25 April 2017

சுகமா , மழையில் நனைவது :)

               ''மழைப் பெய்யனும்னு தடபுடலா கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருந்தீங்களே ,ஏன் செய்யலே ?''
              ''சனியன் மழை வந்து கெடுத்திடிச்சே !''
நல்ல வேளை, தண்ணீர் தெளிக்கவில்லை :)       
               '' பேப்பரை படிக்கிறதுக்கு முன்னாடி ,கையுறை எதுக்கு 
போட்டுக்கிறீங்க ?''
              ''சூடான செய்திகள் நிறைய வந்திருக்காமே !''

இவருக்கு கசக்கிற வாழ்வே இனிக்குதோ :)
        ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு  சாப்பிடுறதேயில்லே , ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு வருவதேயில்லையே ,எப்படி ?'' 
        ''கல்யாணம் ஆனதில் இருந்தே  நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''

எதை ஓசி கேட்பதென்று விவஸ்தை வேண்டாமா :)
       '' இன்சுலின் சிரிஞ்ச் பேனாவை  பையிலே  வச்சுருப்பீங்களே,இப்ப காணலையே ,ஏன் ?''
      ''அதையேன் கேக்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் கேட்கிறாங்களே !''

மின்வெட்டு கடுமையான நேரத்தில் எழுதியது இது :)
             ''பூனைக்கு இருட்டிலேயும் பார்வை தெரியுமாமே ?''
             ''ஒண்ணும்  கவலைப் படாதீங்க ,'கரெண்ட் கட் 'புண்ணியத்தால்  கொஞ்ச நாள்லே நமக்கும் அந்த சக்தி வந்திடும் !''

சந்தர்ப்பம் புத்தன் ஆகவா ,பித்தன் ஆகவா ?
சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும் என்பதற்காக ... 
தப்பைச் செய்தவர்களும் 
'சந்தர்ப்பச் சூழ்நிலையால்  செய்தோம் ' 
என்பதில்  என்ன நியாயம் ?

31 comments:

  1. கழுதைகளுக்கு செவ்வா தோஷம் அதனாலதான் மழை வந்து கெடுத்து விட்டது ஜி

    ReplyDelete
    Replies
    1. கல்யாணத்தையும் செவ்வாய் தோஷத்தையும் பிரிக்கவே முடியாது போலிருக்கே ஜி :)

      Delete
    2. நோஓஓஓஓஓஓ இது அநியாயம் அக்கிரமம்...:) இன்று கொஞ்சம் பிஸியாய் இருந்திட்டேன்ன் கில்லர்ஜி எப்பூடி முதலாவதாய் வந்தார்ர்?:).. எனக்கு வோட்டும் 3 வது இடம், கொமெண்டிலயும் 3ம் இடம்.. விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்.. என்னைத் தடுக்காதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).

      Delete
    3. நீங்க அங்கிருந்து காசிக்கு போகமுடியாது காசிக்கு வரணும் ஏன்னா.. காசி இந்தியாவுலதான் இருக்கு.

      Delete
    4. ஹையோ ஆண்டவா இவ்ளோ காலமும் என் எழுத்தில் ஸ்பெல்லிங் மிசுரேக்குத்தான் கண்டு பிடிப்பினம், இப்போ கிரமர் மிசுரேக்காஆஆஆ?:)

      Delete
    5. கிராமர் மிஸ்டேக் இல்லே ,இது ரூட் மிஸ்டேக் அதிரா :)

      Delete
    6. ஹஹஹஹஹ ரூட் மிஸ்டேக்.....ரசித்தோம்

      Delete
  2. இன்னைக்கு நிம்மதியா தூங்கப் போறேன் ,தமிழ் மணத்தில் பதிவு 'சரியாக' இணைந்தும் விட்டது ,வாக்குப் பெட்டியிலும் கோளாறு எதுவுமில்லை !
    'மின்னல் மியாவ்'மின்னலாய் உடனே வரவும்,இன்றைய பதிவில் மின்னலும் இருக்கு ,மியாவ்யும் இருக்கு:)

    ReplyDelete
    Replies
    1. மின்னல் இருந்தென்ன மியாவ் இருந்தென்ன முதலாமிடம் போச்சே:) சரி விடுங்கோ.. நான் அழுத கண்ணீரும் என் பூஸ் அழுத கண்ணீரும் வாய்க்கால் வழியோடி தேம்ஸ்ல கலந்திடிச்சூஊஊஊ:)...

      ஹா ஹா ஹா கழுதைக்கு கல்யாணம் சூப்பர்ர்.... நினைச்சு நினைச்சு சிரிக்க வைக்குது.

