) அதுக்காக லூஸ் எண்டு நினைச்சிடப்படா கர்ர்ர்ர்:)..

      Delete
    10. இந்த பூனைக்கிட்ட புடிச்ச விஷயமே உண்மையை ஒத்துக்குவாங்க :))

      Delete
    11. பூஷானந்தாவின் சிஷ்யை ரொம்ப நேர்மைன்னு கேள்விபட்டேன் :)

      Delete
  2. ஹா ஹா ஹா.. எங்கடா அதிராவைக் காணல்லியே... அவவால இன்று ஓடிவர முடியாமல் போச்சே:) என்றுதானே எல்லோரும் நினைக்க்கிறீங்க?:) அதுதான் இல்ல:).. கில்லர்ஜி பாவம் நேற்று 1ஸ்ட்டா அவரால வர முடியல்ல எனத்தான் இன்று விட்டுக்கொடுத்தேனாக்கும்:)... ஆஆஆஆஆ.. அதிராவுக்கு எவ்ளோஓஓஒ பெரிய மனசு:) என நீங்க சொல்வது கேட்குது:). இருக்கட்டும் இருக்கட்டும் நன்றி நன்றி:)... எனக்கு இந்தப் புகழ்ச்சி எல்லாம் புய்க்காது:).

    ReplyDelete
    Replies
    1. கீழே விழுந்தாலும் மூக்குல அடிபடலைனு சொல்றீங்களே...

      Delete
    2. பகவான் ஜீ ஓடிவாங்கோ.. கில்லர் ஜீ என்னமோ சொல்றார் என்ன ஏதென தீர விசாரியுங்கோ?:) நான் எப்போ விழுந்தேன்?:) ஹீல்ஸ் கூட போடுவதில்லையே நான்:) பிறகெப்பூடி?:).

      Delete
    3. விடுங்கோ ,பூஜாரின் மீசையில் மண் ஒட்டவில்லை என்றா கில்லர்ஜி சொன்னார் :)

      Delete
  3. பகவான் ஜீ.. உங்க ஊரில மழை கொட்டுதா இப்போ?:)

    ReplyDelete
    Replies
    1. இன்று எல்லோரும் வோட் பண்ணி பகவான் ஜி யை டமில் மண மகுடத்தில் ஏத்திடுவோம் வாங்கோ பிளீஸ்.... பிறந்தநாள் கிவ்ட்:).

      Delete
    2. வாழ்த்து மழைதான் இன்று பொழிந்தது ,உங்க கிப்ட்க்கு நன்றி :)

      Delete
  4. ....பாதாள பைரவி ராகம் அருமையா இருக்குமே! எப்படித்தான் ஒவ்வொரு நாளும் புது ஜோக் கிடைக்குமோ உங்களுக்கு!
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. கல்யாண சமையல் சாதம் சாப்பிட்டதால் ...இல்லை இல்லை ...கேட்டதால் வந்த மொக்கை இது :)

      Delete
  5. எல்லாமே அருமை
    குறிப்பாக"பாதாள பைரவி "
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. எத்தனைக் காலம் ஆனாலும் பாதாள பைரவியை மறக்க முடியுமா ஜி :)

      Delete
  6. பாதாள பைரவி ஜோக் மிக ரசித்தேன்.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பகவான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. அடடா சகோ ஸ்ரீராமுக்கு தெரிஞ்சிருக்கே... சாமத்தில வரும் நமக்கு தெரியாமல் போச்சே....

      Delete
    2. பிறந்த நாளை நாம மறந்தாலும் fb மறக்காமல் சாமத்திலே உசுப்பி சொல்லிடிச்சே :)
      நன்றி ஸ்ரீராம் ஜி :)

      Delete
  7. Replies
    1. எல்லோரும் நினைத்துக் 'கொல்'வதையும்தானே:)

      Delete
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,அடுத்த பிறந்தநாளின் போது நானும் பணியில் இருந்து விடுதலையாகி இருப்பேன் :)

      Delete
    2. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் விழுவதை எல்லாம் பொறுக்குவதுதான் என் வேலை:).. இங்கின ஒரு விசயம் பொறுக்கிட்டனே:)..

