21 April 2017

நல்லவேளை ,தாலி கட்டும் முன்பே தெரிந்தது :)

 படித்ததில் இடித்தது :)
                  ''டாஸ்மாக் கடைகளைத் திறக்க மக்கள்  எதிர்ப்பு தெரிவிப்பதாலும் ,குடிநீர்  கிடைக்காமல் வாட்டர் லாரிகள்  ஓடாமல் நிற்பதாலும் ...அரசு போர்க்கால அடிப்படையில் புதிய திட்டம் போட்டிருக்கா ,எப்படி ?''
                  ''அந்த லாரிகள் மூலமா  ஒயின் ,பிராந்தி ,பீர் ,ரம் சப்ளை செய்யும் 'நடமாடும் டாஸ்மாக்  கடை '  திறக்கப் போகிறார்களாம் !''
   இடித்த செய்தி >>>>மதுக்கடையைச் சுற்றி 6 அடி ஆழத்தில் அகழி வெட்டிய மக்கள்!

நல்லவேளை ,தாலி கட்டும் முன்பே தெரிந்தது :)         
             ''காதலனை  ஏன் கை விட்டுட்டே ?''
             ''ரெஜிஸ்டர் ஆபீஸ் அல்லது கோவில் ..இதில்  எங்கே திருமணம் செய்துகிட்டா செலவு மிச்சமாகும்னு கேட்கிறாரே !''
                                                                      
கஸ்டமரை  கஷ்டப் படுத்தக் கூடாது தானே  :)
            ''ஹலோ ,கஸ்டமர் கால் சென்டருக்கு கால் பண்ணிட்டு ...எனக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு ஏன் கேட்குறீங்க ?''
            ''எவ்வளவு திட்டினாலும் சிரிச்சுகிட்டே பதில் சொல்றீங்களே ,உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  !''    
       
சாப்ட்வேர் டீம் லீடர் ,இப்படி வேலை வாங்கலாமா :)
           ''காலையிலே , தலைமுடி நல்லாத் தானே  இருந்தது ,சாயந்திரம் வேலை முடிந்து ,வழுக்கைத் தலையனா  வர்றீயே ,ஏன் ?''
           ''எங்க டீம் லீடர் ,நாலுநாள் வேலையை  இன்னைக்கே  'கையோட முடி'க்கணும்னு  'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாரே !''
108டிகிரி வெயில் இப்படி கேட்க வைக்குதோ :)
         ''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?''
         ''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்னு கேட்கிறாரே !''

நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது :)
ஒரே உறையில் இரண்டு கத்தி ...
என யாராவது சொன்னால் ...
மாமியார் மருமகள் உறவு
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை !

28 comments:

  1. மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊ:) ஆனா வோட்ட்ல 2 கண்டூஊஊஊ:(..
    நேற்று போல இன்று ஏமாறவில்லைதானே அதிரா :)

    ReplyDelete
    Replies
    1. me first? Ok ,lot of thanks:)

      Delete
    2. நோஓஓஓஒ நான் ஏமாறவில்லை ஸ்ரெடியாத்தான் இருக்கிறேன்ன்.. கில்லர் ஜீ தான் ஏமாந்திட்டார்ர்:) ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஹா:)

      Delete
  2. உங்களை முதல்வர் ஆக்கினால் இப்படித்தான் திட்டம் தீட்டுவீர்களா ஜி ?

    ReplyDelete
    Replies
    1. தமிழக அரசின் கடன் ஐந்து லட்சம் கோடியாம் ,டாஸ்மாக் மூலம் மாதம் ஐந்து கோடி இழப்பாம் ,கஜானாவை(?)நிரப்ப எது வேண்டுமானாலும் செய்வார்கள் :)

      Delete
  3. நடமாடும் டாஸ்மாக் - நீங்களேஐடியா கொடுப்பீங்க போலிருக்கே...

    அவரை அல்லவா தேடி மணமுடிக்க வேண்டும்!

    எவ்வளவு பேருக்கு பதில் சொல்வார் அந்த மகராசி!

    "முடி"ச்சிட்டாரா!!

    நவீன மாஸ்டர்!

    ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. 'குடி'மகன்களுக்கு ஏதோ என்னால் முடிந்த உதவி :)

      நல்லாவே வாழ வைப்பார் :)

      வீட்டுக்காரருக்கு பதில் சொல்வாரா :)

      முடியலேன்னு சொல்ல முடியலையே :)

      டீ கேட்டா என்ன கேட்டாரோ :)

      ஒரே உறை என்றாலும் உள்ளே தடுப்பு இருக்குமோ :)

      Delete
  4. Replies
    1. மதுக் கடையைச் சுற்றி அகழி வெட்டுற காலமா ஆகிப் போனதையும்தானே :)

      Delete
  5. ''ரெஜிஸ்டர் ஆபீஸ் அல்லது கோவில் ..இதில் எங்கே திருமணம் செய்துகிட்டா செலவு மிச்சமாகும்னு கேட்கிறாரே !''//

    கஞ்சப்பயலுக்குக் காதல் எதுக்கு?

    ReplyDelete
    Replies
    1. காதலி ,கல்யாணமும் எதுக்குன்னு கேட்கிறாளே :)

      Delete
  6. Replies
    1. வழுக்கைத் தலைகளும் அருமைதானா :)

      Delete
  7. கஸ்டமர் கேர் ஜோக் சூப்பர்ண்ணே

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,நீங்கதான் த ம வாக்கை கேர் பண்ணிக்கமாட்டேங்கிறீங்க:)

      Delete
  8. நல்லவேளை காதலன் தப்பித்தான்....

    ReplyDelete
    Replies
    1. இருவருமே தப்பித்தார்கள் ,கட்டிக்கிட்டு mallu கட்டாமல் :)

      Delete
  9. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கத்தான் மகத்தான திட்டம் கண்டுபிடிச்சாச்சே... தெர்மகோல் கொண்டு அணையின் நீரை மூடி மறைக்கத் திட்டம் போட்டாச்சே...!

    சிக்கனக்காரனுக்கு புத்தி மட்டுன்னு நெனக்கக் கூடாதில்ல...!

    சிறு முனையில் பட்ட புண்னை சிரிப்பாலேதானே ஆற்றனும்...!

    இதுக்குத்தான் ‘விக்’ வைக்கக்கூடாதிங்கிறது...!

    டிகிரி படித்தவன் டீ ஆத்துறாங்கிறது சரியாப் போச்சே...!

    ஏன் கத்துறீங்க... பாலுக்கு உறை ஊத்தியாச்சில்ல...!

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. தெர்மகோல் திட்டச்செல்வு பத்துலட்சமாம் ,வேஸ்ட்டா போச்சே :)

      ஓடிப் போய் கல்யாணம்னா ஒத்துக்கலாம் :)

      உள்ளுக்குள்ளே அழாம இருந்தா சரி :)

      விக் வைக்கப் போய் சரியா போச்சு ,இல்லைன்னா :)

      படிப்பு இந்த வேலைக்கு ஒத்து வராதோ :)

      ஜில்லுன்னு நாளை தயிர் சாதம் சாப்பிடலாமா :)

      Delete
  10. போங்கோ இண்டைக்கு மீ தான் லாஸ்ட்டூஊஊ:) ஆனா நாளைக்கு மீ த 1ஸ்ட்டே தான்.. வெயிட் அண்ட் சீஈஈஈ:)..

    //நல்லவேளை ,தாலி கட்டும் முன்பே தெரிந்தது :)//

    ஆஆஆஆ தாலி கட்டும் முன்பே தெரிஞ்சிடுச்சாஆஆஆஆ?:).. ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. கவலையை விடுங்க ,அதிரா ...உங்களுக்கு பின்னாலும் சகோ வந்துட்டாரே :)

      இப்பவே தெரிந்தது நல்லதுதானே :)

      Delete
  11. ஒரே அறையில் இரண்டு கத்தல்
    அது
    மாமியார் மருமகள் உறவு

    ReplyDelete
    Replies
    1. இப்படி இருந்தால் வாழ்நாள் முழுதும் கத்தலாய்தானே இருக்கும் :)

      Delete
  12. அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. மதுக்கடையைச் சுற்றி 6 அடி ஆழத்தில் அகழி ,நல்ல ஐடியா தானே ஜி :)

      Delete
  13. நடமாடும் மதுக்கடை!

    ReplyDelete
    Replies
    1. வந்தாலும் ஆச்சரியமில்லைதானே அய்யா :)

      Delete