      Delete
    2. மழைக்கு கழுதைக் கல்யாணம் மட்டுமில்லே ,நரியைக் கூட பரி ஆக்குவார்கள்,நம்மோட ஆட்கள்:)

      Delete
  3. மழை வந்து கெடுத்திடிச்சே
    இல்லாட்டி
    மழையை வரப் பண்ணும்
    கழுதைக்கு கல்யாணமாம்!

    ReplyDelete
    Replies
    1. என்ன கொடுமைப் பாருங்க ,கழுதைக்கு கல்யாணம் பண்ணிவைச்சா மழை பெய்யுமாம் !முதலிரவு நடத்திவச்சா ஆலங்கட்டி மழை பெய்யுமா :)

      Delete
  4. Replies
    1. உங்க பொக்கிஷத்தைத் திறந்து விடுங்க ஸ்ரீ :)

      Delete
  5. ஆம், அடிப்படையை மறந்து சம்பிரதாயங்களில் மூழ்கி விடுகிறோம்!

    சூடான செய்திகள் என்பதால் கையுறை! ஹா... ஹா... ஹா...

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. கரெண்ட் மயானம் வந்த பின்பும் தீச்சட்டியை ஏந்திச் செல்வது சம்பிரதாய சடங்குகளில் ஒன்றுதானே :)

      பத்திரிக்கைப் பேரை சொன்னால் தோழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடும் :)

      Delete
  6. அந்த கழுதைக்குப் பதிலா... ஒங்களுக்குக் கல்யாணம் பண்ணியாச்சே...!

    சூடா(ன்)ன நாட்டுச் செய்திகளா...?!

    இந்தக் கசப்பான பாத்திரம் என்னை விட்டுக் கடந்து போவதாக... தலாக் தலாக் தலாக்...!

    எதையுமே நீங்களா அனுபவிக்கனுமுன்னு நினைக்காதிங்க...!

    இருட்டறையில் உள்ளதடா உலகம்...!

    ‘தின கரன்’ எல்லாம் சூழ்நிலைக் கைதிதானே...!

    த.ம. 5



    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா இன்னொரு கல்யாணமும் பண்ணிவைங்க :)

      சூடானைக் காட்டிலும் சிரியாதானே இப்போ ரொம்ப சூடாயிருக்கு :)

      இந்த பாத்திரம் ஆயுட்கால ஜென்மபந்தம் ,தலாக் செல்லாது :)

      அதுசரி ,துட்டு போட்டவனுக்கு இல்லாத உரிமையா :)

      அண்டர் வேர்ல்ட் என்பது இதுதானா :)

      பணத்தை நம்பினால் இப்பாடித்தான் :)

      Delete
  7. கசப்பும் மின்வெட்டும் அருமை

    ReplyDelete
    Replies
    1. மின்வெட்டே கசப்பான விசயம்தானே :)

      Delete
  8. வேண்டும்போது வராது கழுதைக்கு கல்யாணம் என்றால் வரும் என்ன மழையப்பா இது
    சூட்டில் பேப்பர் பற்றி எரிய வில்லையா கையுறை என்ன செய்யும்
    ஊரெல்லாம் டயாபடீஸ் என்றால் அப்படித்தான்
    இப்போதே இருட்டில் எழுதியது போல் இருக்கோ
    புத்தன் பித்தன் இரண்டுமேஒன்றுதானே

    ReplyDelete
    Replies
    1. கழுதைக்கு கல்யாணம் பண்றது ,மழைக்கே பிடிக்கலையோ:)
      கதிர் என்றாலும் எரிக்கும் அளவுக்கு ஜ்வாலை இல்லை :)
      போறபோக்கைப் பார்த்தால் மருந்து கடையிலேயே சிரின்ஜ் குத்திவிடுவார்கள் போலிருக்கிறது :)
      இன்றைய தலைமுறை இருட்டிலேயே sms தட்டி அனுப்புதே :)
      ஞானம் அடைஞ்சா அவனுக்கு பெயர் பித்தனா :)

      Delete
  9. மகிழ்ச்சி அருமையான பதிவு க்கு மிக நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாவக்காய் கசப்பு உங்களுக்குப் பிடிக்குமா :)

      Delete
  10. அருமையான பதிவு க்கு மிக நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete
  11. கழுதை கல்யாணத்தை தடுப்பதற்கே மழை வந்திருக்குமோ..... ஒரு சந்தேகம்....

    ReplyDelete
    Replies
    1. போயும் போயும் கழுதைக்கு பயந்து பெய்வதான்னு முதல்லேயே பெய்திருக்குமோ :)

      Delete
  12. சூடான செய்தியையும், கசப்பையும் ரசித்தோம் ஜி....

    ReplyDelete
    Replies
    1. கசக்கிற வாழ்வே இனிக்க இதெல்லாம் தேவைதானே :)

      Delete
  13. சூடான செய்திகள் உங்களுக்கும் பிடிக்கும்தானே :)

    ReplyDelete