      Delete
    3. மனதால் நான் வாலிபன்தான் ,வயதைப் பொறுக்கிட்டால் எனக்கு கவலையில்லே :)

      Delete
  9. கொலையும் செய்யும் படிதாண்டா ஏக பத்தினி...!

    பணம் பாதாளம் மட்டும் பாயுமுல்ல...!

    தொப்பை... தொப்பி... எல்லாமே பிரச்சனைதான்...!

    ஒங்க பேரு கலாவதிதானே...!

    மழைதான் பொய்த்து விட்டதே... ஊரிலே ஒரு நல்லவர் கூட இல்லையோ...?!

    த.ம. ஆறு மனமே ஆறு...ஆறு போல் வாழ்க! ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்க! பிறந்த நாள் வாழ்த்துகள்!


    ReplyDelete
    Replies
    1. கொலை செய்யும் அளவுக்கு அவர் என்ன செய்தாரோ ?செய்யாமல் விட்டாரோ :)

      பணம் ஆகாயம் வரைக்கும் கூட தாவும் :)

      பிரச்சினை இல்லை தொல்லை :)

      எனக்கு ஒண்ணும் கால் ஓடியவில்லையே :)

      இனிமேலும் வரலைன்னா அப்படித்தான் :)

      நல்லவேளை ,முடியில்லாமல் வாழ்கன்னு சொல்லலே ,நன்றி :)

      Delete
  10. பாதாள பைரவியை மிகவும் ரசித்தோம்...ஜி..தொப்பையையும்....

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..ஜி

    ReplyDelete
    Replies
    1. அது பெரிய LP ரெக்கார்ட் ஆச்சே ,பொறுமையாய் ரசிக்க முடிந்ததா :)

      நன்றி ஜி :)

      Delete
  11. வணக்கம்.

    கணவருக்கு காலாவதித் தேதியேதும் உண்டா?:)

    தம நுழைய 7

    ReplyDelete
    Replies
    1. செயல்பாடு இருக்கும்வரை :)

      Delete
  12. மனைவியின்கல்லறை என்பதற்கு பதில் கணவனின் கல்லறை என்று வந்து விட்டதோ. பொதுவாக இந்தமாதிரி அவசரமான மணங்களை ஆண்களே செய்கிறார்கள்
    சப்தம் குறைந்தால் பாதாள பைரவி ஆகுமோ
    அவர் காவல் துறையைச் சேர்ந்தவரோ
    மனைவியின் பெயர் காலாவதி என்று சொல்ல வந்தீர்களோ
    இந்த முறை நான் சென்னை சென்றிருந்தபோதுமழை வரவில்லையே

    ReplyDelete
    Replies
    1. நிஜத்தை சொன்னால் அது சிரிப்பாகாதே :)
      கூடினால் தாராள பைரவி எனலாமோ :)
      அப்படித்தான் தெரிகிறது :)
      பொருத்தமான பெயர்தான் :)
      அ:)துக்கு காரணம் நீங்களா

      Delete
  13. Replies
    1. தரமான சிமிண்ட்டுமா:)

      Delete
  14. யார் சொன்னது தப்பு என்று....

    ReplyDelete
    Replies
    1. இந்த மட்டுமாவது கணவன் மேல் மரியாதை இருக்கேன்னு சந்தோசப் படணும் :)

      Delete
  15. பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்க தோழியின் வாழ்த்தைப் பார்த்தீங்களா :)
      நன்றி :)

      Delete
  16. அனைத்தும் ரசித்தேன்.

    பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. பாதாள பைரவி ராகப் பாடலை நீங்க கேட்டு இருக்கீங்களா ஜி :)
      நன்றி :)

      Delete
  17. Replies
    1. வழக்கமா தர்ற ஃகிப்ட் கூட இன்னைக்கு இல்லையா ஜி :)

      Delete